தனது குரு அத்வானிஜிக்கு – மோடிஜி “மரியாதை” செலுத்தும் காட்சி…!!!


இதில் அதிர்ச்சியளிக்க ஒன்றுமில்லை….
நமக்கு பழக்கமான காட்சி தான்…
அமாவாசை சத்யராஜ் செய்யாததா ……!!!

—————————————————————————————————————

பின் சேர்க்கை –
ஏற்கெனவே பார்த்த ஞாபம் …
தேடிக்கொண்டிருந்தேன்… இப்போது தான் இந்த புகைப்படம் கிடைத்தது…

முன்னொரு காலத்தில் இப்படி, மைக் பிடித்ததில்,
துவங்கிய இவர்களது உறவு தான் இன்று…..இப்படியாகி விட்டது…

மாயா … மாயா
எல்லாம் பதவி செய்யும் மாயம் …..!!!

—————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to தனது குரு அத்வானிஜிக்கு – மோடிஜி “மரியாதை” செலுத்தும் காட்சி…!!!

 1. bandhu சொல்கிறார்:

  அற்பன் ..ஐஸ்வர்யம்… என்ற பழமொழி தோன்றுகிறது.

  இது போன்ற பெரிய ஈகோ மனிதர்களால் தோல்வியை தாங்கவே முடியாது. விரைவில் அது நடக்கும்போது இவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை பார்க்க ஆசை.

  • bandhu சொல்கிறார்:

   மோடியின் தவறுகளிலேயே பெரியது காங்கிரஸே பரவாயில்லை என்று நினைக்க வைப்பது தான்!

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    YES … நீங்கள் சொல்வது போல் நிறைய பேர் என்னிடம் கூறுகிறார்கள்….

    • bandhu சொல்கிறார்:

     மக்களை அமைதியாக எந்த தலையீடும் இல்லாமல் வாழ விட்டாலே போதும். நானே முன்னேறிக்கொள்வேன். அரசு என்னவோ செய்துகொள்ளட்டும் (ஊழல் கூட) என்ற எண்ணம் தான் மக்களுக்கு. இதை நன்றாக அறிந்தவர் ஜெயலலிதா. அதனால் தான் எவ்வளவோ ஊழல் குற்றச்சாட்டு இருந்த போதும் வெற்றி பெற முடிந்தது.

     காங்கிரஸ் நல்லது பண்ணவில்லை என்றாலும், என் வாழ்க்கையில் தலையிடவில்லை. இவரோ, கருப்பு பணம் கண்டு பிடிக்கிறேன் என்று என்னை பல நாட்கள் தெருவில் நிற்கவைத்தார். அப்படி ஒன்றும் இவர் ஆட்சியில் ஊழல் இல்லாமல் இல்லை . ஒவ்வொரு வங்கியாக கை விரிக்கும் போதும் ஊழல் செய்தவர் வெளிநாடு பறக்கும் போதும்..

     எந்த விதத்தில் இந்த ஆட்சி மேல் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை!

   • புதியவன் சொல்கிறார்:

    பந்து – உங்கள் கருத்தை வரவேற்கிறேன். நேர்மையா சொல்லணும்னா, எனக்கு ரிபப்ளிக் தொலைக்காட்சியில் ராகுலை எள்ளி நகையாடும்போது, அர்னாப் கோஸ்வாமியின்மீது மிகுந்த எரிச்சல் வர ஆரம்பித்திருக்கிறது. (காங்கிரஸ் ஊழல் உச்சத்தில் இருந்தபோது, சோனியா, பசி, கேடி பிரதர்ஸ், ராசா/கனிமொழி, கருணானிதி போன்ற பலர்மீது அளவுக்கு அதிகமான கோபம் இருந்தது. இப்போதும் இருக்கிறது. ஆனால், மோடி அவர்களின் தலைமை மீதான கவர்ச்சி, அன்பு குறைய ஆரம்பித்திருக்கிறது. ராகுலின் தவறு என்ன என்று தோன்றுகிறது. ஒரு தலைவரை, ‘சின்னப் பயல்’ என்று எள்ளி நகையாடும் அர்னாப் ‘ஆணவம்’ கோபத்தை வரவழைக்கிறது. தனிப்பட்ட மோடியின் செய்கைகள் – ஜெ.வை கண்டுகொள்ளாதது, நலமில்லாதபோது சந்திக்காதது,, அதிமுகவை ஆட்டிவைப்பது, கருணானிதியைச் சந்தித்தது, தமிழ் நாட்டுக்கு எதிராக எல்லாவற்றிலும் ஸ்டான்ட் எடுப்பது – அவர்மீது மிகுந்த வெறுப்பை உண்டாக்குகிறது. மோடி அவர்கள் நியாயவானாக இருந்தால், ஏன் நடராஜன், சசிகலாவுக்கு ஆறுதல் சொன்னார்? Personally if AIADMK joins BJP in coming election (அதாவது, அரிசி, உமியோடு கூட்டணி), I want to be the FIRST to vote against them, though I always had soft corner towards தைரிய ஆளுமைமிக்க தமிழ்னாட்டின் நலத்தின்மீது கண்ணாக இருந்த ஜெயலலிதா, அதற்கு முன்னர் எம்ஜியார்)

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     புதியவன்,

     மிகச்சிறப்பான பின்னூட்டம்.
     அற்புதமாக உங்கள் மனநிலையை விளக்கி இருக்கிறீர்கள்.
     ( இந்த விஷயத்தில், கிட்டத்தட்ட இதே மனநிலை தான் எனக்கும்….)

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 2. Mani சொல்கிறார்:

  இந்த அமாவாசைக்கு இன்னொரு அமாவாசை
  வராமலா போய் விடும் 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மன்னாதி மன்னன் மாதிரி, அமாவாசைக்கு அமாவாசையா..?
   நன்றாக இருக்கிறதே… 🙂 🙂

 3. Ramachandran சொல்கிறார்:

  அடுத்த அமாவாசை உ.பி.யில் மொட்டை போட்டுக்கொண்டு
  ரெடியாக காத்துக் கொண்டிருக்கிறது 🙂 🙂

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்து, இன்று திரிபுராவில் புதிய ஆட்சி பதவி ஏற்றது. முதல்வராக பிப்லாப் தேப் பதவிஏற்றார்.

  அப்போது, பிரதமர் மோடி மேடைக்கு வந்தபோது, முரளி மனோகர் ஜோஷி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் என ஒவ்வொரு தலைவராக எழுந்து கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். பிரதமர் மோடியும் பதிலுக்கு வணக்கம் செலுத்திச் சென்றார்.

  ஆனால், பிரதமர் மோடி நடந்து வரும்போது, மூத்த தலைவர் அத்வானி வணக்கம் செலுத்திய போது, அவரை கண்டுகொள்ளாத பிரதமர் மோடி, அவருக்கு பதில் வணக்கமும் செலுத்தாமல், அவரை பார்க்கக்கூட மனமில்லாதவாறு கடந்து சென்றார். இதை சற்றும் எதிர்பாராத அத்வானியின் முகம் சுருங்கி, அவமானத்துக்கு உள்ளானார்.

  ( tamil.thehindu.com-ல் தற்போது வெளியாகியுள்ள செய்தி…)

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இடுகையில், புதிதாக, ஒரு பிற்சேர்க்கை இடப்பட்டிருக்கிறது.

 6. Pingback: தனது குரு அத்வானிஜிக்கு – மோடிஜி “மரியாதை” செலுத்தும் காட்சி…!!! – TamilBlogs

 7. வடிவேலு சொல்கிறார்:

  இது அரசியல் பதிவு, ஆனால் விடயத்திலிருந்து நாம் கற்கவேண்டிய பாடம்…

  1. அத்வானி இடத்தில் நாம் இருந்தால்…

  நாளை காற்றடித்து எந்த இலை கோபுரத்தில் போய் உட்காரும் என தெரியாது. ஆகவே நம்மில் கீழே இருப்போரை எள்ளாமல் உசாராக நடத்த வேண்டும்.

  2. மோடி இடத்தில் நாம் இருந்தால்…

  சில சமயங்களில் நாம் குரு என நினைத்து வழிகாட்டியாக நினைப்போர், நாம் அவர்களுக்கு கீழே இருக்கும் வரை உதவுவதும், அவர்களை மிஞ்சினால் நமக்கு கட்டைய கொடுப்பது சகஜம். அவர்களை தாண்டி நம் சொந்த முயற்சியில் மேலே போன பின்பு, நாம் அவர்கள் மீது எழும் வெறுப்பினை ஓபனாக காட்டாமல் இருக்கவேண்டும். இல்லையெனில் ஆணவக்காரன் என்ற அவச்சொல்தான் மிஞ்சும். ஏனெனில் உலகத்திற்கு குரு செய்த நன்மைதான் தெரியும், அவர் போட்ட கட்டை தெரியாது!

 8. வடிவேலு சொல்கிறார்:

  மோடி தனது சேட்டையை முன்பே ஆரம்பித்துவிட்டார். இந்த வீடியோவை பாருங்கள்.

  ஏதோ ஜனாதிபதி புண்ணியத்தில் அத்வானி முன்னாடி வருகிறார். அத்வானி ஏன் ரிடையர்டு ஆகி அக்கடாவென கிடக்காமல் மோடிக்கு தன்னை அவமதிக்க வாய்ப்பு தருகிறார்? மதியாத இடத்தை மிதிப்பானேன்?

 9. தமிழ்அருவி சொல்கிறார்:

  தமிழ்அருவி தானியங்கி திரட்டி தங்கள் பதிவுகளை தானாகவே திரட்டிக்கொள்ளும் திறன் பெற்றது.

  தங்கள் Site/Blog இணைப்பதற்கு தமிழ்அருவி (http://www.tamilaruvi.in) தளத்தில் கணக்கு துவங்க வேண்டும்.

  பிறகு உங்கள் Profile சரியாக நிரப்ப வேண்டும் அவ்வளவுதான்.

  உங்கள் பதிவுகள் 48 மணி நேரத்திற்குள் தமிழ்அருவி தளத்தில் பட்டியலிடப்படும்.

  நன்றி .
  தமிழ்அருவி திரட்டி

 10. thiruvengadam thirumalachari சொல்கிறார்:

  I remember venkatesvaran ICS foreign secretary telling Manisankar who was then IFS and close tiRajeev that he should remember that the same staircase will also bring him down.Thiruvengadam

 11. seshan சொல்கிறார்:

  when indian Parliament/assembly will have this kind of healthy debates instead of boycotting their duty

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   சேஷன்,

   இந்த தலைமுறைத் “தலைவர்”கள் அனைவரும் மறைந்த பின்னர் (“ஒழிந்த பின்னர்” என்று தான் முதலில் எழுதத்தோன்றியது…! ) தோன்றும் அடுத்த batch தலைவர்களிடம் நாம் இதை எதிர்பார்க்கலாம் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

   (இங்கிலாந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு எடுத்துக் கொண்டது இத்தகைய ஒரு நிலையை அடைய… கனடாவிற்கு அவ்வளவு பழைய சரித்திரம் இல்லை… சீக்கிரமே முன்னேறி விட்டது. )

   இன்றில்லா விட்டாலும்…. நாளை நிச்சயம் மாறும்..!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 12. புதியவன் சொல்கிறார்:

  அந்தப் பழைய படத்தை (இரயில்) நான் பார்த்திருக்கிறேன்.

  இப்போது மோடி அவர்கள் நடந்துகொள்ளும் விதம் முகத்தைச் சுளிக்க வைக்கிறது. பாஜகவின் வளர்ச்சிக்கு அத்வானியும் ஒரு காரணம் (ரத யாத்திரை போன்றவை). என்ன, அவருக்கு லக் இல்லை, அடுத்த தேர்தலில் பாஜக தோற்றுவிட்டது. மோடி அவர்கள் செய்வதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. (என் மனசில், அத்வானி, மோடி/குஜராத் சம்பவங்களில் ஏதேனும் அவருடைய கருத்தைச் சொல்லியிருக்கவேண்டும், அதனால்தான் இந்த பழிவாங்குதல் என்று நினைக்கிறேன்). ‘வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு’. மோடி அவர்கள் இதனைப் புரிந்துகொள்ளும் காலம் வரும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   இவரை புதிய இந்தியாவை உருவாக்கப்போகும் “ஹீரோ” என்று நினைத்திருந்தோம்…
   அவரோ, தான் புதுரக “வில்லன்” தான் என்பதை தொடர்ச்சியான தனது செயல்கள் மூலம்
   நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.

   காத்திருப்போம் – இன்னொரு அமாவாசை’க்காக…
   மீண்டும் அமாவாசையா …. என்கிறீர்களா…?
   நம் மக்களின் தகுதிக்கு “அமாவாசை”கள் தான்
   தலைவர்களாக வருவார்கள் என்று தோன்றுகிறது..!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 13. venkat சொல்கிறார்:

  jaudice vision!!! everything is appearing as yellow! this also shows how KM sir is selecting video or news articles. Never have been neutral… a simple google search for video with modi and advani also shows a video where modi calling upon advaji ji at his home as late as november 2017 to wish him on his birthday.

  if you decide a theme and then look for news you will get ONLY those to fit your color.

  Change your color, everything will look different. For a change, try that to my point.

 14. Ramachandran சொல்கிறார்:

  It should be jaundice 🙂

  Apply the same logic to your vision.
  மோடியின் அடிமை என்கிற நோக்கில் பார்த்தால் இந்தெ தளம் அப்படித்தான்
  தெரியும். அந்த கண்ணாடியை தூக்கியெறிந்து விட்டு படியுங்கள். எல்லாம்
  சரியாகவ்த் தெரியும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.