அரசியல்+புதிய படம் … ஒளிந்திருக்கும் பின்னணி…!!!


திரு.ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறோம் என்று
நேற்று திரு.கலாநிதி சார்பாக சன் பிக்சர்ஸ் அறிவித்திருக்கிறது…

அரசியலில் இறங்குவதாக அறிவித்து, கட்சியின் அடிப்படை
கட்டமைப்பு வேலைகளில் தீவிரமாக இறங்கி, மாவட்ட அளவிலான
கிளைகளின் நிர்வாகிகளை வரிசையாக அறிவித்து வரும் நிலையில் –

இப்போது ரஜினி இன்னொரு புதிய படத்தில் நடிக்கப்போவதாக அறிவிப்பு
வந்திருப்பது குறித்து, பல்வேறு தரப்பிலிருந்தும் விமரிசனங்கள்
எழுந்திருக்கின்றன. செய்தியைப் பார்க்கும் ஒவ்வொருவரும் அவரவர்
விரும்பும் கோணத்திலிருந்தே கவனிக்கின்றனரே தவிர, உண்மையான
பின்னணியை அறிய முயற்சி செய்யவில்லையென்று தெரிகிறது.

ரஜினி உடனடியாக தீவிர அரசியலில் ஈடுபட்டு
பரபரப்பான அறிக்கைகளை வெளியிடுவார்…
கட்சியின் பெயர், கொடி, சின்னம், கொள்கைகள் ஆகியவற்றை
அறிவித்து விட்டு, தமிழகத்தில் சுற்றுப்பயணம் புறப்படுவார் …
என்று மீடியாக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்பார்த்தன…

இதற்கு மாறாக,
சன் பிக்சர்ஸ்+ரஜினியின் புதிய பட அறிவிப்பு வெளியானதும்
பரபரப்பான செய்திகளை எதிர்பார்த்திருந்தவர்கள் பெருத்த
ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து
மீடியாக்களில் ஏற்பட்டுள்ள விவாதங்கள் அந்த ஏமாற்றத்தை
பிரதிபலிக்கும் வண்ணம் இருக்கின்றன…

ஆனால், எனக்கு கிடைத்த செய்தியொன்று, இந்த புதிய பின்னணியைப்பற்றி, முற்றிலுமாக மாறுபட்ட, வேறோரு காரணத்தைச் சொல்கின்றன…

சில நாட்களுக்கு முன்பாக, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ரஜினியை
அவர் வீட்டில் சந்தித்து, கதை சொன்னார், ரஜினியும் கதைக்கு ஓகே
சொல்லி விட்டார் என்கிற அளவில் ஒரு தகவல் வந்தது. தயாரிப்பாளர்
யார் என்கிற விவரம் அப்போது தெரியவில்லை…

சில மாதங்களாகவே, ஸ்டாலினுக்கும், மாறன் சகோதரர்களுக்கும்
சுமுகமான உறவு இல்லை என்றும், ஸ்டாலின் மாறன் சகோதரர்களை
முற்றிலுமாக அலட்சியப்படுத்துகிறார் என்றும் தெரிகிறது… உறவை
புதுப்பித்துக்கொள்ள, மாறன் சகோதரர்கள் தரப்பிலிருந்து முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டாலும், ஸ்டாலின், மாறன் சகோதரர்களை ஒதுக்கி வைப்பது என்கிற தனது முடிவிலிருந்து மாறுவதாகத் தெரியவில்லை….

சகோதரர்களின் தன்மான உணர்வு சுட்டிருக்கிறது … இருந்தாலும், தங்களது பாரம்பரியம் காரணமாக – திமுக வுக்கு எதிராக தங்களால் வெளிப்படையாக செயல்பட முடியாது என்பதால்,

நேரடியாக மோதலில் ஈடுபடுவதை தவிர்க்கவும் – அதே சமயத்தில், தங்களை ஒதுக்குவதால் ஏற்படும் நஷ்டத்தை ஸ்டாலினுக்கு அழுத்தமாக உணர்த்தவும் – திட்டம் போட்டு இறங்கியதன் விளைவே – ரஜினியை வைத்து புதிய படம்.

இந்த ரஜினி+சன் பிக்சர்ஸின் புதிய படம் குறைந்த பட்சம் அடுத்த
ஒரு வருடம் வரை தயாரிப்பு பணிகளில் இருக்கும்….
தாங்கள் 200 கோடி ரூபாய் செலவில் எடுக்கும் படத்திற்கு விளம்பரம்
கொடுக்கிறோம் என்கிற சாக்கில், சன் மீடியா அடுத்த ஒரு வருடத்திற்கு
ரஜினியை முன் நிறுத்தி நிறைய செய்திகள் வெளியிடும்….
ரஜினியை தொடர்ந்து வெளிச்சத்தில் வைத்திருக்கும்….
அவருக்கும், அவரது புதிய கட்சிக்கும் அது மறைமுகமாக – சாதகமாக அமையும்…. வெளியில் சொல்லாமலே அது திமுகவிற்கு-ஸ்டாலினுக்கு எதிராக அமையும்.

ரஜினியைப்பொறுத்த வரையில், அடுத்த தேர்தல் நெருங்கி வரும் வரையில், அரசியலில் – நிதானமாகவே பயணப்பட விரும்புகிறாரென்று தெரிகிறது.

கட்சியின் அமைப்பு வேலைகள் தொடர வேண்டும்… அதே சமயம்
பரபரப்பையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்… அதற்கு மீடியா வெளிச்சத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுவது அவசியம்…

எவ்வளவு கிட்டத்தில் பார்த்தாலும், மே, 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு
முன்னதாக தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர வாய்ப்பில்லை
என்பதே யதார்த்தம்…

ஆக, புதிய திரைப்பட அறிவிப்பு –
சன் மீடியா, ரஜினி ஆகிய இருவருக்குமே சாதகமான ஒரு விஷயம்.

தங்களை அலட்சியப்படுத்தும் ஸ்டாலினுக்கு தங்கள் முக்கியத்துவத்தை
உணர்த்த மாறன் சகோதரர்கள் எடுக்கும் முயற்சி தான் இந்த புதிய
திரைப்படம்… இதனால் பாதிக்கப்படப்போவது …. ???

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to அரசியல்+புதிய படம் … ஒளிந்திருக்கும் பின்னணி…!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  அட…. இது புதிய கோணமாக இருக்கிறதே. எனக்கு மனதில் தோன்றியது. கேடி பிரதர்ஸின் உள் குத்து இருக்குமோ என்று. அதுவும்தவிர, ரஜினியும் இன்னும் திரைப்பட வருவாயை எதற்காக எதிர்பார்க்கிறார், ஒருவேளை அரசியல் பிரச்சாரத்தில் இருக்கும்போது அப்போதும் வெற்றி பெரும் அவரது படம் இருந்தால் நல்லது என்று நினைக்கிறாரோ என்று.

  இது ஒருபுறமிருக்க, ‘அம்மா ஸ்கூட்டர்’ ஆரம்பித்துவைக்க மோடி அவர்கள் வருகிறாராம். எங்க போய் இதைச் சொல்வது? ஜெ. என்ற தலைவிக்கு பயந்து ராணுவக் கட்டுப்பாட்டோடு இருக்கவேண்டும் என்று அவரது கட்சி முன்னோடிகளைத் தன் கையில் வைத்திருந்தார். அடுத்த கட்சியைச் சேர்ந்த மோடிக்குமா அவர்கள் அடிமையாக இருக்கவேண்டும்? கட்சியை அழிக்க இதைவிட வேறு பாதை இல்லையே. படத் திறப்புக்கு அவர் வரவில்லை. ஸ்கூட்டர் கொடுப்பது, அதிமுகவின் ஒரு திட்டம். அதற்கும் பாஜகவுக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்? தன் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அடுத்தவன் மனைவிக்கு சேலை கட்ட ஆரம்பித்துவிட்டார்களே இந்த அதிமுக தலைவர்கள்? (இந்த உதாரணம் சந்தன வீரப்பன், இந்திய ராணுவம் இலங்கைக்குச் சென்றதைப் பற்றிச் சொன்னது) இதை எழுத விட்டுப்போயிற்றா கா.மை. சார்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   //ஸ்கூட்டர் கொடுப்பது, அதிமுகவின் ஒரு திட்டம். அதற்கும் பாஜகவுக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்? //

   நிகழ்ச்சி Live பார்த்தேன்…!
   மோடிஜி தனது பல்பொடி வியாபாரத்தை இங்கே செய்து விட்டு போய் விட்டார். ஸ்கூட்டர் பற்றி அரை நிமிடம் கூட பேசவில்லை.
   மத்திய அரசின் இலவச திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் பற்றி 15 நிமிடம் பேசி விட்டு போய் விட்டார்.

   நான் பயந்துகொண்டே இருந்தேன். மோடிஜி ஆங்கிலத்தில் பேசினார். எனவே, மொழிபெயர்ப்பு என்று சொல்லி, வேறு யாராவது இத்தனையையும் மீண்டும் repeat செய்வார்களோ என்று. நல்ல வேளை விட்டுவிட்டார்கள்.

   மோடிஜி -நல்ல வித்தை தெரிந்த வியாபாரி… எந்த situation-ஐயும் தனக்கு சாதகமாக்கிக் கொள்வதில் வல்லவர்… ( இதை த.பா.ஜ.க.வினர் கூட ஒப்புக்கொள்வார்களென்று நம்புகிறேன்… 🙂 🙂 … )

   இரவு, ராஜ்பவனில் -மு.அ., துணை மு.அ. கூட பேச்சு இருக்கிறதாம். தேர்தலின்போது ரஜினி வழிக்கு வராவிட்டால்
   இவர்கள் தேவைப்படுவார்களே… so stand by arrangement…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. D. Chandramouli சொல்கிறார்:

  If Rajini is serious about entering politics, why does he try to ride two horses at the same time?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s