வெட்கித் தலை குனிகிறோம்…மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கனடா நாட்டின் பிரதமர்,
தனது மனைவி, மற்றும் 3 குழந்தைகளுடன்
இந்த நாட்டிற்கு வருகை தந்திருக்கிறார்….
வந்து இரண்டு நாட்கள் ஆகி விட்டன…
இன்னமும் இந்திய பிரதமருக்கு அவர்களை பார்க்க மனம் வரவில்லை…
விருந்தினர்கள் அலட்சியப்படுத்தப்படுகிறார்கள்…
அவமானப்படுத்தப்படுகிறார்கள்….

இந்த அழகிய குடும்பத்தைக் காணவே நமக்கு மனம் நிறைகிறது.
சின்ன பொடியன் முதற்கொண்டு, குடும்பத்தினர் அனைவரும் –
அழகாக இந்திய பண்பாட்டு உடைகளில் வலம் வருகிறார்கள்.

டெல்லியில் குடும்பத்துடன் வந்து இறங்குகிறார்…
குடும்பத்துடன் தாஜ்மஹல் போகிறார்…
( உ.பி.முதலமைச்சரும் பாராமுகமாக இருக்கிறார்…
டெல்லி கோபித்துக் கொண்டால் என்ன செய்வது…? )குடும்பத்துடன் குஜராத்தில் இருக்கும், காந்திஜியின்
சபர்மதி ஆசிரமத்திற்கு போகிறார்…..
(குஜராத் முதலமைச்சரும் கூட போவதில்லை… டெல்லி…! )


அக்ஷர் தாம் கோவிலுக்குப் போகிறார்….


அவரை, அவரது இனிய குடும்பத்தை தகுந்த மரியாதைகளுடன்
வரவேற்காமல் இந்திய அரசு அவமானப்படுத்துகிறது….

என்ன வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்…
நம் வீட்டிற்கு வருபவர்களை, இனிய முகத்துடன்,
உரிய மரியாதைகளுடன் வரவேற்கும் பண்பு கூட
இந்த நாட்டின் தலைமைக்கு கிடையாதா…?
( இத்தனைக்கும் 12 லட்சம் பேர் – இந்திய வம்சாவளியினர்
கனடாவில் வசிக்கின்றனர்….!)

ஒன்று, விழுந்து புரண்டு கட்டிப்பிடித்து வரவேற்பு…
இல்லையேல், வீட்டுக்கு வந்தால் கூட கண்டுகொள்வதே இல்லை…
இதென்ன குறுகிய புத்தி…?

ட்ரம்பின் மகள் வந்தபோது என்ன நடந்தது…?
எத்தகைய வரவேற்பு கிடைத்தது…?
உலக நாடுகள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கின்றன….
நமக்கோ வேதனையாக, வெட்கமாக இருக்கிறது…
இப்படிப்பட்ட தலைமையை பெற்றிருக்கிறோமே என்று….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to வெட்கித் தலை குனிகிறோம்…

 1. bandhu சொல்கிறார்:

  அவமானம் அவருக்கில்லை. நமக்குத் தான். இத்தனைக்கும், கனடாவில் இந்தியாவில் பிறந்த மூவருக்கு இவர் வாய்ப்பளித்திருக்கிறார்!

  • bandhu சொல்கிறார்:

   அவமானம் அவருக்கில்லை. நமக்குத் தான். இத்தனைக்கும், கனடாவில் இந்தியாவில் பிறந்த மூவருக்கு இவர் தன் மந்திரி சபையில் வாய்ப்பளித்திருக்கிறார்.

 2. Visu சொல்கிறார்:

  குடும்பத்தோடு வந்தவர்களை இப்படி அவமானப்படுத்துவதை விட
  வர வேண்டாம் என்றே ப்ளெயினாக சொல்லி இருக்கலாமே.
  சின்ன பிள்ளைகளுடன் வந்திருப்பவர்களை இனிய முகத்துடன் வரவேற்று
  உபசரிக்காமல், வெறுமனே அதிகாரிகளை கூட அனுப்பும் இவர்கள் சாடிஸ்டுகள்.
  அசிங்கம் பிடித்த அரசியல்வாதிகள்.

 3. Ramachandran சொல்கிறார்:

  what you say is correct. foreign medias are very sensitive and
  this has become a talking point now.
  நேரில் வரவேற்காததற்கு எதாவது சாக்கு போக்கு சொல்லலாம்.
  சினிமா நடிகைகளுக்கெல்லாம் ட்விட்டரில் வாழ்த்து தெரிவிப்பவர்கள்
  அந்த ட்விட்டர் செய்தியின் மூலமாவது வரவேற்றிருக்கலாமே.

 4. Ramachandran சொல்கிறார்:

  This is from BBC news :

  இது BBC News –

  Justin Trudeau in India: Is the Canadian PM being cold-shouldered?

  Canadian Prime Minister Justin Trudeau’s first official visit to India has not been the headline-grabbing love fest he must be accustomed to on his overseas trips.

  Despite plenty of photo opportunities, including at the Taj Mahal, Mr Trudeau and his family’s tour has been largely ignored by senior members of the Indian government so far.

  When he arrived in the capital, Delhi, he was met at the airport by a junior minister in what many interpreted to be a “snub”.

  Prime Minister Narendra Modi has, on many occasions, personally received visiting government leaders. He also famously hugs his foreign counterparts.

  Most recently Mr Modi extended the courtesy – both the personal reception and the hug – to Israeli Prime Minister Benjamin Netanyahu who visited in January.

  But Mr Modi has not yet met the Canadian prime minister, despite him being in India for two days.

  He was also absent when Mr Trudeau visited his home state of Gujarat on Monday.

  When Mr Trudeau visited the Taj Mahal on Sunday, some media reports pointed to the fact that the chief minister of Uttar Pradesh, where the monument is located, did not go to greet the visiting premier.

 5. Peace சொல்கிறார்:

  வருபவரை வர வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். இது மட்டமான செயல்.
  காரணம் இதுவென்று ஆங்கில ஊடகம் ஒன்று.

  The short shrift given to the Justin Trudeau by India may have to do with the Canadian premiere’s support to Khalistan separatists in his country and his refusal earlier to meet Punjab Chief Minister Capt Amarinder Singh.

  The Khalistani separatist movement is one of the most sensitive issues in India. Following the cold shoulder, Justin Trudeau may be forced to give a rethink on the not-so-tacit support to the Khalistani separatists back in Canada.
  India Today

  • mekaviraj சொல்கிறார்:

   எதிரியாவே இருந்தாலும் வந்தவர்களை வரவேற்பது நம் பண்பாடு..இப்படி உதாசீனப்படுத்துவது அல்ல.
   பண்பாட்டை காப்பாத்துற மாதிரி *நடிக்கிற* இந்த கூட்டத்திடம் என்ன எதிர்பார்க்க முடியும்

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  அந்த மனிதரையும் அவரது குடும்பத்தையும் பார்க்க பார்க்க அவ்வளவு ஆசையாக உள்ளது. சிரித்த முகத்துடன் நம்ம பக்கத்து வீடு மனிதரை பார்ப்பது போன்ற உணர்வு. இதெல்லாம் நம்ம ஆளுக்கு எங்கே தெரியும் ? கார்போரேட் அரசியல் தலைவர்கள் (சில நாட்டின் அதிபர்கள்), கார்போரேட்களையும், நடிகர்/நடிகைகளையும் பார்த்தால் மட்டுமே போதும்.

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  – கனடிய அரசின் கொள்கைகள், சீக்கிய அமைப்புகளை அது
  கட்டுப்படுத்தாதது குறித்து இந்தியாவின் எதிர்ப்பு –
  ஆகியவை 2 நாடுகள் சம்பந்தப்பட்ட கொள்கை சார்ந்த விஷயங்கள்.
  இவை குறித்து சம்பந்தப்பட்ட அரசுகள் இரண்டும் தாராளமாக பேசலாம். எதிர்ப்பு தெரிவிக்கலாம். அது தான் இன்றைய நாகரிக உலகில் இரண்டு தனிப்பட்ட நாடுகள் செய்யக்கூடியவை…

  – அல்லது இந்த விஷயங்கள் குறித்து பேசி தீர்த்துக் கொள்ளும் வரை
  கனடிய பிரதமர் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள வேண்டாம்
  என்று கூட இந்திய அரசு கூறலாம். அதுவும் அரசுக்கு உள்ள உரிமை தான்…

  – ஆனால், வர அனுமதித்து விட்டு, குடும்பத்தோடு வந்துள்ள கனடா பிரதமரை வெறுப்புணர்வுடன் அவமதிப்பது, “நாட்டாமை” உணர்வு
  மட்டுமே. இதில் அரசியல் நாகரிகம், பண்பாடு எதுவுமே இல்லை.
  ஒருவர் தனிப்பட்ட முறையில் நாட்டாமை உணர்வுடன் இருந்தால் நமக்கு அதில் பிரச்சினை இல்லை. ஆனால், இந்த நாட்டின் இமேஜை அது மிக மோசமாக பாதிக்கிறது… இந்தியர்களை, அவர்களது பண்பாட்டிற்காகவே இந்த உலகம் கொண்டாடுகிறது… அந்த பண்பாட்டை மிக கேவலமாக சித்தரிக்கிறது இவர்களின் செயல்.

  இந்த அலட்சியப்படுத்தலுக்கு வேறு ஒரு காரணத்தையும் இன்றைய ஹிந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது ….

  ….16 Canadian gurudwaras announced a “ban” last month
  on the entry of Indian elected officials, consular officials,
  RSS and Shiv Sena members.

  The Trudeau government took no action in response to the decision.
  When asked, officials cited “freedom of expression” issues.

  இப்போது யோசித்தால் –
  இது தான் முக்கிய காரணமோ என்று கூட தோன்றுகிறது.

 8. Alathur Giri சொல்கிறார்:

  ட்ரம்பின் மகள் வந்தபோது என்ன நடந்தது…?
  எத்தகைய வரவேற்பு கிடைத்தது…?
  வர அனுமதித்து விட்டு, குடும்பத்தோடு வந்துள்ள கனடா பிரதமரை வெறுப்புணர்வுடன் அவமதிப்பது,,உலக நாடுகள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கின்றன….
  நமக்கோ வேதனையாக, வெட்கமாக இருக்கிறது…
  இப்படிப்பட்ட தலைமையை பெற்றிருக்கிறோமே என்று….

 9. புதியவன் சொல்கிறார்:

  வெளி நாட்டுத் தலைவர்கள் நம் நாட்டுக்கு வருவதற்கு உரிமை உண்டு. ஆனால் ‘அரசு’ அவர்களை வரவேற்பது என்பதெல்லாம், ‘வெளி நாட்டு உறவுத்துறை’ போன்ற பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள விஷயம்.

  டிரம்பின் பெண் என்பதால் அவர் வரவேற்கப்படவில்லை. அமெரிக்க அதிபர், அந்த நாட்டின் நல்லெண்ணம் இந்தியாவுக்குத் தேவை போன்ற காரணங்களால்தான் அவர்களுக்கு ஸ்பெஷன் டிரீட்மென்ட் கொடுக்கப்படுகிறது.

  இதில் நாகரீகம், பண்பாடு போன்றவைகளைக் கொண்டுவரக்கூடாது என நினைக்கிறேன். அப்படி நினைத்தாலும், அதனை நமது அரசியல் அதிகாரிகள் கடைபிடிப்பது (வெளினாட்டு உறவுக் கொள்கையில்) என்று ஏற்றுக்கொண்டால்மட்டும்தான் நடக்கும். வெளினாட்டவர்களை அரசியல்வாதிகள் சந்திப்பதில் புரோட்டோகால், வழிமுறைகள் உள்ளது. அதனை மீறி சந்திக்கமுடியாது.

  நிற்க… மோடி, தன்னுடன் கூட்டுச் சேராமல், தனக்கு எதிராக பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அப்போலோவில் வந்து ஜெ.வைப் பார்க்காமல் இருந்தார். எதிரிக் கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி, அவசியம் இல்லை என்றபோதும் உயர்ந்த நாகரீகத்தைக் கடைபிடித்தார். இது மோடியின் தனிப்பட்ட ‘பழிவாங்கும்’ குணாதிசயம் என்றே நான் கருதுகிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.