ராமேஸ்வரத்தில் இருந்து முளைத்த “அசல்” விதை….!!!


தோல்வியும், வெற்றியும் – எப்படி எதிர்கொள்ளப்பட வேண்டும்,
தலைமைப் பண்பு என்றால் என்ன என்பதை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவருக்குக் கூட புரியும்படியாக அத்தனை எளிய ஆங்கிலத்தில், மிகத்தெளிவாக சொல்கிறார் டாக்டர் கலாம்…!
( மாணவர்கள் யாருக்காவது, எங்காவது புரியவில்லையென்றால்,
பின்சென்று மீண்டும் ஓட விடுங்கள்… நிச்சயம் புரியும்…)

தனக்கென வாழாமல் – திருமணம் கூட செய்து கொள்ளாமல், தன் கடைசி மூச்சு வரை இந்த நாட்டிற்காகவும், நமது மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும் உழைத்த டாக்டர் கலாம் அவர்களின் முக்கியமான உரை ஒன்று
வீடியோ வடிவத்தில் கிடைத்தது….

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்….

…..

————————————————————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ராமேஸ்வரத்தில் இருந்து முளைத்த “அசல்” விதை….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  இந்தக் காணொளியைப் பார்த்தபோது மிகுந்த எமோஷன் ஆகிவிட்டேன். சாதாரண பின்னணி. சாதாரண மனிதர், அசாதாரண சாதனை செய்தார். எவ்வளவு லட்சக்கணக்கான மாணவர்களைச் சந்தித்தார், எத்தனைபேரிடம் அன்போடு இருந்தார்.. அவரைப்போன்ற மக்கள் ஜனாதிபதி இனி எப்போது வருவார்?

  அவர், இன்னும் வாழ்ந்திருந்திருக்கவேண்டும். அது இந்திய இளைய தலைமுறைக்கு எத்தனையோ பயனை அளித்திருக்கும்.

  அவர் மறைந்து ஓரிரு வாரங்களில் பெங்களூரில் பயணித்துக்கொண்டிருந்தேன். எங்கெங்கும் காணிலும் கலாம்ஜி அவர்களுக்கு அவர் பெருமையைப் பாடி நிறைய பதாகைகள். சொன்னால் நம்பமாட்டீர்கள், மூலைக்கு மூலை அவரது பதாகை. அவர் எந்தக் கட்சியையும் சார்ந்தவரில்லை. அவர் தமிழர், அதுவும் கடைக்கோடி இராமேஸ்வரத்தைச் சார்ந்த, மிகுந்த வறிய நிலையில் வளர்ந்த தமிழர். நான் அப்போது அடைந்த ஆச்சர்யத்துக்கும் பெருமிதத்துக்கும் அளவே கிடையாது.

  கிரேட் மேன் கலாம்ஜி… உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். எந்த இடத்தில் பிறக்கிறோம் என்பது அவசியமில்லை, எங்கு நம்மைச் செலுத்திக்கொள்கிறோம் என்பது முக்கியம். நாம் வளரும்போதும் வளர்ந்தபிறகும், பிறர் வளர நல் உரமாக இருக்கவேண்டும் என்ற செய்திதான் நீங்கள் ஜனாதிபதி ஆன பின்பான உங்கள் செய்தி எங்கள் எல்லோருக்கும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   நல்ல பின்னூட்டம் உங்களுடையது.
   எனக்கு மிகவும் பிடித்தவர்களில் ஒருவர் கலாம்.
   அவருடன் ஒரு நாள் இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை
   என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பாக்கியமாகவே நினைக்கிறேன்….

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    நன்றி கா.மை. சார். சோ அவர்கள், கலாம் அரசியல் பதவியான ஜனாதிபதி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது தவறு என்று எழுதியிருந்தார். எல்லாவற்றிலும் அரசியல் நுழைந்துவிட்டால், அப்புறம் தேசத்தின் ஆன்மா என்று ஒன்று எங்கே இருக்கும்? தற்போதைய ஜனாதிபதி, பாஜக சொல்வதெற்கெல்லாம் தலையாட்டினால், அதேபோல் காங். ஜனாதிபதி, காங்கிரஸ் அரசு சார்பாக செயல்பட்டால், தேசத் தலைவர் என்ற அந்தப் பதவிக்கு மரியாதை ஏது?

    ஜனாதிபதி பதவியின் மரியாதையை அழித்தது காங்கிரஸ் கட்சி. மக்கள் விரும்பியவரை மீண்டும் ஜனாதிபதியாக அமரவைக்காமல், பிரதீபா பாட்டீல் (?) தேர்ந்தெடுக்க வழிவகை செய்தது. திமுகதான் இதற்கு முதல் ஆதரவு கொடுத்தது.

    தேசம் முக்கியம் என்பதை சோனியாவும் உணரவில்லை, கருணானிதியும் உணரவில்லை. இதுதான் இந்த இருவரின் தரம்.

    அவருக்குப் பதவி ஆசை என்றும் கருணானிதி மற்றும் திமுகவினர் சொல்லிக்கொண்டிருந்தனர். கலாம்ஜி, மாளிகையை விட்டு வெளியில் செல்லும்போது இரண்டு பெட்டிகளோடு (அவருடைய சொந்த உடுப்பு, புத்தகங்கள்) வெளியேறினார். தன் சார்பாக வந்த விருந்தினருக்கு உரிய கட்டணத்தை அவர் கட்டினார். அவரை நினைத்தால் புல்லரிக்கிறது. இந்தியாவில் மாணிக்கங்கள் இருந்தனர், இருப்பர், இன்னும் வருவர்..ஜீவா, கக்கன், காமராஜ், கலாம் இன்னும் பலர். ஆனால் மக்களுக்கு அதைப் புரிந்துகொள்ளும் சக்தி, அந்த லெவல் அறிவு இல்லை என்பது வருத்தத்துக்குரியது.

 2. R.Gopalakrishnan சொல்கிறார்:

  The great message Dr.APJ delivered is the exact leadership quality. That is, his Chairman took
  the failure of launch of the satellite on his head and the cause of subsequent success on Dr.APJ.
  This is not only the message for the students but also for the entire op politicians. This is what
  I understood.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.