ஒரு நல்ல துவக்கம் என்றே தோன்றுகிறது…


நேற்றிரவு, திரு.ரஜினிகாந்த் – எம்.ஜி.ஆர்.அவர்களின் சிலையைத்
திறந்து வைத்து பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசி, தனது
அரசியல் துவக்கத்தை உறுதி செய்திருக்கிறார்….

அவரது உரையில் அநேகமாக எல்லாமே நேர்மறையான செய்திகள் தான் என்பது ஒரு விசேஷம்… ஒரு அரசியல்வாதி, வெறுப்பை கக்காமல், மற்றவர்களைத் திட்டாமல், தன் தரப்பை எடுத்து வைப்பது ஒரு வித்தியாசமான விஷயம் தானே…

– ஜெயலலிதா, கலைஞர் ஆகிய இரண்டு பெரிய தலைவர்களும் செயல்பாட்டில் இல்லாத நிலையில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதை தமிழக மக்கள் அனைவரும் உணர்ந்தாலும்,

எந்த தமிழக அரசியல்வாதியும் அதை இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை….

– வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மை என்றும், அந்த வெற்றிடத்தை
நோக்கித்தான் – தான் பயணிக்கிறார் என்பதை வெளிப்படையாக கூறும் முதல் அரசியல்வாதி ரஜினிகாந்த் தான்.

– மாணவர்கள் அரசியலை அறிந்திருந்தால் போதும்….
அரசியலுக்குள் வர வேண்டாம் என்று சொன்னது நல்ல விஷயம்.

– அதே போல், ஆங்கிலம் பழகுங்கள் என்று மாணவர்களுக்கு
சொன்னதும் நல்ல விஷயம்….

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா, கலைஞர், மூப்பனார் – என்று
தமிழகத்தின் முக்கியமானவர்கள் ஒவ்வொருவரையும், அவரவருக்கு
என்றிருக்கும் தனித்த திறமையை சொல்லி பாராட்டியதன் மூலமும் –

தான் எந்த விதத்திலும் இவர்கள் யாருக்கும் இணையானவர் அல்ல….
ஆனாலும், அதே சமயம், வளர்ந்து விட்ட டெக்னாலஜி மற்றும்,
நல்ல அறிவாளிகள், அனுபவஸ்தர்களின் துணையை பெற்று –
மக்களுக்காக ஒரு நல்ல ஆட்சியை தன்னால்
வழங்க முடியும் என்றும் கூறுகிறார்…

பொதுவாக ரஜினியின் பேச்சு – நீண்ட நாட்களுக்குப் பிறகு, அரசியலில் அலங்காரங்கள் இல்லாமல், ஒரு மனிதர் உண்மை பேசுகிறார் என்கிற ஒரு திருப்தியை ஏற்படுத்துகிறது.

அதிமுகவில் – தற்போது பதவியில் இருப்பவர்கள் மற்றும் அவர்களைச்
சார்ந்தவர்களைத் தவிர, மற்றவர்களில் பெரும்பாலானவர்கள் ரஜினியின் பக்கம் திரும்ப வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது.

ஜெயலலிதா அவர்களின் முக்கிய பலம் – பெண்களின் ஆதரவு,
தாய்க்குலம் அவர் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, அவர்களது ஓட்டு …. மற்றும் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் ஆதரவு.

இதில்,எம்.ஜி.ஆர். ரசிகர்களின் ஆதரவை – ரஜினியின் பேச்சு பெற்றுத் தரும் என்று தோன்றுகிறது.. பெண்களின் நம்பிக்கையையும் ரஜினியால் பெற முடிந்தால் – அவருடைய அரசியல் பயணம் வெற்றிகரமாகத் துவங்கலாம் என்றும் தோன்றுகிறது.

ஆனால் – அவர் பயணிக்க வேண்டிய தூரம் மிக நீண்டது. பல எதிர்ப்புகளையும் தடங்கல்களையும் அவர் சந்திக்க நேரிடும்.

இன்னமும் பல கொள்கை சார்ந்த விஷயங்களில் மற்றவர்களை அவர் திருப்திப்படுத்தியாக வேண்டும்…எதிரணிகளின் தாக்குதல்களை சமாளித்தாக வேண்டும்…

அவருடன் சேர்ந்து யார் யார் பயணிக்கப் போகிறார்கள் என்பது இன்னமும் தெரியவில்லை. அவரது பலம் என்னவென்பதும் இனிமேல் தான் தெரிய வரும்.

இருந்தாலும், ஒரு நல்ல மனிதர் என்பதாலும்,
தமிழக அரசியலில் நிச்சயம் ஒரு
வித்தியாசமான அனுபவத்தை இவர் தருவார் என்பதாலும் –
இந்த விமரிசனம் வலைத்தளம் திரு.ரஜினிகாந்த் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறது.

என் கருத்தை நான் வெளியிட்டிருக்கிறேன்.
நண்பர்கள் ஏற்கலாம் – மறுக்கலாம்.
அது அவர்களது விருப்பம் / உரிமை…
நண்பர்களின் கருத்துக்களையும் நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். வழக்கம்போல் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம்.

நண்பர்கள் பலர், முக்கியமாக வெளிநாடுகளில் இருப்பவர்கள் – பார்க்க/கேட்க தவறி இருக்கலாம். அவர்களுக்காக –
திரு.ரஜினிகாந்த் அவர்களின் முழு பேச்சும் கீழே –

——————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to ஒரு நல்ல துவக்கம் என்றே தோன்றுகிறது…

 1. Antony சொல்கிறார்:

  //ஒரு நல்ல மனிதர் என்பதாலும்//
  It could have been elaborated a bit. Don’t be offended since my views on him differ from you. I agree that he is a good artist with great charisma. I could not agree on his character. He could not keep his promise given to his own fans during her daughter’s wedding. And also I doubt that he will be under his family’s control like Vijayakanth. The court case on the rental dispute shows that. Also during the Kabali’s release corporates were given more priority than his fan clubs. May be an indication of local Modi..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Antony,

   ஒரு மனிதர் நல்லவரா – கெட்டவரா என்பதை தீர்மானிக்க, நீங்கள் சொல்லும் விஷயங்கள்
   மட்டும் போதுமா…? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Antony சொல்கிறார்:

    Of course not. That is why I asked to elaborate. What good qualities do you find in him? I am just curious to know

    • Antony சொல்கிறார்:

     Of course not. That is why I asked to elaborate. What good qualities do you find in him? I am just curious to know your scale of labelling someone good. And also I believe he has two major drawbacks JJ also had. First one is ‘I’ over ‘WE’abd other one is bad neighborhood.

     • Mani சொல்கிறார்:

      Mr.Antony,

      Comparing to those in today’s politics, Mr.Rajini is far far better person.
      Mr.Antony
      Did u not see his earlier article ?

      Mr.K.M. has already well explained –

      // அனைத்து மதத்தினருக்கும் பொதுவான, அனைத்து மதங்களையும் ஆதரிக்கும், மத உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட -இறையுணர்வுடன் கூடிய ஒரு உணர்வு தான் ஆன்மிக உணர்வு. நம் நாட்டில் மக்களிடையே அவசியம் வளர்க்கப்பட வேண்டிய ஒரு உணர்வு….

      இதைத்தான் ரஜினி ஆன்மிக அரசியல் என்று சொல்கிறார்…

      “கடமையை செய் – பலனை எதிர்பார்க்காதே… அதாவது பலனை எதிர்பார்த்து கடமையை செய்யாதே… உன் கடமை எதுவோ அதைச்செய்… பலன் விளைவது உன் அதிகாரத்திற்குள் இல்லை…”

      உண்மை, உழைப்பு, உயர்வு….

      உண்மையான, நேர்மையான, நாணயமான, வெளிப்படையான – ஜாதி,
      மத சார்பில்லாத ஒரு ஆட்சி / நிர்வாகம்… ”

      – இந்த கொள்கைகள் எனக்கு நிச்சயம் பிடிக்கின்றன…
      நான் இவ்வளவு காலமாக இந்த வலைத்தளத்தில் வலியுறுத்தி எழுதி வருவது கூட ஒரு விதத்தில் இவற்றை எல்லாம் குறித்து தான்…

      ………..
      …..
      லஞ்ச ஊழலுக்கு எதிராக, குடும்ப அரசியலை ஒழிக்க,
      தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைக்க, ….

      …..

      ரஜினி ஒரு நல்ல மனிதர் என்று நான் மனதாற நம்புகிறேன்.
      அவர் தனது முயற்சிகளில் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புவது தமிழ்நாட்டின் நன்மையை முன்னிட்டு… //

      please refer to last month article- https://vimarisanam.wordpress.com/2018/01/02

     • Mani சொல்கிறார்:

      Ofcourse it is for K.M.sir to give his own comments.
      I just said what I felt

     • புதியவன் சொல்கிறார்:

      அந்தோணி – He could not keep his promise given to his own fans during her daughter’s wedding. And also I doubt that he will be under his family’s control like Vijayakanth – அரசியலில் ‘கிச்சன் கேபினட்’ கன்ட்’ரோலில் இல்லாத ஒருவரைக் குறிப்பிடுங்கள் பார்க்கலாம் (திருமணமாகியிருக்க வேண்டும்). ஒவ்வொருவரும் தங்களுக்கென்ற சிறிய குழுவை வைத்துக்கொண்டு அவர்கள் கூறுவதை பெரும்பாலும் ஏற்றுக்கொண்டு செயல்படுவார்கள். அதில் தவறில்லை.

      ரஜினி நல்ல தலைவராக இருந்திருப்பார், 20 வருடங்களுக்கு முன்பு அரசியலில் இறங்கியிருந்தால். இப்போது அவருக்கான கால அவகாசம் இல்லை என்பதுதான் என் எண்ணம். அவர் நல்லவர், வெளிப்படையாகப் பேசுபவர். மற்றபடி, அதற்காக விதண்டாவாதமான கேள்விகளை அவரை நோக்கி எழுப்பக்கூடாது.

      இப்போது ரஜினிகாந்த், அரசியல் பயணத்தில் வெற்றி பெறுவது கடினம். (அதற்கான உடல் நிலை நிச்சயமாக அவருக்கு இல்லை என்றே நான் நினைக்கிறேன்) அதற்குப் பதில், அஜித் ( நல்ல எண்ணம் உடையவர்) போன்ற பாபுலர் ஆட்கள் வரலாம் என்பது என் எண்ணம். இப்போது இருப்பவர்கள் தமிழகத்தின் நன்மைக்கு உகந்தவர்கள் கிடையாது.

 2. Alathur Giri சொல்கிறார்:

  அதிமுகவில் தற்போது பதவியில் இருப்பவர்களுக்கு முதல்வர் உட்பட மேடையில் தவறின்றி பேசக்கூடியவர்கள் ஓரிருவர் மற்றதுகள் நானும் பேசுகிறேன் என்று உளறி விட்டு, வலைத்தளங்களில் மற்றும் ஊடகங்களிலும் அன்றாடம் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாவதை பார்க்கும் யாவருக்கும் ரஜனியின் நேற்றய பேச்சு பிடித்து இருக்கும்,
  நீங்கள் குறிப்பிட்டதை போல அவருடன் சேர்ந்து யார் யார் பயணிக்கப் போகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்,கமலைப்போல முன்னாள் ஐ.ஜி. ஏஜி மவுரியா போன்ற பழந்தின்ற கழுகுகளை உயர்மட்ட குழவில் போடாமல் இருக்க வேண்டும். இன்னும் இன்னும் …

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  நான் / நாம் – சந்தோஷப்பட்டுக்கொள்ளக்கூடிய ஒரு விஷயம் –

  பிரபல அரசியல் -தொலைக்காட்சி விமரிசகர், எழுத்தாளர் –
  திரு. மாலன் அவர்கள், கிட்டத்தட்ட நாம் இந்த வலைத்தளத்தில் எழுதியிருக்கும் அதே கருத்தை பிரதிபலித்திருக்கிறார்..

  திரு.மாலன் அவர்களின் முகநூல் பக்க பதிவிலிருந்து –

  —————————————————

  மாலன் நாராயணன்

  ரஜனியின் உரையில் எனக்குப் பிடித்தமான சில அம்சங்கள்:

  பாசிட்டிவ்வாக இருந்தது. யாரையும் வசைபாடவில்லை. கடந்த பல ஆண்டுகளாக அரசியல் மேடைகளில் விமர்சனங்கள் தனிநபர் தாக்குதலாகத் திரிந்து வெறுப்பரசியல் விதைக்கப்பட்டிருக்கும் சூழலில் இது வரவேற்கத் தக்க மாற்றம் என நான் கருதுகிறேன்.அவர் திட்டவட்டமாக திட்டுகிற அரசியல் வேண்டாம் என் ன்று சொல்கிறார். அநதக் கலாசாரம் பரவட்டும்

  தனக்கு முந்தைய தலைமுறை அரசியல் தலைவர்களை எதற்குப் பாராட்ட வேண்டுமோ அதற்குப் பாராட்டினார். எம்ஜியாரின் பாப்புலாரிட்டி, சத்துணவுத் திட்டம், கருணாநிதியும், ஜெயலலிதாவும் கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, ஆகியவற்றிற்காகப் பாராட்டினார். அதற்காக அவர்கள் தவறே செய்யவில்லை என்று அர்த்தமில்லை என்பதையும் சில குறிப்புகளாலும், ஓரிடத்தில் தன் ‘கபாலி’ சிரிப்பாலும் உணர்த்தினார். அவர்களிடமிருந்த ஆக்கபூர்வமான அம்சங்களை எடுத்துக் கொண்டு நாம் மேலே நகரலாம் என்ற அணுகுமுறை ஆரோக்கியமானது.

  ஆங்கிலத்தின் அவசியத்தை எடுத்துரைத்தது. இது புதிது இல்லை. தமிழகம் நெடுங்க்காலமாகப் பின்பற்றி வரும் நடைமுறைதான். “ஆங்கிலம் வேணாம்னா அந்த இடத்தில் இந்தி வந்து குந்திக்கும்னேன்” என்ற காமராஜின் அணுகுமுறையும், மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த மறுத்த அண்ணாவின் நிலையும் என் நினைவுக்கு வந்து போயிற்று. அதே நேரம் தமிழ் என்பதை உணர்ச்சிகளைக் கூர் தீட்டி வாக்கு அரசியலுக்குக் கருவியாகப் பயன்படுத்தும் அணுகு முறையை அவர் நிராகரித்தார். தமிழ் வாழ்க என்று முழங்கினால் அது வளராது, தமிழன் நிலை உயர்ந்தால் தமிழ் உயரும் என்ற சிந்தனை யதார்த்தமானது. அறிவில், அறிவியலில், பொருளாதாரத்தில், அரசியலில், ஆளுகையில் தமிழர்கள் வலுப்பெறும் போது தமிழின் செல்வாக்கும் மேம்படும்.

  அவர் நிலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த தொனியிலும், அவரது உடல் மொழியிலும் தன்னம்பிக்கை வெளிப்பட்டது. ஆனால் ஆணவம் வெளிப்படவில்லை

  அவர் என்ன சொல்கிறார் என்பதை எவரும் விளங்க்கிக் கொள்ளும் வகையில் இருந்தது பேச்சு. தன் எண்ணங்களில் தெளிவும் நம்பிக்கையும் உள்ளவராலேயே இப்படி மற்றவர் புரிந்து கொள்ளும்படி பேச முடியும். அது இல்லாதவர்கள்தான் புரியாத மொழியில் பூசி மொழுகி மழுப்புவார்கள்.

  நல்ல ஆரம்பம். இறையருள் உங்களுக்குத் துணை நிற்கட்டும்.

  —————————————————–

  – நமது கருத்து, ஒரு பிரபல விமரிசகரின் கருத்தோடு ஒத்துப்போகிறது என்றால் – நமது கருத்துகளில் உள்ள நியாயம் வெளிப்படுகிறது அல்லவா…?

  .
  நன்றி.
  காவிரிமைந்தன்

  ( திரு.மாலன் அவர்களின் link -https://www.facebook.com/maalannarayanan/posts/10155109204206744 )

  • புதியவன் சொல்கிறார்:

   மாலன் அசெஸ்மென்ட் ஓரளவு சரிதான். உங்கள் எண்ணமும் சரிதான். ஆனால், ரஜினியால் ‘செயல் திறன் மிக்கவராக’ இருப்பது மிகவும் கடினம். வயது, உடல் நிலை போன்றவை அவருக்கு எதிராகவே இருக்கிறது. 35-40 வயதில் உள்ளே வந்து, 50ல் ஆட்சி கிடைத்து 15 வருடங்கள் அல்லது 10 வருடங்கள் ஆண்டு ஒரு இம்பாக்ட் கொடுக்கமுடியும். காலம் போன காலத்தில் வருவதால் எந்தப் பயனும் இல்லை. வாக்குகளைச் சிதறடித்து, தமிழகம் இன்னும் மோசமான தலைவர்களை வெற்றிபெறச் செய்வதில் இது கொண்டுபோய் விடும்.

 4. Pingback: ஒரு நல்ல துவக்கம் என்றே தோன்றுகிறது… – TamilBlogs

 5. Woraiyur Pugal சொல்கிறார்:

  நேற்றைய ரஜினி காந்த் அவர்களின் பேச்சில் கட்டாயம் பாரட்டப்பட வேண்டிய 2 விஷயங்கள் முக்கியமானவை..

  துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் அன்றிலிருந்து இன்று வரை சொல்லி வருவதும் இதே தான்…

  சோ சொல்வதையே தான் நேற்று ரஜினி அவர்களும் பேசியுள்ளார்..

  மாணவர்கள் மீதான ரஜினிகாந்தின் பேச்சில் நேர்மை இருக்கிறது. பொறுப்புணர்வு இருக்கிறது.பாசாங்குகளோ, மாய்மாலமோ வேறு உளுத்துப் போன புளித்த அரசியல்வாதித்தனங்களோ இல்லை. உதாரணங்கள் சொல்கிறேன்.

  அண்ணாதுரையின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு எந்த அரசியல் கட்சிக்கும் மாணவர்கள் விஷயத்தில் பொறுப்பு இல்லை. Thanks to anti-Hindi agitation. ஹிந்தி எதிர்ப்பில் மாணவர்களை ஈடுபடுத்தி அதில் குளிர் காயும் அக்கிரமத்தை முதலில் அரங்கேற்றியது அண்ணாதுரை தலைமையிலான திமுக.

  அதற்கு முன்னால், தேசத்தின் சுதந்திரப் போராட்டத்துக்காகக் கூட மாணவர்கள் அழைக்கப்படவில்லை.

  ஹிந்தி எதிர்ப்பில் கலந்து கொண்ட பல மாணவர்கள் எதிர்காலம் இருளடைந்து போனதைக் கண்கூடாக பலர் பார்த்திருக்கலாம்.. சர்வீஸ் கமிஷன் எழுதி அரசாங்க வேலைக்குப் போயிருக்க வேண்டிய பலர் ரோலிங் மில்லில் கம்பி தூக்கியும், மு. ரா. சன்ஸில் துணி கிழித்தும், கஸ்தூரி பவனில் காதில் பென்ஸில் சொருகி ஆர்டர் எடுத்தும், கணேசய்யர் கடைக்கு தண்ணீர் இழுத்தும் நாசமாய்ப் போனது நாகப்பட்டினத்தில் பலருக்கும் தெரியும். ஆனால் அண்ணாதுரை ஆர்பாட்டமாய் ஆட்சியைப் பிடித்தார். அன்றைக்கு வீணாய்ப் போனவர்கள் இன்னமும் வறுமையில் இருக்கிறார்கள்.

  மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று தெளிவாய், வெளிப்படையாய்ச் சொல்கிற முதல் அரசியல்வாதி ரஜினிகாந்த்.

  வளர்மதிகளையும்,கவுசல்யாக்களையும் ஆதரிக்கும் அரசியல்வாதிகள் மத்தியில்,ஜல்லிகட்டு போராட்டம், பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தெருவுக்கு மாணவர்களை அழைத்து மாணவர்கள் வாழ்வில் மண் அள்ளி போடும் அரசியலவாதிகள் மத்தியில் அரசியலை தெரிந்து கொள்ளுங்கள் வர வேண்டாம்,என் கட்சிக்கும் வர வேண்டாம் என பகிரங்கமாக அறிவுத்துள்ள அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  அடுத்தது,

  கல்லூரியில் எல்லார் முன்னாடியும் seminar எடுக்க சொல்லும்போது ஆங்கிலம் சரியா பேசவராததால அந்த மாணவன் மனதிற்க்குள் எவ்வு அவமானங்களை சுமந்துட்டு தப்பும் தவறுமாக ஆங்கிலத்தில் அந்த seminar முடிக்கிறான்னு எனஇங்கே தமிழ் தமிழ் என கதறும் எவனுக்காது தெரியுமா..

  ரஜினியின் பேச்சு அந்த மாணவனின் மனசாட்சி.

  தமிழ் பேசுனா தமிழர் வளராது தமிழன் வளர்ந்தாதான் தமிழ் வளரும் -இது உத்தமமான சத்தியமான வார்த்தை…

  தமிழ்ப் பற்று என்பது ஆங்கிலத்தை நிராகரிப்பது அல்ல. ஆங்கிலம் தெரிந்து கொள்வதால் தமிழனின் புகழ் கொடிகட்டிப் பறக்கும் என்பதற்கு உதாரணமாய் சுந்தர் பிச்சையையும், அப்துல் கலாமையும் அவர் உதாரணமாய்க் காட்டிதும் மிக சரி.!

  தமிழ் நேசர்களாய் நடிக்கும் ஒவ்வொரு அரசியல்வாதியும் தனியார் பள்ளியில் ஆங்கில மீடியத்தில்தான் தன் கொள்ளுப் பேரன் வரை படிக்க வைக்கிறார்கள். இந்த வக்கிரமும், மாய்மாலமும், பாசாங்கும் ரஜினியிடம் இல்லை. நினைப்பதை, செய்வதை ஒளிக்காமல் சொல்கிறார். அதற்காக அடுத்த பாராட்டு.

  .
  மாணவர்கள் நலன் பற்றி மாணவர்கள் மத்தியில் போலித்தனம் ஏதுமில்லாத பெருந்தனமையான எதார்த்தம் அறிந்த பேச்சு…பாராட்ட வேண்டிய பேச்சு..

  நாங்கள் அடிக்கடி சொல்வது இது தான். சோ அவர்கள் மறைந்தாலும் தன் எழுத்தின் மூலம் பலரை தயாரபடுத்தி விட்டே சென்றிருக்கிறார் இது மறுபடி நிரூபணம்,,,,

 6. avudaiappannaq சொல்கிறார்:

  very good article ..thanks

 7. அறிவழகு சொல்கிறார்:

  தங்களுடைய கீழேயுள்ள இடுகையில், இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு விடை தெரியவேணும் என்றுரிந்தீர்கள். அதற்கு விடை இன்னும் தெரியாத நிலையில் ரஜினியை பற்றிய நம் கருதுகோள்களை தள்ளிபோடலாம், பொருத்திருந்து பார்க்கலாம் என்பது என் எண்ணம்.

  ஆன்மிக அரசியல் – நியாயமான சந்தேகங்கள் – தந்தி டிவி பேட்டி …!!!
  Posted on ஜனவரி 7, 2018 by vimarisanam – kavirimainthan

  /// இரண்டே இரண்டு முக்கியமான கேள்விகள் / சந்தேகங்கள் மட்டும் விளக்கம் கிடைக்கப்பெறாமலே பேட்டி முடிவடைந்து விட்டது என்று நான் நினைக்கிறேன்….

  அவை –

  1) ரஜினி அவர்களின் கட்சி – அவரது வயது, ஆரோக்கியம் காரணமாக
  ஒரு கட்டத்தில் – அவரது குடும்பத்தினரின் ஆதிக்கத்திற்குள் போய் விடுமோ என்கிற அச்சம்….

  2) ரஜினி கட்சியை ஆரம்பித்து, மக்களிடம் தனக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக வெற்றியும் பெற்று விட்ட பின்னர் – அதை பாஜக வுடன் இணைத்து விட்டால் என்ன செய்வது ..? – என்கிற அச்சம்…!

  இந்த இரண்டு அச்சங்களும் நியாயமான அச்சங்களே….

  ஆனால் இதற்கு திரு.ரஜினிகாந்த அவர்களைத்தவிர வேறு யாரும் விளக்கம் கொடுக்க முடியாது. கொடுத்தாலும் அது ஏற்புடையதாக இருக்காது. ///

  —————————————————————————–
  கீழே இருப்பது அறிவழகு கூறுவது –
  ……….

  நாமும் யாராவது வரமாட்டார்களா என்று தான் எதிபார்த்துள்ளோம்.

  இவர் தானா அது…!?

  சொல்லத் தெரியவில்லை. இவரின் கடந்த கால வாழ்க்கை நகர்வுகள்…!
  ரொம்ப மெச்சும்படியாக இருக்கிறது என்று சொல்வதற்கில்லை.

  மோடி, மத்திய அரசு பற்றி வாய் திறக்காதது வரை இவர் மீது உள்ள‌ சந்தேகம் நீங்காது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   அறிவழகு,

   நான் இடுகையில் எழுதியிருப்பதுடன் உங்கள் கருத்துகளையும்
   இடைவெளியின்றி சேர்த்து குழப்பி விட்டீர்கள்…

   உங்கள் கருத்தை தனியாக தெளிவாக கூறி இருக்கலாம்.
   நான் இப்போது அதை பிரித்து காட்டி இருக்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • தமிழன் சொல்கிறார்:

   //மோடி, மத்திய அரசு பற்றி வாய் திறக்காதது வரை இவர் மீது உள்ள‌ சந்தேகம் நீங்காது.// – இது என்ன வகையான எதிர்பார்ப்பு என்பது புரியவில்லை. ஒருவர் அரசியலுக்கு வந்தால் நாளொரு கருத்தும் பொழுதொரு எதிர்ப்பும் தெரிவித்துக்கொண்டே இருக்கவேண்டியதில்லை. அந்த சீப் அரசியல் செய்வதற்கு வைகோ, சீமான், ஸ்டாலின், ராமதாஸ், திருமா போன்ற பலர் இருக்கிறார்கள்.

   ரஜினியின் தற்போதைய ஃபோகஸ் தமிழ்’நாடு. நாளை தேர்தல் களத்தில் வந்தால், ரஜினியின் குரல் தனித்துத் தெரிந்துவிடும். ரஜினி தேவையில்லாமல், ஒவ்வொருவரைப் பற்றியும் கருத்து தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை. கான்டிர’வர்ஷியலாக எப்போதும் பேசிக்கொண்டிருக்கவேண்டியதுமில்லை.

   ஜெ. எப்போது பார்த்தாலும் மோடி எதிர்ப்பைக் காண்பித்துக்கொண்டிருக்கவில்லை. ‘நட்பு’ வேறு, ‘தமிழக நலன்’ வேறு என்று அவர் இருந்தார். அதைத்தான் தமிழக மக்கள் ஆதரித்தார்கள். ரஜினி, ‘ஜெ’வைப் பற்றி அதிகமாகக் குறிப்பிடாததற்குக் காரணம், அது கான்டிரவர்ஷியலாகப் போகும் என்றுதான். அதனால்தான் அவர் எம்ஜியார் என்று சொன்னதோடு நிறுத்திக்கொண்டார்.

 8. venkat சொல்கிறார்:

  Like KM sir, I also feel that Rajini will give a good try. Something in me tells me that he will be a good leader. As I have been saying in this forum, a good leader, first and foremost, should give hope to people. There could be few slip-ups in the actions while fulfilling the hopes. As long as the interest is genuine, intentions are good and proceeding in the right direction, we people, should rally behind the leader. We should ignore minor hiccups and accept small failures in stride rather than harping on the leader. Kutram (matume ) parkil Sutram illai!
  It is in the same vein, I support Modiji and often called a Bakt!

 9. அறிவழகு சொல்கிறார்:

  /// எம்ஜிஆருடன் நெருக்கம்.. கதை விடுகிறாரா ரஜினிகாந்த்? – ஒன் இந்தியா

  https://tamil.oneindia.com/news/tamilnadu/rajinikanth-is-not-as-close-as-with-mgr-313441.html ///

  ஓ….! இனி ரஜினி அரசியல்வாதியில்ல…! அதான்…!

  நல்ல மனிதர் என்ற பேர் இருக்கு. யாருடைய நிர்பந்தத்திற்கோ எல்லாத்தையும் கெடுத்துக்கணுமா…?

  ஐயா கா.மை. அவர்களோ அல்லது வேறு யாராவது வரலாறு அறிந்தவர்களோ இதற்கு பதில் சொன்னால் நல்லது.

  ”திரு. எம்ஜிஆர் அவர்களுடனான திருவாளர் ரஜினி அவர்களின் உறவு, நெருக்கம் அவர் குறிப்பிடும் அளவில் தான் இருந்ததா?”

  ஆனால், மேலேயுள்ள ஒன் இந்தியா செய்தியில் குறிப்பிடுவது வேறாக இருக்கிறதே?

  இப்பவே இப்படியா…!

  இது நல்ல ஆரம்பம் தான்…!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   அறிவழகு,

   ஒன் இந்தியா செய்தி தளத்தின் பெருமையும், அது போடும் தலைப்புகளின் “மாண்பும்”
   வழக்கமாக இதையெல்லாம் படிப்பவர்கள் அறிந்தது தான். அதை வைத்து நீங்களும்
   கேள்வி எழுப்புகிறீர்களே..? இந்த தலைப்புக்கு ஆதாரமாக அவர்கள் எதாவது செய்தியை
   தந்திருக்கிறார்களா என்று நீங்களே யோசித்திருக்க வேண்டாமா ? நீங்களும் குழம்பி,
   இங்கே மற்றவர்களையும் குழப்புகிறீர்களே…

   ———————–

   இது தனி…
   நேற்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருப்பதை
   பார்த்தேன். எம்.ஜி.ஆர். ராகவேந்திரா கல்யாண மண்டபம் விஷயத்தில், தன்னிடம் சொல்லி –
   ரஜினிக்கு உதவி செய்ததை உறுதிப்படுத்தி இருக்கிறார். குறைந்த பட்சம் இந்த விஷயத்திலாவது
   ரஜினி பொய் சொல்லவில்லை என்பதை ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்… 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 10. BVS சொல்கிறார்:

  அறிவழகு,

  // ”திரு. எம்ஜிஆர் அவர்களுடனான திருவாளர் ரஜினி அவர்களின் உறவு, நெருக்கம் அவர் குறிப்பிடும் அளவில் தான் இருந்ததா?”

  ஆனால், மேலேயுள்ள ஒன் இந்தியா செய்தியில் குறிப்பிடுவது வேறாக இருக்கிறதே? //

  ஒன் இந்தியா செய்தியில் எம்ஜிஆர் அவர்களுடனான திருவாளர் ரஜினி அவர்களின் உறவு, நெருக்கம் அவர் குறிப்பிடும் அளவில் இல்லை என்பதற்கான ஆதாரங்கள்
  எதையும் குறிப்பிடவில்லையே.
  வெறூம் தலைப்பில் மட்டும் செய்தியை கொடுக்க நினைக்கும் அற்பமான செய்தி தளம் அது.
  ரஜினி சொன்ன தகவல் பொய்யானது என்று நிரூபிக்கும் தகவல் எதையும் அந்த
  செய்தி தளம் தரவில்லையே. உங்களிடம் அத்தைகைய தகவல் எதாவது இருக்கிறதா ? ஒன் இந்தியா வதந்தியை ஆதாரபூர்வமான தகவல் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும் ?

  • தமிழன் சொல்கிறார்:

   ‘ஒன் இந்தியா வதந்தி’ – இது உண்மைதான். அவர்கள் பெரும்பாலும் Paid Media. அவங்க கருத்துக்கணிப்பு ஆப்ஷன்ஸ், வெளியிடும் செய்திகள் எல்லாமே, திமுக சார்பும், ஒரு மதச் சார்பும் இருக்கும். இதை அந்தத் தளத்தைத் தொடர்ந்து படிப்பவர்கள் அறிவார்கள்.

 11. அறிவழகு சொல்கிறார்:

  ஐயா,

  திரு. திருநாவுக்கரசர் சொன்னதை இப்போது தான் படித்தேன். நல்லது.

  /// இன்னமும் பல கொள்கை சார்ந்த விஷயங்களில் மற்றவர்களை அவர் திருப்திப்படுத்தியாக வேண்டும்… ///

  உங்கள் கொள்கை என்ன என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு “அதை நினைத்தால் தான் தலையே சுற்றுகிறது” என்றுருக்கிறார்.

  அருமையான பதில். மேலும்,

  /// அவருடன் சேர்ந்து யார் யார் பயணிக்கப் போகிறார்கள் என்பது இன்னமும் தெரியவில்லை. ///

  என்ற தங்களின் இந்த சந்தேகம் எல்லோருக்கும் இருக்கு. அவருடன் சேருபவர்களின் அரசியல் அபிலாஷைகளை இவர் எங்ஙனம் தடுப்பார்? அந்த ஆளுமை இவரிடம் இருக்கா? முடியுமா?

  பொறுத்திருந்து பார்ப்போம்.

  ஏனென்றால், “நானும் சாப்பிட மாட்டேன், சாப்பிடவிடவும் மாட்டேன்” என்றவர்களை எல்லாம் நாம் பார்த்திருக்கிறோம்.

  திரு. எம் ஜி ஆர் அவர்களின் முதல் இரண்டு வருட ஆட்சி அதாவது முதல் ஆட்சி கலைக்கப்படுவதற்கு முன்பு வரை ஊழல் இல்லாத நல்லாட்சியை கொடுத்தார் என்பார்கள்.

  அதன் பிறகு என்ன நடந்தது என்பது வரலாறு.

  எம் ஜி ஆர் அவர்களோடு தன்னை ஒப்பிட முடியாது என்று ரஜினியே ஒத்துக் கொள்கிறார்.

  என்ன நடக்கும்….?

  ஆசை தான் தெரிகிறது. அது இவரோடது அல்ல எனும்போது எரிச்சல் வருகிறது.

  பார்ப்போம்.

  • தமிழன் சொல்கிறார்:

   அரசியல் கட்சிகளின் கொள்கை என்ன என்று தெரிந்து என்ன ஆகப்போகிறது? எந்த அரசியல் கட்சி என்ன கொள்கை வைத்திருக்கிறது எதை ஃபாலோ செய்கிறது? எல்லா கட்சிக்கும் ‘கொள்ளை’ என்பதைத் தவிர ஒரு கொள்கை அவர்கள் ஃபாலோ செய்ததைக் காட்டுங்கள் (கம்யூனிஸ்ட் தவிர. அவர்கள் பெரும்பாலும் பணம் சுருட்டுவதில்லை)

   நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும்.

   நிறைய பேர் ‘பூம் பூம் பூச்சாண்டி’ காட்டுகிறார்கள். தமிழகத்தில் பாஜகவுக்கு இடமும் கிடையாது. அந்தக் கட்சியோடு தொடர்பு/கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலில் நின்றால் அதோ கதிதான். இது, தமிழகத்தில், மத சம்பந்தமான மோதல்கள், அதுவும் மற்ற மதங்களைச் சார்ந்தவர்கள் initiate செய்து அதன் காரணமாக வந்தால் மட்டுமே ‘தங்கள் பாதுகாப்பு’ என்ற போர்வையில் பாஜகவுக்கு ஆதரவு ஆரம்பிக்கலாம். அதைத் தவிர, பாஜக என்ற கட்சிக்கான தேவை, தமிழகத்தில் இல்லவே இல்லை. கட் அவுட்டைப் பார்த்து பயந்து பயந்து, பேனைப் பெருமாளாக்காதீர்கள்.

   காங்கிரஸ், திமுக மீதான அதீத வெறுப்பாலும், மோடி பெரிய தலைவராக, நாட்டை மிக நன்றாக வழி நடத்தப்போகிறார் என்ற பெரிய எதிர்பார்ப்பு காரணமாகவே அந்தக் கூட்டணிக்கு பாராளுமன்றத் தேர்தலின்போது சுமார் 20% வாக்குகள் கிடைத்தன. பாஜவுக்கு தனியாக 3% வாக்குகள் இருந்தாலே அது மிக அதிகம் (தமிழகத்தில்).

   • அறிவழகு சொல்கிறார்:

    கட்சிகளுக்கு கொள்கை அவசியம் இல்லையா….?

    நல்லது செய்யனும் என்ற எண்ணம்….!

    அது யாருக்கு தெரியும்….!? வெளிப்படுத்தினால் தானே. “தலை சுத்துது” என்பவரை என்ன சொல்ல.

    பாஜக: தமிழகத்திற்கு ஒவ்வாத கட்சி என்று மேலும் மேலும் நிரூபத்துக் கொண்டு இருக்கிறது. அதனால் தான் வேறு வழிகளை ஆலோசிக்கிறது.

    இன்னொரு நடிகர் மாதிரி வெளிப்படையாக சொல்லி விட வேண்டியது தானே. ஏன் இந்த கள்ள மௌனம்.

 12. அறிவழகு சொல்கிறார்:

  திரு.’சோ’ அவர்களும் எண்ணங்களை பற்றியே பேசுகிறார். செயல்கள் அணைத்தும் எண்ணங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன. செயல்களை வைத்து எண்ண ஓட்டத்தை ஒருவாரு யூகிக்கலாமேயொழிய முழுமையாக அறியமுடியாது.

  செயல்களை வைத்து அதன் அடிப்படையிலேயே ஒருவரை நலல்லவர் கெட்டவர் என்று தீர்மானிக்கிறோம்.

  நல்லவர் கெட்டவர் என்று அறியப்பட்டவர் பல அல்லது சில சந்தர்பங்களில் அவரை பற்றிய‌ தவறான கணிப்பாவது ஏன்? ஒருத்தரை முழுமையாக அறியமுடியாமையே.

  எண்ணங்களை இறைவனே அறியவல்லவன்.

  ரஜினி நல்லவர். நானும் நம்புகிறேன்.

  காமை சார் ஒரு சகோதரருக்கு சொன்ன பதிலை திருப்பி இப்படி கேட்கலாம்.

  ”அது மட்டும் போதுமா…!?”

  அவர் கொள்கையென்ன? அவர் கூட யார் யார் சேர்ந்து பயணிக்கப் போறா? அப்படி பயணிப்பவர்களை எங்ஙனம் இவரால் கட்டுப்படுத்த முடியும்?

  ஆர்எஸ்எஸ்/பாஜக சம்பந்தமான இவரின் நிலைப்பாடு என்ன?

  இந்த கேள்வி மிகவும் முக்கியமான கேள்வியாக கருதுகிறேன். ஏனென்றால், காமை சார் இந்த அளவிற்கு வேகப்பட்டதை சமீபத்தில் பார்க்கவில்லை. அது…

  /// இந்த காட்டுமிராண்டிகள் தங்கள் வெறிச்செயல்களால் இந்த நாட்டை சுக்குநூறாக்கி விடுவார்கள். இந்த வெறியர்களை ஆட்சியில் அமர்த்திய மக்கள் இவர்களிடம் இதையா எதிர்பார்த்தார்கள்…? ///

  என்றைக்கு ஆர்எஸ்எஸ்/பாஜக காட்டுமிராண்டிகள், வெறியர்கள் இல்லா நிலையேற்படுகிறதோ அன்று தான் எந்நாடு நிம்மதியான அமைதியான நாடாக வலுப்பெரும்.

  ஆக, கேள்விகள் கேள்விகளுகு மேல் கேள்விகள். விடை கிடைக்கட்டும் பார்க்கலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.