என்ன பேரு வைக்கலாம் – எப்படி அழைக்கலாம்….!!!


ஒரு முக்கியமான விவாதப் பொருள் குறித்து ஒரு இடுகை எழுதத்
துவங்கினேன். அதற்கு – “என்ன பேரு வைக்கலாம் –
எப்படி அழைக்கலாம் “…என்று தலைப்பும் வைத்து விட்டேன்….

திடீரென்று அந்த தலைப்பு, அதே வரிகளுடன் துவங்கும் ஒரு பழைய
திரைப்படப் பாடலை நினைவூட்டியது. பல வருடங்கள் நான்
முணுமுணுத்துக்கொண்டே இருந்த பாடல் அது.
ராகத்தின் இனிமைக்காக மட்டுமல்லாது –

அற்புதமான கருத்தாழமிக்க சொற்களுக்காகவும்
பெருமை கொள்ளத்தக்க பாடல் அது…

ஒரு பெண் குழந்தைக்கு பெயர் வைப்பதை எவ்வளவு அழகாக, எத்தனை கேள்விகளுடன், சுவாரஸ்யமாக கொண்டு போயிருக்கிறார்கள் பாருங்கள்…

இந்த இடுகையை படிப்பவர்களில் ஆயிரத்தில் ஒருவர்
அந்த பாடலை கேட்டிருக்கலாம்… பெரும்பாலானோர் கேட்டிருக்க வாய்ப்பில்லை….!

“எங்கள் செல்வி” என்கிற தமிழ்ப்படத்திற்காக, காலஞ்சென்ற கே.வி.மஹாதேவன் அவர்களின் இசையில் உருவான பாடல் அது…
எழுதியவர் யார் என்பதை என்னால் நினைவில் கொள்ள முடியவில்லை.

இந்த பாடலை, கட்டுரையுடன் இணைத்தால், இந்த பாடல் வரிகளின் அருமையை உங்களால் ரசிக்க முடியாமல் போய் விடும். எனவே, முதலில்
இந்த பாடலை, அதன் சொல்லழகை ரசித்து விடுங்கள். பின்னர்
இடுகையுடன் வருகிறேன்….!!!

—————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to என்ன பேரு வைக்கலாம் – எப்படி அழைக்கலாம்….!!!

 1. Pingback: என்ன பேரு வைக்கலாம் – எப்படி அழைக்கலாம்….!!! – TamilBlogs

 2. Mani சொல்கிறார்:

  அழகான பாடல். ஒவ்வொரு பெயராக ஒரு பெண் எடுத்துக் கூறுவதும்,,
  அது வேண்டாமென்று தகுந்த காரணத்துடன் இன்னொருவர் மறுப்பதுமாக
  பாடல் உண்மையிலேயே மிகச்சிறப்பாய் அமைந்திருக்கிறது.
  இப்போது வரும் பாடல்களில், வெறும் ஓசை தான்; வரிகளே புரிவதில்லை.
  ஆனால், தாமரை போன்ற சில பாடலாசிரியர்கள் இப்போதும் அர்த்தமுள்ள பாடல்களை எழுதுகிறார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.