உண்மையிலேயே பாஜக ஜெயித்து விட்டதா…???


இன்று முடிவு வெளிவந்த மூன்று மாநிலங்களில்,
தகுதியுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை –

திரிபுரா – 25.69 லட்சம்

நாகாலாந்து – 11.76 லட்சம்

மேகாலயா – 18.09 லட்சம்

மூன்று மாநிலங்களையும் சேர்த்து மொத்த வாக்காளர்களின்
எண்ணிக்கை – 55.54 லட்சம்.

இதிலும் ஓட்டு போட்ட மக்கள் சுமார் 75 சதவீதம் தான்.

தமிழ்நாட்டின் தகுதியுள்ள மொத்த வாக்காளர்களின்
எண்ணிக்கை – 5.86 கோடி… ( அதாவது 586 லட்சம்…!!!)

ஒரு ஒப்பீட்டுக்காக பார்த்தால் –
இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள 3 மாநிலங்களின்
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டின்
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் –

பத்தில் ஒரு பங்கை விடவும் – குறைவு….!!!!!!!!!

அப்படியும், ஆயிரம் “தில்லுமுல்லு”களுக்கு பிறகும் –

இந்த 3 மாநிலங்களில் ஒன்றில் கூட தனித்து பெரும்பான்மை
பெற முடியாத பாஜக இன்று அகிலத்தையே ஜெயித்து விட்டது போல்
“ஷோ” காட்டுகிறது. டெல்லி தொலைக்காட்சிகள் எல்லாம்
இதையே திரும்ப திரும்ப காட்டுகின்றன….

மக்களிடையே ஒரு மாயத்தோற்றத்தை
உருவாக்க முயற்சிக்கின்றன..

“வாய், வேடம்” இவை தவிர வேறு என்ன இருக்கிறது
இவர்களிடம்…?????????????

.
———————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

27 Responses to உண்மையிலேயே பாஜக ஜெயித்து விட்டதா…???

 1. Mani சொல்கிறார்:

  K.M.sir,

  Beautifully told.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   பாஜக வெற்றி குறித்து மோடிஜி சொல்கிறார் –

   எல்லா வண்ணங்களும் காவியாக மாறி விட்டன… 🙂 🙂

   இதைவிட அப்பட்டமாக அவரால் எப்படிச் சொல்ல முடியும்…
   காசு கொடுத்தோம் – காங்கிரஸ்காரர்கள், திரினமூல்காரர்கள்,
   லோக்கல் கட்சிக்காரர்கள் அத்தனை பேரும் பாஜக-காரர்கள்
   ஆகி விட்டார்கள் என்று…???

 2. Venkat சொல்கிறார்:

  Vayatherichal…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கதாநாயகரின் வேடத்தை பார்த்தா…?
   ஆமாம்… உண்மையாகவே வயத்தெரிச்சல் தான்…

   அதெப்படி என்ன வேடம் போட்டாலும் இவருக்கு
   இத்தனை பொருத்தமாக இருக்கிறது ? 🙂 🙂

  • BVS சொல்கிறார்:

   அய்யா வெங்கட்
   கே.எம்.சார் உண்மையை சொன்னா உங்களுக்கு ஏன்
   வயத்தெரிச்சல் வரணும் ?
   ஆபத்து சார்; ஒடனே எதாவது பண்ணுங்க. வயத்தெரிச்சலை எல்லாம்
   வளர விடாதீங்க. பின்னாடி அல்சர் கேன்சர்’னு வளர்ந்துடும்.

 3. BVS சொல்கிறார்:

  இன்னும் கொஞ்ச நாள் போனால், தேசத்தின் மூவர்ணக்க்கொடியை
  கூட ‘காவி’ ஆக்கி விடுவார்கள். கேட்டால் நாட்டில் எல்லா வர்ணங்களும்
  தானாகவே காவியாகி விட்டன என்று சொன்னாலும் சொல்வார்கள்.

  • Venkat சொல்கிறார்:

   Enna vesham potallum km sir a impress pann mudiyalaye…

   • Venkat சொல்கிறார்:

    Keep your athigaprasangithanam with you. Don’t make fool of people who voted for someone. You are questioning the intelligence of people who participated in the deomocracy with your coloured vision.
    Yes Tamil people have not voted for him. I respect that. Only hope they will rally behind a leader sooner than later.

    When millions of people have faith in a leader there must be a reason. Be humble enough to acknowledge people sentiment. In your own arrogance don’t think all others are idiots.

    Next is Karnataka…

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     வெங்கட்,

     “athigaprasangithanam” – இதை யார் தீர்மானிப்பது…?
     மோடிஜியின் அடிமைகளா..? அல்லது இந்த வலைத்தளத்திற்கு
     வரும் ஆயிரக்கணக்கான வாசகர்களா…? உங்களைப்போன்ற “வெகு சில”
     “சுயமாக சிந்திக்கும் நிலையில் இல்லாத” வர்களைத்தவிர மற்ற வாசகர்கள் அனைவரும் வரவேற்பதால் தான் இந்த தளம் இன்னமும் தொடர்கிறது.

     “Don’t make fool of people who voted for someone.” இந்த நாட்டின் 69 % மக்கள் உங்கள் சிந்தனையை எதிர்த்து ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்பதை நீங்களும், உங்கள் “boss” -உம் மறந்து விடுவது தான் பிரச்சினைகளுக்கான அடிப்படை காரணமே…

     “with your coloured vision ” ஆம்.. இந்த நாடு பல வண்ணங்களுடன்
     செழித்து, ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பது தான் மக்களின் கனவு.
     ஆனால் அத்தனையும் ஒரே “கலர்”ஆக மாற வேண்டும் என்பது உங்கள் எஜமானர்களின் விருப்பம். “பச்சையும்”, “வெள்ளையும்” கூட அவர்களுக்குப் பிடிக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால் அதையும் மாற்றி விடுவார்கள் என்பதும் உண்மையே…

     “don’t think all others are idiots” – நான் யாரையும் அப்படி நினைக்கும்
     வழக்கம் கிடையாது. ஆனால் சிலர் மயக்கம் / அறியாமை /வெறி -யில் மூழ்கி “அடிமை” யாகவே இருக்க விரும்பினால் நானென்ன செய்ய முடியும்
     …?

     “Next is Karnataka…” – பல கிரிமினல் வழக்குகள் காரணமாக சிறைக்கு
     போன ஒருவரை, இன்னமும் பல கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டிருப்பவரை, ஒரு ஜாதி வெறியரை – ஊரே அறிந்த ஊழல்வாதியை – தனது அடுத்த “முக்ய மந்திரி” வேட்பாளர் என்று
     சொல்லிக்கொண்டு ஓட்டு கேட்க நீங்களும் உங்கள் “boss”களும் தான்
     வெட்கப்பட வேண்டும்.

     மோடிஜி மேல் அவ்வளவு நம்பிக்கை இருந்தால், ஒரு கழுதையை
     நிறுத்தினால் கூட ஜெயிக்க வேண்டுமே… ஏன் திருவாளர் எட்டியூரப்பா…?

     கிரிமினல் வழக்கை சந்திக்காத, சுத்தமான ஒரு வேட்பாளரை முன் நிறுத்தி கர்நாடகா தேர்தலை சந்திக்கும் துணிச்சல், தெம்பு, தன்னம்பிக்கை உங்கள் எஜமானர்களுக்கு இல்லாமல் போனது ஏன்..?

     இந்த மாதிரி கேள்விகளை எல்லாம் வேறு எந்த தளத்திலாவது உங்களால் கேட்க முடிகிறதா…? ஆயிரக்கணக்கான வாசகர்களின் நம்பிக்கையை பெற்றுள்ள இந்த தளம் உங்களைப்போல் எத்தனை பேர் வந்தாலும் சந்திக்கும்… பதில் கொடுக்க நான் அவசியமில்லை… வாசக நண்பர்களே கொடுப்பார்கள். அதற்கு பதில் விளக்கம் சொல்ல முடியாமல், கேள்விகளை எழுப்பி விட்டு காணாமல் போகிறவர்கள் தான் இங்கு அதிகம்….!

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     வெங்கட்,

     முதல் பின்னூட்டத்தில் எழுத மறந்து விட்டேன்.

     Next is Karnataka… என்று ஜம்பமாக கூறுகிறீர்களே…

     அண்மையில் இடைத்தேர்தல்கள் முடிந்த “ராஜஸ்தான்”, “மத்திய பிரதேசம்”
     “ஒடிஷா”, “மேற்கு வங்கம்” – இதையெல்லாம் சௌகரியமாக மறந்து விட்டீர்களே எப்படி…?

     – அவமானமாக இருக்கிறதா…?

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

    • Sanmath AK சொல்கிறார்:

     Mr.Venkat,

     Yes, you are right. Millions voted for him, for a reason. That reason is that the desire, hope that he would do something better than the previous regime, who were corrupt and were also arrogantly challenging it. But as the days go on, we could see that the arrogance of this regime is terrifying. Also, the reason people voted for him, is yet to be answered, done, materialized or realized.

 4. Pingback: உண்மையிலேயே பாஜக ஜெயித்து விட்டதா…??? – TamilBlogs

 5. புதியவன் சொல்கிறார்:

  அன்புள்ள கா.மை. சார், இடுகை convincingஆக இல்லை. பாஜக நிழல் இல்லாது இருந்த இந்த மூன்று இடங்களில் அதன் சாயல் படிந்துள்ளதே வெற்றிதான். எந்த வெற்றி பெறும் கட்சியும், அதீதமாக வெற்றியைப் புகழ்ந்துகொள்வதும், தோல்வியுற்ற கட்சி, புள்ளிவிபரக் கணக்கை எடுத்துச் சொல்வதும் வழக்கம்தான். நான் பாஜகவின் இந்த வெற்றியை, தேசியக் கட்சியை நோக்கி இந்த மானிலங்கள் நடைபழகுகின்றன என்ற அளவில் எடுத்துக்கொள்கிறேன். காங்கிரசும் நல்ல வெற்றி அடையவேண்டும் என்றே எண்ணுகிறேன். ராகுல் அவர்கள், மனம் தளரக் கூடாது. எதிர்க்கட்சி என்ற அளவில் அவருக்கு ஏராளமான கடமைகள் இருக்கின்றன. கர்னாடகாவில் நிச்சயம் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது.

  பாஜக சொல்லும், ‘எங்குமே காவி’ என்ற கோஷமும் சகிக்கவில்லை. இது வெற்றி அல்ல என்ற கூற்றும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. பாஜக தாங்கள் சொல்லியவற்றை இன்னும் நிறைவேற்ற ஆரம்பிக்கவில்லை, நிறைய விஷயங்களில் சொன்னது ஒன்று, செய்வது, செய்ய நினைப்பது ஒன்று என்றுதான் இருக்கிறது. ‘நானும் சாப்பிடமாட்டேன் அடுத்தவனையும் சாப்பிட விடமாட்டேன்’ என்று பாஜக சொன்னது, சொன்ன அளவில்தான் இருக்கிறது. நிறைவேற்றும் எண்ணம் கடுகத்தனை அளவும் இல்லை என்பது என் அஸெஸ்மென்ட்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // பாஜக நிழல் இல்லாது இருந்த இந்த மூன்று இடங்களில் அதன் சாயல் படிந்துள்ளதே வெற்றிதான். //

   உங்கள் கோணத்திலிருந்தே பார்த்தாலும் கூட,
   பாஜகவின் சாயல் எப்படி வந்தது … கொஞ்சம் யோசிக்கலாமே…

   காங்கிரஸ் சட்டமன்ற கட்சியை உடைத்து, சில வெற்றி வாய்ப்புள்ள எம்.எல்.ஏ.க்களை
   பாஜகவில் இணைத்துக் கொண்டு,
   அதே போல், திரினமூல் எம்.எல்.ஏ.க்களை காசு கொடுத்து கவர்ந்திழுத்து,
   லோக்கல் கட்சியை உடைத்து,அதற்கு புதிய நாமகரணம் செய்து, அதனுடன் கூட்டணி வைத்து,
   பிரிவினைவாத கட்சியுடன் கூட்டணி சேர்ந்து,
   கிறிஸ்தவ வாக்காளர்கள் நிரம்பிவழியும் இடங்களில் சர்ச்சுகளுக்கு “நன் கொடை” கொடுத்து,
   நாங்கள் வெற்றி பெற்றால் –
   ஃப்ரீயாக விமானத்தில் ஜெருசலம் ட்ரிப் அழைத்துச் செல்கிறோம் என்று அதிகாரபூர்வமாகவே
   வாக்கு கொடுத்து, மாட்டு மாமிசம் என்ன-மனித மாமிசமே சாப்பிட்டாலும் எங்களுக்கு ஆட்சேபணை
   இல்லை என்று வாக்குறுதி கொடுத்து –

   – வந்திருக்கும் சாயல் இது….!!!

   இதில் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் சரி… உங்கள் சந்தோஷத்தை நான் கெடுப்பானேன்… 🙂 🙂 🙂

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    //பாஜகவின் இந்த வெற்றியை, தேசியக் கட்சியை நோக்கி இந்த மானிலங்கள் நடைபழகுகின்றன என்ற அளவில் எடுத்துக்கொள்கிறேன். //

    ஏன்…(மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்சியாக உங்களுக்கு தோன்றவில்லையா…?

    • புதியவன் சொல்கிறார்:

     பின்னூட்டத்தில் நீங்கள் சொல்லியிருக்கும் முக்கியமான பாயின்டுகள், இடுகையிலும் வந்திருந்தால் இன்னும் நேர்த்தியாக, உங்கள் இடுகைக்கான காரணத்தோடு இருந்திருக்கும் கா.மை சார்.

     எனக்கு பாஜகவின் இந்த வெற்றி மகிழ்ச்சிதான். நீங்களும் இந்த வெற்றியைக் கொண்டாடவேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன்.

     பாஜக ஆரம்பித்தது, ‘இந்துத்துவா’ மற்றும் அயோத்தி ராமர் கோவில். இன்று அவர்கள், இந்தியா என்பது பலதரப்பட்ட நம்பிக்கைகள் கொண்ட தேசமாக கடந்த 75 வருடங்களாக மாறிவிட்டது என்று பாஜகவைப் புரிந்துகொள்ள வைத்திருக்கிறது. இது தொடரும் பட்சத்தில், இரண்டு கட்சிகளுக்கும் (பாஜக காங்கிரஸ்), மதத்தை வைத்து அரசியல் செய்யும் வாய்ப்பு குறையும் என்பது என் நம்பிக்கை.

     நான் பாஜகவிடம் எதிர்பார்ப்பது, காங்கிரஸ் போல, ஆளுக்கு ஏத்தமாதிரி ஆடாமல், சிறுபான்மையினர் வாக்குகள் கொத்தாக விழும் என்று இந்தியாவைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களுக்காக வளைந்து கொடுத்து, இந்துக்களை காம்பிரமைஸ் செய்ததுபோலச் செய்யாமல் எல்லோருக்கும் சமமாக நடக்கவேண்டும் என்பதுதான். ‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது’ பாஜகவின் வேலையல்ல. அது நீதிமன்றத் தீர்ப்பை ஒட்டி இருக்குமென்றால், அதனைக் கட்ட முயல்வோருக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ அரசியல் செய்யாமல் இருந்தால் போதும். அதேபோல் உச்ச நீதி மன்றம் ‘காவிரி ஆணையம்’ அமைக்கவேண்டும் என்று சொன்னால், அதனைச் செய்யவேண்டும். அல்லது, எல்லா நதிகளும் ஒரு ஆணையத்தின் அதிகாரத்தில் வரும் என்று செய்யவேண்டும் (‘நாட்டு நன்மைக்கு, 3 பேர் கொண்ட குழு தலைமை தாங்கும் என்று வைக்கலாம், தேர்தல் கமிஷன் போல).

     பாஜக பிரமுகர்களின்/ஆதரவுத் தளங்களின், ‘மாட்டு மாமிசம்’, காதலர் தினம் போன்ற அரசியலை நடு நிலையாக எண்ணும் பெரும்பாலானோர் வெறுப்பார்கள்.

     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் கட்சியா? இது என்ன புது கண்டுபிடிப்பு? அவர்கள், கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா இதனைத் தாண்டி எங்கு இருக்கிறார்கள்? அவர்களுக்கு எதில் தேசியப் பார்வை இருந்திருக்கிறது? மேற்கு வங்கம், கேரளா இதில் ஆட்சிக்கு வருவதற்காக எல்லாவித பல்டியும், எல்லாவித கூட்டு பொரியலும் அவர்கள் அடித்துப் பார்த்துள்ளோமே. (ஆயினும், அந்தக் கட்சியில்-அதாவது கம்யூனிஸ்டுகள்-இடது-வலது-நேர்-பின்பக்கம்- பெரும்பாலானவர்கள் நேர்மையாளர்கள் என்று நான் நம்புகிறேன். உழைக்கும் வர்க்கத்துக்காகப் போராடுபவர்கள் அந்த ஒரு கட்சிதான். அவர்கள் இல்லையென்றால், தொழிலாளர் சங்கங்களேது, ஏழையின் குரல் வெளியில் தெரியும் வாய்ப்பேது?)

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      // பின்னூட்டத்தில் நீங்கள் சொல்லியிருக்கும் முக்கியமான பாயின்டுகள், இடுகையிலும் வந்திருந்தால் இன்னும் நேர்த்தியாக, உங்கள் இடுகைக்கான காரணத்தோடு இருந்திருக்கும் கா.மை சார்.//

      – நான் சொல்லி இருக்கும் காரணங்களை ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனாலும்,

      //எனக்கு பாஜகவின் இந்த வெற்றி மகிழ்ச்சிதான். //

      -என்று முடிக்கிறீர்கள்…. எனவே, எப்படி இருந்தாலும், பாஜக வெற்றி பெற வேண்டும் என்று விரும்பும் உங்களை இதற்கு மேல் நான் எப்படி convince செய்ய முடியும்…?

      இதற்கு மேல் –
      // நீங்களும் இந்த வெற்றியைக் கொண்டாடவேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன்.//
      என்று வேறு எழுதுகிறீர்கள்…

      மன்னிக்கவும்… ஜெயித்தவர் சொல்வது தான் நியாயம் என்கிற கொள்கை எனக்கு ஒத்து வராது. ஜெயித்தாலும், தோற்றாலும் – நியாயம் என்றும் நியாயம் தான்…

      அதே போல், ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது, அதன் கொள்கைகளின் பால், லட்சியங்களின் பால், அந்த கட்சித்தலைவர்களின் குணாதிசயங்களின் பால் மக்கள் கொள்ளும் ஈர்ப்பால் உருவாக வேண்டும்.

      மாறாக – பண ஆசை, பதவி ஆசை காட்டி பிற கட்சிகளை உடைத்து, அவற்றின் ஒரு பகுதியை தன்னுடன் சேர்த்து கொள்வது, CBI, ED ஆகியவற்றை பயன்படுத்தி பயமுறுத்தி சில கட்சிகளை தன் வழிக்கு கொண்டு வருவது, பணக்கார தொழிலதிபர்களுக்கு சலுகைகள் செய்து கொடுத்து தங்களை ஆதரிக்க வைப்பது – போன்ற வழிகளில் ஒரு கட்சி வளர்ந்தால் /வளர்க்கப்பட்டால் –

      அதை மனசாட்சி உள்ளவர்களால், “ஆஹா கட்சி எப்படி வளர்ந்து விட்டது பார்” என்று பாராட்ட முடியாது…. மாறாக இப்படி உருவாகும் ஒரு கட்சியின் மீதும், அதற்கு மூல காரணமாக இருக்கும் தலைவர்களின் மீதும் – வெறுப்பு தான் ஏற்படும்…

      அது தான் என் நிலை…

      அதற்காக, உங்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை. உங்கள் வழி உங்களுக்கு…. அவ்வளவு தான்.

      – வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்

      கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன்…
      இந்த செய்தியை பார்க்கும் வரை காத்திருந்தேனாகில், நான் அவ்வளவு சிரமப்பட்டு பின்னூட்டம் எழுதி இருக்க வேண்டாம்…

      பரவாயில்லை…லேட் ஆனாலும், இப்போது, லேடஸ்டாக வந்திருக்கும் இந்த செய்தியை இங்கே – பகிர்ந்து கொள்கிறேன். கொஞ்சம் கலோக்கியலாக இருந்தாலும், செய்தியில் உண்மை இருக்கிறதே…!!!

      ———————————————————

      காங். கட்சியையே ஆட்டைய போட்டு மாஜி எம்எல்ஏக்களையே வேட்பாளர்களாக்கி வெற்றி தம்பட்டம் அடிக்கும் பாஜக Posted By: Mathi Published: Sunday, March 4, 2018, 15:22

      அகர்தலா: காங்கிரஸ் கட்சியை அப்படியே கபளீகரம் செய்து அக்கட்சியின் மாஜி எம்.எல்.ஏக்களையே வேட்பாளர்களாக நிறுத்தி மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது பாஜக. திரிபுராவில் பாஜகவுக்கு அடிப்படை அமைப்பு பலம் இல்லை. அதனால் என்ன?

      இருக்கிற காங்கிரஸ் கட்சியை அப்படியே கபளீகரம் செய்வது என களமிறங்கியது பாஜக. காங்கிரஸே பாஜகவாக… இது ஒர்க் அவுட் ஆனது. ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் அப்படியே பாஜகவாக விஸ்வரூபமெடுத்தது. சரி வேட்பாளர்களுக்கு என்ன செய்வது?

      சர்வேக்கள் அடிப்படையில் வேட்பாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் 3 சர்வேக்களை நடத்தியது பாஜக. இதன் அடிப்படையில் பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 51 பெயர்கள் இடம்பெற்றிருந்தன. பாஜக வேட்பாளர்களாக மாஜி காங். எம்.எல்.ஏ.க்கள் இவர்களில் 44 பேர் காங்கிரஸ் கட்சியின் மாஜி எம்.எல்.ஏக்கள்.

      காங்கிரஸ் வாக்குகளை தமக்கானதாக மடை மாற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தங்களது வேட்பாளர்களாக்கி ஆஹா வென்றுவிட்டோம் என தம்பட்டம் அடிக்கிறது பாஜக. கட்சியை ஆட்டைய போட்டு ஜெயிச்சதப்பா பாஜகவின் தத்துவார்த்த அரசியல் காலாவதியாகிவிட்டது.

      வாக்கு அரசியலுக்காக பிரிவினைவாதிகள், தேசவிரோதிகள், அடுத்த கட்சியையே கபளீகரம் செய்வது என அத்தனை ஜனநாயக அரசியலை குழிதோண்டி புதைக்கும் யுக்திகளை கையிலெடுத்து வருகிறது பாஜக. இப்படி ஒரு வெற்றியைப் பெற்றுவிட்டு ஈசான மூலையில் அமோகமாக வெற்றி பெற்றுவிட்டோம் என கூசாமல் பச்சை பொய்யை அவிழ்த்து விடுகிறது பாஜக.

      Read more at: https://tamil.oneindia.com/news/india/bjp-fields-ex-cong-mlas-as-candidates-tripura-313244.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss

      ———————————————————————————

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

     • புதியவன் சொல்கிறார்:

      I understand your point.

 6. BVS சொல்கிறார்:

  புதியவன்,

  இந்த மாநிலங்களில் பாஜகவிற்கு அடிப்படையே இல்லை.
  பல கட்சிகளை ஒன்றாகச் சேர்த்து பிசைந்த கதம்ப சாதம் தான் இங்கிருக்கும் பாஜக.
  இவர்களுக்கு பதவியை பிடிக்க வேண்டும் என்பதைத்தவிர வேறு எந்தவித கொள்கைகளும் கிடையாது. ஒருவேளை பாஜக் ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை என்றால், வேறு எந்த கட்சிக்கு வாய்ப்பிருக்கிறதோ, அவர்களுடன் போய்விடுவார்கள் இவர்கள். இங்கே பாஜக பணத்தாசை, பதவியாசை காட்டித்தான் பிற கட்சிகளை தன்னுடன் இணைத்திருக்கிறது. இதில் பெருமை பேச எதுவுமே இல்லை.

 7. Sharron சொல்கிறார்:

  KM SIR Please read Dinamani news. For 2019 Central election Telungana chief minister is tying to form a 3rd party. I think this is a good move.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஷரோன்,

   சந்திரசேகர் ராவ் நம்பகமான ஆசாமி அல்ல… பக்கா சுயநலவாதி.

   1) தன் மகனிடம் தெலங்கானாவை ஒப்படைத்து விட்டு, தான் மத்திய அரசியலுக்கு வர அவர் போடும் திட்டம் இது…

   2) இது பாஜகவுக்கே சாதகமாக முடியும். மூன்றாவது அணி ஏற்பட்டால், பாஜகவுக்கு எதிரான ஓட்டுகள் சிதறும்.

   எனவே இது நல்ல யோசனை இல்லை.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 8. avudaiappannav சொல்கிறார்:

  b j p will win in tamilnadu also …will make block in your face

 9. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  மோடி + அமித் ஷா கூட்டணி வெற்றி .
  வெற்றியை பெற எது வேணுமானாலும் செய்யலாம் .
  Not Kosher என்று சொல்பவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் .
  பதவிக்கு வந்து என்ன செய்யப் போகிறார்கள் ?
  அது முக்கியம் இல்லை – இப்ப நாங்க ஜெயிச்சமா இல்லையா ?
  மக்கள் ஒட்டு போட்டார்களா இல்லையா ?

  இப்படியே போனால் இந்தக் கட்சிக்கு ஒட்டு போடாதவர்கள் – துரோகிகள் !
  Anti Indian !
  இன்னும் சட்டப் புத்தகத்தில் ‘ராஜ துவேஷம் ‘ இருக்கிறது – வழக்கு போட முடியும் .

 10. thiruvengadam thirumalachari சொல்கிறார்:

  Having served in N E for two decades and having some idea of the mindset and machinations Pakistan and Bangladesh and religious influences leading towards secessionist if ideas this is a welcome trend.Now the efforts to be made to make these important border people to feel wanted and integrate them with rest of India and not alienate them any more.Thiruvengadam

 11. tamilmani சொல்கிறார்:

  It is better to have national party ruling in border states to check the infiltration, bringing those people in mainstream so that seccessionist forces are kept at bay. Improving the infrastructure
  also bring confidence among people so that they need not travel to other states of india for job ,education and health. The remoteness of the places is the main cause of alienation of these people

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.