“துக்ளக்” ஆசிரியர் சோ… இவரைப்பற்றி சொன்னது…!!! (பகுதி-4 – யாரைப்பற்றி…. யார்… ? )


திரு.ரஜினிகாந்த், துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களைப்பற்றி
பேசியதை (யாரைப்பற்றி … யார்.. ? )- முதல் பகுதியில் பதிவிட்டிருந்தேன்.

இந்த 4-ஆம் பகுதியில் – just reverse of that – ரஜினிகாந்த் பற்றி
சோ அவர்கள் கூறியது…

கீழே –

————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to “துக்ளக்” ஆசிரியர் சோ… இவரைப்பற்றி சொன்னது…!!! (பகுதி-4 – யாரைப்பற்றி…. யார்… ? )

 1. Pingback: “துக்ளக்” ஆசிரியர் சோ… இவரைப்பற்றி சொன்னது…!!! (பகுதி-4 – யாரைப்பற்றி…. யார்… ? ) – TamilBlogs

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   பெரியார் அவர்களைப்பற்றி ஹெச்.ராஜா உளறியது அவரது திமிரைக் காட்டுகிறது.
   அரசியல்வாதி என்கிற போர்வையில் உலவும் இவரைப் போன்ற பொறுக்கிகளால்
   தமிழகத்தின் அமைதி கெடுகிறது.

   மத்தியில் தங்கள் ஆட்சி..
   மாநிலத்தில் தங்களை மீற முடியாத ஆட்சி என்கிற திமிர் –
   இவரைப்போன்றவர்களை ஆட்டி வைக்கிறது. இந்த பொறுக்கியை தமிழக அரசு
   உடனடியாக கைதுசெய்து, ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்கு / FIR
   பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்…

   டெல்லியில் இந்த பொறுக்கி தமிழக அரசின் கெஸ்ட் ஹவுசுக்குள் போவதை
   டெல்லி தொலைக்காட்சிகளில் பார்த்தேன். இவர் எம்.எல்.ஏ. அல்ல… எம்.பி.யும் அல்ல.
   தமிழக அரசில் எந்த பொறுப்பும் வகிக்கவில்லை. அப்படி இருக்கையில் சம்பந்தமே இல்லாத
   இவரைப்போன்ற ஆசாமிகள் தமிழக அரசின் விடுதியில் எப்படி அனுமதிக்கப்படுகிறார்கள்…?

   திரிபுராவில் கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் அவர்களின் சிலையை இந்த கூட்டம் தகர்த்தபோதே
   நான் மிகவும் வேதனைப்பட்டேன். உலகம் பூராவும் உள்ள தொலைக்காட்சிகள் அந்த காட்சியை காட்டின.
   அவை நம் நாட்டைப்பற்றி என்ன நினைக்கும்…?
   இந்த காட்டுமிராண்டிகள் தங்கள் வெறிச்செயல்களால் இந்த நாட்டை சுக்குநூறாக்கி விடுவார்கள்.
   இந்த வெறியர்களை ஆட்சியில் அமர்த்திய மக்கள் இவர்களிடம் இதையா எதிர்பார்த்தார்கள்…?

   • புதியவன் சொல்கிறார்:

    I was very much surprised by H Raja’s statement (and have been surprised by unwanted continuous remarks from Raja, who is an educated person). ஓவைசி போல பேசினால், தன்னாகவே தான் புகழ் வெளிச்சத்தில் இருக்கலாம் என்று நினைக்கிறாரா?

    பெரியார், சமூகத்திற்காகப் பாடுபட்ட தலைவர். (அவர் பெயரை உபயோகப்படுத்திய திமுக, திக அல்லக்கைகளைப் பற்றி நான் குறிப்பிடவிரும்பவில்லை). தன் இறுதி மூச்சு உள்ளவரைக்கும் தான் நம்பிய, சமூகத்திற்கு இன்றியமையாதவைகள் என்ற கொள்கைகளைப் பரப்பியவர் அவர். அவருடைய கொள்கைகளில் ஏதேனும் குறைகள் கண்டுபிடிக்கலாம், அதைப் பற்றிப் பேசலாம் ஆனால் பெரியாரை அவமதிப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.

    ராஜாவின் ஸ்டேட்மென்ட்ஸ் மிகச் சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது. அவர் பாஜகவுக்காக உழைக்கிறாரா அல்லது, பாஜகவிடம் பணம் வாங்கிக்கொண்டு, அந்தக் கட்சியை அழிக்க முயல்கிறாரா என்பது புரியவில்லை.

    இவர்களைப் பற்றியெல்லாம் (ஹெச் ராஜா போன்ற சமூக பயங்கரவாதிகள்) எழுதுவது வீண் என்றே நான் நினைக்கிறேன்.

   • புதியவன் சொல்கிறார்:

    கா மை சார்…. என் சந்தேகப் புத்தி. இதற்கு வேறு காரணம் ஏதாவது இருக்குமா? தமிழகத்துக்காக ‘காவிரி ஆணையம்’ அமைக்காதது பெரிய விஷயமாகக் கூடாது என்பது போன்று.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     புதியவன்,

     இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
     ஏனென்றால், இது பாஜகவின் tactics-களில் ஒன்று என்பதை அண்மைக் காலமாக நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

     சமாளிக்க முடியாத பிரச்சினைகள் வரும்போதெல்லாம், விஷயத்தை திசை திருப்புவது அவர்களது தந்திரங்களில் ஒன்றாக தெரிகிறது.

     எது எப்படி இருந்தாலும், கர்நாடகா சட்டமன்ற தேர்தல்கள் முடியும்வரை
     மத்திய அரசு எதாவது தந்திரம் செய்து, காவிரி ஆணையம் விவகாரத்தை
     தள்ளிப்போடும் என்றே தோன்றுகிறது. எமகாதகர்கள்….ரூம் போட்டு யோசிக்க அவர்களிடம் பெரிய படையே இருக்கிறது.

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  நல்ல காணொளி. முன்னமேயே கேட்டிருக்கிறேன். சோ சொல்வது உண்மைதான். சிலரது பேச்சுக்கு மட்டும் அப்படி எந்த விதமான நம்பகத் தன்மை வந்து சேர்ந்துவிடுகிறது (மக்களிடம்) என்பதே ஒரு ஆச்சர்யம்தான். யார்தான் எதிர்பார்த்திருக்கமுடியும், ஜெ. அவர்கள், லேடியா அல்லது மோடியா என்று ஒரு நிலைப்பாட்டை எடுத்துப் பிரச்சாரம் செய்தபோது, அனைவரையும் புறம் தள்ளிவிட்டு ஜெ. சொல்வதை மக்கள் முழுமையாக ஏற்று வாக்களிப்பார்கள் என்று. There must be some divine intervention in all these things. நான் நினைப்பது, ரஜினி 10 வருடங்களுக்கு முன்பாகவே வந்திருக்கலாமே என்று… ஒருவேளை அரசியல் களத்திற்கு அவருக்கு இதுதான் தக்க தருணமோ என்னவோ.

 3. அறிவழகு சொல்கிறார்:

  திரு.’சோ’ அவர்களும் எண்ணங்களை பற்றியே பேசுகிறார். செயல்கள் அணைத்தும் எண்ணங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன. செயல்களை வைத்து எண்ண ஓட்டத்தை ஒருவாரு யூகிக்கலாமேயொழிய முழுமையாக அறியமுடியாது.

  செயல்களை வைத்து அதன் அடிப்படையிலேயே ஒருவரை நலல்லவர் கெட்டவர் என்று தீர்மானிக்கிறோம்.

  நல்லவர் கெட்டவர் என்று அறியப்பட்டவர் பல அல்லது சில சந்தர்பங்களில் அவரை பற்றிய‌ தவறான கணிப்பாவது ஏன்? ஒருத்தரை முழுமையாக அறியமுடியாமையே.

  எண்ணங்களை இறைவனே அறியவல்லவன்.

  ரஜினி நல்லவர். நானும் நம்புகிறேன்.

  காமை சார் ஒரு சகோதரருக்கு சொன்ன பதிலை திருப்பி இப்படி கேட்கலாம்.

  ”அது மட்டும் போதுமா…!?”

  அவர் கொள்கையென்ன? அவர் கூட யார் யார் சேர்ந்து பயணிக்கப் போறா? அப்படி பயணிப்பவர்களை எங்ஙனம் இவரால் கட்டுப்படுத்த முடியும்?

  ஆர்எஸ்எஸ்/பாஜக சம்பந்தமான இவரின் நிலைப்பாடு என்ன?

  இந்த கேள்வி மிகவும் முக்கியமான கேள்வியாக கருதுகிறேன். ஏனென்றால், காமை சார் இந்த அளவிற்கு வேகப்பட்டதை சமீபத்தில் பார்க்கவில்லை. அது…

  /// இந்த காட்டுமிராண்டிகள் தங்கள் வெறிச்செயல்களால் இந்த நாட்டை சுக்குநூறாக்கி விடுவார்கள். இந்த வெறியர்களை ஆட்சியில் அமர்த்திய மக்கள் இவர்களிடம் இதையா எதிர்பார்த்தார்கள்…? ///

  என்றைக்கு ஆர்எஸ்எஸ்/பாஜக காட்டுமிராண்டிகள், வெறியர்கள் இல்லா நிலையேற்படுகிறதோ அன்று தான் எந்நாடு நிம்மதியான அமைதியான நாடாக வலுப்பெரும்.

  ஆக, கேள்விகள் கேள்விகளுகு மேல் கேள்விகள். விடை கிடைக்கட்டும் பார்க்கலாம்.

 4. Lala சொல்கிறார்:

  ஜெயலலிதாவை நல்லவராக தெரிந்தவர்களுக்கு ரஜினி நல்லவராக தெரிவதில் ஆச்சரியமில்லை.

  • தமிழன் சொல்கிறார்:

   அப்போ தமிழகத்தின் பெரும்பான்மை ஆதரவு ரஜினிக்கு இருக்குன்னு சொல்றீங்க. பார்க்கலாம்.

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  விடாக்கண்டர் – கொடாக்கண்டர்

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கில்லாடிக்கு கில்லாடி… 🙂 🙂 🙂

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.