” ஞாநி ” அவர்களின் மறைவு ….” ஞாநி ” சங்கரன் அவர்களின் மறைவு மனதை
மிகவும் சங்கடப்படுத்துகிறது.

நான் ” ஞாநி ” அவர்களை ஓரளவு தனிப்படவும் அறிவேன். நிறைய தடவை, அவரை சந்தித்திருக்கிறேன்…

அந்த சந்திப்புகளின்போது, சில முறை, நேரில் சில விஷயங்களைப்பற்றி நாங்கள் தனிப்பட விவாதித்திருக்கிறோம்…என்னை விட வயதில் இளையவர் என்கிற உரிமையில் நான் அவரிடம், சிலதடவை அவரது நிலைப்பாடுகளையே
கூட குறைகூறி பேசியதுண்டு.

அவருடன் பல விஷயங்களில் நான் கருத்து வேறுபாடு கொண்டவன்….. இருந்தாலும், பொதுவாழ்வில் இருப்பவர்களில், மனசாட்சியை மதித்து நடக்கும் வெகு சில மனிதர்களில் அவரும் ஒருவர் என்கிற வகையில்
அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

என்னை, என் இயற்பெயரில் தான் அவர் அறிவார். நான் காவிரிமைந்தன் என்கிற புனைப்பெயரில் எழுதுவதையோ, விமரிசனம் வலைத்தளத்தில் இயங்கி வருவதை அவர் அறியார்.

நானும் வெளிப்படுத்திக் கொண்டதில்லை….பொதுவாகவே
நான் யாரிடமும் என் வலைத்தள இயக்கத்தைப் பற்றி பேசுவதில்லை..

அவர் மறைந்து விட்டாலும், அவரது எழுத்து தொடர்ந்து அவர் நினைவுகளை உயிர்ப்போடு வைத்திருக்கும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ” ஞாநி ” அவர்களின் மறைவு ….

  1. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

    May his soul rest in peace

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.