1931-ஆம் ஆண்டு – லண்டனில் காந்திஜி… ஒரிஜினல் பிரிட்டிஷ் செய்திப்படம்…


பிரிட்டிஷ் Pathé செய்தி நிறுவனம் காந்திஜி 1931-ல் மேற்கொண்ட லண்டன் பயணத்தை வீடியோவாக படம் பிடித்து பத்திரமாக வைத்துள்ளது…
அந்த வீடியோ கீழே –

நடுக்கும் லண்டன் குளிரில் கூட, காந்திஜி வெறும் வேட்டி, துண்டுடன் நடப்பதும், ஆங்கிலேயர்கள் காந்திஜிக்கு அளிக்கும் முக்கியத்துவமும் இந்த செய்திப்படத்தில் தெரிகிறது…
லண்டனில் கூட காந்திஜியைச் சுற்றி எவ்வளவு கூட்டம்….!

1948-ல், டெல்லியில் – காந்திஜி சுடப்பட்டு இறந்தபின் நடக்கும் இறுதி ஊர்வலமும், தகனமும் கூட இந்த படத்தின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது…

மறக்க முடியாத காட்சிகள்…
….

————————————————————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to 1931-ஆம் ஆண்டு – லண்டனில் காந்திஜி… ஒரிஜினல் பிரிட்டிஷ் செய்திப்படம்…

 1. NS Raman சொல்கிறார்:

  Thanks for sharing video.

  Every Indian should refresh freedom movement frequently, so that atleast we can realise where we are standing today.

  Keep posting regularly.
  Thanks

 2. புதியவன் சொல்கிறார்:

  ஒருவனுக்கு அழகிய ஆடைகள் தேவையில்லை. படாடோபம் தேவையில்லை. நீட்டிய மைக்கிலெல்லாம் பேசத் தேவையில்லை. தேவை, நல்ல எண்ணம் நல்ல குறிக்கோள் அதை நோக்கிய பயணம், ஆத்ம பலம். எதைச் சொல்கிறானோ அதைச் செய்துகொண்டிருக்கவேண்டும். அப்புறம் மக்கள் சக்தி அவனை நோக்கி தானாகவே பெரு வெள்ளம்போல் வரும்.

  இதையும் இப்போது நடப்பதையும் நாம் ஒப்பிட்டு நோக்கி நொந்துகொள்ளணும் என்று கா.மை. சார் இப்போ இந்த இடுகையைப் போட்டிருக்கிறாரோ என்னவோ. நாட்டில், மலர், விதை போன்ற கதைகள் பெருகிவிட்டன.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்

   //இதையும் இப்போது நடப்பதையும் நாம் ஒப்பிட்டு நோக்கி நொந்துகொள்ளணும் என்று கா.மை. சார் இப்போ இந்த இடுகையைப் போட்டிருக்கிறாரோ என்னவோ.//

   Exactly …. நான் காந்திஜியின் வீடியோ ஒன்றுக்காக தேடிக்கொண்டே இருந்தேன். சில கிடைத்தன. ஒன்று மட்டும் தான் பதிய வேண்டுமென்று நினைத்தேன்.. எனவே, வடிகட்டினேன். இந்த வீடியோவை 4-5 தடவை போட்டுப் பார்த்தேன்.

   வியப்பை அடக்கவே முடியவில்லை. ரொம்ப இல்லாவிட்டாலும், பொதுவாழ்வுக்கு கொஞ்சமாவது ‘பெர்சனாலிடி’ தேவை என்று தான் நான் நினைத்திருந்தேன்…

   காந்திஜியை இந்த வீடியோவை துவக்கத்திலிருந்து பாருங்கள்.. என்ன பெர்சனாலிடி இந்த மனிதருக்கு…? ஒன்றுமே இல்லை…
   ஆனால், உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.. இந்திய மக்கள் அனைவரையும் தன் வார்த்தைகளால் கட்டிப்போட்டார்… அத்தனை பேரையும் தன் பின்னால் அழைத்துச் சென்றார் – நம்மால் ஜெயிக்க முடிந்தது…

   காரணம்…?
   சத்தியம்…அவர் வார்த்தைகளில் சத்தியம் இருந்தது…
   எதையும், பிறருக்கு உபதேசிக்கும் முன்னர் –
   தான் செய்யத் துவங்கினார்…
   தன் கொள்கைகளில்,
   தன் லட்சியங்களில் –
   அவருக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது.
   இறுதி வரை அந்த நம்பிக்கையை அவர் இழக்கவில்லை.

   ஆனால், அவர் கூட வந்த பல காங்கிரஸ் தலைவர்கள்,
   சுதந்திரம் கிடைத்ததும், பதவியை சுகிக்க போய் விட்டனர்…

   அவர் மட்டும் –
   வங்காளத்தில், நவகாளியில், தன்னந்தனியராக- அமைதியை,
   இந்து-முஸ்லிம் ஒற்றுமையை உருவாக்க போராடிக்கொண்டிருந்தார்.

   காந்திஜியை வைத்து தான் இன்றும் நினைத்துக் கொள்கிறேன்…
   இந்த நாட்டில் இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும்
   அத்தனை மதத்தினரும் இணக்கமாக, ஒற்றுமையாக, நல்லுறவுடன்
   வாழும் நாள் நிச்சயம் வரும்.

   அந்த நாளுக்காக காத்திருப்போம். அந்த சூழ்நிலை உருவாக நாம்
   ஒவ்வொருவரும் – எண்ணத்தால், செயலால் – முயற்சிப்போம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.