திரு.குருமூர்த்தி அவர்களுக்கு – கொள்கையா அல்லது மோடிஜியுடனான நெருக்கமா….? எது முக்கியம்…?


சுதேசி ஜாக்ரன் மன்ச் (swadeshi-jagaran-manch-) என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஒரு பிரிவு. துக்ளக் ஆசிரியர் திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் இதன் அமைப்பாளர்களில் ஒருவர் ( co-convener ).

அந்நிய முதலீடுகளை எதிர்ப்பது, நம்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி பொருட்களை ஊக்குவிப்பது இந்த இயக்கத்தின் மிக முக்கிய குறிக்கோள்களில் ஒன்று.

2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர், பாஜகவும் நேரடி அந்நிய முதலீட்டை கடுமையாக எதிர்த்து வந்தது…. அதுவும் முக்கியமாக சில்லறை விற்பனையில்…

காங்கிரஸ் கூட்டணி பதவியில் இருந்தபோது, FDI -ஐ கொண்டு வர முயற்சி செய்தபோது அதனை எதிர்த்து, பாஜக, நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியது. பாரத் பந்த் உட்பட…!

இப்போது சொன்னால் ஒருவேளை இல்லையென்று மறுப்பார்களோ என்னவோ என்பதற்காக சாட்சியங்களாக, பாஜக பெருந்தலைவர்கள் கலந்துகொண்டு நடத்திய, நேரடி அந்நிய முதலீட்டை எதிர்க்கும் போராட்டங்களின் சில புகைப்படங்களை கீழே பதிந்திருக்கிறேன்.

(இந்த படை போதுமா… இன்னும் கொஞ்சம் வேண்டுமா…?
இதில் பாதி பேர் இப்போது மத்திய அமைச்சர்கள்….!!!
அந்நிய முதலீட்டை அனுமதித்த கேபினட் உறுப்பினர்கள்…!!! )


FDI- ஐ இவ்வளவு தீவிரமாக எதிர்த்த மோடிஜியின் – தலைமையிலான பாஜக அரசு தான் – இப்போது சில்லறை விற்பனையில் 100 % நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்று முடிவெடுத்திருக்கிறது….

பதவிக்கு வருவதற்கு தான் கொள்கை, லட்சியம் எல்லாம்…..
ஆட்சியை பிடித்த பிறகு ….?

கட்சியையும், ஆட்சியையும் தக்க வைத்துக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தானே கொள்கையாகி விடுகிறது …?

ஆட்சியில் அமர்ந்த பிறகு கொள்கைகள் எதற்கு என்று பாஜகவும், பிரதமரும் அடிப்படை கொள்கைகளை கூட காற்றில் பறக்க விடலாம்..

ஆனால், தேர்தல் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதில்லை, அரசு பொறுப்புகள் எதையும், என்றும் ஏற்றுக்கொள்வதில்லை –
என்று தனது லட்சியங்களை தெரிவித்திருக்கும் திரு.குருமூர்த்தி அவர்கள் –

தான் சார்ந்த, தான் உருவாக்கிய, அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் -க்கு எதிராக, பாஜக ஆட்சி முடிவுகளை எடுக்கும்போது –

அதனை துணிவுடன் வெளிப்படையாக எதிர்ப்பாரா…? அல்லது மோடிஜியின் உறவும், நெருக்கமும் தான் முக்கியம் என்று இந்த கொள்கை விரோதங்களை
கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டே இருப்பாரா…?

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கூட ஏற்கெனவே அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது…!!!

ஆனால், திரு.குருமூர்த்தி அவர்கள் இதுவரை – சில்லரை விற்பனையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் – மோடிஜி அரசுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவித்ததாக தெரியவில்லை.

தான் கொண்ட, கடைபிடிக்க விரும்பும் – கொள்கைகள் முக்கியமா…?
அல்லது மோடிஜியுடனான நெருக்கமும், உறவும் தான் முக்கியமா…?

– என்பதை திரு.குருமூர்த்தி அவர்கள் இதுகுறித்து வெளிப்படையாக எதுவும் சொன்னால் தான் நாம் புரிந்து கொள்ள முடியும். மௌனமாக இருக்கும் வரையில், கொள்கைகளை விட, லட்சியங்களை விட –

அவருக்கு மோடிஜியுடனான உறவு தான் முக்கியம் என்று தான் மக்கள்
எடுத்துக் கொள்வார்கள்.

—————————————————————————-

கீழே –

2014 தேர்தலுக்கு முன்னர், காங்கிரஸ் கூட்டணி அரசு (UPA-2) நேரடி அந்நிய முதலீட்டை சில்லறை விற்பனையில் அறிமுகப்படுத்த முயன்றபோது – குஜராத் முதல்வராகவும் –
எதிர்கால பிரதமர் வேட்பாளராகவும் இருந்த மோடிஜி அவர்கள்
ஆற்றிய உரைகளை கொண்ட சில வீடியோக்கள்…..

நானும் எவ்வளவோ தேடிப்பார்த்து விட்டேன்…. இதுகுறித்த மோடிஜியின் ஒரு ஆங்கில உரை கூட கிடைக்கவில்லை….

எனவே, ஹிந்தி உரை கொண்ட வீடியோக்களையே தந்திருக்கிறேன்….

சுருக்கமாக அவர் சொல்வதாவது……
( ஹிந்தி தெரியாதவர்களுக்காக -)

நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் மன்மோகன் சிங் அரசு இந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்கிறது; இது இந்தியாவையே, அயல்நாடுகளுக்கு விற்பதற்கு சமம்…. இதனை அனுமதித்தால் –

சிறு சிறு கடைக்காரர்கள், மளிகைக்கடைக்காரர்கள், குடைகள்,
காலணிகள் போன்ற சிறு சிறு பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் கூட பாதிக்கப்படுவார்கள்; லட்சக்கணக்கான வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு நடுத்தெருவுக்கு வர நேரிடும். பல லட்சம் கூலித்தொழிலாளர்களும்,
தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களும் வேலை இழக்க
நேரிடும்…. இத்தியாதி இத்தியாதி….!!!

Shri Narendra Modi (before becoming PM )on FDI in retail sector –
Why he is opposed to it. Adverse effect of retail FDI on small shops,
small industries, employment. How UPA is undermining Federal Structure of India… etc…


8 Oct 2013 –

Gujarat chief minister Narendra Modi slams Centre over FDI in retail in
a rally in Navsari in Surat – 16 Aug 2013

———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to திரு.குருமூர்த்தி அவர்களுக்கு – கொள்கையா அல்லது மோடிஜியுடனான நெருக்கமா….? எது முக்கியம்…?

 1. புதியவன் சொல்கிறார்:

  இந்த மாதிரி பேரணி, அறைகூவல் எல்லாம், நமக்கு (சிலருக்கு) ஞாபகம் இருக்கும் அளவிற்கு, நடத்தியவர்களுக்கும் பேசினவர்களுக்கும் ஞாபகம் இருக்காதோ? குறைந்த பட்சம், ‘நான் அந்த சமயத்தில் இப்படி நம்பினேன். அது சரியில்லை என்று இப்போது தோன்றுகிறது, அதனால் நான் இந்த மாதிரி முடிவை எடுக்கிறேன்’ என்று சொல்லக்கூட, அவர்களது integrity தடுக்குமோ? தெரியவில்லை. அதிலும், இந்த புகைப்படங்களும், அறைகூவல்களும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்தால், ‘நான் அவனில்லை’ என்பார்களோ?

  இதற்கெல்லாம் (அந்நியப் பொருட்களை பகிஷ்கரிப்பது) மக்கள்தான் மனது வைக்கவேண்டும். பெரும்பாலானவர்களுக்கு அந்நியப் பொருட்கள் இல்லாமல் அன்றாட வாழ்க்கையே நடத்தமுடியாது. நாட்டை அழிக்கும் பெப்சி, கோலா இல்லாமலேயே அவங்களால உயிரோடவே இருக்க முடியலை (இப்போ இருக்கும் so called மனிதர்கள்). அரசாங்கத்தை மட்டும் குறைகூறி என்ன பயன்?

 2. Raghavendra சொல்கிறார்:

  குருமூர்த்தி சார் பேச மாட்டார். 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று
  ந.மோ. அறிவித்தபோதும் முதலில் இதே நிலையில் தானிருந்தார்.
  அடுத்ததாக ஜிஎஸ்டி வந்தபோதம் இதே நிலை தான்.
  ரெண்டுங்கெட்டானாக எதாவது கமெண்ட் கொடுத்து விடுவார் ;
  சரி ஆனால் சரியில்லை என்கிற மாதிரி.
  இப்போதும் அதே மாதிரி தான். அவருக்கு கொள்கை, கோட்பாடுகளை விட
  ந.மோ.தான் முக்கியம். அவரை குற்றம் சொல்வது போல் இவர் என்றும்,
  எதையும் சொல்ல மாட்டார்.

 3. பாமரன் சொல்கிறார்:

  காங்கிரசுக்கும் பிசேபிக்கும் கொடியில் தான் வித்தியாசம் , மற்றபடி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஒருவர் ஆட்சியில் இருக்கும் போது மக்களுக்காக குரல் கொடுப்பர் , ஆட்சி மாறியதும் இவர்கள் அந்தப்பணி செவ்வனே செய்வர்.

 4. venkat சொல்கிறார்:

  there is a hebrew saying that goes like this… “what I see from here is not what i see from there”. Here means, before i come to power and there means, after I come to power. BJP is no exception to this saying. Business using politics to their advantage and politics using businessmen to their advantage are inevitables. If we expect them to behave like sages, then we are to be blamed.

  http://www.caravanmagazine.in/reportage/rajeev-chandrasekhar-mission-secure-power-media-and-politics

  Check out above link to see how repuplic tv founder is used by BJP, was used by congress and how he manipulating politics…

  I am not saying this as modi bakth or trying to justify the policies. As long as the policies are implemented correctly and benefits the economy I am good. More jobs should be created, more people should come into organized employment sector, wastage/inefficiencies should be removed, quality of service should go up and eventually living standard of people should go up.

  Venkat

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   வெங்கட்,

   // there is a hebrew saying that goes like this… “what I see from here is not what i see from there”. Here means, before i come to power and there means, after I come to power. BJP is no exception to this saying. Business using politics to their advantage and politics using businessmen to their advantage are inevitables. If we expect them to behave like sages, then we are to be blamed. //

   நீங்கள் சொல்லும் இந்த தத்துவத்தை குருமூர்த்தி சார் அவர்களையும்
   சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்…!!!
   சொன்னால் – நான் எழுதுவதையே விட்டு விடுகிறேன்…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. venkat சொல்கிறார்:

  Why would GM will confess to that? We should know the reason as smart citizens!

  Let us say you are a labor leader, you will fight for more benefits and more salary for your brothers. Let us say, few months into the labor movement you are placed in management team and asked to manage the balance sheet ( for a fat pay and bonus ), then you will try to squeeze benefits and salary. You will have reasons to argue in both cases. Just by changing the role, your argument and position will change. This is a simple fact.

  Objective of my comment is not to force you to stop writing. People in politics will have to play the game of politics, which is to take advantage of situation to their betterment. They are doing things for their own survival and self interest.

  if you change your attitude and approach all your articles with pragmatism rather than idealism then you can elevate the quality of your blog. By saying ‘change your attitude’, i am not saying you should start praising Modi. don’t get me wrong!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   // They are doing things for their own survival and self interest.//

   எனக்கு மேலும் சிரமம் கொடுக்காமல், பாஜகவினரின் செயல்பாடுகளை
   நீங்கள் இப்படி பட்டவர்த்தனமாக
   ஒப்புக்கொண்டதே எனக்கு போதுமானது….!!! 🙂 🙂 🙂

   ———————-

   இந்த மகிழ்வை கொண்டாட அடுத்து ஒரு இனிமையான இடுகையை
   உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன்…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  இன்று அரசியல் ஒரு லாபகரமான தொழில். சிலரது லாபம் உடனடியாக தெரிகிறது, சில தாமதமாக, சில தெரிவதேயில்லை. இதில், கொள்கையாவது ? மண்ணாங்கட்டியாவது ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.