(பகுதி-2) – 1737 % கொள்ளை – செயல்பட்டதால் தூக்கியெறியப்பட்ட அதிகாரி …


ஹரியானா Fortis மருத்துவமனையில் தன் 7 வயது பெண் குழந்தையை
பறி கொடுத்த தந்தை கொடுத்த புகார் – மத்திய சுகாதாரத்துறை
அமைச்சரின் கவனத்திற்கு சென்றிருக்கிறது. ஹரியானா அரசிடம்
இதுகுறித்த “உரிய” விசாரணையை நடத்துமாறு அவர் “உத்திரவு”
போட்டிருக்கிறார்.

தன் பங்குக்கு அவர் எடுத்த நடவடிக்கை அதைவிட தீவிரம்…!!!

மருந்து கம்பெனிகள் இஷ்டம்போல் விலை நிர்ணயிப்பதை கட்டுப்படுத்த
மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் நிறுவனம் – National Pharmaceutical Pricing Authority (NPPA) .

இதன் தலைவராக பணிபுரியும் (சுகாதாரத்துறையை சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி) National Pharmaceutical Pricing Authority (NPPA)
chairman – திரு.பூபேந்திர சிங்.
..

பரிதாபமாக மடிந்து போன 7 வயது பெண்ணின் தந்தை ஜெயந்த் என்பவரின் புகாரின் பேரில் ( சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவ மனை மற்றும் மருந்து கம்பெனிகள் மீது ) கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கினார் பூபேந்திர சிங் என்கிற இந்த அதிகாரி…

சும்மா இருக்குமா மாஃபியா கும்பல்…
மத்திய மந்திரியுடன் பேசி இருக்கிறார்கள்…
“போதிய” அளவு “அழுத்தம்” கொடுத்திருக்கிறார்கள்.

விளைவு – தவறு இழைத்தவர்களின் மீது உடனடி நடவடிக்கை எடுப்பேன் என்று மீடியாக்களுக்கு “உறுதி” அளித்தவர் – தனது உடனடி நடவடிக்கை என்னவென்பதை உடனே காட்டி இருக்கிறார்.

புகாரின் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கத்துணிந்த மருந்து கட்டுப்பாடு அதிகாரி ( chairman, National Pharmaceutical Pricing Authority (NPPA) ) உடனடியாக அந்தப் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டிருக்கிறார்.

மூன்று வருட காலத்திற்கு ( 3 year tenure )என்று நியமிக்கப்பட்டவர்,
அவசரம் அவசரமாக, வேறு யாரும் பதிலுக்கு நியமிக்கப்படாத நிலையிலேயே -பாதியிலேயே – மாற்றப்பட்டிருக்கிறார்.

எதிர்க்கட்சிகள், மீடியாக்கள் – அத்தனையும் இந்த நாட்டில் செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றனவா அல்லது அவையும் இந்த
மாஃபியா கும்பலால் “கவனிக்கப்பட்டு” விட்டனவா – தெரியவில்லை…

கடந்த புதன்கிழமை இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பணி மாற்றத்திற்கு மத்திய கேபினட் அனுமதி கொடுத்திருக்கிறது
என்பதால் – பொறுப்பில் இருப்பவர்கள், இந்த விஷயம் தன் கவனத்திற்கு
வரவில்லை என்று சொல்லி நழுவி விட முடியாது…

“நா காவூங்கா – நா கானே தூங்கா.. ” இன்னும் எத்தனை நாளைக்கு
இந்த வேடம் கலையாமல் இருக்க முடியும்…?

————————————————————————————————-

பின் குறிப்பு –

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் –

இத்தகைய செயல்கள் கண்டுகொள்ளாமல் போகப்படுவது – நாளை நம்மையும் இதே போன்ற பாதிப்புகளுக்கு உட்படுத்தும் என்பது நிச்சயம். எனவே, நமது சுயநலம் கருதியாவது, நாம் ஒவ்வொருவரும் இதை எதிர்த்து நமது கண்டனத்தை வெளிப்படுத்தியே தீர வேண்டும்.

குறைந்த பட்சமாக, இந்த செய்தியை, இந்த இடுகையை – தங்கள் நண்பர்கள்
அனைவருக்கும், facebook, twitter போன்ற சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்லுமாறு நமது விமரிசனம் தள நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

நம்மால் இவர்களையெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது.. என்கிற செய்திக்காவது நாம் அதிகபட்சம் விளம்பரம் கொடுப்போமே …அது கொஞ்சமாவது பொதுக்கருத்து உருவாக உதவும் அல்லவா…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to (பகுதி-2) – 1737 % கொள்ளை – செயல்பட்டதால் தூக்கியெறியப்பட்ட அதிகாரி …

 1. BVS சொல்கிறார்:

  Yes Mr.K.M.
  I welcome your move. It is our duty. I am publishing in my Facebook.
  Shall also give maximum publicity to this news thro’ my circle.

 2. Ramachandran சொல்கிறார்:

  இவர்களை எல்லாம் திருத்தவும் முடியாது; மாற்றவும் முடியாது.
  தேர்தல் வரும்போது எப்படியாவது பேசி, மத உணர்வுகளை கிளப்பிவிட்டு,
  ஜாதி மோதல்களை உருவாக்கி, ஆட்சியை பிடித்து விடுவார்கள்.
  நமக்கு இந்த அர்த்தமில்லாத ஜனநாயகமே வேண்டாம்.

 3. Pingback: (பகுதி-2) – 1737 % கொள்ளை – செயல்பட்டதால் தூக்கியெறியப்பட்ட அதிகாரி … – TamilBlogs

 4. அறிவழகு சொல்கிறார்:

  பிரதமரோ அவர் தம் கட்சியோ என்ன செய்வார்கள். அவர் பாட்டுக்கு
  அவர் உண்டு அவர் தம் தேர்தல் பிர்ச்சாரம், நாடு நாடா பிரயாணம் உண்டு என்று இருக்கிறார். பாவம்.

  மாபாவிகளான காங்கிரஸ் தான் எல்லாத்துக்கும் காரணமாக இருக்க முடியும்.

  ஏனென்றால், பாஜக புனிதர்கள் நிரம்பிய கட்சியல்லவோ…!

  ஒன்னு செய்யலாம்.

  நாம் எல்லாம் மனிதர்களே அல்ல. பாஜக குறிப்பாக தேவ தூதரின் கைப்பாவையாக அவர்கள் என்ன‌ விரும்புகிறார்களோ அதன்படி ஆட்டிவைக்கும் ஜடமாக‌ நம்மை ஆக்கிக்கொண்டால்… ஆக்கிக்கொண்டால் என்ன அப்படித்தான் நடத்துகிறார்கள், குறிப்பாக தமிழர்களை, நல்லது.

  அறிவித்துவிடுவோமா….?

 5. வடிவேலு சொல்கிறார்:

  ஆர்எஸ்எஸ்- துணை அமைப்பான சுவதேஷ் ஜாக்ரன் மன்ச் அமைப்பே இதை கண்டித்துள்ளது. பிரதமர் அலுவலக டிவிட்டரை டாக் செய்து போடப்பட்ட கிண்டல் டிவிட் இது …

  “your key man against pharma lobby”, bringing down cost of stents and knee implants, exposing more than over 1700% profiteering by corporate hospitals and who was working on bringing down price of other medical consumables and devices has been “rewarded” with transfer.”

  வழக்கமாக மோடி அரசுக்கு முட்டு கொடுக்கும் இந்துவ அமைப்புக்களே கழுவி ஊத்தும் அளவுக்கு அரசு போய்கொண்டிருப்பது நாட்டுக்கு நல்லதல்ல. இது மீடியாவில் விவகாரம் ஆகாமல் இருப்பது அதைவிட நல்லதல்ல.

 6. Mani சொல்கிறார்:

  // எதிர்க்கட்சிகள், மீடியாக்கள் – அத்தனையும் இந்த நாட்டில் செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றனவா அல்லது அவையும் இந்த
  மாஃபியா கும்பலால் “கவனிக்கப்பட்டு” விட்டனவா – தெரியவில்லை…//

  தமிழகத்திலேயே தினமும் “மொக்கை” தலைப்புகளில் எல்லாம்
  மணிக்கணக்கில் விவாதம் நடத்தும் செய்தி தொலைக்காட்சிகள்
  இந்த விஷயத்தை எல்லாம் மூடி மறைப்பது அதனால் தானோ ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.