அமீத் ஷா V/s ப.சிதம்பரம் சிறப்பு “பக்கோடா” பட்டிமன்றம்….!!!


எத்தனையோ பட்டிமன்றம் பார்த்திருப்பீர்கள்…
ஆனால், திரு.அமீத் ஷா மற்றும் திரு.ப.சிதம்பரம் ஆகியோர்
கலந்து கொள்ளும் இத்தனை சுவாரஸ்யமான
“பக்கோடா” பட்டிமன்றம் பார்த்திருக்க மாட்டீர்கள்…!!!

இதில் விசேஷம் என்னவென்றால், பட்டிமன்றத்தில் நடுவர் கிடையாது…

“விமரிசனம்” தள வாசக நண்பர்கள் தான் நடுவர்கள்…
தங்கள் தீர்ப்புகளை பின்னூட்டம் மூலம் தெரிவிக்கலாம்…!!!

————————————————————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to அமீத் ஷா V/s ப.சிதம்பரம் சிறப்பு “பக்கோடா” பட்டிமன்றம்….!!!

 1. BVS சொல்கிறார்:

  P.C.மீது தனிப்பட நிறைய குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டாலும், அவரது சாமர்த்தியம் வியக்கத்தக்கது. சுருக்கமாகவும், விளக்கமாகவும், எளிதில் புரிந்துகொள்கிற விதத்திலும், தனது வாதங்களை முன்வைக்கிறார்.
  என் தீர்ப்பு பி.சி. பக்கமே.

 2. புதியவன் சொல்கிறார்:

  நாம குஜராத்திகளின் background புரிஞ்சுக்கணும். எப்போவுமே தொழில் தொடங்குவதுதான், வேலைவாய்ப்புக்கான ஆரம்பம். நாம வெறும்ன, ‘பக்கோடா விக்கச் சொல்றாங்க’ன்னு நினைக்ககூடாது. ஏதேனும் தொழில் தொடங்கு என்பதுதான் அவங்க கான்செப்ட். பஞ்சாபி, சிந்திக்கள், குஜராத்திக்கள், மார்வாரிக்கள் போன்றவர்கள் தொழில் முனைவோர். நாம, சும்மா அரசாங்க வேலையை காசு கொடுத்து வாங்கி, சும்மா உட்கார்ந்து சம்பளமும் வாங்கி, பத்தாததுக்கு பென்ஷன் வந்து வாழ்க்கையை secured ஆ வச்சுப்போம்னு, இப்போ இருக்கறவங்க மாதிரின்னு நினைக்கக்கூடாது. அப்படி நினைத்தால், இன்றைய அரசு அலுவலர்கள், அதிகாரிகள், காவல்துறை போன்ற பலவற்றில் பணியாற்றும் அனைவரும் அருமையாக பணி செய்கிறார்கள், நம் வரி அவர்களுக்கு நியாயமான சம்பளமாப் போகுதுன்னு accept பண்ணிக்கணும்.

  1. நம்ம ஊரின் கல்லூரிப்படிப்பு, முதுகலைப் படிப்பு எல்லாம் பெரும்பாலும் வெறும் பட்டயங்களே. They are factories producing clones. அதுல 50% குறைந்தவர்கள்தான் அரிசி, மிகுதி தவிடு. அதனால இந்திய கிராஜுவேட்கள், எந்த மேற்கத்தைய நாட்டு கிராஜுவேட்களுடன் நெருங்கமுடியாது (அந்த தவிட்டு 50-60%). For that matter, நம்ம 50-60% Graduates/Post Graduates are not even near மேற்கத்தைய நாடுகளின் bright பள்ளிக்கல்வி மாணவர்கள்.

  2. சாதாரண பிட்சாவை, முதலில் தயாரித்து பக்கத்து வீடுகள்ல விற்று, மெதுவா ஊர் முழுக்க விற்று, கடை ஆரம்பித்து, 20+ வருஷத்துல அதுல மில்லியன் டாலர் கணக்கா உட்கார்ந்த இடத்திலிருந்தே சம்பாதிக்கறாங்க. (am sure he would have become billionaire). (உதாரணமா Papa Johns Pizza). அவங்க எத்தனை லட்சம் (கோடி) பேர்களுக்கு நேரடியாக வாழ்வாதாரமும், மறைமுகமாக எத்தனை கோடி பேர்களுக்கு வேலைவாய்ப்பும் தருகிறார்கள் என்பது ப.சிக்குத் தெரியாது. தெரியணும்னா அவரும் வாசன் ஐ கேருக்குத்தான் போகணும்.

  3. நம்ம ஊர்ல, பெங்களூர் இளைஞர்கள் 2-3 பேர், பஜ்ஜி/பகோடா போன்றவற்றிர்க்காக ஒரு கான்செப்ட் உருவாக்கி, 3 கடைகள் வச்சிருக்காங்க (5 வருஷத்துக்குள்). இப்போ அதுக்கு ஃப்ரான்சைஸ் தேடிக்கிட்டிருக்காங்க. (இந்தக் கடைகள்ல அந்த மாதிரி பகோடா போன்றவைகளும், காபி போன்றவைகளும் மட்டும் கிடைக்கும்). இதுபோல, வெறும் கரும்புச்சார் நிலையத்தை, ஒரு கான்செப்டாக கனோலா போன்று பிராண்டட் கடைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கடையிலயும் நான் 3-4 பேர் வேலை செய்வதைப் பார்க்கிறேன். இப்படி உருவாகும் தொழில்கள்தான் வேலைவாய்ப்பினைப் பெருக்கும்.

  4. அரசு ஒரு தொழிலை ஆரம்பித்தால், அது லாபமாக நடப்பதற்கு எல்லாவிதமான குந்தகங்களும் நடக்கும் (அதிகாரிகள், அரசியல்வாதிகள் துணையோடு). எந்த அரசு நிறுவனம் நல்ல லாபத்தோடயும், தொழிலாளர்கள் ஒத்துழைப்போடயும் நடக்குதுன்னு யோசிங்க. அரசு வாய்ப்புகளை மட்டும்தான் (வங்கிக் கடன், கடை ஆரம்பிப்பதற்கான நடைமுறை, பயிற்சி மையங்கள், போக்குவரத்து வசதி-Infrastructure, not running buses) கொடுக்கவேண்டும். அரசு மக்களுக்கு organized தொழில் செய்ய பயிற்சி அளிப்பது முக்கியம் (நம்ம நாட்டில் நிறைய படிக்காதவர்கள் இருப்பதால், அவர்களுக்கும் இந்த மாதிரி பயிற்சி கொடுக்கும்போது, சுகாதாரமற்ற காய்கறி, உணவு, மற்ற குப்பைகள் விற்போர், better ஆக அந்தத் தொழில்களைச் செய்யும் வாய்ப்பு ஏற்படும். அதற்குமேல் அரசு வேறு எதுவும் செய்யவேண்டாம் என்பது என் எண்ணம்.

  ப.சி.யின் வாதம் சரியல்ல. அவர் அமைச்சராகவும் கட்சியின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தபோது ஒன்றுமே செய்யவில்லை. இப்போது அவர் பேசுவது எல்லாமே எனக்கு சாத்தான் வேதம் ஓதுவதுபோல்தான் தோன்றுகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   உங்கள் பின்னூட்டத்தை படித்தவுடன் ஒரு எண்ணம் தோன்றியது…
   பக்கத்தில் யாரும் இல்லை…. நிறைய சிரித்து விட்டேன்…!!!

   அது என்ன எண்ணம்….?

   இந்த வீடியோவில், ப.சி. பேசுகிற பேச்சை எல்லாம் அமீத் ஷாவும்,
   அமீத் பேசுவதை எல்லாம் ப.சி.யும் –

   அதாவது இருவரும் நேர் மாறான கருத்தை சொல்லி இருந்தால்…
   அப்போது நீங்கள் யாரை ஆதரித்து எழுதி இருப்பீர்கள்…?

   எந்தவித சந்தேகமும் இல்லாமல்
   அமீத்’தை தானே… 🙂 🙂

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    Your point is valid. பொதுவா யார் பேசறாங்க, அவங்களைப் பத்தின நம்ம மதிப்பீடு எப்படி இருக்கு என்பதெல்லாம் வச்சுத்தான் அவங்க சொல்றதை நாம காதுலயே போட்டுக்கறோம். உங்கள் மறுமொழில அர்த்தம் இருக்கு. ப.சிக்குப் பதிலா கருணானிதி, ஸ்டாலின் சொல்லியிருந்தாலும் அதேதான் சொல்லியிருப்பேன்.

    ஆனாலும் எனக்கு அமித்ஷா மேல் ஒரு நல்ல எண்ணம் வரவே இல்லை என்பதையும் சொல்றேன். இங்க நான் விமர்சித்தது கான்செப்ட்தான். யார் சொல்றாங்கன்னு இல்லை.

 3. புதியவன் சொல்கிறார்:

  //அதுல 50% குறைந்தவர்கள்தான் அரிசி, மிகுதி தவிடு. அதனால இந்திய கிராஜுவேட்கள், எந்த மேற்கத்தைய நாட்டு கிராஜுவேட்களுடன் நெருங்கமுடியாது//

  இதை எழுதும்போது இன்னும் சேர்க்கணும்னு தோன்றியது. ரொம்ப நீளமானதும், மறந்துவிட்டேன்.

  B.Sc. Physics படிக்கறான்னா, நான் ‘தவிடு’ன்னு சொல்றவங்க, புரிஞ்சே படிச்சிருக்கமாட்டாங்க. அதற்காக அவங்களுக்குத் திறமை இல்லைனு அர்த்தமில்லை. இப்போ மேற்கத்தைய நாடுகள்ல, B.Sc. Physics என்றால், அவன் நன்றாகப் புரிந்து படிக்காமல் கிராஜுவேட் ஆக ஆகமுடியாது. நிறைய பிராக்டிகல்ஸ், மனப்பாடம் பண்ணி தேர்வு எழுதும் முறை அறவே இல்லாமை, ஆர்வம் உள்ளவர்கள்தான் படிக்கமுடியும்/அது அவங்க ரெஸ்பான்சிபிலிட்டி போன்றவைதான் காரணம்.

  வாழ்க்கைல வெற்றி பெற, மனனம் செய்து வாங்கும் பட்டம் கொஞ்சம்கூடத் தேவையில்லை. இயல்பான திறமை, முயற்சி, உத்வேகம் இருந்தால் போதும்.

  மனிதப் பிறப்பில், திறமை இல்லாதவன் என்று 0.0005%கூடச் சொல்லமுடியாது. தனக்கு எது திறமையா, தன் வாழ்க்கைக்கு உறுதுணையா இருக்குமோ அதைக் கற்கும் கல்விமுறை வரும்போதுதான் நாடு செழிப்புறும்.

 4. ஆர்.வேங்கடசுப்ரமணியன் சொல்கிறார்:

  புதியவன்

  நான் நிறைய குஜராத்திக்காரர்களை மும்பையில் பார்த்திருக்கிறேன்.
  நேர்மையாக தொழில் செய்து முன்னேறியவர்கள் என்று ஒரு 5 பேரை கூட
  சொல்ல முடியாது. தூஸ்ரா or தோ நம்பர் அக்கவுண்ட் என்று ஒன்றை
  எப்போதுமே வைத்திருப்பார்கள்அதிகாரிகள் வந்தால் காட்ட. உண்மையான
  அக்கவுண்ட் வேறு இருக்கும். நீங்கள் குஜராத்தியர்கள் எல்லாரும் மிக நாணயமாக
  வியாபாரம் செய்பவர்கள் என்று சொல்கிறீர்கள். அவர்களை விட நம்ம ஊர் மளிகைகடை நாடார்கள் ஆயிரம் மடங்கு சிறந்தவர்கள். அதிகாரிகள் கணக்கு கேட்டால் காட்டத்தெரியாமல் முழித்தாலும், வாடிக்கையாளர்களை ஏமாற்ற மாட்டார்கள். அண்ணாச்சி கடை என்று நம்பி வாங்கலாம். பொய் கணக்கு சொல்ல மாட்டார்கள். குஜராத்திக்காரர்களுக்கு பொய், தில்லுமுல்லு எல்லாம் அத்துப்படி.

  • NS Raman சொல்கிறார்:

   Gujarati business men are customer friendly. They evade government tax but keep customers happy. But annachi cheat his own people as well as government. This is from my own experience.

   We may have good business ideas and business leaders in various corporates. Good in managing other persons money. But risk averse while putting our own money in business. Love to be in secured zone. Some time our so called better education is one reason.

   But one similarity between PC and Amit Shah both of them try to promote their sons business at the cost of tax payers money.

  • புதியவன் சொல்கிறார்:

   வேங்கடசுப்ரமணியன் – உங்கள் கருத்துக்கு நன்றி.

   1. தொழிலதிபர்களில் நேர்மையாக தொழில் செய்த ஒருவரை நீங்கள் காட்டவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். குஜராத்திகள், சிந்திக்கள், மார்வாரிகள் மற்ற எல்லா தொழில்முனையும் சமூகத்தினரும், சட்டத்தின் ஓட்டைகளை தாராளமாக உபயோகிக்கின்றனர். வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள் என்று நான் நினைக்கமாட்டேன். ஆனால் அவர்களில் சிலர், வாடிக்கையாளர்களை ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள்.

   2. நான் ஒரு ஜெயின் கம்பெனியில் வேலைபார்த்தேன். (அவரும் குஜராத்தி). அவர் அவ்வளவு பக்தி, இரவு 6 மணிக்குமேல் கிழங்குகளை சாப்பிடமாட்டார். ரொம்ப ரிலீஜியஸ். ஆனால் அவர் பிஸினெஸில் ஏகப்பட்ட ஹவாலா போன்ற தில்லுமுல்லுகளைச் செய்வார். (அவரிடம்தான் முன்னாள் குஜராத்தி முதல்வர்களின் உறவினர்கள் பிஸினெஸுக்கு, வேறென்னவாயிருக்கும், பணம் ஹவாலாதான் இருக்கும், வருவார்கள்). இது துபாயில்.

   3. சிந்தி கம்பெனிகள் (பெரியவை), தங்கள் ரீடெயில் கடைகளில் இலவச தண்ணீர் பாட்டில்கள் வைத்திருப்பது சகஜம். அவர்கள் கம்பெனியில், உணவு/உறைவிட வசதியுடன் வேலைபார்க்கும் சாதாரணர்களுக்கு அவர்கள் உணவில் எந்தக் குறையும் வைக்கமாட்டார்கள் (சம்பளம் கம்மி). ஆனால் தீபாவளி என்று வரும்போது, சிந்திக்களுக்கு மட்டும் தங்க நாணயம் தரும் அவர்கள், மற்ற சமூகத்தினருக்குத் தருவதில்லை. (இதுவும் துபாய், அரபு நாடுகள்தான்)

   3. குஜராத்திகள், நாடார்கள் என்று ஒப்பிடக்கூடாது. இவர் நல்லவர், அவர் நல்லவரில்லை என்று ஒப்பிட முடியாது. நம்ம ஊர்க் காரர்கள் என்பதால் நம் interaction பெர்சனலா இருக்கும். (பெரும்பாலான நாடார்கள் திருனெவேலி, தூத்துக்குடி. நானும் நெல்லை என்று சொல்லி அவங்களிடம் பேசலாம், may be சில பொருட்களுக்கு கொஞ்சம் தள்ளுபடி பெறலாம். மற்றபடி எல்லாத் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள் ஒன்றுதான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.