மக்களைக் கொல்வதற்காக ஒரு சட்டமா…???


நேற்றிரவு திருச்சி, திருவெறும்பூரில் நிகழ்ந்த ஒரு பரிதாபகரமான சம்பவத்தில் ஒரு கர்ப்பிணிப்பெண் அநியாயமாக கொல்லப்பட்டது குறித்து எழுந்த கொதிப்பு இன்னமும் அடங்கவில்லை….இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு கண்டாலொழிய அடங்காது.

இந்த சம்பவம் குறித்து, நேற்றிரவே நான் ஒரு இடுகை பதிவு செய்திருந்தேன். அந்த இடுகையை இன்னமும் பார்க்காத நண்பர்களுக்காக கீழே, இடுகையின் கடைசியில் – மீண்டும் பதிவு செய்திருக்கிறேன்.

அந்த இடுகைக்கு வந்த பின்னூட்டத்தில் நண்பர் திரு.செல்வதுரை முத்துக்கனி எழுதியிருந்தவற்றிலிருந்து ஒரு பகுதியை இங்கு தருகிறேன் –

—————————————–

டூ வீலர்களில் ஆக்ஸிடெண்டுகள் பெரும்பாலும் ரோடுகள் மோசமாக
இருப்பதினாலும் மற்றும் ஓட்டுபவர்கள் போக்குவரத்து விதிகளைக்
கடைப்பிடிக்காததினாலுமே ஏற்படுகின்றன. கவனக்குறைவாக வண்டி
ஓட்டுவதினாலேயே அதிகமான ஆக்ஸிடெண்டுகள் நிகழ்கின்றன.

எனவே காரணங்களை ஆராய்ந்து ஆக்ஸிடெண்டுகளைக் குறைக்க
முயலவேண்டுமே தவிர விபத்து நடந்த பின் ஏற்படும் விளைவுகளைக்
காண்பித்து பயமுறுத்தி தேவையில்லானவற்றை பயன்படுத்தச்
சொல்வது அறிவீனம்.

நமது நாட்டில் டூ வீலர் என்பது ஒரு அத்தியாவசியமான தேவை என்று
ஆகிவிட்டது. நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வுமுறையில் தவிர்க்க
முடியாதது. டூ வீலரில் பின் இருக்கையில் பெண்கள் ஒரு பக்கமாக
அமர்ந்து செல்வதும் குழந்தைகளை முன் பக்கம் அமரச்செய்து ஓட்டுவதும் ஆபத்து நிறைந்ததுதான். ஆயினும் நமது வாழ்வின் சூழ்நிலையில் இது மிகத்தேவையானதாக உள்ளது. இதற்கு மாற்று ஏதேனும் உண்டா? இதனைத் தடை செய்ய முடியுமா?

கவனமாகவும் நிதானத்துடனும் போக்குவரத்து விதிமுறைகளை அனுசரித்தும் வண்டி ஓட்டுவதால் மட்டுமே விபத்துகளைத் தடுக்க முடியும்.

நமது நாட்டின் சீதோஷ்ண, சமூகச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு
ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற விதி நீக்கப்பட வேண்டும் என்பதுதான் என் கருத்து.

மற்றபடி ஹெல்மெட் அணிவது விபத்து நடக்கும்போது நம்மைப் பாதுகாக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

சட்டம் போட்டுத்தான் இதனை அனுசரிக்கச் செய்ய வேண்டும் என்பதில்லை. இந்த விதியினால் சம்பந்தம் இல்லதவர்கள் பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை.

——————————————————

ஹெல்மட் அணிவது என்கிற விதியை கட்டாயம் ( COMPULSORY )
ஆக்குவதை விட்டு விட்டு –

அதை வாகனம் ஓட்டுபவர்களின் விருப்பத்திற்கு ( OPTIONAL )
விட்டு விட வேண்டும்.

—————————————————–
இந்த கருத்தை வலியுறுத்தி –

இதை நோக்கிய, நம்மாலான சிறிய முயற்சியாக – சம்பந்தப்பட்டவர்களுக்கு,
இந்த இடுகையையும், அதன் மீது, வாசக நண்பர்கள் கூறும் கருத்துகளையும் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க எண்ணுகிறேன்…

எனவே, நண்பர்கள், இந்த கோரிக்கையின் மீதான தங்கள் கருத்தை இந்த
இடுகையின் பின்னூட்டமாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

—————————————————————

நேற்றிரவு இங்கு பதிவு செய்யப்பட்ட இடுகை கீழே –
—————–

ஏனிந்த கொடுமை – மக்களுக்காக சட்டமா… அல்லது சட்டத்திற்காக
மக்களா…?


எனக்கு மிகவும் பழக்கமான, நான் பல வருடங்கள் வாழ்ந்த இடத்தில்
சில மணி நேரங்களுக்கு முன்பாக நிகழ்ந்துள்ள ஒரு சோகமான சம்பவம்
இது…

கீழேயுள்ள செய்தியை (தொலைக்காட்சியிலும்…) பார்த்தவுடன்
(இரவு 12.00 மணி ), அந்த கொடுமையையும், துக்கத்தையும், கோபத்தையும் – தாங்க முடியாமல் தான் இதை எழுதுகிறேன்..

————————–

தமிழ் ஹிந்து -செய்தி –

வாகன சோதனையில் எட்டி உதைத்த ஆய்வாளர்;
மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணி பலி,
கணவர் படுகாயம்: 3000 பேர் சாலை மறியலால்
ஸ்தம்பித்தது திருச்சி நெடுஞ்சாலை
Published : 07 Mar 2018 22:01 IST
————-

திருவெறும்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்மட் அணியாமல் வந்த
தம்பதிகள் வாகனத்தை காவலர் எட்டி உதைத்ததால் சாலையில் விழுந்த
கர்ப்பிணி பெண் மீது பின்னால் வந்த வேன் மோதி பலியானார்.

கணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 3000
பேர் சாலை மறியல் செய்ததால் திருச்சி தேசிய நெடுஞ்சாலை
ஸ்தம்பித்தது.

இன்று மாலை திருச்சி துவாக்குடி அருகே வாகன சோதனை நடந்து
கொண்டிருந்தது. அப்போது திருச்சி துவாக்குடி ஐயப்பன் நகரை சேர்ந்த
உஷா மற்றும் ராஜா தம்பதிகள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
உஷா கர்ப்பிணியாக இருந்தார். அதனால் வாகனத்தை ராஜா மெதுவாக
ஓட்டி வந்துள்ளார்.

அப்போது திருச்சி கணேசபுரம் பெல் ரவுண்டானா அருகே போக்குவரத்து
ஆய்வாளர் காமராஜ் மற்றும் ஊர்க்காவல்படையைச் சேர்ந்த சிலர் வாகன
சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ராஜா, உஷா – தம்பதிகள் வந்த
இருசக்கர வாகனத்தை மடக்கியுள்ளனர். ராஜா ஹெல்மட் அணியவில்லை.

இதனால் பயந்துபோன அவர் அதை தவிர்ப்பதற்காக சென்றபோது ஆய்வாளர் காமராஜ் உள்ளிட்ட ஊர்க்காவல் படையினர் விரட்டி பிடிக்க முயன்றுள்ளனர். இதில் காமராஜ் எட்டி உதைத்ததில் ராஜாவின் மோட்டார் பைக் சாலையில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் சாலையில் விழுந்த உஷா மீது பின்னால் வந்த வேன் மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் கீழே கிடந்த ராஜா மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டார்.

எட்டி உதைத்து விபத்தை ஏற்படுத்திய ஊர்க்காவல் படையை சேர்ந்த காவலர்கள், ஆய்வாளர் காமராஜ் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர்.

விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கொந்தளித்து திருச்சி தஞ்சை
நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 3000க்கும் மேற்பட்ட
பொதுமக்கள் சாலை மறியலால் பல மணி நேரமாக போக்குவரத்து
ஸ்தம்பித்திருக்கிறது….

———————————————————————————

எப்பேற்பட்ட கொடுமை இது.
5 வயதுச் சிறுமியை கற்பழித்தவன், 8 கொலை பண்ணியவன்,
வங்கிகளை கொள்ளையடித்தவன் எல்லாரும் சமுதாயத்தில் சுதந்திரமாக
உலா வருகையில் – அவர்களை பிடிக்கவோ, சிறையில் அடைக்கவோ
கவலைப்படாத ஒரு அரசு இயந்திரம் –

ஒரு அப்பாவி இளம்பெண், அதுவும் 3 மாத கர்ப்பிணிப்பெண், எந்தவித
தவறும் செய்யாமலே இப்படி அற்பாயுளில் கொடூரமாக நடுவீதியில்
உயிரை விடுக்கூடிய சூழ்நிலையை உண்டுபண்ணி இருக்கிறார்களே – இதற்கு யார் பொறுப்பு…?

வண்டிக்கு இன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் –
ஆர்.சி.புக் கையில் இல்லையென்றால் –
ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லையென்றால் –
ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது நியாயம்…

வண்டி ஓட்டுபவர் ஹெல்மட் அணிந்திருக்க வேண்டும் என்பது அரசாங்க சட்டம்… உண்மை தான். ஆனால், இந்த சட்டம் எதற்காக.. கொண்டு
வரப்பட்டது…?

ஓட்டுபவரின் உயிரைக் காப்பாற்றவா அல்லது எடுக்கவா…?

வண்டியில் பின்சீட்டில் ஒரு பெண்ணையும் உட்காரவைத்து
ஓட்டிச்செல்லும்போது, அதை இன்னொரு வண்டியில் துரத்திக்கொண்டு
வந்து ஓடும்போதே காலால் எட்டி உதைப்பது எவ்வளவு கொடூரம்…?

Highways-ல், ஒரு நெடுஞ்சாலையில் இப்படி செய்தால் வண்டி
தடுமாறி விழும் என்றோ, இடைவெளியில்லாமல் பறந்துகொண்டிருக்கும்
வண்டிகளால், அவர்களுக்கு ஆபத்து நேரிடும் என்றோ உணர முடியாத
அளவிற்கு மனிதாபிமானம் இல்லாமல் போய் விட்டதா…?

ஹெல்மெட் போட வேண்டும் என்கிற விதியை தளர்த்தினால் தான் என்ன…? ஓட்டுபவரின் பாதுகாப்பிற்காக தானே இந்த விதி வலியுறுத்தப்படுகிறது…
வண்டி ஓட்டுபவருக்கு – அவர் உயிரின் மேல் இல்லாத அக்கறையா
அரசுக்கும், காவல்துறைக்கும் வந்து விட்டது…?

ஹெல்மட் அணிவதில் உள்ள சிக்கல்கள், பிரச்சினைகள் அனைவருக்கும் தெரியும்… இருந்தும் இதை இவ்வளவு சீரியசாக வலியுறுத்துவானேன்..?

இந்த சம்பவத்தோடு இனியாவது இந்த அவலம் நிற்கட்டும்.
ஹெல்மட் கட்டாயம் என்கிற விதியை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்…

நீதிமன்ற உத்தரவு தான் அடிப்படை காரணம் என்றால் – இந்த சம்பவத்தையே உதாரணம் காட்டி, நீதிமன்றத்தில் இதற்கு விலக்கு பெற வேண்டும். ஹெல்மட் அணிவதா வேண்டாமா என்பதை ஓட்டுபவர்களே தீர்மானித்துக் கொள்ள விட்டு விட வேண்டும்.

மக்களுக்காகத்தானே சட்டங்கள்….?

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to மக்களைக் கொல்வதற்காக ஒரு சட்டமா…???

 1. புதியவன் சொல்கிறார்:

  //ஹெல்மட் அணிவதா வேண்டாமா என்பதை ஓட்டுபவர்களே தீர்மானித்துக் கொள்ள விட்டு விட வேண்டும்.// – இது தவறான எண்ணம். ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும். அதுவும் நம் சாலைகள் நிலையில், வாகன ஓட்டிகளின் ஒழுங்கீனமின்மை/கண்டவர்களெல்லாம் லைசன்ஸ் பெறுவது என்ற நிலையில் இந்தச் சட்டம் அவசியத் தேவை. இதில் ‘மக்கள் விருப்பம்’ என்பது அர்த்தமில்லாதது. ‘தற்கொலை’யும் ஒரு மனிதனின் விருப்பம், ‘கருணைக்கொலையும்’ ஒரு மனிதனின் விருப்பம். ‘சட்டம் ‘என்பது மாட்சிமை பொருந்தியது.

  நம் நாட்டில், ‘சட்டம்’ ஒன்று போடப்படுவதே, ஒவ்வொரு துறையும் காசு பார்க்கத்தான். இதனை எப்படி ஒழிப்பது என்றுதான் நாம் யோசிக்கணும். உதாரணமா, யார் வேண்டுமானாலும் போட்டோ அல்லது மூவி கிளிப் எடுத்து குறிப்பிட்ட வெப்சைட்டுக்கு வாட்சப் செய்யலாம் என்ற நிலை வரலாம். நம் மன நிலை கண்டிப்பா மாறணும். இந்த போலிஸ் டீம் (யார் காரணமோ அவங்க) உடனடியா டிஸ்மிஸ் செய்யணும். அப்போதான் நாம் சேவகர்கள் என்ற எண்ணம் இருக்கும். அப்படி டிஸ்மிஸ் செய்தா, ‘ஐயோ பாவம்.. பல்லாயிரம் கோடி திருடன் கார்த்தியை விட்டுவிட்டு இவங்களை டிஸ்மிஸ் பண்றாங்களே’ன்னு நாம முதலைக் கண்ணீர் வடிக்காம இருந்தாப் போதும்.

  இந்த ‘காமராஜ்’, ஊர்க்காவல் படை டீமை துறையிலிருந்து உடனே டிஸ்மிஸ் செய்தால்தான் இவர்களுக்கு புத்தி வரும். ‘இளைதாக முள்மரம் கொல்க’ என்பது இவங்களுக்குத்தான் பொருந்தும்.

 2. தமிழன் சொல்கிறார்:

  இந்தியச் சட்டங்கள் சரியானவை அல்ல. அவைகள் குற்றவாளிகள் தப்புவதற்காக அமைக்கப்பட்டவை (ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்ற கான்சப்ட்). ஏமாந்தவர்களைத் தவிர மற்றவர்கள் அந்தச் சட்டங்களினால் தண்டிக்கப்படுவதில்லை. நியாயமாக யோசித்துப் பாருங்கள் புரியும்.

  மிடில் ஈஸ்டில் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம் ( நடக்கவே நடக்காது. கொஞ்சம்கூட வாய்ப்பு இல்லை. இங்கு பொலிடிக்கல் ரீதியான பிரச்சனைகள் மட்டும்தான் கடுமையாகக் கையாளப்படும்). உடனே காவலர் சிறைக்கு அனுப்பப்படுவார் (சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும்). அதிலும் இந்தச் சம்பவத்தில் ஒருவர் (இருவர்) இறந்துவிட்டார். அதனால், காவலர் வெளியில் வர வாய்ப்பே இல்லை. ஜாமீன் பிசினெஸ் கனவிலும் நினைக்கமுடியாது. அவருக்கு ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கிறது. பாதிக்கப்பட்ட கணவர், ‘சரி இவரை விடுதலை செய்யலாம்’ என்று இரண்டு (அல்லது மூன்று) வருடங்களுக்குப் பிறகு சொல்லலாம். இல்லை, ‘எனக்கு 20 லட்சம் ரூபாய் இறப்புக்கு இழப்பீடாகக் கொடு’ என்று சொல்லி அதனை காவலர் ஒத்துக்கொண்டால், பணம் கொடுத்தபின்பு விடுதலை ஆகமுடியும். இல்லாவிட்டால், மரண தண்டனைதான். இது ஷரியா சட்டம்.

  இதில் எப்படிப்பட்ட நீதி இருக்கிறது என்று பாருங்கள். இதை நாம் பாராட்டக் கற்றுக்கொள்ளவேண்டும்.

  இந்தச் சம்பவத்தில், வண்டியோட்டிய கணவர் செய்தது மாபெரும் தவறு. காவலர் செய்தது கொலை மற்றும் அயோக்கியத்தனம். வண்டியோட்டிய கணவர் சிறையில் 1 வருடமாவது இருக்கவேண்டும் (சட்டத்தை மதிக்காதவனுக்கு எதற்கு அந்த தேசத்தில் வாழ்க்கை). காவலருக்கு சரியான நீதி, மரண தண்டனை. அதுவும் ஒரு வருடத்துக்குள்ளாகவே. ஒவ்வொரு அப்பீலுக்கும் அவர், ‘மனைவியை இழந்த கணவருக்கு’ 10 லட்சம் ரூபாய், காத்திருப்பு நிதியாக வழங்கணும். இதுதான் நியாயமான நீதி வழங்கும் முறை.

  • BVS சொல்கிறார்:

   // இந்தச் சம்பவத்தில், வண்டியோட்டிய கணவர் செய்தது மாபெரும் தவறு. காவலர் செய்தது கொலை மற்றும் அயோக்கியத்தனம். வண்டியோட்டிய கணவர் சிறையில் 1 வருடமாவது இருக்கவேண்டும் //

   Talking thro the Hat.
   This is Sadist point of view.
   You have no concern for those who suffered because of the brutality of the system.
   Instead you are talking in a way in which the Police Officer incharge was speaking.

   • தமிழன் சொல்கிறார்:

    பி.வி.எஸ். நான் எழுதியதில் தவறு எதுவும் நான் காணவில்லை.
    1. ஹெல்மட் போடவேண்டும் என்பது சட்டம்.
    2. ஹெல்மட் இல்லை என்பதால் காவலர் அந்த வாகன ஓட்டியை நிறுத்தச் சொன்னார் (என்றுதான் படித்துப் புரிந்துகொண்டேன்).
    3. தப்பிக்க அவர் வேகமாக வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.
    4. காவலர், ஆத்திரத்தில் துரத்தி, தன் வரம்புக்கு மீறி நடந்துகொண்டு கொலைக்குக் காரணமாகிவிட்டார்.

    சட்டத்தின் பாதுகாவலர், நிறுத்தச் சொன்னால், நிறுத்தவேண்டியது நம் கடமை. அதைச் செய்யாவிடில் தண்டனை.
    காவலர் செய்தது கொலை. அதற்குரிய தண்டனை அவருக்குக் கிட்டவேண்டும்.

    இதை ஏன் நீங்கள் சாடிஸ்ட் மனப்பான்மை என்று நினைக்கிறீர்கள்?

    Brutality of the system – யார் காரணம்? அதைக் கேள்வி கேளுங்கள். சட்டத்தை மாற்றச் சொல்லுங்கள். என் பார்வை, ஹெல்மட் தேவை என்பது. நீங்கள் நினைப்பதைத்தான் நானும் சொல்லவேண்டும் என்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?

 3. Mani சொல்கிறார்:

  நீங்கள் இந்தியாவில், தமிழ்நாட்டில், வசிப்பவரில்லை என்பது தெரிகிறது.
  அதனால் தான் இத்தகைய முட்டாள்தனமான வாதங்களை எல்லாம் செய்கீறீர்கள்.
  லைசென்சு அவசியம் ஏனென்றால் சரியாக வண்டியோட்டத் தெரியாதவரால்
  மற்றவர்களுக்கு ஆபத்து. ஹெல்மெட் போடாதவனால் எவனுக்கு ஆபத்து ?
  ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டவேண்டிய அவசியம் உங்களுக்கு என்றும்
  ஏற்பட்டதில்லையென்றும் தெரிகிறது. இல்லையெனில் அதில் உள்ள அசௌகரியங்களைப்பற்றி ஒன்றும் தெரியாமல் உளர மாட்டீர்கள்.
  தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து முட்டாள்தனமாக கருத்து எழ்தும்
  ஒரு மனிதர் அடுத்தவன் துன்பத்தை எப்படி அறிவார் ?

 4. Pingback: மக்களைக் கொல்வதற்காக ஒரு சட்டமா…??? – TamilBlogs

 5. venkat சொல்கிறார்:

  vimarisanam is behaving no better than any media that craves for sensitive news! there is no doubt that the callous act of that COP is to be condemned and punished for. However, arguing for not mandating helmet is nonsense. Do we know how many lives are saved everyday due to people wearing helmets? I know for sure one case where the live of my friends’s wife was saved by helmet.

  It is foolishness to argue like this.

  Helmet and seat belts ( in case of car ) is a MUST!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   // I know for sure one case where the live of my friends’s wife was saved by helmet. It is foolishness to argue like this. //

   இப்படி எழுதுவதற்கு பெயர் தான் “foolishness” உங்கள் நண்பரின் மனைவி ஹெல்மட் போட வேண்டாம் என்று
   நான் சொன்னேனா…? அல்லது அதை முட்டாள்தனம் என்று நான் சொன்னேனா…?

   வண்டியை சரியாக இயக்காமல் விபத்தில் உங்கள் நண்பர் சிக்கியதை வேண்டுமானாலும் “foolishness” என்று சொல்லலாம். அவர் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாமே… என் நண்பர் அஜாக்கிரதையாக வண்டி ஓட்டுபவர் என்று நீங்களும் என்னிடம் “வாக்குமூலம்” கொடுக்க வேண்டிய அவசியம் நேராமல் இருந்திருக்கும்.

   // Helmet and seat belts ( in case of car ) is a MUST! //

   மீண்டும் மீண்டும் உளரல்…
   ஹெல்மட் வேறு…. சீட் பெல்ட் வேறு..
   ஹெல்மட் அணிவதில் உள்ள சிரமங்கள் எதுவும்
   சீட் பெல்ட் அணிவதில் இல்லை…என்கிற அடிப்படையை கூட
   நான் சொல்ல வேண்டுமா என்ன…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. Raghuraman N சொல்கிறார்:

  Dear KM Sir.

  I understand the pain about the incident, however, relaxing the rule for helmet or seat belt is not the solution. I was saved by using them. I met with an accident along with my family and we were saved just by wearing seat belt. Also helmet visors saved me many times from dust spread by speeding lorries.

  The root cause of the problems seems to be the collection targets for the officials. If you notice these types of chasing people for revenue collection happens only during quarter ends. More so during year end (JAN – MAR).

  I am watching similar scenario in Bangalore also. Here there was a drive to check whether the helmets were having ISI mark also at some locations. Issues of Heat and sweat also similar to Chennai nowadays.

  There should be a punishment system for the wrongdoers – be it public / officials. I do not justify the act of the police in this case – however, we cannot justify that due to heat or other issues, we cannot wear helmet.

  This case should not be viewed with sympathy. That view may be best suited for politicians. It should be viewed from the ‘errand officials’ vs ‘never changing attitude’ of the public.

  If there is a rule, let us follow that. There is no point in arguing that we will not follow the rules and you do not chase me. We still have the feeling that – when we are caught, let us pay something to the official and escape. This should change.

  This is my feeling – may not be agreed by many – but this is the ground reality.
  Regards

 7. venkat சொல்கிறார்:

  KM sir was little carried away by the sensitivity of the news and it happened near his home town. Taking extreme stands and knee jerk reaction is not good for a blog that boasts thousands of readers. After all even good pencil needs rubber!!! vimarisanathuke vimarisanam thevai!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வெங்கட்,

   // KM sir was little carried away by the sensitivity of the news //

   அந்த சென்ஸிடிவிடிக்கு பெயர் தான் “மனிதத்தன்மை” – ஆனால், எப்போதும், “அது” இல்லாத ஒரு தலைவரின் பின்னால் போகிறவர்களுக்கு அதைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

   // a blog that boasts thousands of readers //

   இந்த வலைத்தளத்தைப்பற்றிய உங்கள் மதிப்பீட்டிற்கு நன்றி. ஆனால் அது எப்படி வந்தது என்று கொஞ்சம் யோசியுங்களேன்….என் எழுத்து “எப்போதும், நெஞ்சுக்கு பக்கமாக” இருப்பதால் தான்.

   //vimarisanathuke vimarisanam thevai! //

   அது சரி… ஆனால் அதைச் சொல்ல நீங்கள் தேவையே இல்லை. 🙂
   நானே தான் ஒவ்வொரு இடுகையின் பின்னாலும் வாசகர் கருத்துகளை வேண்டி, விரும்பி, கேட்டுக்கொண்டே இருக்கிறேனே…. 🙂 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இங்கு ” ஹெல்மட் அணிவது கட்டாயம் ” என்கிற சட்டம் அவசியம் என்று கூறி சில நண்பர்கள் பின்னூட்டம் போட்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த கேள்வி / விளக்கம்.

  – சட்டத்திற்கு ஆதரவாக எழுதி இருக்கும் பலர், இந்தியாவில் வசிப்பவர்கள் அல்ல. மேலும் சிலர் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் அல்ல. அநேகமாக எல்லாருமே பெரும்பாலும் கார்களில் பயணம் செய்கிறவர்கள்…

  – தமிழகத்தில் பாமர மக்களிடையே டிவிஎஸ்-50 எந்த அளவிற்கு
  பாப்புலர் – எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருந்தது / இருக்கிறது
  என்பது இவர்களுக்கு தெரியுமோ, தெரியாதோ – எனக்கு தெரியும்.

  – நடுத்தர மற்றும் ஏழை மக்கள் குடும்பத்தோடு, பஸ் வசதி/தொடர்பு
  இல்லாத இடங்களுக்கு செல்ல பயன்படுவது இந்த வாகனம் தான்.
  அவசரத்திற்கு அது உதவுவது போல் வேறு எந்த வாகனமும் உதவுவதில்லை.

  – நான் கடந்த 40 ஆண்டுகளாக டூவீலர் தான் பயன்படுத்துகிறேன்.
  ஆக்சிடெண்ட் ஆக்சிடெண்ட் என்று பயமுறுத்துகிறவர்களுக்கு –
  (கடவுள் கருணையால்) இந்த 40 ஆண்டுகளில் நான் ஒரு விபத்தையும்
  சந்தித்ததில்லை….

  நீங்கள் சந்தித்திருந்தால், எங்கோ அஜாக்கிரதையென்று அர்த்தம்… எனவே, அஜாக்கிரதையை தவிர்க்க முயற்சி செய்வதை விட்டு விட்டு, ஹெல்மட் பின்னால் ஏன் அலைகிறீர்கள்..?

  ஹெல்மட் தலையை காப்பாற்றும்…சரி.
  ஆனால்- கை, கால்களில் அடிபட்டால்,
  எலும்பு முறிந்தால் -எது காப்பாற்றும்..?

  இந்த அனுபவத்தை –
  ஹெல்மட் கட்டாயம் என்கிற சட்டம் வருவதற்கு முன்,
  வந்த பின் என்று இரண்டாக பிரிக்கலாம்.

  இந்த சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து, டூ வீலர் பயன்பாட்டாளர்கள்
  படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. அங்கங்கே, எதிர்பாராத இடங்களில்,
  முக்கியமாக சாலைத்திருப்பங்களின் இருட்டுகளில், ஒளிந்திருந்து –
  திடீரென்று வெளிப்பட்டு, டூ வீலர் பயணிகளை “காவல்காரர்கள்” பிடிப்பது
  கணக்கிலடங்காமல் போய் விட்டது. தாண்டி போகிறவர்களை நோக்கி
  தடியை வீசுவது, கல்லால் அடிப்பது என்று என்னென்னவோ புதிது புதிதான டெக்னிக்’கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

  ( உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் நீங்களெல்லாம்
  முன்னாள் டூவீலர்கள்… இன்னாள் கார்’வலர்கள்…!!! )

  ஹெல்மட்டில் துவங்கி என்னென்னவோ ஆவணங்கள் எல்லாம் கேட்கப்படுகின்றன.

  நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள் –
  நீங்கள் வேண்டுமானால் ஹெல்மட் போடலாம்.. ஆனால் – நீங்கள் உங்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மனைவி, குழந்தைகளை அழைத்து போகும்போது, அவர்களுக்கும் ஹெல்மட் மாட்டி அழைத்துப் போவது நடைமுறை சாத்தியமா…?

  என் பின்னூட்டம் நீண்டுகொண்டே போவதை நான் விரும்பவில்லை…
  இதற்கு மேல் உங்களை கன்வின்ஸ் செய்யவும் எனக்கு விருப்பமில்லை.

  முக்கியமாக ஒரே ஒரு கேள்வி –

  சட்டம் இருந்தால் என்ன – இல்லாவிட்டால் என்ன…?
  நீங்கள் விரும்பினால்,
  நீங்கள் அவசியம் என்று கருதினால் –
  தாராளமாக ஹெல்மட்
  மாட்டிக் கொண்டு பயணம் செய்யுங்களேன் – யார் உங்களை தடுத்தது..?

  யாருமே ஹெல்மட் போடக்கூடாது என்று நான் சொல்கிறேனா –
  அல்லது ஹெல்மட் தேவையில்லாத, அநாவசியமான விஷயம் என்று வாதம் செய்கிறேனா..?

  கட்டாயப்படுத்தாதீர்கள் என்று தானே சொல்கிறேன்.
  அதில் உங்களுக்கென்ன நஷ்டம்…?

  இது தான் பெரும்பாலான படித்தவர்களிடம் இருக்கும்
  ஒரு பொதுவான குணம்… – விதண்டாவாதம்…!!!

  அடுத்தவன் போட்டுக்கொண்டு தான் போக வேண்டும் என்று
  கட்டாயப்படுத்த நீங்கள் யார்…? உங்களுக்கென்ன உரிமை…?

  நீங்கள் அவசியம் என்று கருதினால், மாட்டிக்கொண்டு பயணியுங்கள்…
  அதற்கு உங்களுக்கு சட்டம் ஏன் தேவை…?

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 9. venkat சொல்கிறார்:

  super argument… apply this to all rules that governs people today. you will conclude that there shall be no rules in the land. people will be self responsible and they do what they fee is good for them.
  super o super! we need a new definition for ‘vidandavatham’.

  you have not faced any accidents, so we don’t need any traffic law.
  you have not faced any labor problem, so we don’t need labor law.
  you have been paying income tax correctly, so the country don’t need any IT related law.
  you have not done any crime, so the country don’t need any criminal law.

  one needs maturity to accept vimarisanam! it easy to write ‘vimarisanam’!

 10. BVS சொல்கிறார்:

  Go and Start your OWN,
  VOMIT there whatever you want
  DO BIG BHAJANS of M and A

 11. இந்தியன் சொல்கிறார்:

  BVS, already KM has vomited along with you.

  /you have not faced any accidents, so we don’t need any traffic law.
  you have not faced any labor problem, so we don’t need labor law.
  you have been paying income tax correctly, so the country don’t need any IT related law.
  you have not done any crime, so the country don’t need any criminal law.//

  Can you or KM would answer directly to venkat’s question? NEVER. Because

  இது தான் பெரும்பாலான படித்தவர்களிடம் இருக்கும்
  ஒரு பொதுவான குணம்… – விதண்டாவாதம்…!!! – Self Confession.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதிதாக இங்கே வாதம் (விதண்டா…?) புரிய வந்திருக்கும் “இந்தியன்” -க்கு
   எனது வாழ்த்துகள்…

   ஆனால், இங்கு வாதம் புரிய முனையும் முன்னர், இங்கிருக்கும் பழைய இடுகைகள்
   சிலவற்றையும், நான் முன்னெடுத்துச் செல்லும் கருத்து / போக்கு பற்றியும்
   சிறிது அறிந்துகொண்டு பிறகு வாதத்தில் இறங்கினால் சிறப்பாக இருக்கும்..

   – by the by – நீங்கள் quote செய்திருக்கும் பகுதியில் வெங்கட் எதாவது கேள்வி
   கேட்டிருக்கிறாரா என்ன…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 12. வடிவேலு சொல்கிறார்:

  புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள். புலமைக்கு சர்ச்சை தேவைதான் ஆனால் அது சண்டையாக மாறிவிடக்கூடாது!

 13. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இன்று வெளியாகியிருக்கும் ஒரு தகவல் –
  விதண்டாவாதக்காரர்களுக்கு சமர்ப்பணம்…!!!

  ——————–
  நவம்பர் மாதம் 21-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 10-ம் தேதி வரையிலான
  20 நாட்களில் திருச்சி மாநகரில் உள்ள 14 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில்

  20 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில் ஏறத்தாழ
  36 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,
  அதன்மூலம் ரூ.36 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளனர்.
  இதன்படி, 20 நாட்களில் 36 ஆயிரம் வழக்குகள் என்பது
  நாளொன்றுக்கு ஏறத்தாழ 1,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  —————————-

 14. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  விதண்டாவாதக்காரர்களுக்கு இன்னும் கொஞ்சம் தகவல் –

  அதன் பின்னர் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் என மூன்று மாதங்களில் மேலும் 50 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

  ஆதாரம் – தமிழ் ஹிந்து வலைத்தளம்.

 15. Selvadurai Muthukani சொல்கிறார்:

  “சாலைகள் நிலை, வாகன ஓட்டிகளின் ஒழுங்கீனம்/கண்டவர்களெல்லாம் லைசன்ஸ் பெறுவது என்ற நிலையில் இந்தச் சட்டம் அவசியத் தேவை. இதில் ‘மக்கள் விருப்பம்’ என்பது அர்த்தமில்லாதது. ‘தற்கொலை’யும் ஒரு மனிதனின் விருப்பம், ‘கருணைக்கொலையும்’ ஒரு மனிதனின் விருப்பம். ‘சட்டம் ‘என்பது மாட்சிமை பொருந்தியது.”- புதியவன்
  இந்த நிலைக்குக் காரணமானவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை ஆனால் வேறு வழியின்றி இருசக்கர வாகனங்களை உபயோகிப்பவர்களுக்கு தன் விருப்பமின்றி ஒரு சுமையை (ஹெல்மெட்) தூக்கிக்கொண்டு அலைய வேண்டிய தண்டனையா? இந்த சட்டத்துக்கு மாட்சிமை வேறு!!! விந்தையிலும் விந்தை!! தற்கொலை முயற்சியில் வெற்றி பெற்றால் தண்டனை இல்லை, ஆனால் தோல்வியுற்றால் தண்டனை. இதுவும் விந்தையே!! கருணைக் கொலையையும் சட்டபூர்வமாகும் காலம் தொலைவில் இல்லை. அடுத்தவரின் சுதந்திரத்தில் தலையிடாதவகையில் என்னுடைய சுதந்திரத்தை அனுபவித்துக்கொள்ள எனக்கு உரிமை வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு???

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.