மீடியாக்கள், எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் எல்லாரும் எங்கே …? ஏன் அக்கறை இல்லை…?


கடந்த வெள்ளியன்று, அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியானது…!

“குட்கா” விற்பனையை தங்குதடையின்றி தொடர, மாநில அமைச்சர் ஒருவருக்கும், காவல் துறை மூத்த அதிகாரி ஒருவருக்கும் கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பற்றி வருமான வரித்துறை –

ஆகஸ்ட் 11, 2016 அன்று அப்போதைய தமிழக தலைமைச் செயலாளருக்கும், தலைமை காவல் துறை அதிகாரிக்கும் எழுதிய “ரகசியம்” என்று முத்திரையிடப்பட்ட –

ஒரிஜினல் கடிதம், போயஸ் கார்டனில், திருமதி சசிகலா அவர்களின் அறையிலிருந்து சோதனையின்போது கைப்பற்றப்பட்டிருக்கிறது என்று அதிகாரபூர்வமாக –

சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை, ஜனவரி 12-ந்தேதியன்று எழுத்துபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது….

——-

தமிழகத்தில் – இத்தனை அரசியல்வாதிகள், செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் – இருந்தும், இதில் யாருக்காவது இந்த விஷயத்தைப்பற்றி தீவிரமாக விவாதிக்க வேண்டும், கண்டனம் செய்ய வேண்டும், மக்கள் முன்கொண்டு செல்லப்பட வேண்டுமென்று அக்கறை வெளிப்படுகிறதா…?

( திரு.அன்புமணியின் அறிக்கை, மற்றும் ஹிந்து நாளிதழில் மட்டும் – இது குறித்த அக்கறையை பார்க்க முடிந்தது…)

டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கூறுகிறார் –

————————

சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை குறித்து தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் குட்கா தாராளமாக விற்பனை
செய்யப்படுவதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது. குறைந்தது 10 இடங்களில் குட்கா விற்பனை நடப்பதை உறுதி செய்ய முடிந்ததாகவும், அவற்றில் சில இடங்களில் இருந்து குட்கா உள்ளிட்ட போதைப் பாக்குகளை வாங்கியதாகவும் தி இந்து
செய்தியாளர் கூறியிருக்கிறார்.

தி இந்து செய்தியாளர் அடையாளத்திற்காக மட்டும் சில கடைகளில் விசாரித்ததால் 10 கடைகளில் குட்கா விற்பனை நடந்ததை உறுதி செய்திருக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மூலம் நேற்று ஆய்வு செய்ததில் சென்னை மாநகர எல்லையில் மட்டும் குறைந்தபட்சம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் குட்கா போன்ற போதைப்பாக்குகள் விற்பனை செய்யப்படுவதை அறிய முடிந்தது.

ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் ஆதரவின்றி போதைப்பாக்குகளை விற்பனை செய்வது சாத்தியமல்ல.

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பாக்குகளை விற்பனை செய்ய அனுமதிப்பதற்காக 01.04.2016 முதல் 15.06.2016 வரையிலான இரண்டரை மாதங்களில் மட்டும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு குட்கா நிறுவனம் ரூ.56 லட்சம் கையூட்டு கொடுத்ததாக அந்த நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் வருமானவரித் துறை அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதற்குப் பிறகும் தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை தடையின்றி நடக்கிறது என்றால், அதை அனுமதிப்பதற்கான ஊழலும் தொடருவதாகத் தான் பொருள்.

குட்கா பயன்படுத்துவதால் ஏற்படும் சமூக மற்றும் உடல்நலக் கேடுகள் கொஞ்சநஞ்சமல்ல. குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஆண்டுதோறும் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 35 லட்சம் பேர் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர்.

இவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள்
மற்றும் அவர்களையொத்த வயதினர் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குட்காவும், புகையிலையும் சமூகத்தை இந்த அளவுக்கு சீரழிப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில், அதை தடுக்க வேண்டிய சுகாதார அமைச்சரும், காவல்துறை அதிகாரிகளும் குட்கா விற்பனைக்கு அப்பட்டமாக துணை
போவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

குட்கா ஊழலின் ஆதி முதல் அந்தம் வரை அடையாளம் கண்டு, சமூகத்தை சீரழித்தவர்களை தண்டிக்க வசதியாக குட்கா ஊழல் குறித்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு மாற்ற வேண்டும்.’’

————————————————

இது வெறும் டாக்டர் அன்புமணியின் குரலாக மட்டும் இருந்தால் போதுமா…? தமிழகத்தில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும், மீடியாக்களும், சமூக நல ஆரவலர்களும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டாமா…?

அவர்களின் குரல் நீதிமன்றத்தினுள் அமர்ந்திருப்பவர்களின் செவிகளை சென்றடைய வேண்டாமா….?

உடனடியாக இந்த விஷயம் SIT (Special Investigation Team) ஒன்றின் வசம் ஒப்படைக்கப்பட்டு, தீவிரமான விசாரணை நடந்து, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் எத்தனை பெரிய இடத்தில் இருந்தாலும், கைது செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்பட வேண்டும்.

தமிழகத்தில் தங்கு தடையின்றி நடைபெறும் குட்கா வியாபாரம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்..

நடக்குமா…?

——————————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to மீடியாக்கள், எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் எல்லாரும் எங்கே …? ஏன் அக்கறை இல்லை…?

 1. தமிழன் சொல்கிறார்:

  தமிழகத்தில் மது விற்பனை மிகவும் Restrict செய்யப்படவேண்டும். குட்கா என்ற பழக்கம் பொதுவாக தமிழகத்தில் இல்லாமலிருந்தது (வட இந்தியாவில்தான் கண்ட இடங்களில் துப்பும் கலாச்சாரம் உண்டு. எப்போப் பார்த்தாலும் புகையிலையை மென்னுகொண்டிருக்கும் கலாச்சாரமும் அங்குதான் உண்டு). இதனை அறிமுகப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும், அதற்காக லஞ்சம் வாங்கக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் குண்டர் தடைச் சட்டத்தின் கீழ் உள்ளே அனுப்பப்படவேண்டும். இதுக்கெல்லாம் வழக்கு போட்டு, எத்தனை வருடங்கள் கழித்து வழக்கு எடுத்துக்கொள்ளப்படுமோ. கண் முன்னால், தரைக்குக் கீழ் அரசு டெலெஃபோன் கேபிள்களைப் பதித்து, அப் லிங்க் செய்து, நூற்றுக்கணக்காண கோடி ரூபாயை தயானிதி மாறன் அடித்தார் என்பது எல்லாப் பத்திரிகைகளில் வந்தும், 10 வருடங்களுக்கு மேல் ஒரு முன்னேற்றமும் இல்லை. இப்படி நம்ம நாட்டு நீதி இருந்தால், யாருக்குத்தான் நேர்மையாக இருக்கத் தோன்றும்?

  இன்னொன்று சார்… ஏற்கனவே பல்லாயிரம் கோடி சொத்து உள்ளவர்களுக்கு மேலும் மேலும் ஏன் சம்பாதிக்கத் தோன்றுகிறது? (இந்த மாதிரி சிபாரிசு கடிதம் எழுதி)? ஒரு வேளை, மற்றவர்களுக்கு obligationஆக செய்யவேண்டியிருக்கிறதா (நீ இதைச் செய், நான் உனக்கு அதைச் செய்கிறேன் என்று). இந்த சிலந்தி வலைக் குற்றங்களை யார் கண்டுபிடிப்பது?

  • Sundararaman சொல்கிறார்:

   I wish some one would have asked this question in front of Gurumurthy to AJ at Thuglak function. who knows they might have filtered the questions.

   Also when u enter a stage , for a normal person, they get excited with the lights , sound and lots of people, question doesn’t come out.

   When I was in Bangalore, I went to PC Sorkar magic show, he called 5 people, I managed to run to the stage, he blindfolded himself, and asked us to write, i literally scribbled PVN 1,00,00,000 and with a big smile he had written it back. ( that time Harshad Metha scam, Harshad metha along with Sunil Mittal gave 1,00,00,000 rupees )

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    சுந்தரராமன்,

    நான் போயிருந்தேன்…
    திரு.அருண் ஜெட்லியை கேள்வி கேட்க யாரையும்
    அனுமதிக்கவில்லை.
    வாசகர்களின் சில கேள்விகளுக்கு மட்டும்
    திரு.குருமூர்த்தி மட்டும் தான் பதிலளித்தார்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 2. Giri Alathur சொல்கிறார்:

  அழிவின் விளிம்பில் தமிழகம், சுருட்டுக்கு நெருப்பு தேடும் ஊடகங்கள்…

 3. Ganpat சொல்கிறார்:

  நடக்காது!

  • தமிழன் சொல்கிறார்:

   கண்பத், கா.மை சார், ‘நடக்குமா’ என்று கேட்டுள்ளது, ‘நடக்கவேண்டும்’ என்ற ஆதங்கத்தில். நீங்க சொல்லியிருப்பது, ‘எவனாவது (அரசியல்வாதிகள்) தனக்குத் தானே தீ வைத்துக்கொள்வானா’ என்ற எண்ணத்தில், என நினைக்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   நான் நம்புகிறேன்… நிச்சயம் நடக்கும்….
   இன்றில்லா விட்டாலும்…… என்றாவது ஒரு நாள்…

   மக்கள் இன்னும் அக்கறை காட்ட வேண்டும்..

   மீடியாக்கள் வெறும் பொழுதுபோக்கையும், வெட்டி அரட்டையையும்
   மட்டும் முன்வைக்காமல், நிஜமாகவே சமூகப்பிரச்சினைகளில்
   முனைப்பு காட்ட வேண்டும்.

   எதிர்க்கட்சிகள் நிஜமாகவே மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும்…

   – இவை எதுவும் நடக்கவில்லை
   என்றாலும் கூட – நம்புகிறேன்…
   தெய்வம் நின்று கொல்லும்…என்பதை…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.