(பகுதி-2) யாரைப்பற்றி…. யார்… ? ………பற்றி ……..


துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களைப்பற்றி திரு.ரஜினிகாந்த் பேசியதை முதல் பகுதியில் பதிவிட்டிருந்தேன்.

இந்த பகுதியில் ரஜினிகாந்த் யாரைப்பற்றி கூறுகிறாரென்று நான் முன்கூட்டியே சொன்னால் சுவாரஸ்யம் போய் விடும்….
யாரைப்பற்றி கூறுகிறாரென்று …… நீங்களே பாருங்களேன்…!!!

……….

………

———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to (பகுதி-2) யாரைப்பற்றி…. யார்… ? ………பற்றி ……..

 1. தமிழன் சொல்கிறார்:

  நல்ல பகிர்வு. இந்த கான்செப்ட், அது தொடர்பான சிந்தனை, தெளிவடைவது எல்லாம் சுலபமல்ல.

 2. அறிவழகு சொல்கிறார்:

  டார்வின் மாதிரியான விஞ்ஞானிகள் மற்றும் அவரைப் பின் பற்றி கடவுள் மறுப்பு கொள்கையுடையவர்களுக்கும் நல்ல கேள்வி.

  இது போல் ஏராளமான கேள்விகள் விவாதங்கள் பல நடந்தும் கடவுள் மறுப்பாளர்கள் உண்மையை ஏற்றுக் கொள்பவர்களாக இல்லை.

  போகட்டும்.

  இதற்கெல்லாம் கருத்து சொல்ல நேரம் இருக்கும் திரு. ரஜினி அவர்களுக்கு தமிழகத்தில் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் நல்ல நிகழ்வுகள் பற்றி அவரின் கருத்தை சொல்ல என்ன தயக்கம்.

  இது காலம் வாய் பொத்தி மெளனியாக இருந்து விட்டார். அரசியல்வாதியாகி விட்டார். இப்போதுமா……!

  அந்த வகையில் திரு.பிரகாஷ் ராஜ் அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்.

 3. arul சொல்கிறார்:

  அறிவழகன் சார் இது 2 1 /2 வருஷத்துக்கு முன்னாடி எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசியது ..பிரகாஷ் ராஜும் ரஜினியும் ஒண்ணா ? ரஜினி சாரின் வார்த்தைகளுக்கு உள்ள பவர் பிரகாஷ்ராஜ் சொல்லுவதற்கு இருக்கா? அதனால் ரஜினி சார் தேவையில்லாமல் பேசமாட்டார் ? தேவை படும் போதெல்ல்லாம் தனது கருத்தை நேர்மையாக சொல்லித்தான் வந்திருக்கிறார் தன் மனசாட்சிக்கு சரினு பட்டதை..

  • அறிவழகு சொல்கிறார்:

   தேவைப்படும்போது பேசவில்லை என்பது தான் இங்கு பெரும் குறை.

   1996க்கு பிறகு பொதுப் பிரச்சனையில் எத்தனை தடவை அவர் தன் கருத்தை சொல்லியுள்ளார்.

   உங்களிடம் ஒரு கேள்வி,

   Demonetisation-ஐ ஆதரித்து அப்போது ஏதோ சொன்னார். அது proven failure என்றான பின்பு ஏதாவது சொன்னாரா?

   GST, NEET, விவசாயிகள் போராட்டம், பசு பாதுகாப்பு என்கின்ற பெயரில் நடந்த படுகொலைகள், அதன்பின் அரசு கொண்டு வந்த பசுவதை தடை சட்டத் திருத்தம் பிறகு பின் வாங்கல், நெடுவாசல் போராட்டம், கதிராமங்கலம், ஜல்லிக்கட்டு, மீனவர்கள் பிரச்சனை……இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். இவைகள் அனைத்தும் நடந்த போது என்ன செய்து கொண்டு இருந்தார்.

   வீட்டில் இருந்தபடியே முதல்வராக முடியும்…..?

   இது சரி என்றால் தீபாவும் தான் ஆசைப் படுகிறார் வீட்டில் இருந்தபடியே. என்ன காரணம் கொண்டு நீங்கள் தவறு என்பீர்கள்.

   ரஜினி அவர்கள் பற்றி சில தகவல்கள் படித்துள்ளேன். அவைகள் உண்மைகளாக இருக்கும் பட்சத்தில் அவர் நல்லவர். அது மட்டும் போதும் என்றா நினைக்கிறீர்கள்.

   96க்கு பிறகு இன்னும் சொல்ல போனால் பாமகவிடம் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு அவர் அரசியலை விட்டு விலகி தான் இருந்தார்.

   அப்போதைக்கு அப்போது பட வெளியீடு சமயத்தில் உங்களைப் போல ரசிகர்களை உசுப்பேற்ற எதையாவது சொல்வார். அவ்வளவு தான்.

   ஆனால், இப்போது கதை வேறு.

   அரசியல் ஆர்வம் இல்லாத ஒருவரை மத்தியில் உள்ளவர்கள் தினிக்கிறதாகவே தெரிகிறது. அதுவும் துக்ளக் கைக்கு வந்து விட்டதாலேயே தன்னை ‘சோ’ என்று கருதிகொள்பவரும் இதில் முக்கியமான பங்காற்றுகிறதாக தெரிகிறது. அதற்கு உடன் படுபவரை என்ன சொல்ல.

   • arul சொல்கிறார்:

    டெமோனிடைசேஷன் முற்றிலும் தவறு என்று யாரும் சொல்லி இருக்கிறார்களா ..அது implement செய்த விதம் ..எந்த முன்னேற்பாடுகளும் செய்யாதது ..இந்த எக்சிஸ்டிங் சிஸ்டம் வச்சுக்கிட்டு செய்தது அது தான் பிரச்சினையே நோக்கம் நல்ல நோக்கம் தான் ..அதனால் வரவேற்று இருப்பார் ..அதை ஆதரித்ததால் வரும் ப்ரிரச்சினையும் ரஜினியே எதிர் கொள்வார் ..இதில் என்ன பிரச்சினை ..1998 ல் கோவை குண்டு வெடிப்பில் பலியான குடும்பத்துக்கு உதவி செய்தவர் அவர் ..முஸ்லிம்களுக்கு ஆதரவாக நின்றார் அந்த சமயத்தில் ..2002 பாபா பட பிரச்சினை வந்த போதும் யாரும் அவருக்கு உதவாத போதும் அதை நேர்மையாக எதிர் கொடார் தன் ரசிகர்களை அமைதி காக்க செய்தார் ..2002 பிரச்சினையில் அவர் தனிமை படுத்த பட்ட போதும் உண்ணாவிரதம் இருந்து உண்மையான ..பிரச்சனையின் தீர்வை நோக்கி செல்ல முயற்சி செய்தான் (உச்ச நீதிமன்ற ) தீர்ப்பை அமுல் படுத்த சொன்னார் .. 2004 பாமக தனது ரசிகர்களை தாக்கிய போது அந்த கட்சி ரவுடி கட்சி என்று எதிர்த்தார் (அந்த காலகட்டத்தில் பாமகவை யாரும் பகைக்க அஞ்சிய காலம்) ..ஈழ தமிழ் மக்களுக்கு உண்ணாவிரதம் இருந்தார் ..2008 -9 ல் ..ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா உண்ணாவிரதம் இருந்தார் ..ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசியதை ஆனந்த விகடன் அவரது விழாவில் சன் குரூப் cut பண்ணிட்டான் ..சசிகலா CM ஆகப்போவதை எதிர்த்து அசாதாரண சூழல் என்று சொன்னார் ..வெள்ள சேத்துக்கு எவவ்ளவு உதவினார் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ..அவர் முழு நேர அரசியல்வாதி இல்லாத பொழுது அவர் எல்லாவற்றுக்கும் வினை ஆற்றிக்கொண்டே இருக்க முடியாது சார் ..பதில் சொல்லிக்கொண்டே இருக்க முடியாது ..அவர் பின்னால் பெரும் கூட்டம் உண்டு அவர் வார்ததைக்கு பெரும் வலிமை உண்டு எனவே எல்லாவற்றையும் எல்லாவற்றிக்கும் கருத்து சொல்ல முடியாது சார் ..தான் கருத்து சொன்னால் நல்லது நடக்கும் என்றால் நிச்சயம் சொல்கிறார் ..இனிமேல் அரசியல் வந்துதான் புகழ் பேர் பணம் சம்பாதிக்கும் அவசியம் அவருக்கு இல்லை சார் ஆக்க பூர்வமாக செய்யணும் நினைக்கிறார் ..நான் தீபாவை கமெண்ட் பண்ணவே இல்லை சார் ..ரஜினியும் தீபாவும் உங்களுக்கு ஒண்ணா தெரிந்தால் நான் ஒன்னும் செய்ய முடியாது சார் ..89 ல் இருந்தே அவரை சோ அரசியல்க்கு அழைத்து கொண்டே இருந்தார் ..எதோ அவர் குரு மூர்த்தி சொல்லி அரசியலுக்கு வருவது போல் ஒரு மாய தோற்றத்தை உருவாக்காதீங்க சார் ..தென் அது உங்க விருப்பம் என்றால் செய்யுங்க சார் ..ஒரு நல்ல மனிதர் மேல் எனக்கு நல்லது செய்த தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்யனுமு அது அரசியல் பாதைன்னு அவரு நினைத்து செய்ய வருகிறார் வரட்டுமே சார் ..இதுவரை தீங்கு செய்தவர்களை விட அவர் நல்லதே செய்வார்னு நாங்க நம்புறோம் சார் உங்கள் கருத்து உங்களுக்கு சார் 🙂

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     அருள்,

     திரு.ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர், மிக நல்ல மனிதர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் அவர் அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்பதை இப்போதைக்கு யூகிக்க முடியவில்லை. எப்படி இருந்தாலும்,
     நடப்பது – அவருக்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லதாக அமைய வேண்டும் என்று வேண்டுகிறேன்.

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 4. ராமகிருஷ்ணன் சொல்கிறார்:

  கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம்; ஆன்மிகத்தைப்பற்றி பேசும்போது, பகுத்தறிவு தேடுபவர்கள் போக வேண்டிய இடம் தேனாம்பேட்டை. இன்றைக்கு அங்கு விசேஷமாயிற்றே.
  இங்கே வந்து ஏன் உங்கள் டைமை வேஸ்ஸ்ட் பண்ணுகிறீர்கள் ?

 5. Sundararaman சொல்கிறார்:


  Almost similar thing – but a bit more elaborate.Please see the same.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சுந்தரராமன்,

   பார்த்தேன்… நல்ல விளக்கம்.. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.