ஆவலுடன் எதிர்பார்த்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு – (பகுதி-3) கொலையென்று சொல்லாதீர் ….


இந்த விஷயத்தில், ஏற்கெனவே சொன்னது போல்,

அரசியல்வாதிகளிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் வராத விடியல்,
இறுதியில், உச்சநீதிமன்றத்தின் மூலம் 2 நாட்களுக்கு முன்னர்
வந்திருக்கிறது.

இதன்படி –

—————————

தீராத நோயால் பாதிக்கப்பட்டு துன்புறும் நோயாளிகளை, அவர்களுக்கு
பொறுத்தப்பட்டுள்ள, உயிர் காக்கும் சாதனங்களை அகற்றுவதன்
மூலம், அவர்கள் கண்ணியமாக இறப்பதற்கு அனுமதிக்கலாம்.

வாழ்வதற்கு விருப்பம் இல்லாத ஒரு மனிதர், செயலற்ற, முடங்கிய
நிலையில் துன்புற வேண்டிய அவசியம் இல்லை.

தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளி, தான் இறக்க
விரும்புவதை முன்கூட்டியே உயிலாக எழுதுவதும்,
அவர்களை அவர்களின் விருப்பப்படியே இறக்க விடுவதும் அனுமதிக்கப்படுகிறது.

அத்தகைய நோயாளிகளின் விருப்பத்தை, அவர்களது நெருங்கிய
நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் அளிக்கலாம்.

அதை, தகுதிவாய்ந்த மருத்துவக்குழு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.

அதாவது, அரசியல் சட்டம், விதி-21 -ல்
(Article 21 of the Constitution of India) ஒவ்வொரு தனி மனிதருக்கும்
உறுதிசெய்யப்பட்டிருக்கும் –

“கௌரவமாக வாழ்வதற்கு” உள்ள அடிப்படை உரிமை –

“கௌரவமாக இறப்பதற்கு” உள்ள உரிமையையும் உள்ளடக்கியது –
என்று சுப்ரீம் கோர்ட் இப்போது தீர்ப்பு கூறி இருக்கிறது.

————————–

இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்த தீர்ப்பை
நடைமுறைப்படுத்தும் பொறுப்பை அரசாங்கத்திடமே விட்டால்,
அது ஆண்டுக்கணக்கில் ஆகும் என்கிற
“பரந்த – முந்திய” அனுபவங்களை கருத்தில் கொண்டு –

இந்த தீர்ப்பின் அடிப்படையில், தகுந்த உத்திரவுகளை மத்திய அரசு
பிறப்பிக்கும் வரையில் –

சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கில் அறிவித்துள்ள இந்த முடிவு
செயல்பாட்டில் இருக்கும் என்றும்,
இதன் மூலம், இந்த உத்திரவு உடனடியாக அமலுக்கு வருகிறது
என்றும் அதிரடியாக அறிவித்திருப்பது தான்.

———————-

ஒரு நீண்ட நாள் விருப்பம், வேண்டுகோள், பிரார்த்தனை –
ஆண்டுகள் பல கடந்தாயினும், இப்போதாவது நடைமுறைக்கு
வருகிறது என்பது –

இன்றில்லா விட்டாலும்,
நாளையாவது –
நமது நல்ல விருப்பங்கள் நிறைவேறும் –
என்கிற நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது…!!!

———————————————————————————————————–

இந்த இடுகைத்தொடர் கொஞ்சம் வறண்டதாக (dry…) இருந்திருக்கும்…
எனவே, முடிவில், மனதுக்கு இதமான ஒரு நிகழ்வுடன் முடிக்க
நினைக்கிறேன்…அதுவும் இந்த தலைப்பிற்கு பொருத்தமான ஒன்று தான்..!!

இந்த இடுகைத்தொடரின் அடிப்படை கருத்தை வலியுறுத்தி,
இந்தி மொழியில் Guzaarish என்கிற பெயரில் 2010-ல் ஒரு திரைப்படம்
வந்தது…. நடிகர் ஹ்ருதிக் ரோஷன்,
ஐஸ்வர்யா ராய் – ஆகியோர் நடித்திருந்தனர்.
கதைக்களம் – கோவாவில் நடைபெறுவது போல்
அமைந்திருந்தது.

..

..
கமர்ஷியல் விஷயங்களும் சில இருந்தாலும்,
இதை ஒரு art film என்று தான்
சொல்ல வேண்டும். புகழ்பெற்ற இயக்குநர்
சஞ்சய் லீலா பன்சாலி தான் இயக்கினார்.

மறக்க முடியாத ஒரு அனுபவம் இந்த திரைப்படம்.

இந்த படத்தில், ஐஸ்வர்யா ராய் நடனம் ஆடும்,
பாடல் காட்சி ஒன்று -மிகுந்த ரசனையோடு படமாக்கப்பட்டிருந்தது…!
அதை கீழே பதிவதுடன் இந்த இடுகைத்தொடரை முடிக்கிறேன்…..

………………..

—————————————————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to ஆவலுடன் எதிர்பார்த்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு – (பகுதி-3) கொலையென்று சொல்லாதீர் ….

  1. Ramachandran சொல்கிறார்:

    நல்ல பதிவு. பல விஷயங்களை தெளிவுபடுத்தியது.
    கடைசியில் கொடுத்திருக்கும் நடனமும், ஐஸ்வர்யா ராய் முகபாவனைகளும்,
    நல்ல இயக்குநரை வெளிப்படுத்துகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s