” நா காவூங்கா… நா கானே தூங்கா…” – கோடிகளில் கொண்டாட்டம்……!!!


தகவல் பெறும் உரிமை (RTI ) சட்டத்தின் கீழ்,
Rahul Sehrawat, என்கிற பொதுநல ஊழியர் ஒருவர்
பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சர்
அலுவலகத்திலிருந்து பெற்றுள்ள சில தகவல்கள் கீழே –


நவம்பர் மாதம் ஹரியானா அரசால் “சர்வ தேச கீதா மஹோத்சவ்” என்கிற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு 15 கோடி ரூபாய், அரசு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறது….

அதில் சில முக்கிய செலவினங்கள் –

– முக்கிய விருந்தாளிகளுக்கு அளிப்பதற்காக வாங்கப்பட்ட பகவத்கீதை புத்தகத்தின் 10 பிரதிகளின் மொத்தவிலை ரூபாய் 3,79,500 –

அதாவது ஒரு பிரதியின் விலை 37,950 ரூபாய்…!!!

– அந்த நிகழ்ச்சியில் நடனமாடிய முன்னாள் திரைப்பட நடிகையும், நடனமணியும், முக்கியமாக – பாஜக பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி ஹேமமாலினி அவர்களுக்கு –

கொடுக்கப்பட்ட சம்பளப்பணம் 15 லட்சம் ரூபாய்….!!!

– கலாச்சார நிகழ்ச்சி நடத்திய மனோஜ் திவாரி என்கிற பாஜக பிரமுகருக்கு கொடுக்கப்பட்ட பணம் 10 லட்சம் ரூபாய் …!!!

இப்போது இடுகைத்தலைப்பிற்கான அர்த்தத்தையும்
சொல்லி விடலாம்…

ஹிந்தி மொழியில் – “நா காவூங்கா… நா கானே தூங்கா…” – என்றால் –

” நானும் சாப்பிட மாட்டேன்… மற்றவர்களையும் சாப்பிட
விட மாட்டேன்…” என்று பொருள்….

பாராளுமன்ற தேர்தலின்போது, திரும்ப திரும்ப ஒவ்வொரு பிரச்சார கூட்டத்திலும், “பிரதமர் வேட்பாளர்” என்கிற முறையிலும் –

மறுபடியும், ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலின்போது, பேசிய ஒவ்வொரு கூட்டத்திலும், “இந்த நாட்டின் பிரதமர்”
என்கிற முறையிலும் கொடுக்கப்பட்ட வாக்குறுதி இது….

—————————————-

எது நடந்ததோ…. அது நன்றாகவே நடந்தது…
எது நடக்கப்போகிறதோ… அதுவும் நன்றாகவே நடக்கும்…!!!

– கீதையில் கண்ணன் கூறியது…!!!

———————————————————————————

பின் குறிப்பு –

இந்த சூடு, சொரணையற்ற ஹரியானா ஆட்சியின் லேடஸ்ட் சாதனை –
கடந்த 5 நாட்களில் 6 “ரேப்” … அதில் ஒன்று “ரேப்” பிற்கு பிறகு கொடூரமாக கொலை..

இவர்களுக்கெல்லாம் யார் தண்டனை கொடுப்பது…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ” நா காவூங்கா… நா கானே தூங்கா…” – கோடிகளில் கொண்டாட்டம்……!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  நா கானே தூங்கா – எனக்குப் புரிந்த அர்த்தம், சாப்பிட்டுட்டுத் தூங்கப் போறேன்னு. அதுதான் இப்போ நடந்துக்கிட்டிருக்கு. பகவத்கீதை பிரதிகள் வாங்க, வெளி’நாட்டுக்குப் பிரயாணம் போயிருப்பாங்களோ?

  நம்ம அரசியல்ல, கொள்ளையடிப்பது சகஜம். கண் முன்னால கொள்ளையடிப்பவனையே கண்டுபிடிச்சுத் தண்டித்தபாடில்லை. இதுல புதுசு புதுசா கொள்ளையடிப்பவனை, யார் கண்டுபிடித்து, யார் வழக்குப் போட்டு, யார் தண்டிக்கப்போறாங்களோ.

 2. Sundararaman சொல்கிறார்:

  KM sir, you have a choice you can run your blog like Nakeeran or some other reputed journals ( nothing comes to my mind ) – OR, the way you run at presently – its completely your choice.
  Coming back to this piece of information, well I don’t believe it is true . Even it it is in Lakhs , BJP govt should have taken care that , such things doesn’t happen, if it has happened proper punishment is met out. So if it is true, I hope that action follows.
  As far as paying 15 lakhs for Hemamalini – she is a performer, dancer , and a very famous ex cinema artist. It must have been the amount paid to her whole team . You can know the amount payable to such artists from sabha or any event organizer. , which I think is comparable.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சுந்தர்ராமன்,

   //Coming back to this piece of information, well I don’t believe it is true //

   இந்த தகவல் யாரும் இட்டுக்கட்டியதில்லை. RTI சட்டத்தின் கீழ் ஹரியானா அரசிடமிருந்தே பெற்ற தகவல்…!!!

   சில பாஜக வெறியர்கள் –

   ( உங்களைச் சொல்லவில்லை…
   உங்களைப் போய் சொல்லுவேனா…? )

   – இதை நம்ப மாட்டார்கள் என்று தான் ஏற்கெனவே, டைம்ஸ்நவ் செய்தித்தலைப்பை photo shot -ஆகவே
   மேலே தந்திருக்கிறேன்… அதைப்பார்க்கவில்லையா…?

   அல்லது அதையும் நம்பவில்லையா…? இன்னமும் சந்தேகமாக இருந்தால், அந்த வலைத்தளத்திற்கே
   சென்று பாருங்களேன்…

   அப்பவும் நம்பவில்லையென்றால் – ஹரியானா முதல்வர் கட்டார் அவர்களைத்தான் நான் அழைத்து வர வேண்டியிருக்கும் – உங்களை நம்ப வைக்க…..

   திருமதி ஹேமமாலினிக்கு 100 வயது ஆனபிறகும் கூட, நாட்டியம் என்கிற பெயரில் எப்படி ஆடினாலும் கூட,
   உங்களைப்போன்ற ரசிகர்கள் பணம் தரத்தயாராகத்தான் இருப்பீர்கள்….

   ஆனால் துரதிருஷ்டவசமாக கொடுக்கப்பட்டது ஹரியானா மக்களின் வரிப்பணம் ஆயிற்றே…!!!
   எனவே, கேள்வி வரத்தான் செய்யும்…

   ஆமாம் பகவத் கீதை ஒரு பிரதியின் விலை 37,950 ரூபாய் என்று சொல்லப்பட்டிருக்கிறதே… அதற்கு எதுவும் சாக்கு
   கிடைக்கவில்லையா…?

   பரவாயில்லை… யோசித்து அடுத்த இன்ஸ்டால்மெண்டில் எழுதுங்கள்…!

   உங்களைப்போன்ற hardcore பக்தர்களுக்காக நான் எழுதவில்லை… ஹரியானா கட்டாரே வந்து சொன்னால் கூட
   நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்…என்பது தெரியும்.

   நான் தொகுத்துத் தருவது just பொது மக்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை மட்டும் தான்… யாரையும் “கட்சி வெறி ” என்னும் போதையிலிருந்து மீட்க அல்ல…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Sundararaman சொல்கிறார்:

    I will never say you publish without evidence, may be the first look might mislead anybody, there are different sides to a story – of course Truth is the only side we have to see. If there was a corruption, money excess spent , it ought to be punished , there is no two way about it. That much I have said and agree with you.

    Yamini Krishnamurthy was dancing even after 70 , and nobody could give a tough fight to her ( my brother did nattuvangam for her ) , and in my brother’s words , even at this age , she is a good dancer …. ( definitely Aiswarya Rajnikanth is not a good dancer 🙂 .

  • Sundararaman சொல்கிறார்:

   I went to the TOI site, no news item but video was there, the person says it is costing 40k and geetha press ( the famous Adithya nath Gorakpur) distributed it for 40 paise – and they are telling this in TV and trying to compare 40 paise and 40k , and some people like you write on this also. I don’t know, it might have leather bound , or gift wrapped , still 40 k looks a very large sum if it is a single book.

   I have a series of books on Geetha , ( 18 chapters 9 volumes ) bought it for 14,000 rupees – also I have a pocket sized book of Geetha 18 chapters , which is only 3 or 5 rupees , I need to spend lot of time with you to explain why I bought for 14,000 rupees and in fact it is worth much more than that – can not put any financial value to it.

 3. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

  Sambhavame yughe yughe

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  இந்தா வந்துட்டாங்க முட்டு குடுக்க. பகவத்கீதைக்கு ரூ.37000/- என்றாலும் அதற்கும் ஒரு காரணம் சொல்வார்கள், புத்தகத்தின் பக்கங்களின் ஓரத்தில் தங்க முலாம் பூசப்பட்டது என்று. அரசியல் வியாபாரம் புத்திசாலித்தனமாகவே நடை பெறுகிறது. பாவம், மக்கள் தான் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.