தங்களை தாங்களே கிண்டல் செய்து கொள்ளும் துணிச்சல் உடையவர்கள்…!!!


துக்ளக் ஆசிரியர் சோ, திரு.ரஜினிகாந்த் இருவருக்கும் பொதுவான
ஒரு குணம்…

தங்களைத் தாங்களே கிண்டல் செய்துகொள்வது என்பது அபூர்வமான
ஒரு குணம். அதுவும் தங்கள் தோற்றத்தையே கிண்டல் செய்துகொள்ள
அசாத்தியமான தன்னம்பிக்கை வேண்டும் …!!!

பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள், தங்களது பர்சனாலிடி (தோற்றம்) குறித்த விஷயங்களில் கவனமாக இருப்பார்கள். முடிந்த வரை கவர்ச்சிகரமாக தோற்றமளிப்பதோடு, தங்கள் பலவீனங்களை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்கவும் முயன்று முயற்சி எடுப்பார்கள்.

நான் சென்னையில் இருக்கும், கடந்த 12-13 ஆண்டுகளாக மறைந்த
துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் கலந்து கொண்ட, சென்னையில் நடந்த
பொது நிகழ்ச்சிகள் பலவற்றிலும் நான் நேரில் கலந்து கொண்டிருக்கிறேன்….

அவரது உடையை பற்றி சொல்லவே வேண்டாம். எப்போதுமே அந்த
மிலிடரி க்ரீன் – பேண்ட்,ஷர்ட்…! பல சமயங்களில் நாம்
மறந்திருந்தாலும் கூட, அவரே கிண்டலாக நினைவுபடுத்துவார்…
தனது “முட்டை” கண்கள், மொட்டைத்தலை குறித்து….!!!

அதே போல், ரஜினிகாந்த் கூட தனது வழுக்கைத்தலை, நரைத்த முடி
ஆகியவற்றை மறைத்துக் கொள்ள முயற்சி செய்வதில்லை.
இன்னமும் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் ஒருவர் இப்படிப்பட்ட தோற்றத்துடன் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வது அபூர்வமே.

அதோடு நில்லாமல், தன்னுடைய தலை, தோற்றம் – தனக்குப் போய்
ஐஸ்வரியா ராய் போன்றவர்கள் ஜோடியாக நடிப்பது – குறித்து அவரே
கிண்டலாக கூறிய ஒரு வீடியோவை பார்க்க நேர்ந்தது…

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் ..
கீழே பதிக்கிறேன்….

.
———————————————————————————————————


படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.