BBC செய்தி வழியாக கப்பலேற்றப்படும் இந்திய பெண்களின் மானம்/அவல நிலை…

டாய்லெட் இல்லாமல் காத்திருக்கும் இந்தியப் பெண்களை
வரிசையில் நிற்க வைத்தால், அந்த வரிசை உலகை நான்கு முறை
சுற்றி வரும் அளவிற்கு நீளமாக இருக்கும்…

பங்களா தேஷில் கூட, சகலருக்கும் கழிப்பறை இருக்கிறதாம்…

ஆனால், உலகிலேயே திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களை
அதிகமாக கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம் வகிக்கிறதாம்.

73.2 கோடி இந்தியர்கள் இன்னமும் திறந்த வெளியில்
மலம் கழிக்கிறார்கள்…

அதில் 35.5 கோடி இந்திய பெண்களும், சிறுமிகளும்
திறந்த வெளியில் பாதுகாப்பற்ற முறையில் மலம் கழிக்கிறார்கள்..

இந்திய அரசிடமிருந்து பெற்ற புள்ளி விவரங்களை ஆதாரம் காட்டி
“Water Aid” என்னும் உலக அளவிலான தொண்டு நிறுவனம்
BBC போன்ற செய்தி நிறுவனங்களின் மூலம் இத்தகைய தகவல்களை
உலகம் முழுவதற்கும் பறைசாற்றி இருக்கிறது.

இந்த ரிப்போர்ட்டின் நோக்கம் என்ன…?

தொண்டு செய்வதா அல்லது –
இந்திய பெண்களின் அவலத்தை உலகிற்கு பறைசாற்றி,
அந்த நிறுவனத்திற்கு “நன்கொடை” பெறுவதா…?

——————————————————————————————————-
பிபிசி தமிழ் செய்திகளில் வெளியிடப்பட்டிருக்கும்
அந்த ரிப்போர்ட்டின் ஒரு பகுதி கீழே –

(http://www.bbc.com/tamil/india-42043679)

70 கோடி இந்தியர்களுக்கு சரியான கழிப்பறை இல்லை:
ஆய்வு முடிவுகள்.

உலக கழிவறை தினத்தில், வெளியாகியுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி, உலகிலேயே இந்தியாவில் தான், அடிப்படை சுகாதாரத்திற்காக கழிவறைகளை பயன்படுத்தும் வசதி இல்லாத அதிகம் மக்கள் வாழ்வதாக தெரியவந்துள்ளது.

`வாட்டர் எய்ட்` எனப்படும் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக முன்னேற்றம் இருந்தாலும், இன்னும் கூட இந்தியாவில் 700 மில்லியன் மக்கள், பொது இடங்களிலோ அல்லது பாதுகாப்பற்ற முறையிலோ தான் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டியுள்ளது என்று கூறுகிறது.

இதற்கு நேர்மாறாக, வங்கதேசத்தில், பொதுவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் நிலை கிட்டத்தட்ட அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது அந்த ஆய்வு.

———————————————————————————————————

ஸ்வச்ச பாரத் திட்டத்தை 2014-ல் அறிவித்ததை தொடர்ந்து, மத்திய அரசு இதற்காக தனியாக ஒரு வரியை கொண்டு வந்தது…

// Swachh Bharat Cess adds-on to the service tax liability
and is applicable on all taxable services. The Swachh Bharat Cess
has become effective from 15 November 2015 at the rate of 0.5% on all
taxable services.//

இந்த வரியின் மூலம் முதல் ஆண்டில் சுமார் 9,800 கோடியை அரசாங்கம் பெற முடிந்தது.

ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததன் மூலம், சர்வீஸ் டாக்ஸுடன், ஸ்வச்ச பாரத் வரியும் அத்துடன் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு, தனியாக பட்ஜெட்டில் கணிசமான தொகை ஒதுக்குவதன்
மூலமும், ஜிஎஸ்டி வரியிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை இதற்காக ஒதுக்குவதன் மூலமும் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.

இந்தியா முழுவதும் சுமார் 12 கோடி டாய்லெட்களை உருவாக்குவது என்பது மத்திய அரசின் திட்டம். அதில் 5 கோடி டாய்லெட்கள் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு விட்டன என்று அரசு அண்மையில் அறிவித்திருக்கிறது… எஞ்சியதையும், இதே போல், தீவிரமாகசெயல்படுவதன் மூலம் செய்து முடிக்க முடியும்.

————————————————————————————————–

இந்த நிலையில், ஒரு தனியார் தொண்டு நிறுவனம் பணம் சம்பாதிக்க,
உலக அளவில் இந்திய மக்களின், குறிப்பாக இந்திய பெண்களின்
அவலம் ஏலம் போடப்பட அனுமதிக்க வேண்டுமா…?

மத்திய அரசு இத்தகைய செயல்களை ஊக்குவிக்கலாமா…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to BBC செய்தி வழியாக கப்பலேற்றப்படும் இந்திய பெண்களின் மானம்/அவல நிலை…

 1. புதியவன் சொல்கிறார்:

  இந்தத் ‘தொண்டு’ நிறுவனங்களின் நோக்கத்தை நாம் மறந்துவிடலாம் (அவங்களுக்கு தொண்டைவிட, அதன் பின்னாலிருக்கும் அஜெண்டாதான் முக்கியம். இது பற்றி நிறையபேருக்குத் தெரிந்திருக்கும், ஆனாலும் எழுதாமல் தவிர்க்கிறேன். பல தனியார்களும், ஏதேனும் தொண்டு என்ற பெயரில் வெளி’நாட்டு நிதியுதவியை நாடி, தங்கள் வாழ்வாதாரங்களைப் பெருக்கிக்கொள்கின்றனர். இதில் எய்ட்ஸ் என்ற பெயரால் செழித்த பலரைப் பற்றிப் படித்திருக்கிறேன்).

  இருந்த போதும், செய்தி சொல்வது என்ன? பெண்களுக்குக் கழிவறை வசதி இல்லை என்பது. இதனைக் கட்டாயம், அந்த அந்தக் கிராமங்கள் செய்துதரவேண்டும். குறைந்த பட்சம், கிராமத்துக்கு 5-6 கழிவறைகளாவது, ஒரு தெருக்கு ஏற்படுத்தித் தரவேண்டும். பஞ்சாயத்துகள் இதில் கவனம் செலுத்தவேண்டும்.

  பெரும்பாலான இந்தியர்களுக்கு சுத்தம் சுகாதாரம் என்பதைப் பற்றி கிஞ்சித்தும் அறிவோ கவலையோ இல்லை. எத்தனையோ பேர், எந்த இடத்திலும் ‘பைப்’ நீட்டி சிறு’நீர் கழிக்கின்றனர். கழிசடைப் பயல்கள், குட்கா, வெற்றிலை போன்றவற்றை மென்றுவிட்டு, ரோட்டிலேயே துப்புகின்றனர். சில சமயம், இவர்களைக் காணும்போது, இந்த ஜென்மங்கள் உயிரோடு இருந்து யாருக்கு உபயோகம் என்று தோன்றும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // இருந்த போதும், செய்தி சொல்வது என்ன? //

   எனது நோக்கில் – இடுகைச் செய்தி சொல்வது இதைத்தான் –

   —————————————————-
   இந்தியா முழுவதும் சுமார் 12 கோடி டாய்லெட்களை உருவாக்குவது என்பது மத்திய அரசின் திட்டம். அதில் 5 கோடி டாய்லெட்கள் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு விட்டன என்று அரசு அண்மையில் அறிவித்திருக்கிறது… எஞ்சியதையும், இதே போல், தீவிரமாகசெயல்படுவதன் மூலம் செய்து முடிக்க முடியும்.

   —————————————————

   இந்த நிலையில், ஒரு தனியார் தொண்டு நிறுவனம் பணம் சம்பாதிக்க, உலக அளவில் இந்திய மக்களின், குறிப்பாக இந்திய பெண்களின் அவலம் ஏலம் போடப்பட அனுமதிக்க வேண்டுமா…?

   மத்திய அரசு இத்தகைய செயல்களை ஊக்குவிக்கலாமா…?

   இந்தியாவின் அவலத்தை உலகநாடுகளின் முன்பாக expose செய்து கண்டவர்கள் பணம் பண்ணுவதற்கு மத்திய அரசும் துணை போகலாமா ?

   – என்பது தான்…!
   —————————————————–

   ஆனால் உங்கள் பின்னூட்டம் சொல்லும் செய்தி வேறு…!

   பாஜக அரசை குறை சொல்லக்கூடாது… செய்தியின் போக்கை திசை திருப்பி விட வேண்டும்…

   அரசை குறை சொல்லாமல், மக்களின் பேரில் பழியை போட வேண்டும்….

   உங்கள் பின்னூட்டம் –
   உங்கள் விருப்பம் போலத்தானே அமைய முடியும் …
   புரிந்து கொள்ள முடிகிறது … 🙂 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. paamaranselvarajan சொல்கிறார்:

  // கழிப்பறை கட்ட முடியாட்டி உங்க மனைவியை ஏலம் விடுங்க.. நீதிபதி பேச்சால் சர்ச்சை//
  Read more at: https://tamil.oneindia.com/news/india/sell-your-wife-if-you-don-t-have-money-build-toilet-magistrate-tells-villagers/articlecontent-pf253908-290630.html
  // காலைக் கடன் கழித்த பெண்களை போட்டோ எடுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் டீம்.. வெடித்த சர்ச்சை! //
  Read more at: https://tamil.oneindia.com/news/india/2-women-maharashtra-were-photographed-defecating-the-open-298065.html … மேலே உள்ள செய்திகள் …. இது எந்தவகையில் சரி … ? மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேறு வழிகளே இல்லையா இவர்களுக்கு …? இவர்களே இப்படியென்றால் அப்புறம் பிபிசி — ?

 3. Gopi சொல்கிறார்:

  மத்திய அரசு இதை எப்படி அனுமதிக்கிறது ?

  மத்திய, மாநில அரசுகளும், கிராம பஞ்சாயத்துகளும் செய்ய வேண்டிய வேலையை தான் செய்வதாக விளம்பர படுத்திக்கொண்டு ஒரு தனியார் “தொண்டு”
  நிறுவனம் இந்த மாதிரி “பணம் பண்ண” அனுமதிக்கலாமா ?
  பணம் பண்ணுவதோடு அல்லாமல் இந்த நாட்டின்
  மானத்தையும் ஏலம் போடுகிறார்களே இதை தடுக்க வேண்டாமா ?

  மக்களை திருத்துவதாக சொல்லிக்கொண்டு இந்த அரசு
  உலக அரங்கில் தனது மக்களையே அவமானப்படுத்துகிறது.

 4. தமிழ் சொல்கிறார்:


  தற்போது ….

  அரசின் கழிவறைகளில் சில தரமானதாகவும் (அதிகாரிகள் பார்வையிடும் இடங்களில் உள்ள),பல ஒரு வருடத்திலேயே பாவனைக்கு உகந்தது அல்ல என மூடப்பட்டதையும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.