என்ன பெயர் வைத்தாலென்ன …??? எப்படி அழைத்தால் தான் என்ன…???


” சப்பாணி”ன்னு கூப்ட்டா, சப்புனு அறை ” – திரைப்படத்தில் அது சரி…!!!
ஆனால், நடைமுறையில், நிகழ்வில், நம்மைப் பொருத்த வரையில் –
உலகப்புகழ் பெற்ற ஆங்கில கதாசிரியர் Shakespeare சொன்னது போல் –

“A rose is a rose is a rose” –
( by whatever name you may call it …!!! )

எப்படி அழைத்தால் என்ன….?
மணம், குணம், (திறன், அதிகாரம்…!) – மாறாத வரையில்
ரோஜா என்றும் ரோஜா தான்……!!!

எதைப்பற்றி சொல்கிறேன் என்பதை முதலில் விளக்க வேண்டும்…காவேரி மேலாண்மை வாரியம் –
( Kaveri Management Board – KMB )
காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு –
(Cauvery Water Regulatory Committee (CWRC))

உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி இந்த இரண்டு அமைப்புகளையும்,
ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி
தமிழ்நாட்டில் பேசாத கட்சிகள்/தலைவர்கள் இல்லை.

அதே போல், காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது
என்று கர்நாடகாவில் பேசாத கட்சிகள்/தலைவர்கள் இல்லை.

மத்திய அரசு – பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்று
இரட்டை வேடம் போடுகிறது….!

காரணம்…?
கர்நாடகா சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல்கள் வரவிருக்கும்
நிலையில், தான் வெளிப்படையாக எதாவது முடிவெடுத்தால்,
உத்திரவுகள் பிறப்பித்தால், கர்நாடகாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ்,
தேர்தலில் அதை பாஜகவிற்கு எதிராக பயன்படுத்திக் கொள்ளுமோ
என்கிற பயம் பாஜக தலைமைக்கு.

அதே சமயம், உச்சநீதிமன்றம், தனது தீர்ப்பில் வெகு கறாராகச் சொல்லி
இருக்கிறது…ஆறு வார காலத்திற்குள் தனது தீர்ப்பை நிறைவேற்றக்கூடிய
ஒரு அமைப்பை (SCHEME ), மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று.

இந்த அமைப்பை உருவாக்குவதை தாமதப்படுத்த கூறப்படக்கூடிய எந்த
காரணத்தையும் தன்னால் ஏற்க முடியாது என்று தீர்ப்பிலேயே
மிகத்தெளிவாக கூறி விட்டது உச்சநீதிமன்றம்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு –
மத்திய அரசு இதைச் செய்யாமல் தாமதப்படுத்தக் கூடும் என்கிற அச்சம்
தமிழகத்திற்கு ஏற்பட்டது இயல்பே என்றாலும் –

மத்திய அரசு இதில் தனக்கு விருப்பமில்லை என்பது போன்ற ஒரு
தோற்றத்தை, கர்நாடகாவிற்காக காட்டிக் கொண்டிருந்தாலும் –

இது தொடர்பான சட்ட விதிகளைப் பார்க்கும்போது, மத்திய அரசு
இதிலிருந்து நழுவிச்செல்ல வாய்ப்பே இல்லையென்பது புரியும்…

” BOARD ” அமைக்கச் சொல்லி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்படவில்லை…
ஒரு SCHEME அறிவிக்கப்பட வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறது..
– என்றெல்லாம் கர்நாடகாவை திருப்திப்படுத்த வெளியே
செய்தி பரப்பிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு……

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் “ஸ்கீம்” என்று சொல்லப்பட்டிருப்பது உண்மை
தான்… ஆனால், ஸ்கீம் வேறு, போர்ட் வேறு அல்ல….
அந்த ஸ்கீம் தான் “போர்டு”.. !!! போர்டு தான் ஸ்கீம்…!!!

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது –

Inter State River Water Disputes Act, 1956 -ன், பிரிவு 6A-ன் கீழ்
ஒரு “ஸ்கீம்” (Scheme) உருவாக்கப்பட வேண்டும் என்பதைத் தான்…

இந்த “ஸ்கீம்”-ன் வேலை /பொறுப்பு என்ன என்பது அந்த விதியின்
கீழேயே விவரமாக விளக்கப்பட்டிருக்கிறது.

நண்பர்கள் சுலபமாக புரிந்துகொள்ள,
Inter State River Water Disputes Act, 1956 -ன்
சம்பந்தப்பட்ட விதிகளை கீழே கடைசியில் தந்திருக்கிறேன்….
அத்துடன் இணைத்து படித்துப் பார்த்தால் சுலபமாகப் புரியும்…

முதலில் பிரிவு 6(1)-ல் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்பதை
கட்டாயப்படுத்தி இருக்கிறது (இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல்
“SHALL” ( may அல்ல…).. எனவே மத்திய அரசுக்கு இந்த தீர்ப்பை
அரசிதழில் வெளியிட வேண்டியது…. கட்டாயம்.

அடுத்து, பிரிவு 6(2)-ல், தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு,
அந்த உத்திரவு, சுப்ரீம் கோர்ட்டின் உத்திரவுக்கு சமம் ஆகிறது –
என்பதையும் உறுதிப்படுத்துகிறது.( இதன் மூலம், சுப்ரீம் கோர்ட் ஆர்டரை
யாரும் மீற முடியாது என்பதும் தெரிவிக்கப்படுகிறது….)

இதன் பின்னர் தான் பிரிவு 6(A) வருகிறது….
அதில் கூறப்பட்டிருப்பவை தான் மத்திய அரசின் விருப்பத்திற்கு
விடப்பட்டிருக்கின்றன… அதாவது தீர்ப்பாயத்தின் / சுப்ரீம் கோர்ட்டின்
தீர்ப்பை நிறைவேற்ற உருவாக்கப்படும் “ஸ்கீம்”-க்கு –

கோர்ட் உத்திரவை நடைமுறைப்படுத்த, ஒரு அமைப்பை (structure)
ஏற்படுத்தியாக வேண்டும்… அதற்கு –
-என்ன பேரும் வைக்கலாம்… எப்படியும் அழைக்கலாம்.. !!!

அது Board ஆகவும் இருக்கலாம்… அல்லது கர்நாடகாவை ஏமாற்ற
(திருப்திப்படுத்த) அதற்கு Authority என்றோ அல்லது வேறு எதாவது
பெயரோ வைக்கலாம். ஆனால், அந்த ஸ்கீமின் வேலை –
தீர்ப்பை அமல்படுத்துவது தான்… அதற்கான திட்டங்களையும்,
வரைமுறைகளையும் உருவாக்கி செயல்படுத்துவது தான்.

எனவே, சட்டவிதிகளை கையில் வைத்துக் கொண்டு ஒருமுறை
ஆழமாகப் படித்தால்… கர்நாடகா அரசும், மத்திய அரசும் எப்படி
முயன்றாலும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்துவதை
தவிர்க்க முடியாது என்பதை உணரலாம்…

சும்மா….. கர்நாடகாவை திருப்திப்படுத்த ( ஏமாற்ற…? ) –
நம்மை “டென்ஷன்” ஆக்குகிறது மத்திய அரசு…..!!!

“டீக் ஹை”… நமக்கும் நேரம் வரும்… பார்த்துக்கொள்வோம்.
இப்போதைக்கு – காரியம் தான் முக்கியம்…!!!

———————————————————————————

Inter State River Water Disputes Act, 1956 –

..

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to என்ன பெயர் வைத்தாலென்ன …??? எப்படி அழைத்தால் தான் என்ன…???

 1. Pingback: என்ன பெயர் வைத்தாலென்ன …??? எப்படி அழைத்தால் தான் என்ன…??? – TamilBlogs

 2. Mani சொல்கிறார்:

  மத்திய அரசுக்கு வாய்ப்பிருந்தால், அது கர்நாடகாவுக்கு சாதகமாகத்தான்
  செயல்படும். பாஜகவுக்கு ஆட்சிக்கு வர வாய்ப்பு என்றால் அது கர்நாடகாவில் தான்.
  இன்னும் 10 வருடங்கள் ஆனாலும், தமிழ்நாட்டில் அதால் காலூன்றக்கூட முடியாது. நீங்கள் சொல்வது போல், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீற முடியாது என்பதால், வேண்டாவெருப்பாக ஆணையத்தை அமைக்கும் என்றே தோன்றுகிறது.

 3. Raj சொல்கிறார்:

  யாராவது இப்படி விளக்கமாக எழுத மாட்டார்களா என்று எண்ணியிருந்தேன். நன்றி. இதை வைத்து தமிழக அரசு தீவிரமாக அழுத்தம் தர வேண்டும்.
  செய்வார்களா என்பதுதான் கேள்வி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நன்றி ராஜ்.

   தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை…

   இந்த தடவை கடவுள் நம் பக்கம் இருப்பாரென்று நம்புவோம்…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. புதியவன் சொல்கிறார்:

  இதுல ஒரு பிரச்சனை இருக்கு. பாஜக ஆட்சியின்போது இது நடந்தால், எப்போதும் பாஜகவுக்கு எதிரான மிகப் பெரிய பாயின்டாக இது கர்னாடகாவில் தேர்தலின்போது அமைந்துவிடும். அதனால் பாஜக நேர்மையாக இதனை நிறைவேற்றாது. ஆனால் ஒரு தடவை ஏதோ ஒரு கட்சி இந்த ஆணையத்தை அமைத்துவிட்டால், அதன் பிறகு காங்கிரஸ் பாஜக இரண்டும், தங்களுக்கு ஆணையத்தின்மீதான அதிகாரம் இல்லை என்று சொல்லி தப்பித்துக்கொள்ளலாம். அதனால், உச்ச நீதிமன்றமே இந்தியாவின் தேர்தல் அரசியலைப் புரிந்துகொண்டு, அவர்களே ஒரு ஆணையத்தை நிறுவலாம். அப்போதுதான், அவர்கள் வட கர்னாடகாவில் தண்ணீர் பிரச்சனைக்கும் ஒரு ஆணையம் கேட்க முடியும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   //உச்ச நீதிமன்றமே இந்தியாவின் தேர்தல்
   அரசியலைப் புரிந்துகொண்டு, அவர்களே ஒரு
   ஆணையத்தை நிறுவலாம்.//

   உச்ச நீதிமன்றம் அமைக்க முன்வந்தபோது, மத்திய பாஜக அரசு குறுக்கிட்டு, அது பாராளுமன்றத்தின் தனி உரிமை… நீதிமன்றம் அதைச் செய்ய முடியாது என்று கூறி தடுத்து நிறுத்தியதே… நினைவில்லையா…?

   அதனால் தான் இப்போது உச்ச நீதிமன்றம் அந்த பொறுப்பை மத்திய அரசிடம் கொடுத்திருக்கிறது.

   மத்திய அரசு இதிலிருந்து நழுவவோ, தப்பிக்கவோ முடியாது…
   செய்து தான் ஆக வேண்டும்… ஆனால், கொஞ்சம் ஏறுமாறாக செய்யக்கூடும் – என்ன விரும்புகிறதோ, அதை முதலில் செய்யட்டும்…

   தவறாகச் செய்தால், அந்த சமயத்தில் நமக்கு இருக்கவே இருக்கிறது
   மீண்டும் நீதிமன்றத்தின் வாசல்…..!

   அவர்கள் எதாவது ஒரு உத்திரவு பிறப்பிக்கும் வரையில் நாமாக
   நீதிமன்றத்திற்கு போகக்கூடாது… போனால், விஷயத்தை இழுத்தடிக்க அதையே அவர்கள் காரணமாக பயன்படுத்துவார்கள்…

   இந்த தடவை, தமிழக அரசு கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்து செயல்பட்டால், நாம் ஜெயிப்பது நிச்சயம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. அறிவழகு சொல்கிறார்:

  இந்த இடுகையை படித்த பிறகு மனதளவில் மிகவும் நிம்மதியாக இருக்கிறது. ‘எப்படியும் காவிரி மேலான்மை வாரியம் அமைந்துவிடும்’ என்று. நன்றி ஐயா.

  காவிரி மேலான்மை வாரியம் அமைவதில் எந்த கொம்பனும் எதுவும் செய்துவிட முடியாத நிலையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ள உச்ச நீதி மன்றத்திற்கும் நன்றி.

  எந்த கொம்பனும் இனி என்ன செய்துவிட முடியும், அதிகபட்சம் தள்ளிப்போட முடியும்.

  நல்லது தான்.

  மாநிலத்தில் உள்ளவர்களால் மட்டுமல்லாமல் மத்தியில் உள்ளவர்களாலும் தான் அவர்கள் தமிழகத்தில் காலூன்ற முடியா நிலையேற்படுவது நல்லது தானே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.