திரு.ஸ்டாலினுக்கு பாதிப்பு ஏற்படுமா…? கமல் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வலை வீசுகிறார் … !!!


முதல் முறையாக, கலைஞர் ஆட்சியையும் குறை கூறுகிறார் திரு.கமல்ஹாசன்…. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்
என்பதற்கு இது இன்னொரு உதாரணம்…!!!

இன்று மதியம் மும்பையில், இந்தியாடுடே தொலைக்காட்சி நிகழ்ச்சி
ஒன்றில் கலந்து கொண்டு பேட்டியளித்த கமல்ஹாசன், கடந்த
50 வருடங்களாக தமிழகத்தில் நடந்தது கேடுகெட்ட, ஊழல்,
குப்பை ஆட்சி என்று வர்ணித்திருக்கிறார்… ( இதில் கலைஞருடைய ஆட்சியும்
அடங்குகிறது…! )

காந்திஜி, பெரியார், டாக்டர் அம்பேத்கர் – ஆகியோர் தான் தனது
வழிகாட்டிகள் என்கிறார்…( அண்ணா – இல்லை…!!!)

இப்போது இருக்கிற சூழ்நிலையில், யார் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், தமிழகத்தில் திமுக தான் வலுவான நிலையில் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

நாளையே தேர்தல் நடந்தால், அடுத்த முதலமைச்சராக திரு.ஸ்டாலின்
அமர்வதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் என்கிற நிலையில் –
ஸ்டாலினுடைய வாய்ப்புகள் பாதிக்கப்படுவது போன்ற
ஒரு சூழ்நிலையை கமல்ஹாசனுடைய மக்கள் நீதி மய்யம் உருவாக்கக்கூடும்….

ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத மற்ற கட்சிகளுடன் கூட்டணி
வைத்துக்கொண்டு தேர்தலை சந்திப்பதில் தனக்கு எந்தவித தயக்கமும்
இல்லையென்று கூறி இருக்கிறார். அதிகாரம் கையில் இருந்தால் தான்,
மக்களுக்கு சேவை செய்ய முடியும்…எனவே,தமிழகத்தில் அடுத்து
நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவது தனது
லட்சியம்…. என்றும் கூறுகிறார்.

ஏற்கெனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடது கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி ஆகியவை கமலுடன் சேர கிட்டத்தட்ட தயாரான மனநிலையில் தான் இருக்கின்றன… மற்ற கட்சிகளின் நிலையை இப்போதைக்கு யூகிப்பதற்கில்லை…!!! தமிழக அரசியல் கட்சிகள் கமலுடைய இந்த நிலைக்கு எத்தகைய பதில் நிலையை எடுக்கின்றன என்பதை இனிமேல் தான் பார்க்க வேண்டும்…!

——————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.