முடிஞ்சால் பிடி…இன்னொரு 3000 கோடி – இது பான் பராக், பேனா தயாரிப்பு ..விக்ரம் கோத்தாரி..!!!


800 கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்
என்று முதலில் தலைப்புச் செய்திகள் வந்தன…

நான் எங்கும் ஓடவில்லை.. கான்பூரில் தான் இருக்கிறேன்..
கடன் 800 கோடி இல்லை; 3000 கோடி ரூபாய்…
அதுவும் ஒரே வங்கியில் இல்லை –
5 தேசிய வங்கிகளில்…
அதனாலென்ன…?
கடன் தானே வாங்கி இருக்கிறேன்..
(இன்னும்) எங்கும் ஓடிப்போகவில்லையே…?
என்ன – இப்போதைக்கு வாராக்கடன் என்று சொல்லி இருக்கிறார்கள்…
படிப்படியாக கொடுத்து விடுவேன்…
கோர்ட் கேஸ் எல்லாம் முடியட்டும்…!!! -என்கிறார்…

3000 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்களே…
பெரிய தொழிலதிபராக இருப்பார் போலிருக்கிறதே என்று யாரும்
தவறாக நினைத்து விட வேண்டாம்…

இப்போது தயாரிப்பது “ரோடாமாக் பால் பென்”
( அமேஜானில் – பத்து… 500 ரூபாய்…!!!)
இதற்கு முன்பு தயாரித்துக் கொண்டிருந்தது “பான் பராக்”..!!!

அதனாலென்ன…. இந்திய அரசின் வங்கிகள் இவரைப்போன்றவர்களுக்கு
கடன் கொடுத்து “போண்டி”யாகத்தானே உருவாக்கப்பட்டிருக்கின்றன ….

கடன் – வாராக் கடனாக மாறினால் …?
நமது நிதியமைச்சர் தான் தயாராக “வாராக் கடன்களை
ரத்துசெய்யவென்றே வரம் வாங்கி வைத்திருக்கிறாரே…

இவரை சாதாரண ஆள் என்று நினைத்து விட வேண்டாம்…
பாஜ்பாய் அவர்களிடமிருந்தே விருது வாங்கி இருக்கிறார்…
(எதற்கு என்று தான் தெரியவில்லை…!!!)

ரோடாமக் பேனாவிற்கு டிவியில் எல்லாம் விளம்பரம் கொடுக்கும்
அளவிற்கு பெரிய தொழில் அதிபர் …

வளமான இந்தியா…
இன்னும் கொள்ளையடிக்க எத்தனையோ
இடங்கள், வழிகள் இருக்கின்றன…!

தொழிலதிபர்களே … வாருங்கள்…!
உங்களை ஊக்குவிக்க இந்த நாட்டின் அரசாங்கமும் –

நம்பி ஏமாற இந்த நாட்டு இளிச்சவாய் மக்களும்
தயாராக காத்துக் கொண்டிருக்கிறார்கள்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to முடிஞ்சால் பிடி…இன்னொரு 3000 கோடி – இது பான் பராக், பேனா தயாரிப்பு ..விக்ரம் கோத்தாரி..!!!

 1. BVS சொல்கிறார்:

  Ball Pen தயாரிப்பவனுக்கும், பான் பராக் போதை பாக்கு தயாரிப்பவனுக்கும்
  அரசு வங்கியில் 3000 கோடி கடனா ? அதுவும் திரும்ப வாராக்கடனா?
  முதலில் இவனுக்கு கடன் கொடுத்த வங்கி மேனேஜர்களை நிற்க வைத்து சுட வேண்டும்.

  • புதியவன் சொல்கிறார்:

   அதெல்லாம் இந்தியாவில் நடந்துவிடுமா? கேடி பிரதர்சுக்குக் கேபிள் பதித்த ஜெனெரல் மேனேஜரே, நன்றாக ஓய்வூதியத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.. இன்னும் சில வருடங்களில் மறைந்துவிடுவார். வழக்கு சிபிஐ கையில் தூங்கிக்கொண்டிருக்கிறது (கைப் புண்ணுக்குக் கண்ணாடி). இதுபோல் பல்லாயிரம் வழக்குகள்.

   இந்த வழக்கு எப்போது வந்து, எப்போது கோர்ட்டுக்குப் போய்… அதற்குள் கோத்தாரி யார் என்பது யாருக்குமே நினைவிருக்காது, அவருமே இருப்பாரா என்பது சந்தேகம்தான். எல்லாவற்றிலும் அரசியல்வாதிகள் இருப்பதால்தான் வங்கி அதிகாரிகளுக்கும் கவலை இல்லை. ஒரே ஒரு விதிவிலக்கு இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன் (பலப் பல செய்து சிறிய விஷயத்தில் மாட்டிக்கொண்டவர். அவர் அதிகாரியாக இருந்தபோது காங்கிரஸ், மூப்பனார், திமுக என்று எவ்வளவு செய்திருக்கிறார்)

 2. Visu சொல்கிறார்:

  இப்போது தான் ஒவ்வொன்றாக வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது.
  தோண்டத் தோண்ட இன்னும் எத்தனை வைரங்கள் கிடைக்கப் போகின்றனவோ ?
  குஜராத், உ.பி. இரண்டு ராஜ்ஜியங்கள் தான் வெளிவந்திருக்கின்றன.
  இந்த திருடர்களுக்கு வைக்கோல் திருடன் எவ்வளவோ மேல் போலிருக்கிரதே.
  அவன் திருடியதாவது வெளியே தெரிந்தது. இவர்கள் கமுக்கமாக அல்லவா இருக்கிறார்கள் ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.