(பகுதி-2 ) – அமெரிக்காவிலும் இலவச மதிய உணவு போட்டார்கள்…!!! அதியற்புதமான சில பழைய கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் …


உலகிலேயே பணக்கார நாடாக கருதப்படும் அமெரிக்காவிலேயே,
வேலையில்லாத் திண்டாட்டமும், இலவசமாக சூப், உணவு கொடுக்கப்பதையும் தெரியப்படுத்தும் ஒரு புகைப்படம் கீழே –

அமெரிக்காவிலும் இலவச உணவு போடப்பட்டு, அதற்கு வரிசையில் காத்திருந்த மக்கள்…!!

பகுதி-1-ல் அமெரிக்கா சம்பந்தப்பட்ட, சில அரிய பழைய புகைப்படங்களை பதிப்பித்திருந்தேன்.. இப்போது இன்னும் சில சுவாரஸ்யமான புகைப்படங்கள் –

———————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to (பகுதி-2 ) – அமெரிக்காவிலும் இலவச மதிய உணவு போட்டார்கள்…!!! அதியற்புதமான சில பழைய கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் …

 1. Pingback: (பகுதி-2 ) – அமெரிக்காவிலும் இலவச மதிய உணவு போட்டார்கள்…!!! அதியற்புதமான சில பழைய கருப்பு-வெள்ளை ப

 2. அறிவழகு சொல்கிறார்:

  அப்போ பிகினி ட்ரெஸ் எப்போது வந்தது. பிறகு, ஒன்னுமே இல்லாமல் வெயில் குளியல் எப்போது வந்தது.

  அட கஷ்ட காலமே, எல்லாம் நம்ம காலத்தில் தானா.

  இதுவும் ஒரு சோதனை தான்.

 3. BVS சொல்கிறார்:

  மிகவும் சுவாரஸ்யமான புகைப்படங்கள்.
  1) கோட், சூட் போட்டுக்கொண்டு இலவச சூப்புக்கும் மதிய உணவுக்கும்
  அமெரிக்கர்கள் கியூவில் நிற்பது கேள்விப்படாத விஷயம்.
  2) 1922 பீச் போலீசை பார்த்தால், அமெரிக்கர்கள் கூட ஒரு காலத்தில் எப்படி
  பழமைவாதிகளாக இருந்தார்கள் என்பது வியப்பை அளிக்கும் விஷயம்.
  வித்தியாசமான, சுவாரஸ்யமான புகைப்படங்களை பகிர்ந்துகொண்டதற்கு
  மிக்க நன்றி கே.எம்.சார்.

  • ragu சொல்கிறார்:

   கோட், சூட் ஒன்றும் பணக்காரர்கள் உடையல்ல. அவர்களின் பாரம்பரிய உடை. கோட் சூட் போட்டவர்கள் வீதிகளில் பிச்சை எடுப்பதை ஒவ்வொரு நாளும் நியூயோர்க்கில் பார்க்கிறேன். எனக்கும் இதே நிலை வரலாம் என்பதையும் உணர்கிறேன்.
   அதேபோல இன்றும் பாடசாலைகளில் குழந்தைகளுக்கு இலவச காலை/மதிய உணவு வழங்கப்படுகிறது !
   ஏழைகளுக்கு இலவச சமையல் பொருட்கள் (சமையல் எண்ணெய் உட்பட) வழங்கும் மையங்கள் உள்ளன!

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    ரகு,

    அமெரிக்காவில் இப்போதும் இலவசங்கள் பற்றி நீங்கள் கூறுவது எனக்கு புதிய செய்தியாக இருக்கிறது.
    பொதுவாக, சில பள்ளிகளில், காலை/மதிய உணவு கொடுப்பது உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
    ஆனால் – இலவசமாகவா…?

    அங்கே பொதுவாக மக்களுக்கு /ஏழைகளுக்கு – கொடுக்கப்படும் இலவசங்கள் பற்றி கொஞ்சம் எழுதுங்களேன்.
    நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
    தமிழில் அல்லது ஆங்கிலத்தில் – எது சௌகரியமோ – அதில், இங்கேயே பின்னூட்டத்தில் எழுதுங்களேன்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • bandhu சொல்கிறார்:

     FOOD STAMPS என்று தேடிப் பாருங்கள். ஏழைகளுக்கு ஸ்டாம்ப் / டோக்கன் கள் கொடுப்பார்கள். அதைவைத்து மளிகை பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்.வீடில்லாமல் இருப்பவர்களுக்கு இரவு படுத்துக்கொள்வதற்கு (வெட்ட வெளியில் குளிர் தாங்க முடியாது) ஷெல்டர்களும் உண்டு. எந்த முன்பதிவும் கிடையாது. முதலில் வரும் 100 பேருக்கு மட்டும் இடம் போன்ற விதிகள் உண்டு. இதனால், காலை முதல் இதன் வாசலில் காத்திருப்பவர்களும் உண்டு. இந்த சக்கர வியூகத்திலுருந்து எப்படி இவர்கள் வெளியே வருவார்கள் என்பது புரியாத புதிர்!

     • ragu சொல்கிறார்:

      பந்து,
      நியூ யோர்க்கில் இப்போதெல்லாம் ஸ்டாம்ப்/டோக்கன் இல்லை. கிரடிட் காட் போல ஒரு அட்டை! பொருட்களை வாங்கிவிட்டு மற்றவர்களைப்போல swipe பண்ணி போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். யாருக்கும் தெரியாது நீங்கள் அரச உதவிப்பணத்தில் தங்கி இருக்கிறீர்கள் என!

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      bandhu,

      பல புதிய விஷயங்கள் தெரிய வந்தன.
      நீங்கள் தந்திருக்கும் தகவல்களுக்கு மிக்க நன்றி.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

    • ragu சொல்கிறார்:

     இந்த சுட்டியில் சில விபரங்கள்…..
     http://www.schoolfoodnyc.org/freelunch/freelunch.htm

     அண்மையில் எனது நண்பனின் மகனுடன் பேசிக்கொண்டிருந்தேன் (9ம் வகுப்பு) முன்னர் ஓரளவு வசதியுள்ளவர்களின் பிள்ளைகள் தமது காலை மற்றும் மதிய உணவுக்கு பணம் கொடுக்க வேண்டுமாம். ஏழ்மைநிலையில் இருக்கும் குடும்பத்தினருக்கு இலவசம். இது மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு உணர்வை ஏற்படுத்துவதாக உணர்ந்த நிர்வாகம் எல்லோருக்கும் இலவசம் என அறிவித்து விட்டது !
     எந்த எந்த நாள் என்ன உணவு என menu கூட உள்ளது.
     இந்துக்கள், இஸ்லாமியர், யூதர்கள் கல்விகற்பதால் பன்றி இறைச்சி இல்லவே இல்லை! சைவ உணவு வேண்டுமென்றால் அதுவும் உண்டு.
     எல்லாமே சத்துணவு. வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே junk food வகையில் வரும் pizza உண்டு.
     மேலும் வீட்டில் பணிநிமித்தம் பிள்ளைகளை தனியாக விட முடியாது எனக் கருதும் பெற்றோர் அவர்களை பாடசாலை முடிந்ததும் after school program இல் விடலாம் அங்கும் உணவு வழங்கப்படும்!

     நீங்கள் இணைத்திருக்கும் படங்களில் முதலாவது படம் சிக்காக்கோவில் அமெரிக்காவில் மாபியாக்களின் தோற்றத்தில் முதுகெலும்பாக இருந்து மிகப்பெரிய குற்றவாளியான அல் கபோன் ‘மனமுவந்து’ வழங்கிய இலவச உணவுக்கூடம்!

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ரகு,

      நான் அறிந்திராத பல தகவல்களை தந்திருக்கிறீர்கள்.
      மிக்க நன்றி.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

 4. அறிவழகு சொல்கிறார்:

  ”பிகினி ட்ரெஸ்”, ”ஒன்னுமே இல்லாமல் வெயில் குளியல்”

  இது முற்போக்கு…!

  வக்கிற புத்தி உள்ளவர்களால் மட்டுமே இதை ஆதரிக்க முடியும்.

  • தமிழன் சொல்கிறார்:

   இது ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்தல்ல அறிவழகன். ஒவ்வொருவருடைய கலாச்சாரப் பார்வையில் நாம் பார்க்கவேண்டும். நம் கண்ணில் குற்றம் வைத்துக்கொண்டு மற்றவர்களின் உடையையோ உடையின்மையையோ பார்க்கமுடியாது.

   நான் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கான்ஃபரன்ஸுக்குப் போயிருந்தேன். அவர்கள் எங்கள் எல்லோரையும் (ஆண்கள், பல நாடுகளைச் சேர்ந்தவர்கள்) பிக்னிக் கூட்டிச் சென்று மாலை கோல்ஃப் கிளப்பில் (அதெல்லாம் பெரிய பெரிய லெவல்) குளிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். (இரவு கடற்கரையில் விருந்து). நானும் குளிக்கச் சென்றேன். பெரிய ஹால், அதனைச் சுற்றி பல குளியலறைகள். ஹாலில் நாங்கள் சென்றபோது, ஜப்பானியர், கொரியன் போன்ற பல நாட்டவர் முழுக்க நிர்வாணம். அப்படியே இயல்பாக எல்லோரிடமும் பேசினர் (தலைவாருதல், பல் தேய்த்தல், பிசினஸைப் பற்றிய பேச்சு). எனக்கு ரொம்பவும் கூச்சமாகவும் கொஞ்சம் ஷாக்கிங் ஆகவும் இருந்தது. ஆனால் இது அவர்களுக்கு சாதாரணம். இதுபோல் நியூட் கடற்கரைகள் பல, ஜெர்மன், ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளில் உண்டு. (மற்ற நாடுகளில் வென்னீர் ஊற்றுக்களில் குளிக்க, அமிழ்ந்திருக்க உடை இருக்கக்கூடாது). நமக்கு கலாச்சார அதிர்ச்சி. அவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயம் கிடையாது. அவர்கள் பார்வை நேர்மையானது. அதற்காக நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் இல்லை. என் கலாச்சாரம் வேறு, அவர்களது வேறு.

   ஒவ்வொருவரும் தங்களை வைத்து மற்ற கலாச்சாரத்தை எடைபோட இயலாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.