மோடிஜிக்கு போட்டி கமல்ஜி….!!! சபாஷ் – அகில இந்திய அரசியல்…!!!


இன்று காலை திருவாளர் கமல்ஹாசன் அவர்கள் பேசியதாக
வெளிவந்துள்ள செய்தி –

——————

என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன்:
கமல்ஹாசன்

என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் இருந்து கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன்,

இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும். அதற்கான பயணம் அடுத்தமாதம் தொடங்குகிறது. அடுத்த மாதம் தொடங்க உள்ள பயணத்தில் பல சகோதரர்கள் கிடைப்பார்கள் என நம்புகிறேன்.

__________________

நாட்டில் கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து
ஆகியவை சரியாக இல்லை; அவற்றை சரிசெய்யவே நான்
வந்துள்ளேன்…..

.
——————————————————————————————–

மோடிஜிக்கு சரியான போட்டி இல்லையே என்கிற பலபேரின் வருத்தத்தைப் போக்க திருவாளர் கமல்ஹாசன் முன்வந்துள்ளார்….

அடுத்த பிரதமராக கமல்ஜி ஆட்சிப் பொறுப்பேற்க நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோமாக….

இன்று மாலைக்குள்ளாக இந்த செய்திக்கு மறுப்பு எதுவும் வந்து விடாமல் இருக்க வேண்டுமென்று அப்படியே – ஆண்டவனையும் வேண்டிக்கொள்வோமாக….!!!

—————

———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to மோடிஜிக்கு போட்டி கமல்ஜி….!!! சபாஷ் – அகில இந்திய அரசியல்…!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  //அடுத்த பிரதமராக கமல்ஜி ஆட்சிப் பொறுப்பேற்க நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோமாக….//

  உங்களுக்கு ஏன் தமிழகத்தின் மீது கடும் வெறுப்பு கா.மை சார். அவர் தமிழகத்தின் முதல்வராக வேண்டாமா? அப்போதுதானே கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து (இது வேற போக்குவரத்து.. நீங்க, போக்கு, வரத்து என்று ரெண்டா படிச்சுடாதீங்க) போன்றவற்றில் உடனே மாற்றம் கொண்டுவர முடியும். என்ன என்ன மாற்றம்னு உடனே கேட்டுடாதீங்க. கொஞ்சம் யோசிச்சுதான் அவரால சொல்லமுடியும். வேணும்னா, இப்போதைக்கு, ‘போக்குவரத்துத் துறை’ அவர் பதவியேற்றதிலிருந்து, ‘சுகாதாரத் துறை’ என்று பெயர் மாற்றம் செய்வார், ‘சுகாதாரத் துறை’ ‘கல்வித் துறையாகவும் பெயர் மாற்றம் செய்யப்படும்.

  //பயணத்தில் பல சகோதரர்கள் கிடைப்பார்கள் என நம்புகிறேன்.// – ஏன் சார் இப்படிக் கிண்டல் பண்ணறீங்க. ‘பல லட்சக்கணக்கான சகோதரர்கள்’ என்றுதானே எழுதியிருக்கணும். ஒருவேளை தட்டச்சு செய்யும்போது தவறு ஏற்பட்டுவிட்டதா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   நக்கீரன் செய்தியில் வந்ததை அப்படியே தந்ததை விட
   வேறோன்றும் “நானறியேன் பராபரமே”
   அதற்கு சாட்சியாகத்தான் அந்த photo shot….!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    வங்கிக்கிளையில் நடந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோவை நான் பார்க்க முடிந்தது.
    அந்த நிகழ்ச்சியில், இந்த மாதிரி வார்த்தைகளை கமல் பயன்படுத்தவில்லை.
    தனியாக செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னாரோ என்னவோ…!!

    இது ஒரு பக்கமிருக்க – இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்…

    முதல் முதலாக இந்த வங்கிவிழாவில் கமல் ஒரு SLOGAN -ஐ பயன்படுத்தினார்.

    அது
    ” வாழிய செந்தமிழ்,
    வாழ்க நற்றமிழர்,
    வாழிய பாரத மணித்திருநாடு…..!!! ”

    ( கடைசி வார்த்தையான “வந்தே மாதரம்” – was missing …!! காரணமென்னவோ….. 🙂 🙂 🙂 !!! )

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.