1737 % லாபம் … கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவ மனைகளும், மருந்து தயாரிப்பு கம்பெனிகளும்…


இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை, இங்கே பக்கத்திலேயே அறிய நேர்ந்தது. என் நண்பர் ஒருவருக்கு பழக்கமான குடும்பம்.

ஒரு மிகச்சாதாரண கீழ்-மத்தியதர குடும்பம். குடும்பத்தலைவருக்கு
65 வயதிருக்கும். தனியார் கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார்…பென்ஷன் கிடையாது… அவரது சேமிப்புகளையும், பணி ஓய்வு
சமயத்தில் கிடைத்த பணத்தையும் Fixed Deposit -ல் போட்டுவைத்து,
கிடைக்கின்ற வட்டியை வைத்துக் கொண்டு அந்த குடும்பம் ஜீவனம்
நடத்திக் கொண்டிருந்தது.

அவர்கள் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்தார்கள். இரண்டு
வாரங்களுக்கு முன்னால், ஒரு நாள் மாலையில் திடீரென்று அவருக்கு
paralytic attack – stroke ஏற்பட்டது…. ஒன்றும் புரியாமல் திகைத்த அவரது
மனைவி அவரை உடனடியாக அருகில் வடபழனியில் உள்ள புகழ்பெற்ற
விஜய’த்தை பெயரில் கொண்ட தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு
சென்றார். உடனடியாக பரிசோதனைகளை மேற்கொண்ட
மருத்துவமனை நிர்வாகம், அவர் பக்கவாதத்தால் (paralytic attack)
பாதிக்கப்பட்டிருப்பதாகவும்,

விலையுயர்ந்த இஞ்செக்ஷன் ஒன்று அவருக்கு தினம் ஒன்றாக 10 நாட்களுக்கு தொடர்ந்து போடப்பட வேண்டுமென்றும், அந்த இஞ்செக்ஷன் ஒன்றின் விலை 90,000 ரூபாய் வரை ஆகலாமென்றும் கூறி இருக்கிறார்கள்…
10 நாளைக்கு 9 லட்சம் ரூபாய் ஆகும்…!

அந்த குடும்பத்திற்கு தெரிந்தவர்கள் யாரோ, பங்களூரில் மருந்துக்கடை
வைத்திருக்கிறார்கள். அவர்கள் மூலமாக வாங்கினால், மருந்தில் விலை
கொஞ்சம் குறைவாக இருக்கும் என்று நினைத்து மருத்துவமனையில்
சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அவரிடம், மருந்து எதுவாக
இருந்தாலும், அந்த மருத்துவமனையிலேயே உள்ள மருந்துக்கடையில்
(pharmacy ) தான் வாங்க வேண்டும் என்றும் வெளியிலிருந்து கொண்டு
வரப்படும் மருந்துகளை அனுமதிக்க இயலாது என்றும் கூறி இருக்கிறது.

10 இஞ்செக்ஷன்களின் விலை ஒன்பது லட்சத்தை எட்டி விடும் என்கிற
நிலையில் – அந்த அளவிற்கு பணம் புரட்ட வசதியில்லாத அந்த குடும்பம் –

தெரிந்தவர்களை எல்லாம் அணுகி இருக்கிறது. அப்போது ஒரு நண்பர்
தனக்கு பழக்கமான இன்னொரு மருத்துவமனையில் 2nd medical
opinion கேட்டிருக்கிறார். அவர்கள், diagnosis சரி தான் என்றும் ஆனால்,
இஞ்செக்ஷன் விலை வெளியே இன்னும் குறைவாக இருக்கலாம்
என்றும் கூறி இருக்கிறது.

அதைத்தொடர்ந்து, அந்த நண்பர் தன் தொடர்புகளின் மூலம் விசாரித்தபோது, அதே இஞ்செக்ஷன் மருந்து 40,000 ரூபாய்க்கு வெளியே மருந்துக்கடைகளில்
கிடைப்பது தெரிந்திருக்கிறது.

அவர் 2nd medical opinion கேட்ட மருத்துவமனை, வெளியிலிருந்து மருந்து வாங்கிக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள சம்மதித்தது. அந்த குடும்பம் உடனடியாக, அந்த நோயாளியை against medical opinon டிஸ்சார்ஜ் செய்து, புதிய மருத்துவமனையில் சேர்த்து, வெளியிலிருந்து 10 இஞ்செக்ஷனை 4 லட்ச ரூபாய்க்கு வாங்கி வந்து, சிகிச்சையை தொடர்ந்திருக்கிறது. மனிதர் ….. பிழைத்து எழுந்து, நடமாடத்துவங்கி விட்டார்….

4 லட்சம் எங்கே…? 9 லட்சம் எங்கே…?

தனியார் மருத்துவ மனைகளுக்கு மனசாட்சி இல்லை… சரி…
ஆனால், இந்த கொள்ளைகளை எல்லாம் தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய /
மாநில அரசுகளுக்கு இல்லையா…? சுகாதாரம் பொது பட்டியலில் வருகிறது…. இந்த மாதிரி விஷயங்களை மத்திய அரசு தான் கவனித்து வருகிறது…

5-6 மாதங்களுக்கு முன்னர், ஹரியானா Gurgaon Fortis மருத்துவ
மனையில் நடந்த ஒரு அட்டூழியத்தைப்பற்றி படித்தபோதே –
இவர்களை எல்லாம் மத்திய அரசு எப்படி அனுமதிக்கிறது என்று கொதிப்பு வந்தது…

அப்போதே இந்த விஷயம் குறித்து விவரமாக எழுத நினைத்தேன்… எப்படியோ விடுபட்டு விட்டது. இப்போது நம்ம ஊரிலும் அதே கதை … கேட்கவே
கொதிக்கிறது…

இந்த Gurgaon Fortis மருத்துவமனையில் 7 வயது சிறுமி ஒருவர்
“டெங்கு”வால் பாதிக்கப்பட்டு சீரியசான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

treatment கொடுப்பதாகச் சொல்லி, கிட்டத்தட்ட இறந்து விட்ட அந்தச்
சிறுமியை 15 நாட்கள் ICU வில், வெண்டிலேட்டரில் வைத்திருந்து கடைசியில்
நம்பிக்கையிழந்த பெற்றோர் தாங்கள் டிஸ்சார்ஜ் செய்துகொள்கிறோம்
என்று சொல்லும் நிலையில், நோயாளி இறந்து விட்டதாக கூறி
பிணத்தை கொடுத்திருக்கிறார்கள்.

15 நாட்கள் கொடுத்த சிகிச்சைக்கு பில் தொகையை கேட்டால் மயக்கம்
வரும்…18 லட்சம்….!

பில்’லில் பட்டியல் போட்டு காட்டி இருக்கிறார்கள்…
15 நாட்களில், அந்த சிறுமிக்காக –
660 ஊசிகள் (disposable syringes)( அதாவது ஒரு நாளைக்கு – 40 )
2700 கையுறைகள் (gloves) பயன்படுத்தப்பட்டதாக கூறி இருக்கிறார்கள்.

அந்த சிறுமியின் தந்தை இதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்…
ஆனால், இதெல்லாம் எந்த ஜென்மத்தில் விசாரணைக்கு வரப்போகிறது…?

கீழே இருக்கும் ஒரு வீடியோ –
தனியார் மருத்துவமனைகள் எந்த அளவிற்கு கொள்ளை அடிக்கின்றன …
அதில் மருந்து தயாரிக்கும் கம்பெனிகளும் எப்படி கூட்டணி
வைத்திருக்கின்றன என்பதை விவரமாக விளக்குகிறது.

3 way stop cock ஒன்றை அந்த மருத்துவ மனை –
மருந்து தயாரிக்கும் கம்பெனியிலிருந்து
வாங்கும் விலை -ரூ.5.77/- மட்டுமே.

ஆனால், அதில் அந்த மருந்து கம்பெனி
அச்சடித்து கொடுக்கும் MRP rate – ரூபாய் 106/-
இந்த MRP விலையைத்தான் மருத்துவமனை
நோயாளிகளிடமிருந்து வசூலிக்கிறது.

அதே போல் adrenor என்கிற இஞ்செக்ஷன் மருந்து ஒன்றை
ரூபாய் 14.70 -க்கு வாங்கும் மருத்துவமனைக்கு சாதகமாக
மருந்து கம்பெனி அச்சடித்துக் கொடுக்கும் MRP rate ரூபய் 189.05

மருந்தில் மட்டுமே – 1737 % லாபம் …. கொள்ளை…!!!
இன்ன பிற கொள்ளைகள் தனி…

இதையெல்லாம் தடுத்து நிறுத்த யார் வரப்போகிறார்கள் இந்த நாட்டில்..?
வந்து கிழிக்கப்போகிறார்கள் என்று நினைத்து பதவியில்
அமர்த்தப்பட்டவர்கள் எல்லாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்…?
கொள்ளைகளில் புதிய பங்காளர்கள்…
பார்ட்னர்கள் மாறி இருக்கிறார்கள்.. அவ்வளவு தானே…?

இந்த விஷயத்தில் எழுதுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது..
இடுகை நீண்டு விட்டது.. பின்னர் பின்னூட்டத்தில் சந்திப்போம்.

……….

————————————————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to 1737 % லாபம் … கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவ மனைகளும், மருந்து தயாரிப்பு கம்பெனிகளும்…

 1. Pingback: 1737 % லாபம் … கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவ மனைகளும், மருந்து தயாரிப்பு கம்பெனிகளும்… – TamilBlogs

 2. VS Balajee சொல்கிறார்:

  Thanks God ,some one is there is rise the voice !. Big Scam in Medical /Hospital companies. Only Aim is to Profit. Nothing else.. People should be careful and double check.. From from Scan /test till death loot. Will Modi Govt look at this?

 3. புது வசந்தம் சொல்கிறார்:

  மருத்துவத்துறையில் உள்ள வருமானம் தான் இன்றைய பெற்றோரின் கண்களுக்கு குளிர்ச்சியாக தெரிகிறது. எப்படியாவது பிள்ளையை மருத்துவர் ஆக்கி விட வேண்டும் என்பதே எண்ணம். உலக பொருளதாரத்தில் எந்த நிலை ஏற்பட்டாலும் மருத்துவமும் அதன் சார்ந்த தொழில்களும் பாதிப்பு அடைவதேயில்லை. அவசர நிலைகளில் அவர்கள் சொல்லுவது தான் வேதவாக்கு. அரசாங்கமும் துணை போகிறது. எதற்காக இந்த மருத்துவ காப்பீடு திட்டமெல்லாம் ? மக்களுக்காகவா ? எல்லாம் ஏமாற்று வேலை. பின்னாளில், இந்தியா என்றொரு தேசம் இருந்தது. அங்கு, மக்கள் சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும், மனிதாபிமானத்துடனும் வாழ்ந்தார்கள் என சரித்திரம் படிக்கலாம். (இப்போதே, இந்த சூழ்நிலைதான்).
  பி.கு: நான் பார்த்த வரையில் சில மருத்துவர்கள் ஒய்வுக்கு கூட நேரமில்லாமல் ஓடுகிறார்கள். சிலருக்கு இதனால் குடும்ப வாழ்க்கையும் தொலைந்து போகிறது. ஆனாலும், ஓட்டம் குறையவில்லை. தலைமுறையும் மருத்துவர் ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது ஏனென்றால் கட்டிடம் உள்ளதே…

 4. Ramachandran சொல்கிறார்:

  இங்கு ஏகப்பட்ட மாஃபியா கும்பல்கள் சம்பந்தப்பட்டுள்ளன.
  கார்பரேட் தனியார் மருத்துவ நிறுவனங்கள் ஒரு பக்கம் தனிப்பட்ட முறையில்
  வரும் நோயாளிகளை ஏமாற்றி கொள்ளையடிக்கின்றன.
  இன்னொரு பக்கம் மருத்துவ இன்சுரன்ஸ் நிருவனங்களுடன் சேர்ந்துகொண்டு
  அரசை ஏமாற்றி பொய்த் தகவ்வல்களை கொடுத்து சம்பாதிக்கின்றன.
  இதைத்தவிர வேறோரு கூட்டம் மருந்து தயாரிப்பு கம்பெனிகள்.
  இவை மருத்துவமனைகள், டாக்டர்கள் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் போட்டு கொள்ளை;
  இந்த கொள்ளைகள் எல்லாவற்றிலும் அரசியல்வாதிகளுக்கு, ஆளும் கட்சிக்கு
  பங்கு போய்ச்சேருகிறது. எனவே, அரசுகள் கண்டுகொள்ளாது. நாம் கரடியாக கத்தினாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.
  ஏகப்பட்ட இந்தியன்’கள் வரவேண்டும் இவர்களை ஒழித்துக்கட்ட..

 5. வடிவேலு சொல்கிறார்:

  மேற்கண்ட நபரைப்போல் 2nd opinion கேட்போர் குறைவே. பெரும்பாலோனோர் உடம்பு சரியானால் போதுமென எதையும் அழத் தயாராக இருக்கிறார்கள். இதனால் செத்தாலும் விடாமல், இறந்த உடலுக்கு செய்கைசுவாசம் கொடுத்து இரண்டு மூன்று நாட்கள் இன்டென்சீவ் கேர் பணம் கறந்து விடுகிறார்கள். பெரும்பாலான மருத்துவ மனைகள் டாக்டர்களை ஓவர் சார்ஜ் செய்யவே வற்புறுத்துகின்றன. மருத்துவமனை நிர்வாகம், லக்சுரி அபார்மென்ட் அல்லது ஆடி கார் என எதையாவது டாக்டருக்கு EMI-ல் வாங்கி கொடுத்துவிடும். டாக்டர் மாதாமாதம் டார்கெட் அச்சீவ் செய்யதால் மருத்துவமனை EMI கட்டும், இல்லாவிடில் EMI டாக்டர்தான் கட்டவேண்டும். இப்படி புதுபுது வகையில் டாக்டருக்கு பிரஷர் கொடுத்து நம்மை சுரண்டுகிறார்கள்.

  நம்நாட்டில் 6 கோடிப் பேர் மருத்துவ செலவுகளால் ஏழையாகி இருக்கின்றார்கள். நமது அரசுகள் மருத்துவத்திற்கு செய்யும் செலவே பாகிஸ்தான், பங்களாதேஷ் இலங்கையை விட குறைவு.

  கனடா இங்கிலாந்து போல இந்தியாவிலும் மருத்துவத்தை அரசுமயமாக்கி தனியார் மருத்துவ அமைப்புகளை ஒழித்தாலன்றி இதற்கு தீர்வு கிட்டாது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   வடிவேலு,

   உங்கள் பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நீங்கள் சொல்வது பெரும்பாலும் உண்மை தான்.

   // கனடா இங்கிலாந்து போல இந்தியாவிலும் மருத்துவத்தை அரசுமயமாக்கி
   தனியார் மருத்துவ அமைப்புகளை ஒழித்தாலன்றி இதற்கு தீர்வு கிட்டாது.//

   இத்துடன் க்யூபாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

   இது தான் சரியான தீர்வாக இருக்க முடியும். நாட்டிலுள்ள தனியார் மருத்துவமனைகள்
   அனைத்தையும் அரசுடைமை ஆக்க வேண்டும்.

   என்றாவது இது நடக்குமா…..?
   எந்த அரசியல்வாதி துணிவார்…?
   இந்த மாஃபியா கும்பல்களிடம் “நன்கொடை ” பெறும்
   எந்த கட்சி இதற்கு ஒப்புக்கொள்ளும். ?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. அறிவழகு சொல்கிறார்:

  இதில் பாஜக வை சேர்க்கமுடியாது. ஏனென்றால், அவர்கள் புனிதர்கள். இந்த நாட்டை உய்விக்கவந்த தேவதூதரின் கட்சி.

  அவரோ அல்லது அவரது கட்சியிலுள்ளவர்களோ இந்த கொள்ளைகளுக்கு, அது இந்த மருத்துவ கொள்ளையோ வங்கிகள் கொள்ளையோ அல்லது இனிமேலும் வெளிவரப்போகின்ற பல கொள்ளைகளுக்கோ, துணைபோவார்களா என்ன?

  எல்லாத்துக்கும் இந்த பாலாப்போன காங்கிரஸ் தான் காரணம்.

  பாஜக…? மூச்…! அவர்கள் புனிதர்கள். இல்லையென்றால் தேர்தல்களில் அவர்கள் வெற்றியடைவார்களா?

  இப்போதிருக்கின்ற தேர்தல் கமிஷனும் வோட்டிங் மெஷினும் இருக்கச்ச என்ன கவலை.

  என்ன தான் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவினாலும் 2019 பொதுத்தேர்தலில்…

  ஆம் கர்நாடகாவிலும் மற்ற மாநிலங்களிலும்…

  வோட்டிங் மெஷின் தான் வெற்றியடையப்போகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.