திரு.அருண் ஜெட்லிஜிக்கு – முழு பூசணிக்காயை சோற்றில் அமுக்கி மறைக்க முடியாது என்பது தெரியாதா….???பெட்ரோல், டீசல் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதும், கூடவே சந்தடி சாக்கில் எக்சைஸ் வரி உயர்த்தப்படுவதும், மக்களின் எரிச்சலைத் தூண்டுவதை தவிர்க்கவென்றே –

பெட்ரோலியத்துறையிலும், நிதியமைச்சகத்திலும் இருக்கும் சில (குள்ள) நரிகளின், (பெரிய மூளையில்…) உதித்த குயுக்தியான உத்தி தான் பெட்ரோல், டீசல் விலைகளை –

அன்றாடம் காலையில் அறிவிப்பது என்பது…

உலக சந்தையில் கச்சா எண்ணையின் மாறி வரும் விலைகளுக்கேற்ப இவையும் அமையும் என்பது மக்களை முட்டாள்களாக்க கூறப்பட்ட காரணம்…

கடந்த ஒன்றரை மாதங்களில் பெட்ரோல் விலை slow poison மாதிரி எப்படி எகிறி இருக்கிறது என்கிற விவரங்கள் கீழே –

*2017*
*01* December *₹ 67.71*
*02* December *₹ 67.78*
*03* December *₹ 68.02*
*04* December *₹ 68.34*
*05* December *₹ 68.64*
*06* December *₹ 68.88*
*07* December *₹ 69.03*
*08* December *₹ 69.13*
*09* December *₹ 69.20*
*10* December *₹ 69.35*
*11* December *₹ 69.68*
*12* December *₹ 69.92*
*13* December *₹ 70.19*
*14* December *₹ 70.40*
*15* December *₹ 70.53*
*16* December *₹ 70.59*
*17* December *₹ 70.70*
*18* December *₹ 70.76*
*19* December *₹ 70.83*
*20* December *₹ 70.85*
*21* December *₹ 71.01*
*22* December *₹ 71.15*
*23* December *₹ 71.22*
*24* December *₹ 71.37*
*25* December *₹ 71.51*
*26* December *₹ 71.52*
*27* December *₹ 71.56*
*28* December *₹ 71.60*
*29* December *₹ 71.62*
*30* December *₹ 71.62*
*31* December *₹ 71.66*
*2018*
*01* January *₹ 71.78*
*02* January *₹ 71.95*
*03* January *₹ 72.20*
*04* January *₹ 72.34*
*05* January *₹ 72.44*
*06* January *₹ 72.58*
*07* January *₹ 72.73*
*08* January *₹ 73.01*
*09* January *₹ 73.34*
*10* January *₹ 73.44*
*11* January *₹ 73.48*
*12* January *₹ 73.54*
*13* January *₹ 73.74*
*14* January *₹ 73.88*
*15* January *₹ 74.20*
(http://www.myreality.in/2018/01/systematic-increase-in-petrol-price-

for.html )
19/Jan/2018 74.35
20/Jan/2018 74.55
21/Jan/2018 74.75
22/Jan/2018 74.91

புரட்டுத்தனத்தில் புத்திசாலித்தனம்….

உலக அளவில் கச்சா எண்ணையின் விலை பாதிக்கும் கீழாக குறைந்த –

மே, 2014 முதல் – டிசம்பர் 2017 வரை பெட்ரோலிய பொருள்களின் மீது எக்சைஸ் வரி ஏற்றப்பட்டதால் மத்திய அரசுக்கு கிடைத்த மொத்த வருமானம் எத்தனை லட்சம் கோடி என்று மத்திய அரசால் வெட்ட வெளிச்சமாக அறிவிக்க
முடியுமா…?

அப்படி பெறப்பட்ட வரிப்பணம், எந்தெந்த வகைகளில், எப்படி – செலவிடப்பட்டது என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க முடியுமா…?

– மொத்தமாக ஏற்றினால் தானே மக்களுக்கு தெரிய வருமென்று, நாள்தோறும் பெட்ரோல் விலை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது ஒரு புத்திசாலித்தனமென்றால் ….

இதில் பெட்ரோல் விலையை ஏற்றும்போதெல்லாம், வெளியில் சொல்லாமலே எக்சைஸ் வரியையும் கூட்டியது மற்றுமொரு புத்திசாலித்தனம்….

மக்களை ஏமாற்றிச் சுரண்டும் அரசு… அந்த சுரண்டலையும்,
முழுபூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல், இல்லாத காரணங்களை சொல்லி மறைக்கப் பார்க்கிறது.

குழந்தைகளின் பிஸ்கட், பெண்களின் சானிடர் நாஃப்கின் உட்பட, அத்தனை பண்டங்களையும், ஜிஎஸ்டி யில் கொண்டு வந்தவர்கள், பெட்ரோல், டீசலை மட்டும் பட்டியலில் வராமல் புத்திசாலித்தனமாக பார்த்துக் கொண்டார்களே – ஏன்…?

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த, அவற்றையும் ஜிஎஸ்டி வரி விதிப்பினுள் கொண்டு வரப்பட வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டபோது, திருவாளர் ஜெட்லிஜி என்ன சொல்கிறார்…???

” ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசின் அதிகாரம் மூன்றில் ஒரு பங்குதான். எனவே, அதை மூன்றில் இரண்டு பங்கு அதிகாரம் இருக்கிற மாநிலங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” என்று…

மாநிலங்கள் யார் வசம் இருக்கின்றன….?

குஜராத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன், நாட்டில் 19 மாநிலங்கள் பாஜக ஆளுகையில் வந்து விட்டன என்று பெருமையடித்துக் கொண்டது இப்போது மறந்து விட்டதா…?

காங்கிரஸ் ஆளும் 5 மாநிலங்களும், ஏற்கெனவே பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டியில் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்து விட்டன.

எனவே, தடங்கலாக இருப்பதும், தாமதம் செய்வதும் – பாஜக ஆளும் மாநிலங்கள் தானே…? பாஜக தலைமை தானே…?

இந்த லட்சணத்தில், பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி -க்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரமில்லை என்று திருவாளர் ஜெட்லிஜி கூறுவது –

இப்போதைக்கு ஆன மட்டும் விஷயத்தை தள்ளிப்போடுவோம்….மக்கள் சுரண்டப்படுவது நீடிக்கட்டும்…

மக்கள் பொறுமை இழந்து, நிலைமை முற்றி, வேறு வழியில்லை என்கிற நிலை வரும்போது ஜிஎஸ்டி பற்றி யோசிக்கலாம் என்பதைத்தானே காட்டுகிறது…?

இதில் இன்னொரு முக்கியமான புரட்டும் நடக்கிறது. பெரும்பாலும், மக்களை இதைப்பற்றி யோசிக்க விடாமலே சைக்கலாஜிகலாக நடக்கும் புரட்டு…

எத்தனை பெட்ரோல் பங்க்குகளில் ரசீது கொடுக்கிறார்கள்…? ரசீது கொடுத்தால், அதில் பெட்ரோல்/டீசல் அடிப்படை விலையும், வரிகள் பற்றிய விவரங்களும் தனித்தனியாக காட்டப்பட வேண்டுமே… மக்களுக்கு விவரம் தெரிந்து விடுமே..!

இதில் கூடவே, சத்தம் போடாமல் பெட்ரோல் பங்க்குகள் அடிக்கும் கொள்ளை வேறுவகை…

முந்திய நாட்களில் (அப்போதைய) குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படும் பெட்ரோல் – – மறுநாள், புதிய, உயர்ந்த விலைக்கு தானே விற்கப்படுகிறது..?

இதில் கிடைப்பது (ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்படும் கமிஷனைத்தவிர,) வெளியே சொல்லப்படாத லாபம் அல்லவா…?

சாதாரணமாக பெட்ரோல் பங்க்குகளில், பூமிக்கு அடியே அமைக்கப்பட்டுள்ள டேங்குகளில், 30,000 முதல் 40,000 லிட்டர் வரை சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்ட இந்த ஸ்டாக், மறுதினம் (அன்றைய) அதிக விலைக்கு விற்கப்படுவதன் மூலம் கிடைக்கும் லாபம்..
நேர்மையான லாபமா…?

இது அரசுக்கு தெரியாதா…? தெரிந்தும் ஏன் அனுமதிக்கிறது…?

பாஜக நண்பர்கள் என் மீது பாய்வதில் அர்த்தமில்லை. இந்த விஷயங்கள் அவர்களையும் பாதிக்கின்றன… நான் அவர்களுக்கும் சேர்த்து தான் எழுதுகிறேன்… என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பெட்ரோல், டீசலை – ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டு வந்தால்,
குறைந்த பட்சம் ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது…

செய்வார்களா…?

மத்திய அரசு இதில் தானாக முயற்சி எடுக்கும் என்று எனக்கு தோன்றவில்லை.
அழுத்தம் கொடுக்க வேண்டியது மக்கள், மற்றும் எதிர்க்கட்சிகள்
கையில் தான் இருக்கிறது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to திரு.அருண் ஜெட்லிஜிக்கு – முழு பூசணிக்காயை சோற்றில் அமுக்கி மறைக்க முடியாது என்பது தெரியாதா….???

 1. புதியவன் சொல்கிறார்:

  இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை என்பது முற்றிலுமான fraud. ‘நான் வெளி’நாட்டில் (கச்சா எண்ணெய் கிடைக்கும் நாடுகளில்) பணியாற்றியிருக்கிறேன். அங்கு நல்ல (lead free) பெட்’ரோல் லிட்டர் 16 ரூபாயாக இருந்தபோது, (இது கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு இதே விலைதான்.. அதாவது 10ரூ-16 ரூ- இந்திய ரூபாயின் மதிப்பைப் பொறுத்து. இங்கு ஒரே விலைதான் 16 வருடங்களில்). ஆனால் இந்தியாவில் 30 ரூபாயிலிருந்து இன்று 75 ரூபாய் வரை விலை ஏற்றம். இப்போதுதான் அரபு தேசங்களில் லிட்டர் பெட்’ரோல் 34 ரூபாயை எட்டி உள்ளது.

  இதற்கும் (இந்திய விலைக்கும்) கச்சா எண்ணெய் கொள்முதலுக்கும் சம்பந்தமே இல்லை. நான் நினைக்கறேன், இந்தியாவில் ‘வரி’ ஏய்ப்பு லட்சக்கணக்கான கோடிகளில் நடைபெறுகிறது. இதனை முறைப்படுத்துவதில் பெரும் சிரமம் இருக்கிறது. அரசியல் கட்சிகள், தொழிலதிபர்களை, பெரிய நிறுவனங்களை நெருக்குவதில்லை (தன் கட்சிக்கும், கட்சித் தலைவர்களுக்கும் பெருமளவு ஆதாயம் இருப்பதால்). (கா.மை. சார்.. இதையும் பெரிய குறையாக பார்க்கவேண்டாம். தென் தமிழ் நாட்டில் வைகுண்டராஜன், பெரிய அளவு மோசடிகள் செய்துகொண்டிருந்தபோது, அவரைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க முனைந்தபோது அது ஜாதிப் பிரச்சனையாக உருமாறியது, அது வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்றபோது அந்த நடவடிக்கை மெள்ள அடங்கியது. இதுபோல் பெரிய நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதும் கடினமாக இருக்கலாம்). பெரிய நிறுவனங்களின் அடிமையாக மத்திய அரசு (பாஜக, காங் இரண்டும்தான்) இருக்கும்போது, வருமானத்துக்கு மக்களை நெருக்கவேண்டும். அது வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்பதால், இந்த மாதிரி பெட்’ரோல், டீசல் போன்றவற்றில் நேர்மையற்ற பண வரவை மத்திய அரசு மேற்கொள்கிறது.

  பெட்’ரோல் பங்குகளில் (Bunk), அன்றைக்கு பெட்’ரோல் நிரப்பும்போது, முந்தைய ஸ்டாக்கின் அளவும் குறித்துக்கொள்ளப்படுகிறது. Retail Business போன்று, 2000 லிட்டர் இந்த விலைக்கு வாங்குகிறேன் என்று வாங்கப்படுவதில்லை (இங்கெல்லாம்). மாத முடிவில் settle செய்யப்படும். அதுவே எல்லா இடத்திலும் சாத்தியம். இப்படி எழுதும்போதே, நம் ஊரில், பாதி வழியில் பெட்’ரோலில் பகுதியை விற்று கலப்படம் செய்து அதன் பின்பு பங்குகளில் பெட்’ரோல் நிரப்பும் அயோக்கியத்தனம் நடக்கிறது என்பதும் தெரியுமென நினைக்கிறேன்.

 2. R.Srinivasan சொல்கிறார்:

  The biggest share of votes received by Mr.Modi and BJP/RSS in 2014 general elections was from our middle class people. Middle class people and the farming community are the worst sufferers from this pricing policy of petrol and diesel of modi govt. which is really fooling the people. The poor and unorganised people are also being affected by this increase in oil price and added taxes on to the price. The poor, the marginal section and the middle class has to pay more for the essential commodities on account of this loot of govt. Unfortunately the middle class not showing any protest to this unjustified increase, particularly when the international crude oil price are far less than the UPA time,but the price went beyond what was sold in UPA time. we are not able to see the mass protest from people and the political opponents. BJP and modi govt. must look in to this and change the taxation policy and bring the petrol and diesel in to GST.

  • தமிழன் சொல்கிறார்:

   மிடில் கிளாஸ் – எப்போவும் ப்ரொடஸ்ட் பண்ண மாட்டாங்க. அவங்க தேர்தல் வரும்போதுதான் அவங்களோட எதிர்ப்பைக் காண்பிப்பாங்க. இப்போ என்ன பிரச்சனைனா, காங்கிரஸ் வந்தால், எந்த விதமான மாறுதலைத் தரும்னு உறுதியா சொல்றதில்லை. அப்போ வெறும்ன பாஜகவை தூக்கினா சரியாயிடுமா என்று யோசிக்கிறேன்.

   இந்திய அரசு, ரிலையன்ஸுக்கும் ONGC போன்றவைகளுக்கு மட்டும் உழைக்குது போலிருக்கு.

   அதெல்லாம் இருக்கட்டும். என் இந்த Petrol Bunk அரசியல்வாதிகள் கைல மட்டும் இருக்கு? அதுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாதா?

 3. tamil_alagu சொல்கிறார்:

  மிடில் கிளாஸ் மக்கள் மிகப்பெரிய ஊழல்(அதாவது 1 லட்சம் கோடி க்கு மேற்பட்ட மதிப்பு கொண்ட ஊழல்கள் ) நடைபெறும் போது மட்டுமே ஆட்சி மாற்றத்திற்காக react செய்வார்கள்.விலைவாசி உயர்வுக்கு மிடில் கிளாஸ் மக்கள் பொதுவாக react செய்வது இல்லை.

 4. Mercy சொல்கிறார்:

  We pay GST [Australia] But still the price is cheaper.

 5. Sundararaman சொல்கிறார்:

  ………………..
  ……………..
  ……………
  …………….
  I personally feel a big revolution is happening in power sector / battery technology – if they find their way to public transport and truck transport – it will have a huge effect – per km cost is negligible for the electric vehicle, nil pollution , less noise pollution also. It is going to transport us to a new transport industry. Sky is the limit.

  • bandhu சொல்கிறார்:

   Mr.Sundararaman, you have the audacity to defend the petrol price hike! It is the biggest fraud committed on any country’s citizen. The petrol price has come down more than 50% in the world market and in India it is going up! how can anyone justify this is beyond me!
   As for as ‘energy’ revolution you are referring to, it is a drop in the bucket. more of a distraction from the real issue?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சுந்தரராமன்,

   திரும்பத் திரும்ப, படிப்பவர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் சம்பந்தமே
   இல்லாமல் பாஜக ஆட்சியை தூக்கி வைத்து எதையாவது எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் இப்படி…?

   உங்கள் பின்னூட்டம் 16-ஆம் லூயியின் மனைவி சொன்னதை நினைவிற்கு கொண்டு வருகிறது.

   ” பிரெட் இல்லாவிட்டாலென்ன … கேக் சாப்பிட வேண்டியது தானே ??..”

   கனவுலகில் மிதந்து கொண்டிருக்கிறீர்கள்….
   நினைவுலகுக்கு வந்த பிறகு எழுதுங்கள்…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Sundararaman சொல்கிறார்:

    இப்போது மோடி தான் பிரதமர் என்பது நிதர்சனம், ஆனால் நீங்கள் அதை கிரகிக்க முடியாமல் , பதிவுக்கு மேல் பதிவு போட்டு , வேறு யாரோ வந்து நம்மை காப்பாற்ற வேண்டும் என கனவு காண்கிறீர்கள் . நான் இவர் இதை இதை செய்தார் என்ற உண்மையை எழுதிய பின்பு, இன்னும் நிறைய செய்வார் என கனவு காண்கிறேன். ஆக மொத்தம் ரெண்டு பேருமே கனவு தான் – பின் எதற்கு சார் எரிச்சல் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.