நேற்றிரவு ஸ்டாலின் நிம்மதியாகத் தூங்கி இருப்பார்…!!!


விகடன் குழு எக்கச்சக்கமாக boost கொடுத்து கன்னா பின்னாவென்று
ஊதி, உப்ப விட்ட இமேஜ் –
சிலரை ஆச்சரியப்பட வைத்தது …
பலரை திகைக்க வைத்தது..
சிலரை மிரள வைத்தது….
பலரை ஆவல் கொள்ள வைத்தது…

விகடன் விட்ட ரீல்களில் – சாம்பிளுக்கு கொஞ்சம் ….

இது “ரீல்”
————–

கமலின் அரசியல் பயணத்திற்கு ஆதரவும், வாழ்த்துகளும் எல்லா
பக்கங்களில் இருந்தும் வந்து குவிகின்றன.

“கட்சியில் இணையப்போகும் பிரபலங்களைப் பார்த்து தமிழக மக்கள்
ஆச்சரியம் அடைவார்கள்.. பல அரசியல்வாதிகள் அதிர்ச்சி
அடைவார்கள்.

சினிமா பிரபலங்கள் பலரும், தொழிலதிபர்களும் அடிக்கடி வந்து
கமலை சந்தித்துப் பேசுகிறார்கள். பிரபல தொழிலதிபர் ஒருவர் ஆரம்ப
கட்டத்திலேயே கட்சியில் சேரவுள்ளார்..

ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் இணைகிறார்…
இப்போது பதவியில் இருக்கும் நீதிபதி ஒருவர் தன் பதவியை
தூக்கியெறிந்து விட்டு வரப்போகிறார்…
இப்போதும் பதவியில் உள்ள துடிப்பான ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஒருவர்
பதவியை தூக்கியெறிந்துவிட்டு வரப்போகிறார்.

இப்படி தமிழகத்தை மாற்றத் துடிக்கும் கமலின் அரசியல் பயணத்தில்
நல்லெண்ணம் கொண்ட பலரும் கைகோக்கிறார்கள்…”

———————————-

இது “ரியல்”

நேற்றிரவு மதுரையில் நடைபெற்ற “மக்கள் நீதி மய்யம்” துவக்க விழாவில் கட்சியில் சேர்ந்த சில “மாபெரும்” VIP -க்கள்…

1) முன்னாள் நடிகை திருமதி ஸ்ரீபிரியா …

2) நடிகர் நாசர் அவர்களின் மனைவி கமிளா நாசர்…

3) நகைச்சுவை நடிகர் வையாபுரி…

4) பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர் ஞானசம்பந்தம்

5) பிக் பாஸ் டிவி தொடர் – தாடிகவிஞர் சினேகன்….

6) ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி – மௌரியா…

——————————————————————

கமல்ஹாசன் அவர்களின் –

புதிய கட்சியின் துவக்க விழா நிகழ்ச்சிகள்,
அதன் கொள்கைகள், லட்சியங்கள், கொடி, கமலின் மேடை உரை –

ஆகியவை பற்றி நான் அதிகம் சொல்வதை விட,
விமரிசனம் தள நண்பர்களின் கருத்துகளை தெரிந்து கொள்ளவே
விரும்புகிறேன்…!!!

உங்கள் கருத்தை …..சொல்லுங்களேன் நண்பர்களே…?

———————————————————————————————————–

பிற்சேர்க்கை –

இதை பின்னூட்டத்தில் போட விரும்பிய நண்பர் ஒருவர், அது முடியாததால் தனியே அனுப்பி இருக்கிறார்.
இதை எப்படி பின்னூட்டத்தில் சேர்ப்பது என்று எனக்கும் தெரியவில்லை..
சுவாரஸ்யமாக இருந்ததால் விட மனமில்லை… 🙂 🙂
எனவே இங்கேயே சேர்த்து விட்டேன்….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

30 Responses to நேற்றிரவு ஸ்டாலின் நிம்மதியாகத் தூங்கி இருப்பார்…!!!

 1. செந்தில், கோவை... சொல்கிறார்:

  ஒரு திரைபடத்தின் அறிமுக விழா போல் இருந்தது….

 2. Ramachandran சொல்கிறார்:

  கமல் ஒரு மிகச்சிறந்த நடிகர். பிறவி நடிகர் என்றே சொல்ல வேண்டும்.
  அதனால் பல சமயங்களில் அது ஓவர் ஆக்டிங்க் ஆகி விடுகிறது.
  மற்ற டைரக்டர்கள் யாராவது இயக்கும்போது கமலின் ஒவர் அக்டிங்க் முறைப்படுத்தப்பட்டு, இயற்கையான நடிப்பு வெளிப்படுகிறது. இவரே நடித்து,
  இவரே இயக்கினால் அது ரசிக்கும்படி அமைவதில்லை. அவர் சொந்தமாக டைரக்ட் செய்த விருமாண்டி, உத்தம வில்லன் போன்ற படங்களே இதற்கு உதாரனம்.
  ‘மக்கள் நீதி மய்யம்’ முழுக்க முழுக்க கமலே எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்த
  படம். ஆகவே ஓவர் ஆக்டிங்க் காரணமாக படம் ஃப்ளாப் ஆகி விட்டது.
  சினிமாவாக இருந்தால், இன்னொரு நல்ல படம் எடுத்து நிமிர்ந்து விடலாம்.
  ஆனால் இது அரசியல்; விழுந்த இமேஜ் விழுந்தது தான்.
  விஜய்காந்த் அளவு கூட தேற மாட்டார்.

 3. புதியவன் சொல்கிறார்:

  விகடன் விட்ட ரீல்களில் – சாம்பிளுக்கு கொஞ்சம் …- விகடன் காரணத்தோடுதான் இதனைச் செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? ரொம்ப உசத்தி, புஸ்வாணமாக்கும் முயற்சி. அதுவும்தவிர, இப்படி எழுதுவது, பின்னால் ரஜினி நுழையும்போது அதனைப் பற்றியும் ஆஹா ஓஹோ என்று எழுதி இருவரையும் கவிழ்த்து அதன் மூலம் திமுக சார்பு எடுப்பதற்கான திட்டம்தான் இது என நான் நினைக்கிறேன்.

  நேற்று செய்திகளைப் பார்த்து நானும்தான் ஆச்சர்யப்பட்டேன். ஒருவேளை அதிமுக base கொஞ்சம் கமலஹாசனை நோக்கி நகர்கிறதோ என்று.. ஆனாலும் கமலின் சகோதரர் எழுதியிருந்ததுபோல், 5%க்குமேல் வாக்கு வாங்கும் சக்தி கமலுக்கு கிடையாது. ரஜினியும் சேர்ந்தால் மொத்தம் 12% வரலாம். முடிந்த வரை இன்வெஸ்ட்மென்ட் இல்லாமல் அரசியல் கட்சி நடத்துவது அவருக்கு நல்லது.

  • Lala சொல்கிறார்:

   Invest பண்ணி கட்சி நடத்துவதற்கு கமல் ரஜினி இருவருமே மடையர்கள் அல்ல.
   அவர்கள் கட்சி தொடங்குவதற்கும் , நடத்துவதற்கும் உளவுத்துறை பணம் கொடுக்கிறது அல்லது கார்பரேட் நிறுவனங்கள் கொடுக்கிறது.
   நிச்சயமாக இந்த நடிகர்கள் தமது சொந்தப்பணத்தை செலவழிக்கப்போவதில்லை

 4. இக்பால் சொல்கிறார்:

  ரஜினி பொய் இல்லாதவர். வெளிப்படையானவர்.
  கமல் முழுக்க முழுக்க நடிப்பு; 24 மணி நேரமும் நடிப்பவர்.
  மொத்த முழு சுயநலவாதி.

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் ஒருவர் சூப்பர் புகைப்பட கமெண்ட் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
  அதை பின்னூட்டத்தில் போடும் டெக்னிக் அவருக்கும் தெரியவில்லை. எனக்கும் தெரியவில்லை. எனவே, மேலே இடுகையிலேயே அதை பிற்சேர்க்கையாக
  சேர்த்திருக்கிறேன். ஏற்கெனவே இடுகையை பார்த்து விட்டவர்கள் மீண்டும்
  ஒரு முறை மேலே பார்க்கவும்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 6. அறிவழகு சொல்கிறார்:

  முதல் கோணல் முற்றிலும் கோணலாகட்டும். இதைப் பார்த்து இன்னொரு நாடகம் மேடையேராமலே போனாலும் நல்லது தான்.

 7. அறிவழகு சொல்கிறார்:

  ஆமாம்…! கமல்ஹாசன் கட்சியின் கொடியில் உள்ள லோகோ freepik தளத்திலிருந்து களவாடியதாம்ல. சொந்தமாகவே சிந்திக்க தெரியாதா?

  https://www.freepik.com/free-vector/hands-connecting_766600.htm#term=logo

 8. Ganpat சொல்கிறார்:

  படிப்பில் ஆர்வமற்ற ஒரு மக்கு பையனுக்கு புது ட்யூஷன் டீச்சர்!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   வருக கண்பத்,

   உங்கள் பார்வையில் …..
   டீச்சர் எப்படியோ… ? 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 9. NS Raman சொல்கிறார்:

  Is Delhi CM Kejriwal is not considered as VIP.

  Do you considered Kejriwal is hero (VIP) only when is against Modi?

 10. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  NS Raman ,

  // Is Delhi CM Kejriwal is not considered as VIP. //

  நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்..
  நான் கட்சியில் “சேர்ந்த” பிரபலங்களைப்பற்றித்தான் சொல்லி இருக்கிறேன்..
  நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை அல்ல…!!!

  // Do you considered Kejriwal is hero (VIP) only when is against Modi? //

  அன்னா ஹஜாரேயை விட்டு என்றைக்கு பிரிந்தாரோ,
  அன்றிலிருந்தே, எனக்கு கெஜ்ரிவால் மீதிருந்த மதிப்பு போய் விட்டது…!
  By his Designation…. He is definitely a VIP… 🙂 🙂

  நான் எழுதி இருக்கும் மற்ற விஷயங்களைப் பற்றி சொல்ல உங்களுக்கு
  எதுவுமே இல்லையா…? இது மட்டும் தானா கிடைத்தது…?

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • NS Raman சொல்கிறார்:

   we should give some time to Kamal before criticising him.

   He will be splitting vote against admk so his entry will have a impact on Stalin.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ராமன்,

    ஒருவருடைய 45 ஆண்டுக்கால பொதுவாழ்வு அவரை எடை போட போதுமானது இல்லையா என்ன…?

    அரசியலில் அவரது தாக்கத்தை எடை போட இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று சொல்லுங்கள்…
    ஏற்கிறேன்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • Antony சொல்கிறார்:

     //ஒருவருடைய 45 ஆண்டுக்கால பொதுவாழ்வு அவரை எடை போட போதுமானது இல்லையா என்ன…?//
     I don’t think this is correct. Even JJ has disproved it. She had become a wonderful leader later.

 11. அனானி சொல்கிறார்:

  பதிவர் காவிரி மைந்தனின் மனைவி , மகள்களை புணர்ந்த கமலஹாசன் என்று முகநூல் பதிவு போட்டிருக்கின்றேன்
  அட்டகாசமாக போகின்றது

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நண்பர்களுக்கு,

   மேற்படி கமல் ஹாசனின் ரசிகர் முதலில் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார்.
   ஆபாசமாக இருந்ததால் நீக்கி விட்டேன்.

   இப்போது மீண்டும் ஒரு ஆபாச பின்னூட்டம் போட்டிருக்கிறார்.
   இதை நான் நீக்கப் போவதில்லை…நீக்கினால் மீண்டும் மீண்டும் போட்டுக்கொண்டே இருப்பார்.

   அவரது தலைவரின் பெருமைகளை அவர் இப்படித்தான் பிரபலப்படுத்த வேண்டும் என்று
   நினைத்தால் தாராளமாகச் செய்து கொள்ளட்டும்…அவர் ஆசையை கெடுப்பானேன்.

   – அரசியல்வாதியாக அவர் மாறி விட்டார் என்பதற்கு இது முதல் உதாரணம் போலும்…
   அடுத்து “ஆட்டோ” நாயகன் ஆகவேண்டும்… ரவுடி பட்டாளங்களுடன் சுத்த வேண்டும்…
   ஆல் தி பெஸ்ட் ரசிக/வெறிய / தொண்டரே…!!!

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    சொல்ல மறந்து விட்டேன்…
    மேற்படி “அனானி” யின் email ID யை நீங்கள் அவசியம்
    தெரிந்து கொள்ள வேண்டும்…
    அப்போது தான் அவர்களது “தரம்” அனைவருக்கும் தெரியவரும்.

    அனானி
    huisupundai@yahoo.com

    • Ganpat சொல்கிறார்:

     சத்தியமாக சொல்கிறேன்..//பையனுக்கு இதுவரை அறிவுதான் குறைவு.இனி குணமும் குறையப்போகிறது.// என்று ஒரு கமென்ட் போட்டு விட்டு கீழே வருகிறேன்..அனானியின் கமென்ட்..என் வாக்கு இவ்வளவு சீக்கிரம் பலிக்கும் என்று நானே எதிர்பார்க்கலை.எடுத்துடுங்க காமைஜி வீட்டு நடுவில எதுக்கு மலம்?

     • அறிவழகு சொல்கிறார்:

      // எடுத்துடுங்க காமைஜி வீட்டு நடுவில எதுக்கு மலம்? //

      நானும் இதை வலியுறுத்துகிறேன்.

      அவரின் வாழ்க்கையே மலத்தை ஒத்தது தான். அடிபொடிகள் எப்படி இருக்கும்.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      கண்பத் / அறிவழகு,

      நான் இதை நீக்கி விட்டால், அவர் மீண்டும் ஒரு தடவை எழுதுவார்.
      நான் மீண்டும் விளக்கம் கொடுக்க வேண்டும்…எதற்கு வீண் வேலை…
      அவருக்கு தனது பின்னூட்டத்தை இங்கே பார்ப்பதில் அவ்வளவு சந்தோஷம்…
      அடைந்து விட்டு போகட்டுமே…

      கமலின் கௌரவமான ஆதரவாளர்கள் என்று கொஞ்சம் பேர் இருப்பார்கள் அல்லவா..?
      – தங்கள் கட்சி தொண்டரடிப் பொடிகள் எத்தகையவர்கள் என்று பார்த்து அவர்கள் வெட்கப்படட்டும்..

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  • Ashok சொல்கிறார்:

   Please indicate your facebook ID.
   I want to visit and make an entry there .

 12. Ashok சொல்கிறார்:

  the above message is meant for ANANI

 13. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  I do not understand the title of this article. I think DMK will have a bigger dent compared to ADMK, if such parties come up.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சன்மத்,

   கமலின் வரவால், திமுகவிற்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று நினைத்து
   ஸ்டாலின் டென்ஷனாக இருந்தார்…
   கமலின் முதல் கட்ட நடவடிக்கைகள் – ஸ்டாலின் கவலைப்படும் அளவிற்கு
   இல்லை – எனவே, அவர் நிம்மதியாகலாம் என்பது தான் தலைப்பு.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 14. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  ஜக்கி வாசுதேவ் , நித்தியானந்தா போன்றவர்களை ஊதி ஊதி
  பெரிதாக்கும் வேலையை குமுதம் , விகடன் போன்ற பத்திரிகைகள்
  செய்தன .
  இப்ப ஆண்டவரே வந்திருக்கறார் .
  அமெரிக்காவில் டிரம்ப் ப்ரெசிடெண்ட் ஆவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை .
  டிரம்ப் ப்ரெசிடெண்ட் ஆனது பெரிய அதிர்ச்சி .
  கடைசியில் எல்லாப் புகழும் F B க்கே !
  விகடனை பற்றி கவலை வேண்டாம் – பேஸ்புக்கில் என்ன வருது என்பதை பார்க்கவும்

 15. BVS சொல்கிறார்:

  இது செய்தி :

  சந்திரபாபு நாயுடு ரோல் மாடலா?: கமலுக்கு ரோஜா கேள்வி!

  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற
  23 எம்.எல்.ஏ.க்களை கோடிக்கணக்கான பணம் கொடுத்து விலைக்கு வாங்கிய சந்திரபாபு நாயுடு, அவர்களை ராஜினாமா செய்யாமலேயே தனது கட்சியில் சேர்த்துக்கொண்டு அதில் 4 பேருக்கு மந்திரி பதவி வழங்கி உள்ளார். இப்பேற்பட்டவரை கமல் புகழ்கிறாரே என்று ஆந்திராவில் உள்ள கமல் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்’’ என்று குறிப்பிட்டார் ரோஜா.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.