ரிபப்ளிக் டிவி,அர்னாப் கோஸ்வாமி, ஜிக்னேஷ் மேவானி……


குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தனக்கெதிரான பெரும் அளவிலான எதிர்ப்பை தாக்குப் பிடித்து வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆன தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி கடந்த செவ்வாயன்று சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்…

சென்னையில் நடந்த அந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிவடைந்ததும், அந்த நிகழ்வுக்கு வந்திருந்த ஆங்கில செய்திச் சேனல்களின் செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி ஒன்றைக் கோரியதால், அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப்
பேட்டிக்கென மைக்குகள் வைக்கப்பட்டதும் ஜிக்னேஷ் மேவானி அங்கு வந்திருக்கிறார்.

அப்போது அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி மைக்கைப் பார்த்தும், ” இதன் செய்தியாளர் யார், இந்த மைக்கை அகற்றிவிடுங்கள்” என்று கூறி இருக்கிறார். அந்த மைக் இருந்தால் தான் பேசப்போவதில்லை என்றும் கூறி இருக்கிறார்.

ரிபப்ளிக் டிவி தொடர்ந்து ஜிக்னேஷ் மேவானியை அவமதித்து, பலவிதங்களிலும் – கேவலப்படுத்தி வருவதால் தன் எதிர்ப்பை காட்ட அவர் எடுத்த முடிவு இது…!

செய்தியாளர் கூட்டத்தை அவர் ஏற்பாடு செய்யவில்லை…
செய்தியாளர்களாகத்தான் அவரை பேச அழைத்தனர்.
அதில் ரிபப்ளிக் டிவி இருந்தால் பேச மாட்டேன் என்று சொல்வது முழுக்க முழுக்க அவருக்குள்ள உரிமை…!

அவர் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் ரிபப்ளிக் டிவி மைக் அகற்றப்படவில்லை….அப்படியானால், நான் பேச முடியாது என்று கூறிய ஜிக்னேஷ் மேவானி அங்கிருந்து எழுந்து சென்றிருக்கிறார்…. ஜிக்னேஷ் மேவானி அங்கிருந்து வெளியேறும்போது, மீண்டும் ரிபப்ளிக் டிவியின் செய்தியாளர் அவரிடம் பேட்டி எடுக்க முயன்றபோது அவர் பேச மறுத்து
விட்டார்.

ஜிக்னேஷ் மேவானி ரிபப்ளிக் டிவியை அகற்றச் சொன்னது சரியா…? அதை அகற்றா விட்டால், பேட்டி கொடுக்க மாட்டேன் என்று சொன்னது சரியா…?
என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டு, இந்த விவகாரம் சமூக
வலைதளங்களில் விவாதங்களை உருவாக்கி இருக்கிறது….

இதில் added attraction – ஆக, ரிபப்ளிக் டிவியை மேவானி புறக்கணித்ததை எதிர்த்து ஏதோ சென்னை செய்தியாளர்கள் அனைவருமே மேவானியை புறக்கணித்து விட்டது போல், அர்னாப் கோஸ்வாமியால் ஒரு மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அங்கிருந்த டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிருபர் ” ok – we also don’t want your interview”
என்று கூறிய ஒரு வார்த்தை தான்.

மற்ற செய்தியாளர்கள் யாருக்கும் இதில் எந்தவித சம்பந்தமும் இல்லை. மேவானியை புறக்கணிப்பதாக வேறு எந்த செய்தியாளரும் கூறவில்லை. சென்னை செய்தியாளர்கள் மேவானியை புறக்கணிக்கவில்லை என்பதை அதையடுத்து விசிக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர்கள்
கலந்து கொண்டது உறுதிப்படுத்தியது.

ஆனாலும், சென்னை செய்தியாளர்கள் மேவானியை புறக்கணித்தது போல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு, ரிபப்ளிக் டிவியால் அந்த வதந்தி தீவிரமாக பரப்பப்பட்டது.

தொடர்ந்து ஆங்கில தொலைக்காட்சிகளை கவனித்து வருபவர்கள் நன்கு அறிவர்…..ரிபப்ளிக் தொலைக்காட்சியும், அதன் உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமியும் நாள்தோறும் அரங்கேற்றி வரும் கோமாளித்தனங்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது…

ஆளும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். தவிர மற்ற அத்தனை கட்சிகளையும், தலைவர்களையும் – ஏளனமாக பேசுவதும், எள்ளி நகையாடுவதும், கேலி செய்வதும், அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை திரும்ப திரும்ப கூறுவதுமாக – முழுக்க முழுக்க ஆளும் கட்சியின் கைக்கூலியாகவே
அவர்செயல்படுகிறார்.

இவர் காசு பெறட்டும் …கூலி வாங்கட்டும்… மத்திய அரசிடமிருந்து சலுகைகளைப் பெறட்டும்… காலில் விழுந்து கும்பிடட்டும்… தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடட்டும்…வேறு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்…

ஆனால், மற்ற அனைத்து கட்சிகளையும், தலைவர்களையும் மிக மோசமாக, தரக்குறைவாக தொடர்ந்து தனது தொலைக்காட்சியில் இவர் பேசி வருவது அருவருக்கத்தக்கது.

இவர் ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கண்டு, தனக்கு பெருத்த அளவில் ரசிகர்கள் இருப்பதாக நினைத்துக் கொணிருக்கிறார் போலும்…

பைத்தியக்காரர்களைச் சுற்றி எப்போதும் 10 பேர் இருப்பது போலத்தான், இவர் போடும் கூச்சல்களையும், ஆட்டங்களையும் வேடிக்கை பார்க்கத்தான் அவ்வப்போது மக்கள் இவர் தொலைக்காட்சிக்கு போய் வருகின்றனர்.

இவரையும், இவரது டிவியையும் புறக்கணிப்பது என்று
ஜிக்னேஷ் மேவானி எடுத்த முடிவு மிகச்சரியானது …

இது மற்ற கட்சித்தலைவர்களையும் இத்தகைய முடிவை எடுக்க ஒரு தூண்டுதலாக இருக்கும்… இவரால் பாதிக்கப்படும் அத்தனை பேரும், அர்னாப் கோஸ்வாமியையும், அவரது தொலைக்காட்சியையும் முற்றிலுமாக புறக்கணித்தால் மட்டுமே இவரது ஆட்டத்தை ஒரு முடிவிற்கு கொண்டு வர முடியும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to ரிபப்ளிக் டிவி,அர்னாப் கோஸ்வாமி, ஜிக்னேஷ் மேவானி……

 1. venkat சொல்கிறார்:

  this post is based on savukku article that came out few days ago. you could have cut and paste the same article here as you do many times. that one was more impact-full.
  poor editor is loyal to HIS BOSS! what more can be said

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சிலர் அறிவு இருந்தும் பயன்படுத்துவதில்லை…

   முட்டாள்தனமாக, அடிமைத்தனமாக, கண்மூடித்தனமாகவே யோசிக்கிறார்கள்…. ! உங்களை இந்த வகையில் சேர்க்கலாமா…? இதை படிக்கும் வாசக நண்பர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

   // this post is based on savukku article that came out few days ago.//

   இப்படி எழுதுபவர்களைக் கண்டு நான் கோபப்படத்தான் செய்வேன்.
   பின் என்ன…?
   நடந்ததது ஒரு நிகழ்வு… செய்தி…
   மேவானி ரிபப்ளிக் டிவி மைக்கை எடுத்தால் தான் பேசுவேன் என்று சொன்னது ஒரு செய்தி.

   இந்த செய்தியை எல்லா செய்தித்தளங்களிலும் காணலாம்.

   அந்த செய்தியை, சவுக்கு அவர்கள் பாணியில் வெளியிட்டு இருக்கிறது… நான் என் பாணியில், எனக்கு தோன்றிய விதத்தில் எழுதி இருக்கிறேன்.

   cut and paste என்று சொல்லும் முட்டாள்கள் சவுக்கு கட்டுரைக்கும் என் கட்டுரைக்கும் இடையே உள்ள ஒரே ஒரு
   வார்த்தையிலாவது ஒற்றுமையை காட்டட்டும் பார்க்கலாம்.

   பாஜக மோகிகள் இங்கே வந்து எதையாவது உளறிக்கொட்டுவது.. பதிலுக்கு நான் அவர்கள் தரப்பு தவறுகளையும், பலவீனத்தையும் சுட்டிக்காட்டினால் – பதிலே சொல்லாமல் ஓடி விடுவது; இதைத்தானே வழக்கமாக
   வைத்திருக்கிறார்கள்…?

   படிக்காத முட்டாள்களை புரிந்து கொள்ள முடியும்… பாவம் அவர்களது செயலுக்கு காரணம் அறியாமை ..!

   ஆனால், படித்தவர்கள், அனைத்து செய்திகளையும் படிப்பவர்கள், கண்மூடித்தனமாக ஒரு தலைவனின் / கட்சியின் பின்னால் போய்க்கொண்டு, தங்கள் புத்தியை அவர்களிடம் அடமானம் வைத்து விட்டு பேசினால், எழுதினால் – அவர்களை பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை.

 2. புதியவன் சொல்கிறார்:

  கோஸ்வாமி ரொம்ப aggressiveஆகத்தான் பேசுகிறார். அவர், காங்கிரஸ் தலைவர் ராகுலை எள்ளி நகையாடுவது ரசிக்கத்தக்கது அல்ல. ஆனாலும் அவர் தேசப்பற்றுக்கு எதிராக பேசினதுபோல் தெரியவில்லை. எந்தப் பத்திரிகை, தொலைக்காட்சி நேர்மையாக நடந்துகொண்டிருக்கிறது? இதில் ரிபப்ளிகன் தொலைக்காட்சியை மட்டும் குறைகூறுவது எப்படி? அவர்கள் பாஜக ஆதரவுபோல் தெரிவதாலா? மற்ற தொலைக்காட்சிகளெல்லாம், சொந்தப் பணத்தில் நடைபெறுகிறதா?

  மேவானிக்கு ஒரு சட்டம், அர்னாபிற்கு ஒரு சட்டம் கிடையாதே. அர்னாப் மத்திய அரசின் கைக்கூலி என்றால், மேவானி, (அவர் விசிகவின் ஆதரவில் இருந்ததால்), கட்டப்பஞ்சாயத்து திருமா போன்றவர்கள் இஸ்லாமிய கைக்கூலிகள் இல்லையா? டைம்ஸ் நவ் நிருபர் ‘இன்டர்வியூ வேண்டாம்’ என்று சொன்னது நியாயமானதுதானே. பொதுவாழ்வுக்கு வந்தால் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

 3. Sundararaman சொல்கிறார்:

  Nakeeran – savukku – next what ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நக்கீரனையும், சவுக்கையும் ஒழுங்காக படிக்காத அரைகுறைகள் தான் இந்த மாதிரி கேள்விகளை கேட்கும்…

   cut and paste என்று சொல்லும் முட்டாள்கள் சவுக்கு, நக்கீரன் கட்டுரைகளுக்கும் என் கட்டுரைக்கும் இடையே உள்ள ஒரே ஒரு வார்த்தையிலாவது ஒற்றுமையை காட்டட்டும் பார்க்கலாம்.

   சிலர் அறிவு இருந்தும் பயன்படுத்துவதில்லை… முட்டாள்தனமாக, அடிமைத்தனமாக, கண்மூடித்தனமாகவே
   யோசிக்கிறார்கள்…. ! உங்களையும் இந்த வகையில் சேர்க்கலாமா…? என்பதையும் இதை படிக்கும் வாசக நண்பர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

   படிக்காத முட்டாள்களை புரிந்து கொள்ள முடியும்…பாவம் அவர்களது செயலுக்கு காரணம் அறியாமை ..!

   ஆனால், படித்தவர்கள், அனைத்து செய்திகளையும் படிப்பவர்கள், கண்மூடித்தனமாக ஒரு தலைவனின் / கட்சியின் பின்னால் போய்க்கொண்டு, தங்கள் புத்தியை அவர்களிடம் அடமானம் வைத்து விட்டு பேசினால், எழுதினால் – அவர்களை பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை.

   இனியும் நான் பொறுமையாக இருக்கப் போவதில்லை.
   இங்கு எதையாவது உளறிக்கொட்டுபவர்கள், பதிலுக்கு நான் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டியது தான்.

   • Sundararaman சொல்கிறார்:

    There is nothing wrong in you are getting angry , I will also try to see Is there any take home points for me? , in so many other postings , there are , and I really liked some of them.
    But when it comes to political postings , like this one , you are talking about the treatment to honourable opposition leaders, lets take the name, RG, is he honorable ? who goes on leave for picnics on important occasions, treats politics as side job – Sonia ? main achievement is headed the UPA , the most corrupt govt , MMS, the man who kept his mouth shut , right under his nose , various scams . Karge, ? …sharathpawar, ? Sharthyadav? Farroq? MK? Nitish has become a part of NDA, Lalu in Jail , Mayawathi ? Maulayam singh ? Akhilesh ?

    We all know only little about them, there is so much of dark in their side, if ever we will come to know you will not write like that. Whether you agree or not, this govt of 3 years is not in any corruption –

    Mewani is not a big throne for BJP , and he is dangerous to the society , he will have a direct role in few riots / killings / clashes

    • புதியவன் சொல்கிறார்:

     சுந்தர்ராமன் – வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. மோடி அவர்களின் ஆட்சி காலத்தில் ஜி.எஸ்.டி தவிர வேறு எந்த டேஞ்சபிள் முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஜி.எஸ்.டியினால் நேரடியாக மக்களுக்குப் பயன் எதுவும் ஏற்படவில்லை.

     மற்றவர்களின் குறைகளினால் மட்டும் மோடி அவர்கள் ஆட்சி தொடரமுடியாது. இங்கு மேவானி நல்லவரா, ராகுல் நல்லவரா அல்லது மற்றவர்கள் நல்லவர்களா என்பது கேள்வி அல்ல. மோடி அவர்களுக்கும் குறைகள் இருக்கின்றன. இதுவரை, பாஜக கட்டாயம் தொடரவேண்டும் என்று சொல்லத்தக்க அளவில் மோடி அரசு எதுவுமே மக்களுக்குச் செய்யவில்லை. கறுப்புப் பணத்தையோ, அல்லது அதைப் பதுக்கிவைத்து மாட்டிய கொள்ளையர்களையோ மோடி அரசு கண்டுகொள்ளவில்லை.

     காங்கிரஸ் அரசு கொள்ளையடித்தது, திமுகவுக்கு அதில் பெரும் பங்கு உண்டு. ஆனால் அவை எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. சட்டப்படி அவர்கள் ஊழல் செய்தார்கள் என்று நிரூபிக்கப்படவில்லை, மோடி அரசு ஊழல் எதுவும் செய்யவில்லை என்று நிரூபிக்கப்படாததுபோல் (ரெட்டி போன்ற பல கொள்ளையர்கள் 2000 ரூபாய்களுடன் பிடிபட்டபோதும் அவர்கள்மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன் என்ற கேள்வி யாருக்கும் எழாதா? அதனால்தான், காங்கிரஸ் அரசுமீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதுபோல் மோடி அரசு சுத்தம் என்றும் நிரூபிக்கப்படவில்லை.

     • Sundararaman சொல்கிறார்:

      Puthiyavan Sir , there were some time bomb set by the UPA – black money, NPA, and general laziness and corruption in Govt offices .
      Demonetization and GST , definitely has brought in the unscrupulous business men /smugglers/black marketers/thugs/gamblers/ etc in to the net ( of tax )…meaning such people can not buy or sell anything without paying tax.
      Power connection to the villages is a big achievement ( i hope KM sir allows this reply …because if I say achievement , there is a chance that he might say I will not allow BJP propaganda ) , Railways , there is lot of improvement, roads construction is going on a big scale ( much larger , bigger than any time in the past ) , ports are upgraded, lots of defense production in India with the technical help from abroad, reserves are all time high, export is picking up, commercial vehicles sales were all time higher , sensex is high , IIM study says job creation is in millions, , export is increasing, NPA problem is being addressed, business people are selling their assets ( like Essar and Reliance communications), Mudra loan is a big development – and the toilet construction in village is in crores… inflation is still under control –
      yes people like sekar reddy is not punished yet , major factor is the Courts and Judges,( and CBI as well) if they can not punish a person who stole the cables and caused hundreds of crore loss – its reason for major worry. ( AJ is big drag for Modi – KM sir explained this already in the blog ) . The court and Judges – big reform required in this area…. there were troubles, killings ( cow protection ) etc., which should not have been there, or immediate punishment should have been there. But these TV/News papers also fan these feelings , never allows to settle down.

     • Moideen சொல்கிறார்:

      Sundararaman
      Demonetization and GST , definitely has brought in the unscrupulous business men /smugglers/black marketers/thugs/gamblers/ etc –
      எவ்வளவு கோடி ரூபாய் கருப்புப்பணம் கண்டு பிடிக்கப்பட்டது?
      எவ்வளவு கோடி counterfiet ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது ?
      எத்தனை பணம் வந்தது என்று எண்ணியாவது முடித்தார்களா?
      கருப்பு பணம் வைத்திருந்த எத்தனை பிசினெஸ்மென்
      கடந்த மூன்றரை ஆண்டுகளில் கைது செய்யப்பட்டார்கள் ?
      எத்தனை பேர் மீது வழக்கு தொடரப்பட்டது ?
      எத்த்னை பேர் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள் ?
      வெளிநாட்டிலிருந்து எத்தனை கோடி ரூபாய் கருப்புப்பணம்
      இதுவரை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது ?
      Railways , there is lot of improvement, – மும்பையில் மாடிப்படி இடிந்து விழுந்து இறந்தது போலவா ? உ.பி.யில் ரெயில்கள் மோதிக்கொண்டது போலவா ?
      roads construction is going on a big scale – எங்கே சவுத் ஆப்பிரிக்காவிலா, துபாயிலா, சவூதியிலா, ஈரானிலா ?
      export is picking up – ஜிடிபி கதி என்ன ?
      டீசல், பெட் ரோலில் அரசாங்கமே மக்களை கொள்ளையடித்த பணம் எதற்கு பயன்பட்டது ?
      IIM study says job creation is in millions – எங்கே ட்ரம்ப் அட்மினிஸ்டிரேஷனிலா ? யு.எஸ்.ஸிலா ?
      yes people like sekar reddy is not punished yet , major factor is the Courts and Judges, – சேகர் ரெட்டியிடம் 3000 கோடி ரூபாய்க்கு
      புதிய நோட்டு எந்த பேங்கிலிருந்து வந்தது
      என்று தெரியாது; கண்டுபிடிக்க முடியவில்லை யென்று சொன்னது கோர்ட் தவறா கவர்ன்மெண்டின் கையலாகாததனமா?
      AJ is big drag for Modi – இப்படி ஒரு கூட்டாளியுடன் இன்னும் உறவு தொடர காரணமென்ன ? ……… ரகசியம் தெரிந்தவரை முறைத்துக் கொள்ள முடியாது என்பது தானே ?
      ………
      …………..
      ………………

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Moideen,

      உங்கள் பின்னூட்டத்திலிருந்து சில பகுதிகளை அகற்றி இருக்கிறேன்.
      இன்னும் கொஞ்சம் நாகரிகமாக, பக்குவமாக உங்கள் கருத்துகளை
      தெரிவிக்க முயற்சி செய்யுங்களேன்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

 4. அறிவழகு சொல்கிறார்:

  என்னா அறிவார்ந்தவர்களப்பா…….!

  ஒருவரின் சிந்தனையோட்டம் மற்றவர்கள் சிந்தனையோடு ஒத்துப்போக கூடாதோ……?

  Coincidence என்று எதோ ஒன்னு சொல்லுவாங்களே அப்படி எல்லாம் இருக்க கூடாது இல்ல…..?

  /// இவர் காசு பெறட்டும் …கூலி வாங்கட்டும்… மத்திய அரசிடமிருந்து சலுகைகளைப் பெறட்டும்… காலில் விழுந்து கும்பிடட்டும்… தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடட்டும்…வேறு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்… ///

  இது அர்னாபுக்கு மட்டுமா பொருந்தும்…..!

  அட போங்கப்பா……!

  என்ன மறைத்தாலும் குடுமி வெளியே வந்துருதே…!

  இப்படியே போனால் தேசப்பற்றுக்கு மரியாதையே இல்லாமல் போகப்போகிறது. எல்லா வியாபாரமும் குறிப்பிட்ட காலம் தான். அதிகம் கூவினீர்களென்றால் அது மலிவான தானதாக போவது இயற்கை.

 5. tamil_alagu சொல்கிறார்:

  Sir,
  Better you watch NDTV, and write an article how they support congress!!!
  EVery TV are supporting some political parties.But you are blind towards them, and worries only about arnab.i remember the same arnab was very aggressive against MODI during his earlier time in times now.he alsways used to be aggressive talk about gujarat violence.
  so we dont have to cry…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   எந்த டிவியும், எந்த கட்சியையும், ஆதரிப்பதையோ,
   எதிர்ப்பதையோ நான் குறை கூறவில்லை.

   அசிங்கமாகவும், ஆபாசமாகவும், ஏளனமாகவும்
   பேசுவதை நிறுத்த வேண்டும்.

   விவாதங்கள் கண்ணியமாக நடக்க வேண்டும்….
   அது நடக்கிறதா ரிபப்ளிக் டிவியில்…?

   பத்து பேரையும் ஒரே சமயத்தில் அலற விட்டு,
   பைத்தியம் பிடித்தவர்களைப் போல் நடந்து கொள்வதா
   tv anchor பொறுப்பு…?

 6. tamil_alagu சொல்கிறார்:

  பிஜேபி எதிர்க்கிறது என்ற ஒரே காரணத்திற்காக நாம் பாகிஸ்தானை ஆதரிப்பவர்களையும் நாம் கண்மூடித்தனமாக support செய்கிறோம்.
  கடவுளே ஏன் தேசத்தை காப்பாற்று

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இதைப்போல் முட்டாள்தனமாக உளறுபவர்கள் இந்த தளத்தில் பின்னூட்டம்
   எழுதவே லாயக்கு இல்லை.

   யார் பாகிஸ்தானை ஆதரிக்கிறார்கள்…?
   யார் அவர்களை ஆதரிக்கிறார்கள்.

   ஏன் இப்படி உளறுகிறீர்கள்…?
   நீங்கள் எழுதியுள்ளதை, புரியும்படி நீங்களே விளக்குங்கள் பார்க்கலாம்.

 7. venkat சொல்கிறார்:

  KM sir,
  no use is getting angry at us. you are writing a blog in the name of “vimarisanam”. First of all learn to accept “vimarisanam” on your own work. If you get enough maturity to accept criticism of your thought process then your contribution quality will improve. Until then your arrogance and “athigaprasangi thanam” will show up everywhere.

  You quote Kanchi paramacharyal every where. Most important thing he quotes from vedas is a statement “vidhya vineya sampanne”. It means, purpose of education is to become humble. For your age if you yearn for humbleness you will approach all problems with level footedness. Right now you are thinking that every one other than you are idiots. This attitude should change. This is applicable if you write about congress or bjp or subramanyaswamy.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வெங்கட்,

   நான் உங்களுக்கு எழுதிய பதிலிலிருந்து ஒரு பகுதியை கீழே தந்திருக்கிறேன். மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள் –

   ——————————————–

   // this post is based on savukku article that came out few days ago.//

   இப்படி எழுதுபவர்களைக் கண்டு நான் கோபப்படத்தான் செய்வேன்.
   பின் என்ன…?
   நடந்ததது ஒரு நிகழ்வு… செய்தி…
   மேவானி ரிபப்ளிக் டிவி மைக்கை எடுத்தால் தான் பேசுவேன் என்று சொன்னது ஒரு செய்தி.

   இந்த செய்தியை எல்லா செய்தித்தளங்களிலும் காணலாம்.

   அந்த செய்தியை, சவுக்கு அவர்கள் பாணியில் வெளியிட்டு இருக்கிறது… நான் என் பாணியில், எனக்கு தோன்றிய விதத்தில் எழுதி இருக்கிறேன்.

   cut and paste என்று சொல்லும் முட்டாள்கள் சவுக்கு கட்டுரைக்கும் என் கட்டுரைக்கும் இடையே உள்ள ஒரே ஒரு
   வார்த்தையிலாவது ஒற்றுமையை காட்டட்டும் பார்க்கலாம்.

   —————————————————–

   இதற்கு பதில் எழுதினீர்களா…? இதற்கு ஏன் நீங்கள் விளக்கம் எழுதவில்லை…?

   நியாயமான கேள்விகளுக்கு உங்களால் பதிலெழுதவே முடியாது…

   மோடிஜி மோகத்தில் சிக்கி, பாஜக மயக்கத்தில் உழண்டு கொண்டிருப்பவர்களுக்கு நான் எழுதுவது எதுவுமே பிடிக்காது…

   கட்சி மோகிகளிடம் அறிவுரை கேட்டு, அதன்படி நடந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை…!

   நான் வலைத்தளம் உருவாக்கி, எழுதிக் கொண்டிருப்பது – பாஜகவுக்கோ, காங்கிரசுக்கோ, வேறு எந்த கட்சிக்குமோ –
   ஜால்ரா போடுவதற்காக அல்ல. நான் ஆயிரம் முறை கூறி விட்டேன். நான் எந்த கட்சிக்கும் அடிமையாக இருக்கத் தயாரில்லை என்று.

   நீங்கள் சொல்கிறீர்கள் –

   // Right now you are thinking that
   every one other than you are idiots. //

   மதவெறி பிடித்த மூர்க்கர்கள் மட்டுமே என்னைப்பற்றி செய்யும் விமரிசனம் இது…. ஏனென்றால் – நான் தாக்கி எழுதுவது, மதவெறியர்களையும், ஜாதி வெறியர்களையும், திருட்டுத்தனம் செய்து மக்களை கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளைப் பற்றியும் தான்… எனவே, பாதிக்கப்படும் அவர்கள் மட்டுமே, அவர்களது அடிமைகள் மட்டுமே – கூறும் வார்த்தை இது.

   காங்கிரஸ் கட்சியைப்பற்றி, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளைப்பற்றி, அவர்களின் ஆட்சியைப்பற்றி, அவற்றின் முக்கிய தலைவர்களைப்பற்றி – நான் எத்தனையோ தடவை இங்கே கடுமையாக விமரிசனம் செய்திருக்கிறேன்.

   ஆனால், இந்த கட்சிகளை எல்லாம் சேர்ந்தவர்கள் என்னுடன் பலமுறை கருத்துகளை முன்வைத்து விவாதம் செய்திருக்கிறார்களே தவிர – பாஜக வெறியர்களைப் போல் பர்சனலாக தாக்குதல் நடத்தவோ, பயமுறுத்தவோ செய்ததில்லை.

   என் எழுத்தில் இருக்கும் உண்மையையும், சத்தியத்தையும், என் நேர்மையான, அனுபவபூர்வமான விமரிசனங்களையும் நேசித்து தான் ஆயிரக்கணக்கான வாசக நண்பர்கள் இந்த தளத்திற்கு வருகிறார்கள். அவர்களின் அன்பும், அவர்கள் தரும் ஊக்கமும் தான் தொடர்ந்து என்னை உற்சாகத்துடன் செயல்பட வைக்கிறது.

   என்னை மனப்பூர்வமாக பாராட்டியும், நேசித்தும் பல நண்பர்கள், தனிப்பட்ட முறையில் எழுதி வரும் கடிதங்களைப்பற்றி நான் என்றும் விளம்பரம் செய்து கொண்டதில்லை. அவற்றை இங்கு பிரசுரித்ததும் இல்லை.

   நாள்தோறும், இந்த தளத்தை பல ஆயிரம் வாசக நண்பர்கள் படிக்கிறார்கள். இந்த தளத்தின் மறுமொழி கதவு
   எப்போதும் திறந்தே தான் இருக்கிறது… மறுமொழிகளை பதிப்பிக்கும் முன் வடிகட்டும் வழக்கம் எனக்கு கிடையாது…

   விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கான – கட்சி, மத வெறியர்கள் மட்டுமே நான் இங்கு எழுதுபவற்றை
   எதிர்க்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

   மற்ற ஆயிரக்கணக்கான வாசகர்கள் என் எழுத்துக்களை ஆமோதிக்கவும், வரவேற்கவுமே செய்கிறார்கள்.

   நான் எழுதும் எழுத்துக்களையோ, கருத்துக்களையோ கூட தவறு என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியாமல் தனிப்பட்ட முறையில் என் மீது தாக்குதல் நடத்தத்தான் உங்களால் முடிகிறது…..

   – நான் அனைத்து மதங்களையும் ஒன்றாக ஏற்றுக்கொள்பவன். இறைவன் ஒருவன் தான் என்றும், அனைத்து மதங்களும் அந்த ஒரே இறைவனை நோக்கியே அழைத்துச் செல்கின்றன என்றும் நம்புபவன். அனைத்து மதங்களும் – கருணையையும், அன்பையும், உண்மையையும், சத்தியத்தையுமே போதிக்கின்றன என்று நம்புபவன்.

   – மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் அட்டூழியம் செய்பவர்களை என் கடைசி மூச்சு உள்ளவரை விமரிசித்துக் கொண்டே தான் இருப்பேன்….

   என்ன – ஆட்சியும், அதிகாரமும் கையில் இருப்பவர்களை முறைத்துக் கொண்டால் என்ன நடக்குமோ – அது ஒரு நாள் எனக்கும் நடக்கலாம்….

   மிரட்டுவீர்கள்… பயமுறுத்துவீர்கள்…தாக்குதலில் இறங்குவீர்கள்…
   என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்……
   என் மனசாட்சி தான் எனக்கு முக்கியம்.

   எல்லாருக்கும் பொதுவான அந்த இறைவன் எனக்கு துணை இருப்பான் என்று நான் நம்புகிறேன்.

   -காவிரிமைந்தன்

 8. M.Syed சொல்கிறார்:

  KM சார் கடைசியில் உங்களையும் ஆண்டி இண்டியன் என்று சொல்லபோரானுக பாருங்கள்ளேன்…

 9. Thiruvengadamthirumalachar சொல்கிறார்:

  Jignesh missed a good opportunity to discuss the issues and expose the shortcomings of the system which could not have given Arnobto project him in a different light.Thiruvengadam

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.