இப்போது தான் புத்தி வந்ததா நாயுடுகாரு…???


PTI5_1_2014_000209B

`தமிழகத்தைப்போல் ஆந்திராவிலும் அரங்கேற்றப்
பார்க்கிறார் மோடி!’ – சந்திரபாபு நாயுடு –

ஹீரோவா – வில்லனா என்று இப்போது தான்
தெரிகிறதா நாயுடுகாரு…?

கீழே இருப்பது செய்தி மட்டுமே –

( https://www.vikatan.com/news/india/119262-modi-is-trying-to-repeat-in-ap-
what-he-has-done-in-tamil-nadu-chandrababu-naidu.html )

தமிழகத்தில் நடத்தும் நாடகம்போல் ஆந்திராவில் நடத்த
பிரதமர் மோடி முயற்சி செய்வதாக ஆந்திர முதல்வர்
சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.
..

?????????????????????????????????????????????????????????

..

2018-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டைக் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்தது. விவசாயத்தை மேம்படுத்தும் வகையில்
பட்ஜெட் இருப்பதாகப் பா.ஜ.க தெரிவித்தாலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பட்ஜெட்மீது அதிருப்தி தெரிவித்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாகப் பா.ஜ.க-வின் முக்கிய
கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம், மத்திய பட்ஜெட்மீது கடும் அதிருப்தி தெரிவித்தது. ஆந்திர மாநிலத்தின் நீண்டநாள் கோரிக்கையான தலைநகர் அமராவதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் மற்றும் போலவரம் அணைக்கட்டு, விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகாததால், பட்ஜெட்மீது அக்கட்சி அதிருப்தி தெரிவித்தது.

அதன் விளைவாக சமீபத்தில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலிருந்து வெளியேறுவதாகத் தெலுங்கு தேச கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

இந்தச் சூழலில் ஜனசேனா கட்சியின் 4 வது ஆண்டுவிழாவில் பேசிய
அக்கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண், `சந்திரபாபு நாயுடு மகன்மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின், மாநிலம் முழுவதும் ஊழல் அதிகரித்துவிட்டது. தந்தையும் மகனும் கோடிக்கணக்கில் ஊழல் செய்கிறார்கள்’ என்று குற்றம்சாட்டி பரபரப்பைக் கிளப்பினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சந்திரபாபு நாயுடு தன் கட்சியின் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் வீடியோ கான்ஃபெரன்ஸிங்கில் கலந்துரையாடினார். அதில் அவர் பேசுகையில்,

”பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறாரோ அதையே ஆந்திர மாநிலத்திலும் முயற்சி செய்கிறார்.

ஆந்திராவுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதைதான் நாம் கேட்கிறோம். ஆனால், நம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதில் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பவன் கல்யாணை ஆந்திர அரசுக்கு எதிராகத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலைவீசுகிறது. இதற்கு சமீபத்தில் நடந்த உ.பி, பீகார் இடைத்தேர்தலில் பா.ஜ.க தோல்வி அடைந்தது சிறந்த எடுத்துக்காட்டு’ என்று விமர்சித்தார்.

———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இப்போது தான் புத்தி வந்ததா நாயுடுகாரு…???

 1. Pingback: இப்போது தான் புத்தி வந்ததா நாயுடுகாரு…??? – TamilBlogs

 2. NS Raman சொல்கிறார்:

  Congress successfully divided the AP for political reasons resulting unnecessary administration expenses like making new capital etc. Naidu being a good administrator should think for getting alternate funding like PP model or Andra NRI funding. Making tussle with BJP will gain only Congress the mistake he made 15 years back. It is also a time for BJP to learn how to handle allies and support Naidu like administrator. They should learn from Sonia how they supported blindly DMK to loot the nation.

 3. Mani சொல்கிறார்:

  BJP பற்றியும், ந.மோ. பற்றியும் இப்போது தான் புதிதாக
  தெரிய வருகிறதா ச. நாயுடுவுக்கு ?
  சேரும்போதும், சேர்ந்த பிறகு இன்று வரையிலும் இருவரும்
  சுயநலம் கருதியே அதைச் செய்தனர். இப்போது பிரியும்போதும் இருவரும்
  சுயநலம் கருதியே பிரிகின்றனர். இருவருமே RANK OPPORTUNISTS.
  ஆந்திர மக்கள் இருவருக்குமே பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இருவருமே RANK OPPORTUNISTS… இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
   அபூர்வமாக ஒரு சிலரைத்தவிர, பொதுவாக எல்லா அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்தும்.

   இப்போது நாயுடுகாரு கடுப்படைந்திருப்பது, ஆந்திராவிற்கு special status கொடுக்கவில்லை
   என்பதற்காக அல்ல. அவரது முக்கியமான காரணம் – பாஜக, அடுத்த தேர்தலுக்கு,
   நாயுடுவை கைகழுவிவிட்டு, ஜெகன் ரெட்டியுடன் கூட்டு வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.
   இதற்கான ரகசிய முயற்சிகள் ஆரம்பித்து விட்டது நாயுடுகாருவிற்கு புரிந்திருக்கிறது.

   அதன் விளைவு – இது ஒரு pre-emptive – தற்காப்பு முயற்சி.
   இவர்கள் மூவருமே இரக்கத்திற்குரியவர்கள் அல்ல…
   இரக்கத்திற்குரியவர்கள் இவர்களை நம்பி ஏமாறும் அப்பாவி மக்கள் தான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.