கொலை கொலையா முந்திரிக்கா… கொள்ளையடித்தவர் எங்கே போனார் … பதில் சொல்பவர் எங்கே போனார்… கண்டு பிடி… கண்டு பிடி…!!!


நடந்த கொள்ளை குறித்து விளக்கம் அளிக்க வேண்டியவர்கள்,
விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் – எங்கே போனார்கள்…?
இத்தனை நாட்களாகியும் இருக்கும் இடமே தெரியவில்லையே…!
ஏன் இந்த மௌனம்…?

நிரவ் மோடி கொள்ளை அடித்ததற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று பாஜகவும், பாஜக தான் காரணம் என்று காங்கிரசும் –
ஒன்றையொன்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனவே தவிர,

இந்த கொள்ளை எப்படி நடந்தது…?
யார் கவனத்திற்கும் வராமல் இத்தனை பெரிய மோசடி,
இவ்வளவு காலம் தொடர்ந்து நடந்தது எப்படி …?
என்று விரைவாக ஆராய்ந்தால்,

வங்கிகளின் மீதே நம்பிக்கை இழந்து, கதிகலங்கி, தவிக்கும் நாட்டு மக்களுக்கு – பின்னால் இருந்ததும், பங்கு போட்டுக் கொண்டதும் பாஜகவா அல்லது காங்கிரசா என்பது தானாகவே தெரிந்து விடும்….

இதற்கு விளக்கம் காண 10 கேள்விகளை எழுப்புகிறார் முன்னாள் நிதியமைச்சரும், (இன்னமும்) பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு.யஸ்வந்த் சின்ஹா…


—————
1) 2011-ல் நிரவ் மோடி ஊழல் தொடங்கியது என்றால் ஆண்டுவாரியாக
எவ்வளவு வங்கி ஏற்புக் கடிதங்கள் (LoU) அளிக்கப்பட்டுள்ளன? மேலும்
தெளிவுபெற, மே 2014-ஐ பிரிக்கும் கோடாக பாவிக்க வேண்டும். ஆகவே
மே, 2014 வரை எவ்வளவு ஏற்புக் கடிதங்கள் அளிக்கப்பட்டுள்ளன, அதன்
பிறகு எவ்வளவு ஏற்புக் கடிதங்கள் அளிக்கப்பட்டுள்ளன என்பதைப்
பார்க்க வேண்டும்.

2) ஒவ்வொரு வங்கி ஏற்புக் கடிதங்களிலும் உள்ள தொகை.

3) ஏற்புக்கடிதம் செல்லுபடியாகும் காலக்கட்டம், உதாரணமாக 90 நாட்களா,
180 நாட்களா, 365 நாட்களா அல்லது அதற்கும் கூடுதல் நாட்கள் செல்லுபடியாவதா?

4) பஞ்சாப் நேஷனல் வங்கி இன்னொரு வங்கிக் கிளைக்கு அளித்த
தொகைக்கான உத்தரவாதம்தான் வங்கி ஏற்புக் கடிதம் எனும் எல்.ஓ.யு.
எனும்பட்சத்தில் அயல்நாட்டு இன்னொரு வங்கிக் கிளையில் இந்த
எல்.ஓ.யூவுக்கு எதிராக எவ்வளவு தொகை எடுக்கப்பட்டுள்ளது?

5) எத்தனை சந்தர்ப்பங்களில் சொல்லப்படும் ஊழல்வாதி எல்.ஓ.யூ
தொகையை பஞ்சாப் நேஷனல் வங்கிக்குச் செலுத்தியுள்ளார்? அதே போல் எவ்வளவு எல்.ஓ.யூக்கள் செல்லாததாகியுள்ளது?

6) அயல்நாட்டு வங்கிக் கிளை குறிப்பிட்ட காலத்துக்குள் தொகையைப்
பெறவில்லை என்றால் அந்த வங்கிக் கிளை பஞ்சாப் நேஷனல் வங்கியின் கவனத்துக்கு இதைக் கொண்டு வந்துள்ளதா?

உரியதொகையைப் பெறுவதற்கு பி.என்.பி வங்கியின் உத்தரவாதம் எத்தனை சந்தர்ப்பங்களில் கோரப்பட்டுள்ளது?

7) இவையனைத்தும் அன்னியச் செலாவணிப் பரிவர்த்தனைகள் எனும்போது இந்த நடவடிக்கைகள் எப்படி ரிசர்வ் வங்கியின் கவனத்திலிருந்து தப்பியது?

8) 200 போலி நிறுவனங்களை நிரவ் மோடி உருவாக்கி இவை மூலம்
இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படியிருக்க பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு அனைத்து போலி நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டதாக எந்த அடிப்படையில் உயரிய முன்னுரிமை கோரலை அரசு செய்து வருகிறது?

9) நிரவ் மோடியிடமிருந்து பறிமுதல் செய்த சொத்துக்கள் விவரங்களை
விசாரணை முகமைகள் ‘விரைவாக’ வெளியிடுகின்றன, ஆளும் கட்சியும்
இந்த முறைகேட்டில் ஊழல் செய்யப்பட்ட அத்தனை தொகையையும்
திரும்பப் பெறுவோம் என்று கூறிவருகிறது.

விசாரணை முகமைகள் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பை இவ்வளவு விரைவாகக் கணக்கிட முடிகிறது என்றால், நான் இதே கேள்விகளில் கேட்டுள்ள சாதாரண தகவலை ஏன் அளிக்க முடியவில்லை?

10) இந்த ஒட்டு மொத்த ஊழலினால் எழுந்துள்ள குழப்பத்தில் பயனடைவது யார்?

————–

– 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாக்காசாக்கி அறிவிப்பு
வெளியிட்ட பின், போலியாக இயங்கி வந்த 3 லட்சம் கம்பெனிகள்
கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு விட்டது
என்று மோடிஜி கூறினாரே…

இப்போது இந்த நிரவ் மோடி – முந்தாநாள் வரை 200 போலி கம்பெனிகளை நடத்தி வந்தார் என்று கூறுவது எப்படி…?

– மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக
“சிஸ்டத்தின் மீதும்”, “காவலர்” மீதும் –
நம்பிக்கை இழந்து வருகிறார்கள்…

இந்த நிதிக்கொள்ளை புதிரை விடுவிக்கும் அளவிற்கு, சிபிஐ-க்கு நிபுணத்துவம்
கிடையாது… பொருளாதார நிபுணர்கள், வங்கி நிபுணர்கள், (நல்ல) ஆடிட்டர்கள்
கொண்ட குழுக்களை சிபிஐ -க்கு உதவியாக அமைக்க வேண்டும்.

தவறு தங்கள் பக்கம் இல்லையென்கிற பட்சத்தில், ஆட்சியில்
இருப்பவர்கள் அதி விரைவாக செயல்பட்டு, இந்த கேள்விகளுக்கு விடை கண்டு, மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்.

———————————————————————————

பிற்சேர்க்கை –

ஒருவழியாக நிதியமைச்சர் தலை தென்பட்டு விட்டது. நேற்றிரவு, ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் – ஆடிட்டர்கள் தங்கள் பொறுப்பிலிருந்து எப்படி தவறினார்கள் என்று (நம்மையே…? ) கேள்வி கேட்டு விட்டு நழுவி விட்டார்.

கொள்ளையடித்தவர்களை, அவர்கள் எங்கு போனாலும் – இறுதி வரை துரத்திக்கொண்டே இருப்போம் என்றும் பொதுமக்களுக்கு உறுதி கூறி விட்டார்.

இவர்களுக்கு இதில் பொறுப்பு எதுவும் கிடையாது பாருங்கள்… வருடா வருடம் வங்கிகள் – இப்படி கொள்ளை கொடுத்ததும், வாராக்கடன்களில் விட்டதுமாக மொத்தம் எவ்வளவு லட்சம் கோடி என்று கணக்கு பார்த்து – தோராயமாக சில லட்சம் கோடிகளை மக்களின் வரிப்பணத்திலிருந்து தானம் கொடுத்தால் கொடுத்தால் தீர்ந்தது பிரச்சினை…(இந்த வருட பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு நஷ்டத்தை ஈடுகட்ட அளிப்பது இரண்டு லட்சத்து பத்தாயிரம் கோடிகள் (மட்டும் தான்)….

————————–

மேற்கண்ட இடுகையை படித்து நொந்து போன நெஞ்சங்கள் ஆறுதல் பெற –
நேற்று வெளிவந்திருக்கும் ஒரு செய்தியையும் தந்து விடுகிறேன்.

இப்படியும் ஒரு அரசு –

“சிங்கப்பூர் அரசு, தனது பட்ஜெட்டில் மிகுந்திருக்கும்
உபரித் தொகையிலிருந்து, 21 வயது நிரம்பப்பெற்ற
அனைத்து குடிமக்களுக்கும், தலா 15,000 ரூபாய்
அளவிற்கான சிங்கப்பூர் டாலரை பரிசாக அறிவித்திருக்கிறது…. ”

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to கொலை கொலையா முந்திரிக்கா… கொள்ளையடித்தவர் எங்கே போனார் … பதில் சொல்பவர் எங்கே போனார்… கண்டு பிடி… கண்டு பிடி…!!!

 1. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Why nobody has commented on this superb article. I expected a volley of comments.
  It is a dissapointment for me.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Gopalakrishnan,

   மக்கள் நொந்து விட்டார்கள் என்று தான் நான் நினைக்கிறேன்.
   என்னென்னவோ எதிர்பார்த்தோமே…
   இப்போது என்னென்னவெல்லாமோ நடக்கிறதே…
   இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்க போகிறார்கள்…?
   எப்படி சரி செய்யப்போகிறார்கள் என்கிற ஆற்றாமை…
   தங்கள் இயலாமை குறித்த வருத்தம்…

   நான் இப்படித்தான் எடுத்துக் கொள்கிறேன்.
   வேறு யாருக்காவது, வேறு எதாவது தோன்றுகிறதா…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.