மகளிர்க்காக ….


ஒரு சகோதரி உரிமையுடன் மெயில் அனுப்பி இருந்தார்…

“உங்கள் வலைத்தளத்தை நானும் பல மாதங்களாக
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்…
பெண்களுக்காக எதையும் எழுத மாட்டீர்களா…?”

———————–

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்…
அவர் விருப்பத்தை நிறைவேற்ற இன்று ஒரு வாய்ப்பு
கிடைத்தது…

Butterfly Dosa Master

Automatic Table top dosa making machine (NEW) by Mukunda Foods

இதன் விலை என்ன என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்.
நானும் தேடித்தேடி களைத்து விட்டேன்… கண்டுபிடிக்க
முடியவில்லை…

இன்னமும் மார்க்கெட்டில், விற்பனைக்கு வரவில்லை என்பது
மட்டும் தெரிந்தது.

சம்பந்தப்பட்டவர்களுக்கு மெயில் அனுப்பி இருக்கிறேன்.
பதில் வந்ததும் அவசியம் எழுதுகிறேன்….

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to மகளிர்க்காக ….

 1. Bagawan சொல்கிறார்:

  KM Sir,
  .Nowadays ladies , most of the working women order online or buy from hotels and she can get wholesome breakfast/lunch and dinner. Also it is not sure these machines can make onion dosa, uthappam and many varieties our ladies make in single dosa batter!!!!
  These machines will not succeed. Our ladies are more brilliant than these product makers. those who prepare dosa batter in home may find it cumbersome in using the machine. Also she has to make side dish like chutney, sambar etc . Also will the dosa maker assure no power cut during dosa making?!
  So these machines can not find mass market.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப பகவான்,

   உங்கள் கருத்து தெரிந்து கொண்டேன்.சரி….

   தயவுசெய்து உங்கள் வீட்டு பெண்களிடம் இந்த இடுகையைப்பற்றி
   கருத்து கேட்டுவிட்டு, அதையும் எழுதுங்களேன்… 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Bagawan சொல்கிறார்:

    KM Sir,
    The above points are from my wife. She already learnt a lesson in buying a micro wave owen, She used it only 3 or 4 times now it is idle and some says it is causing health problem if we eat microwave cooked food. Hence she dont want the space to be occupied by the dosa machine. As Mr. Pudhiyavan said, industrial scale machine will be successful. Ours is a small family and normally we take dosa once a week, We prefer home cooked food and all preparation dosa batter, side dish done in home. The problem in automation is the taste is same and may get bored quickly.

    • புதியவன் சொல்கிறார்:

     அன்புள்ள பகவான்’ஜி,

     மைக்ரோவேவில் சமையல் செய்தால் உடலுக்கு கெடுதி – என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. மைக்ரோவேவ் அவன் மிகவும் உபயோகமானது. எதையும் உடனுக்குடன் சூடாக்கவும், காய்கறிகளை வேகவைக்கவும் இன்னபிற சுலப வேலைகளுக்கு. ஆனால் அதனை, பொரியல், கூட்டு, குழம்பு செய்வதற்கு உபயோகப்படுத்தக்கூடாது/தேவையுமில்லை.

     ருசி-அது மாவைப் பொறுத்தது. சரவணபவன், அவர்களது ரெசிப்பிக்கள் எல்லாவற்றையும் சரியாக எழுதிவைத்துக்கொண்டிருக்கிறார்கள், அதற்குரிய பொருட்கள் ஒரே மாதிரிதான் இருக்கும் (சன் டிவி பர்சேஸுக்கு முன்னால்) அதனால் எல்லா சரவண பவனிலும் சாம்பார், கூட்டு, கறி, வற்றல் குழம்பு போன்ற எல்லாமே ஒரே சுவையில் இருக்கும். சுவை வேறுபாடு இருந்தால் அதற்கு ஒரே காரணம் தண்ணீர்தான் (அதனால்தான் வெளி’நாடுகளில் சரவணபவன் சுவை வேறுபடுகிறது). பொதுவாக மனிதர்களால் ஒரே மாதிரி சமைக்க முடியாது. ஒவ்வொரு முறையும் வேறுபடும். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இயந்திரத்தை உபயோகப்படுத்தும்போது, ingredients sameஆக இருந்தால், சுவை ஒரே மாதிரிதான் இருக்கும்.

     நமக்கு, மனைவி கையால் சமைக்கும்போது (அல்லது நாம் சமைக்கும்போது), அதில் ஒரு பெர்சனல் டச் இருப்பதால், உள்ளுணர்வாக நமக்கு அது கொஞ்சம் அதிக ருசியாக இருப்பதாகத் தோன்றும்.

 2. sundar Kannan சொல்கிறார்:

  Dear KM Sir,

  Is DOSA making, a DUTY of women ??

  I thought you will be writing something apart from Kitchen stuff and cooking. What an unfortunate guy am I !!

 3. புதியவன் சொல்கிறார்:

  இந்த தோசா மேக்கர், Professional kitchenக்கு வந்திருக்கிறது. இது ஒரு வகையில் உபயோகமானாலும், தோசை மாஸ்டரின் வேலை காலியாகும். யார் வேண்டுமானாலும் தோசை வார்க்க முடியும். இன்னொன்று மாவின் அளவு ஒரே அளவாக இருக்கும். அளவுக்கேற்றபடி விலையைக் கொண்டுவரலாம். இதேபோல், முழுச் சமையலுக்கும் ஆட்டமேடிக் சிஸ்டம் தயார் செய்வதாகப் படித்தேன். (அதாவது, முழு கிச்சனிலும் இந்த ஆட்டமேடிக் சிஸ்டம் இருக்கும். அந்த அந்த பகுதியில் எல்லாவிதமான பொருட்களையும் வைத்துவிடவேண்டும் (இந்த மிஷினில் எண்ணெய், மாவு போட இடம் இருப்பதுபோல், முழு கிச்சனிலும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, மசாலா போன்ற அனைத்தையும் போடவேண்டும்). ரெசிப்பி கம்ப்யூட்டரில் இருக்கும். அதைத் தேர்ந்தெடுத்துவிட்டால், எல்லாமே ஆட்டமேட்டிக்காகத் தயாராகும் (உதாரணமாக வற்றல் குழம்பு போன்று) இந்தக் கண்டுபிடிப்பு முழுமை பெற்றால், அது ஹோட்டல்களுக்கு மிகுந்த வரப்பிரசாதமாக இருக்கும். இன்னும் 30-50 வருடங்களில் இது முழுமையாக பெரிய ஹோட்டல்களில் உபயோகத்தில் இருக்கும் என்று தோன்றுகிறது. நம்ம ஊர்ல, அறிவியல்பூர்வமாக சமையல் கலை நடப்பதில்லை. அதற்கு பிராண்டட் செய்முறை வேண்டும். உதாரணமா, நாம வடை, பஜ்ஜி செய்வதற்கு இலுப்புச் சட்டியில் செய்கிறோம் (கடையில்). அதற்குப் பதில், பர்கர், கே எஃப்சி கடைகளில் உபயோகப்படுத்துவதுபோல உபகரணங்கள் வந்தால், எந்த டெம்பெரேச்சரில் பஜ்ஜி செய்யணும் போன்றவை SCIENTIFICஆக பண்ணமுடியும். அப்படி பண்ணும்போது, சுத்தம், UNIFORMITY போன்றவற்றை MAINTAIN பண்ணலாம். இந்தியா இதை நோக்கிச் செல்லவேண்டும்.

  வீட்டுக்கு இந்த தோசை மேக்கரினால் உபயோகம் கிடையாது. (சும்மா அலங்காரத்துக்கு அல்லது பவிசுக்கு உபயோகப்படுத்தலாம்). ஆனாலும், 5 பேருக்கு தோசை வார்ப்பது என்பது பெரிய வேலைதான். இட்லி போல் உடனடியாக கிடைக்காது. நின்றுகொண்டே தோசை வார்க்கவேண்டும்.

  இதைப்போன்று, சேவை மேக்கர் உபயோகத்துக்கு வந்தது (3000 ரூ-4500 ரூ என்று ஞாபகம்). அது வெற்றிபெற வில்லை. (மாவை உள்ளே போட்டால், அதற்கான ப்ராசசிங் முடிந்தபின்பு சேவையாகவே அருவி போல் வெளியே வரும்)

  இருவரும் வேலைக்குச் செல்வது நார்மலாக (அதாவது அனேகமாக எல்லா வீடுகளிலும்) ஆகும்போது, அதற்கேற்ற வியாபாரங்கள் பெருகும் (உரித்த சின்ன வெங்காயம், கட் பண்ணி ரெடியாக வைத்துள்ள காய்கறிகள், தின சமையலுக்கு அன்றன்றைக்கு வித்தியாசமான கட் செய்து ரெடியாக இருக்கும் காய் டெலிவரி-இது அடையாறில் ஏற்கனவே செய்த முயற்சி. இப்போதும் இருக்கும் என நினைக்கிறேன் அதாவது, மாதம் 2000-3000 ரூ கொடுத்துவிட்டால், தினமும் 300 கிராம் காய், 100 கிராம் காய்-குழம்பு தானுக்கு-நான் உதாரணம்தான் கொடுத்துள்ளேன், தினமும் காலையில் டெலிவரி செய்துவிடுவார்கள், போன்று பல விதமான உத்திகள் வரும். இப்போதே சப்பாத்தி, இட்லி/தோசை மாவு, குழம்பு வகைகள் போன்றவை கடைகளில் கிடைக்கின்றன.

  இப்போதே பல இடங்களில் உணவு ஆர்டர் செய்து டெலிவரி வந்துவிடும் ( நான் சொல்வது பர்கர், பிட்சா போன்றதல்ல, சாதம்/சாம்பார் போன்றவை) ஆனால் அவற்றைவிட, வீட்டில் செய்வது ஆரோக்கியம், அதற்கு எந்த விதமாக ஈஸி செய்துகொள்ளலாம் என்று பார்த்து அதற்கேற்றவாறு வியாபார உத்திகள் செய்தால் நல்லது.

 4. Nandagopal சொல்கிறார்:

  Your views are spot on….Being a late entrant into the Dosa Maker market we have to wait and watch the price point for Butterfly and it’s predecessor DosaMatic from Mukunda Foods.
  Dosa / Crepe Makers for the domestic kitchen have not caught up yet.
  Many would recollect Singapore based company offering RotiMatic (https://rotimatic.com) which is priced at 999 US$ (approx Rs 65,000/=). Product is brilliant but is it affordable and sold like hot cakes in India akin to our refrigerators, microwave ovens, Online water purifiers ? No…
  As rightly mentioned, Industrial kitchens can roll out chapattis, pooris, dosas etc with machines like http://www.chapatimachine.net/automatic-dosa-making-machine.html as it is volume based and time bound.
  But the domestic market is yet to find a cost effective table – top equivalent amidst challenges faced from customized Lunch Boxes from companies like http://www.get-lunchbox.com which are burgeoning in every city reducing “kitchen time” in nuclear family and senior citizen households.
  Space saving Table top home appliance is the key with builders squeezing a 2 bedroom apartment in a 700 sft carpet area nowadays for the dream home buyer.
  Around 20 decades back, when we first saw the Bosch / Siemens (http://www.bosch-home.in/products/dishwasher) DishWasher tagged at around Rs.35,000/= (I think the price didn’t undergo major changes all these years as they are a Premium brand), we accepted the product’s features and agreed it can fairly put an end to some exasperating house maids, but the price did not let us get closer to even view a demo of the Bosch product. Even today, we do not see many buying a DishWasher at the nearby Home Appliance Store.
  More recently, I have seen in the company website of Sharp Fisher Coimbatore (www.fisherin.com/profile.html) that their Design and Development Center is working on a Dishwasher at present. If it is a compactly sized table-top with half and full cycle to choose from to scrub, wash and rinse the masala off the Indian kadai / Pressure cooker. It this Dishwasher is quickly launched and aimed at an compact housing / apartment dweller and priced All Inclusive around Rs 14,000/= it will become another game – changer household appliance like our mixie blender and wet grinder which are home grown appliances from Coimbatore – the small city with a big heart where tradition and innovation merge …. There is so much happening around…with smart shoppers growing in good numbers. Let’s look forward to innovative and affordable products to ease our life….

 5. Sundar Raman சொல்கிறார்:

  well its my humble opinion that hotel dosa is ok or tastes better for a day or two , but for daily break fast , its the home made dosa is the best , and that too a thick one – for example , in many of the chettans careteria ( malayalai joint) in Dubai , they serve that katti /thick dosa – which is more like a home made dosa , so if you have take them for many days , you don’t get a stomach problems as well as you get some kind of satisfaction. Now a days in Dubai, even adai maavu is available , it is too good. So these machines may be useful for a cafeteria , for homes it may not be healthy …

  • புதியவன் சொல்கிறார்:

   சுந்தர்ராமன் – அடை மாவு மட்டுமல்ல, காஞ்சீபுரம் இட்லி மாவு (என்ற பெயரில்), சேவை போன்ற பலவும் துபாயில் கிடைக்கப்பெறுகிறது. (லுலு போன்ற பல ஹைபர் மார்க்கெட்டிலும்)

   கடை தோசை boreஅடிக்க முக்கியக் காரணம் அவர்கள் ஒரே டேஸ்டில் சாம்பார், சட்னி வகைகள் தருவதால்தான். வீட்டில் என்றால் இட்லிப் பொடி, தயிர் இல்லைனா அன்றைக்கு குழம்பு, அல்லது ஏதாவது ஒரு சட்னி என்று ஓரிரு தொடுகைகள்தான் இருக்கும்.

   பெங்களூர் தோசைகள் (கர்னாடகாவில் பெரும்பாலும்) சிறியது தடிமனானது ஆனால் ஊத்தாப்பம் போன்றது இல்லை நன்றாக எண்ணெய் விட்டு முறுகிய பதத்தில் உள்ளது). கேரளா கடைகளில் சாதா தோசைகளும் தயார் செய்கிறார்கள்.

   நீங்கள் இன்னொன்றும் கவனித்திருப்பீர்கள். வீட்டில் தோசை சாப்பிடும்போது 4-5 கூட சர்வ சாதாரணமாக நாம் சாப்பிடுவோம். ஆனால் ஹோட்டலில் ஒன்றுக்கு மேல் வெகு அபூர்வமாகத்தான் இரண்டு சாப்பிடமுடியும்.

 6. ranjani135 சொல்கிறார்:

  மகளிர் என்றால் அடுப்பங்கரை தான் என்று நீங்களும் முடிவு செய்துவிட்டது மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திருமதி ரஞ்சனி,

   அய்யோ – நாம் சும்மா காமெடிக்காக எழுதியதை நீங்கள் இப்படி
   சீரியசாக எடுத்துக் கொள்ளலாமா…?

   இங்கே பின்னூட்டம் போட்டிருப்பவர்கள் எல்லாம் யாரென்று பாருங்கள்.
   மகளிர் ஒருத்தராவது உண்டா…?

   மகளிர் எல்லாமே இந்த தளத்தை தங்களுக்கு சுத்தமாக ஆகாத தளம் என்று
   ஒதுக்கி விட்டார்கள் போலிருக்கிறதே என்று நினைத்து தான் “மகளிர்க்காக”
   என்று விசேஷமாக தலைப்பே வைத்து எழுதினேன்.

   தப்பித்தவறி நீங்கள் ஒருத்தர் உள்ளே வந்திருக்கிறீர்கள்…
   நீங்களும் இப்படி சாத்துகீறீர்களே… 🙂 🙂

   உண்மையில், எங்கள் வீட்டில் இரவு நேரங்களில் எப்போது
   தோசை வார்ப்பது என்றாலும் ஆர்வமாக என்னைத்தான் கிச்சனுக்கு
   அழைப்பார்கள்… முறுமுறுவென்று முறுகலாக நெய் தோசை வார்க்க.

   பேத்தி, மகள், மாப்பிள்ளை, மனைவி – எல்லாரும் சுற்றி
   உட்கார்ந்து கொண்டிருப்பார்கள் – சுடச்சுட வரிசையாக, கமகமவென்று
   நெய் மணக்க தோசையைப் பெற…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.