இங்கே இருந்தவர் …….?தன் பலவீனங்களுக்காக, ஊனங்களுக்காக –
அழுது புலம்பாமல், மூலையில் முடங்கி விடாமல்,
ஒதுங்கி விடாமல், அபாரமான தன்னம்பிக்கையுடன்,
வாழ்நாளின் கடைசி மூச்சு வரையிலும்,
மனித குலத்தின் எதிர்காலத்திற்காக தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே
இருந்தவர் – உழைத்துக் கொண்டே இருந்தவர்
அமர்ந்திருந்த இருக்கை இது –
இன்று காலியாக இருக்கிறது…!!!


..


..

..

..

அதனாலென்ன…?
இத்தனை உடல் குறைபாடுகளுக்கிடையிலும் விடாமல் பணியாற்றிய
அவரது தன்னம்பிக்கையும், செயலூக்கமும் –
நமக்கு தொடர்ந்து வழிகாட்டும்…
என்றும் நம்முடன் நிலைக்கும் ஸ்டீபன் ஹாகின்ஸ் நினைவுகள்..

உடல் ஊனம், தனி மனிதரின் சிந்தனைக்கோ, செயல்பாட்டிற்கோ –
தடங்கலாக இருக்க முடியாது என்று நிரூபித்துக் காட்டிய ஸ்டீபன்ஹாகிங்சை நினைக்கும்போது, நான் சில நாட்களுக்கு முன்பாக அறிய நேர்ந்த நம்ம ஊர் மனிதர் ஒருவரும் நினைவிற்கு வந்தார்….

உங்களுக்கும் அவரை
இந்த தருணத்தில் அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
ஹரியானாவைச் சேர்ந்த 45 வயது மதன்லால்…
பிறக்கும்போதே இரண்டு கரங்களும் இல்லாமலே
தான் இவர் பிறந்திருக்கிறார்….
Necessity is the Mother of invention .. என்பது போல், கைகள் இல்லாததால்
ஏற்பட்ட அவசியம் கைகள் செய்யும் அத்தனை வேலைகளையும்
கால்களால் செய்யக்கூடிய பழக்கத்திற்கு உள்ளாக்கி விட்டது…

தன் சொந்த உழைப்பில், யார் தயவுமின்றி உயிர் வாழும் இவர்
என்னவெல்லாம் செய்கிறார் …. பாருங்களேன்… வீடியோ கீழே –

நாம் பார்த்து, கற்றுக்கொள்ள வேண்டிய, தெரிந்துகொள்ள வேண்டிய மனிதர்கள், செய்திகள் – உலகில் நிறைய உண்டு…..!!!

———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to இங்கே இருந்தவர் …….?

  1. Mani சொல்கிறார்:

    அற்புதமான மனிதர் ஹாகின்ஸ்.

  2. புதியவன் சொல்கிறார்:

    ஸ்டீபனின் வில் பவர் பாராட்டத்தக்கது. வளர்ந்த நாடுகள் இத்தகையோருக்கு எவ்வளவு முக்கியத்துவமும், அதற்கான சௌகரியங்கள் செய்துதருகிறது என்பதும் இந்திய அரசு பாடம் படிக்கவேண்டிய விஷயங்கள். மற்றபடி அவருடைய கருத்துக்களை நான் ஏற்கவில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.