மக்கள் நீதி மய்யத்தால் திரு.ஸ்டாலினுக்கு பாதிப்பு வருமா…? திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு ம.நீ.ம. வலை வீசுகிறது…!!!


முதல் முறையாக, கலைஞர் ஆட்சியையும் குறை கூறுகிறார்
திரு.கமல்ஹாசன்…. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்
என்பதற்கு இது இன்னொரு உதாரணம்…!!!

இன்று மதியம் மும்பையில், இந்தியாடுடே தொலைக்காட்சி நிகழ்ச்சி
ஒன்றில் கலந்து கொண்டு பேட்டியளித்த கமல்ஹாசன், கடந்த
50 வருடங்களாக தமிழகத்தில் நடந்தது கேடுகெட்ட, ஊழல்,
குப்பை ஆட்சி என்று வர்ணித்திருக்கிறார்… ( இதில் கலைஞருடைய
ஆட்சியும் அடங்குகிறது…! )

காந்திஜி, பெரியார், டாக்டர் அம்பேத்கர் – ஆகியோர் தான் தனது
வழிகாட்டிகள் என்கிறார்…( அண்ணா – இல்லை…!!!)

இப்போது இருக்கிற சூழ்நிலையில், யார் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், தமிழகத்தில் திமுக தான் வலுவான நிலையில் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

நாளையே தேர்தல் நடந்தால், அடுத்த முதலமைச்சராக திரு.ஸ்டாலின்
அமர்வதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் என்கிற நிலையில் –
ஸ்டாலினுடைய வாய்ப்புகள் பாதிக்கப்படுவது போன்ற ஒரு சூழ்நிலையை கமல்ஹாசனுடைய மக்கள் நீதி மய்யம் உருவாக்கக்கூடும்….

ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத மற்ற கட்சிகளுடன் கூட்டணி
வைத்துக்கொண்டு தேர்தலை சந்திப்பதில் தனக்கு எந்தவித தயக்கமும்
இல்லையென்று கூறி இருக்கிறார். அதிகாரம் கையில் இருந்தால் தான்,
மக்களுக்கு சேவை செய்ய முடியும்…எனவே,தமிழகத்தில் அடுத்து
நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவது தனது
லட்சியம்…. என்றும் கூறுகிறார்.

ஏற்கெனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடது கம்யூனிஸ்ட்
(மார்க்சிஸ்ட்) கட்சி ஆகியவை கமலுடன் சேர கிட்டத்தட்ட தயாரான
மனநிலையில் தான் இருக்கின்றன… மற்ற கட்சிகளின் நிலையை
இப்போதைக்கு யூகிப்பதற்கில்லை…!!! தமிழக அரசியல் கட்சிகள்
கமலுடைய இந்த நிலைக்கு எத்தகைய பதில் நிலையை எடுக்கின்றன
என்பதை இனிமேல் தான் பார்க்க வேண்டும்…!

——————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to மக்கள் நீதி மய்யத்தால் திரு.ஸ்டாலினுக்கு பாதிப்பு வருமா…? திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு ம.நீ.ம. வலை வீசுகிறது…!!!

 1. அறிவழகு சொல்கிறார்:

  கமல் ஹாசன்:

  ”என் கலர் கருப்பு”

  ”எனக்கு காவியும் விருப்பம்.”

  ”கருப்பு என்றீர்களே?”

  ”கருப்பில் காவியும் அடங்கும்.”

  —————————–‍‍‍‍‍‍‍‍‍‍‍

  ”ராஜா எல்லா சிலைகளையும் உடைத்துவிட்டு பெரியார் சிலைக்கு வரட்டும்.”

  ”ஹிந்து மதத்திற்கும் பாஜகவிற்கும் நான் எதிரியல்ல.”

  கமல் ஒரு அருமையான உருதியான கொள்கையுடையவர் என்று தெரிகிறது.

  ரஜினிக்கு…!

  கொள்கையே இல்லை.

  இவர்களெல்லாம் தமிழ் நாட்டின் சாபக்கேடுகள்.

  இந்த சாபக்கேடுகளுடன் யார் கூட்டு வைத்தாலும் வாழ்ந்துடும்.

 2. புதியவன் சொல்கிறார்:

  இன்டெரெஸ்டிங். யார் யாருடைய வாக்குகளைக் கவரப் போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

  இருந்தாலும், கமலஹாசன் திடீர் புத்தர் ஆகிவிட்டாரே.

  திமுக, ‘ஊழலில் ஊறிய, குறு நில மன்னர்களின்’ கட்சி என்றாலும், தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் முதல்வராக எப்படி வழி நடத்துவார் என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறி. அவருக்கு அப்படிப்பட்ட, ‘தலைமைப் பண்பு’ (அதாவது அனைத்து பழம் பெருச்சாளிகளும் பயந்து ஊழல் செய்யாமல் இருக்குமளவு) இருக்குமா என்பது சந்தேகம்தான்.

  ரஜினி, கமலஹாசனைவிட எவ்வளவோ பரவாயில்லை.

  தமிழகத்துக்கு என்று தனித்த ஒரு தலைவருக்குரிய இடம் இப்போது நிச்சயமாக காலியாக இருக்கிறது. வாக்குகளைப் பிரித்து ஊழல் திமுக வரவைப்பார்களா அல்லது யாரேனும் ஒருவர் ‘தலைவர்’ அவதாரம் எடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 45 வயது ரஜினியாக இருந்திருந்தால், நிச்சயம் அவர்தான் வருங்காலத் தலைவர் என்று உறுதியாகச் சொல்லமுடியும். கருத்துகளில் தெளிவு, மனம் நினைப்பதை வெளிப்படையாகப் பேசும் குணம் அவரிடம் உண்டு.

 3. Pingback: மக்கள் நீதி மய்யத்தால் திரு.ஸ்டாலினுக்கு பாதிப்பு வருமா…? திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு ம.நீ

 4. tamilmani சொல்கிறார்:

  Let us give a chance to new comers…DMK, AIADMK,CONG and Dinakaran factions should be
  defeated at any cost.. We have had enough of kazhagams from 1967. They have amassed
  wealth for their seven generations. What is wrong if kamal and rajini become CM .If kamal or
  rajini atleast follow the footsteps of Mr Pinari vijayan of kerala we should be happy.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.