சிவசங்கரி அவர்கள் சொல்வது நடமுறையில் சாத்தியமா ….?


சிவசங்கரி அவர்கள் தமிழில் எக்கச்சக்கமாக எழுதி இருக்கிறார். நிறைய உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறார்…. அவருடைய படைப்புகள் எல்லாவற்றிலும், எப்போதுமே சமூகத்தின் பால் அவருக்கு உள்ள அக்கறை முன் நிற்கும்…!

இங்கு நான் எடுத்துக்கொண்டது முதியவர்களின் நலம் குறித்த சிவசங்கரி அவர்களின் சுவாரஸ்யமான உரையொன்று –இது குறித்த என் அனுபவம் –

கிட்டத்தட்ட சிவசங்கரி அவர்கள் சொல்வது போன்ற ஒரு பிசி’யான வாழ்க்கையைத் தான் இன்று நானும் எதிர்கொண்டிருக்கிறேன்…
இருக்கின்ற 24 மணி நேரம் போதவில்லை என்பது தான் என் குறை….

செய்யப்பட வேண்டிய வேலை என்று நான் குறித்து வைத்துக்கொண்டிருக்கும் லிஸ்டில் குறைந்த பட்சம் அரை டஜனாவது எப்போதுமே பாக்கி இருக்கும்….!

ஆனால், முதியவர்கள் பலர் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான பிரச்சினை…சிவசங்கரி அவர்கள் சொல்லாமல் விட்டு விட்ட ஒன்று ….
உடல் ஆரோக்கியம் இல்லாத முதியவர்களின் நிலை…!!! அவர்களை எப்படி உற்சாகத்துடன் வலம் வரச்செய்வது….?

இருந்தாலும் கூட – மனம் தெளிவாக, engaged-ஆக இருந்தால் அது, உடல் குறித்த பிரச்சினைகளை எதிர்நோக்குவதை சுலபமாக்கும் என்பது – தினம் தவறாமல் – நெஞ்சு வலியை சந்திக்கும் – என் சொந்த அனுபவம்.

முதிய நண்பர்களுக்கு என் தரப்பு ஆலோசனை – எப்போதும் நம்மை பிசி’யாகவே வைத்துக்கொள்ள வேண்டும்… எப்போதும், யாருக்காகவாவது, எதற்காகவாவது, நாம் தேவைப்படுகிறோம் என்கிற நிலையில் நம்மை வைத்துக்
கொள்வது முதுமையில் ஒரு பிடிமானத்தை உருவாக்கும்…

ஒரு சின்ன உதாரணம்… எந்தவித பிடிப்பும் இன்றி, வாழ்க்கையில் ஆர்வம் குன்றியிருந்த என் நண்பர் ஒருவருக்கு நான் தந்த சிறிய ஆலோசனை இன்று அவரை மிகவும் சுறுசுறுப்பான, ஆர்வமுள்ள மனிதராக மாற்றி விட்டது.

பார்வையற்ற மாணவர்கள் தங்கி, படிக்கும் ஒரு சிறிய விடுதி… தினமும் மாலை வேளையில் ஒரு 2 மணி நேரம் அவர்களுடன் செலவிடுவது…. அவர்களுக்கு செய்தி பத்திரிகைகளை, பொது அறிவு சம்பந்தமான புத்தகங்களை படித்துக் காட்டுவது,

அவர்களின் சின்ன சின்ன அன்றாடப் பிரச்சினைகளை கேட்டு, அவற்றை களைய உதவுவது …. இவற்றில் ஈடுபடச் செய்தேன்… அவ்வளவு தான்… இன்று அவர் மிகவும் பிசி’யான மனிதர்…!!!

உறுதியான மனம் என்பது ஒரு மிகப்பெரிய positive energy…!

———————————————————————————

பின் குறிப்பு –

சிவசங்கரி அவர்களை வீடியோவில் பார்த்தபோது –
பல வருடங்களுக்கு முன்பு ( குறைந்தது 30-35 வருடங்கள் ஆகி இருக்கும்….) நடந்த ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது…. நான் சமூக அக்கறையுள்ள விஷயங்களில் தீவிரமாக செயலாற்றிக்கொண்டிருந்த நேரம் அது.
நான் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சிக்கு அவரையும் பேச அழைத்திருந்தேன். அரசியல் சம்பந்தமில்லாத நிகழ்ச்சி அது. ஆனால், அவர் அதில் மறைமுகமாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான
சில விஷயங்களை பேசினார்…( தேர்தல் நேரம் அப்போது…!).

விழா முடிந்து, அவரை வழியனுப்ப கார் வரை சென்றவன், “இருந்தாலும் நீங்கள் இங்கே அரசியல் பேசி இருக்க வேண்டாம்” என்று பளிச்சென்று சொல்லி விட்டேன். அப்போதெல்லாம் அவர் நிறைய எழுதிக்கொண்டிருந்தார்… சமூக தளத்தில் மிகவும் பாப்புலராக இருந்தார்…!

நான் சொன்னதை அவர் ரசிக்கவில்லை… முகம் சிவக்க என்னைப்பார்த்து முறைத்துக்கொண்டே, பதில் சொல்லாமல் காரில் ஏறிச்சென்று விட்டார்….!!!

அவரைப்பொருத்த வரையில், இது ஒரு மிகச்சிறிய, சாதாரண சம்பவம்….அவருக்கு இதெல்லாம் நினைவிலிருக்க வாய்ப்பில்லை…. ஆனால், அந்தக் காட்சி இப்போதும் என் கண் முன் தோன்றுகிறது…!!!

மனித மனம் விசித்திரமானது …. சில விஷயங்கள் மறப்பதே இல்லை…
பல விஷயங்கள் நினைவிற்கே வருவதில்லை…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சிவசங்கரி அவர்கள் சொல்வது நடமுறையில் சாத்தியமா ….?

 1. புதியவன் சொல்கிறார்:

  முதியவர்கள் தங்களை பிஸியாக வைத்துக்கொண்டால்தான், நோயை அண்டவிடாமல் விரட்டமுடியும், ஓரளவு வாழும்காலம் மிகுந்த தொந்தரவு இல்லாமல் செல்லும். எனக்குத் தெரிந்த பலர், இதுபோல் மற்றவர்களுக்கு உதவி செய்வது, தங்களை எப்போதும் பிஸியாக வைத்துக்கொள்வது, லேடஸ்ட் டெக்னாலஜி, செய்திகளோடு தங்களையும் பொருத்திக்கொள்வது என்று அப்டேடடாக இருக்கிறார்கள், பெரிய பிரச்சனையை எதிர்கொள்வதும் இல்லை. நல்ல ஆலோசனை.

  சிவசங்கரி அவர்கள் காங்கிரஸ் சார்பு மனனிலை கொண்டவர்கள். இந்திராகாந்தி அவர்களை விகடன் சார்பாக பேட்டி எடுத்துள்ளார்கள். அவரும் ஓரளவு உறுதியான மனம் கொண்டவர்.

  சிவசங்கரி சொல்வதும் நீங்கள் சொல்வதும் நடைமுறையில் சாத்தியம்தான். எனக்கு அந்த மென்டாலிட்டி (இளமையா நினைத்துக்கொள்வது) இதுவரை இல்லை. என் மாமனார் 86+க்கு இன்னும் இளமையான மனது, யாருக்கும் உதவும் மனது, எல்லாவற்றிலும் ஈடுபாடு கொண்டிருப்பது என்று எனக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார். அதனால் நீங்கள் சொல்வது சாத்தியம்தான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   உங்களது இந்த பின்னூட்டத்தை கவனிக்கத் தவறி விட்டேன்.

   // என் மாமனார் 86+க்கு இன்னும் இளமையான மனது, யாருக்கும் உதவும் மனது, எல்லாவற்றிலும் ஈடுபாடு கொண்டிருப்பது என்று எனக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார். அதனால் நீங்கள் சொல்வது சாத்தியம்தான்.//

   கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
   முந்தைய தலைமுறை மனிதர்களிடம் அபூர்வமாகவே இந்த குணங்கள் தென்படும்.
   உங்கள் வீட்டுப்பெரியவருக்கு என் வணக்கங்களும், பாராட்டும்.

   // எனக்கு அந்த மென்டாலிட்டி (இளமையா நினைத்துக்கொள்வது) இதுவரை இல்லை.//

   வரும்…. உங்களுக்கு அந்த காலம் வர இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன.
   உங்கள் கடமைகளை எல்லாம் முடித்த பிறகு அந்த மனப்பக்குவம் வரும் என்று
   ( உங்களை நானறிந்த வரையிலிருந்து ) – நம்புகிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s