மோடிஜியின் நண்பர் அடானியின் மீது – டாக்டர் சு.சுவாமி திடீர் attack …!!! மர்மம் என்னவோ …!!!


“வாராக் கடன்” பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கும் குஜராத் தொழிலதிபரும், மோடிஜியின் நெருங்கிய நண்பருமான திருவாளர் அடானி மீது டாக்டர் சு.சுவாமி கடுமையான தாக்குதலை துவங்கி இருக்கிறார்.

உடனடியாக திருவாளர் அடானியின் மீது உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படவில்லையானால், ( மத்திய அரசு ) சுப்ரீம் கோர்ட்டில்
வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று மோடிஜியையே
பயமுறுத்துகிறார் சு.சுவாமி…!!!

இந்த புதிய ப்ளாக்மெயிலின் பின்னணி என்னவோ….??
மோடிஜியின் நண்பர் மீதே சு.சுவாமி தாக்குதலை துவங்கி இருப்பது
அரசியல் நோக்கர்களால் வித்தியாசமான கோணங்களில் பார்க்கப்படுகிறது.

குஜராத்தில் தனியார் துறைமுகம் அமைக்கவும், நிலக்கரி சுரங்கம்
அமைக்கவும், அந்த துறைமுகத்திற்காகவென்றே தனியே ரெயில்பாதை
அமைத்துக் கொடுக்கவும், நிலக்கரி இறக்குமதிக்காக பல விசேஷ உதவிகளும், சலுகைகளும் – மோடிஜி குஜராத் முதலமைச்சராக இருந்த சுமார் 12 வருட காலகட்டத்தில் திருவாளர் அடானிக்கு கிடைத்தன. ஸ்டேட் பாங்கிலிருந்து சுமார் 60,000 (அறுபதாயிரம்) கோடி ரூபாய் அளவிற்கு அடானியின் நிறுவனங்களுக்கு கடனும் கிடைத்திருந்தது…. இதன் பெரும்பகுதி இன்னமும் திரும்பக்
கொடுக்கப்படாத நிலையிலேயே உள்ளது.

அந்த கால கட்டத்தில், வெளிநாடுகளிலிருந்து நிலக்கரியை இறக்குமதி
செய்யும்போது over-invoice மூலம் பல தகிடுதத்தங்கள் செய்யப்பட்டதாக
புகார்கள் எழுந்தன. மோடிஜி ஆட்சிக்கு வந்தபிறகு, இந்த புகார்கள்
என்ன கதியாயின என்பது தெரியவில்லை…

இப்போது திடீரென்று, டாக்டர் சு.சுவாமி ஒரு ட்விட்டர் மூலம் மோடிஜி அரசுக்கு திகிலை கிளப்பி இருக்கிறார் – அதன் வாசகங்கள் –

………….

“The Biggest NPA trapeze artiste in PSUs is Gautam Adani.
It is time he is made accountable…or
a PIL ( PUBLIC INTEREST LITIGATION… ) is inevitable ”

…………

(அதாவது, மரியாதையாக அடானி மீது நடவடிக்கை எடுக்கிறீர்களா..?
இல்லை பொதுநல வழக்கை சந்திக்கத் தயாராகிறீர்களா…?…!!! )

“காலைச் சுற்றிய பாம்பு, கடிக்காமல் விடாது….” இது ஒரு பழமொழி…!!

“குலைக்கிற நாய் கடிக்காது…” இது இன்னுமொரு பழமொழி…!!!

இரண்டில், டாக்டரின் இந்த மொழி ….. எந்த மொழி…??????

அவர்களுக்குள் எத்தனையோ “டீலிங்”குகள் இருக்கும்…
வெறும் பார்வையாளர்களான –
நமக்கென்ன தெரியும்…
எது சீரியஸ்… எது சும்மா ஜுஜுபி என்று…!!! 🙂 🙂 🙂

———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to மோடிஜியின் நண்பர் அடானியின் மீது – டாக்டர் சு.சுவாமி திடீர் attack …!!! மர்மம் என்னவோ …!!!

 1. Pingback: மோடிஜியின் நண்பர் அடானியின் மீது – டாக்டர் சு.சுவாமி திடீர் attack …!!! மர்மம் என்னவோ …!!! – TamilBlogs

 2. புதியவன் சொல்கிறார்:

  சோனியா காந்தியைப் பற்றி ஏகப்பட்ட ஆரூடங்கள் சொன்னாரே சுவாமி. என்ன நடந்தது? 2ஜி என்னவாயிற்று? சில சமயம், நாகம் எந்தப் பக்கம் திரும்பும் என்று தெரியாது. மற்றபடி சுவாமியின் ட்வீட்களால் யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை. ‘சட்டியில் இல்லை. ஆனால் அகப்பையில் இருப்பதுபோல் காண்பிக்க முயற்சிக்கிறார்’.

  (அதற்கும் அதானிக்கும் சம்பந்தமில்லை. எல்லாத் தொழிலதிபர்களும் வங்கிகளிடமிருந்து ‘வாராக் கடன்’ என்ற தலைப்பிலேயே பல்லாயிரம் கோடி வாங்குமளவு நம் வங்கிகள் செயல்படுகின்றன.எனக்கென்னவோ, Application for ‘Sure Not paying back Loan’ என்ற ஃபார்ம், இந்திய வங்கிகளில் உண்டு என்று நினைக்கிறேன். அதில் Minimum 1000 கோடி ரூபாய் என்றும் இருக்கும். இதில் யாரை நொந்துகொள்வது?)

 3. அறிவழகு சொல்கிறார்:

  மிக விரைவில் தான் விரும்பிய பதவி இல்லை என்றாலும் ஒரு முக்கியமான பதவி கொடுக்கப் படலாம் என்று எதிர்பார்க்கலாமா…?

 4. Ramachandran சொல்கிறார்:

  சிம்பிள் சார். பீரியாடிகலா வர வேண்டிய பேமெண்ட் வந்திருக்காது.
  அடானிய ஞாபகப்படுத்தறாரு.
  – காப்பி டு’ன்னு போடுவோம்ல – அது மாதிரி மோடிஜிக்கு தகவல் போகுது.
  அம்புடுதேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s