அளவற்ற அதிகாரமும், சாமர்த்தியமும் இருந்தால் இங்கே வாங்க முடியாத விஷயமும் உண்டோ…?


சர்வாதிகார நாடாக இருந்தால் பிரச்சினையே இல்லை.
நீதி, நேர்மை, நியாயம் – இவற்றைப்பற்றி எல்லாம் யாரும் பேசவே
முடியாது என்பதால், அதையெல்லாம் பற்றி யோசிக்க வேண்டிய
அவசியமும் இருக்காது.

ஆனால், நம்மைப் போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் –
சில சுயநல சக்திகளின் கையில் அதிகாரம் சிக்கி, உண்மைகள்
புதைக்கப்பட்டு, குற்றவாளிகள் நீதிமன்றங்களால் விடுவிக்கப்படும்
நேரங்களில் –

சத்தியம் ஜெயிக்கவும், உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் –
தங்களுக்கு தெரிந்த, புரிகின்ற உண்மைகளை வெளிக்கொண்டு வரவும்,
அதை சத்தம் போட்டு கூவவும்,, நீதி, நியாயத்தில் நம்பிக்கையுடைய
அனைவரின் கடமையும் ஆகிறது அல்லவா ….?

சில நேரங்களில், அனைத்து விஷயங்களையும் நேரடியாக எழுதிவிட
முடியாது……தெரிய வரும் உண்மைகளைக் கூட, பூசி மெழுகியும்,
பூடகமாகவும், சுற்றி வளைத்தும் தான் எழுத வேண்டியிருக்கிறது.

ஆனாலும், அப்படி எழுதப்படும் விஷயங்களிலிருந்து,
தேவையானவற்றை மட்டும் கிரகித்துக் கொள்ளக்கூடிய சாமர்த்தியம்
இந்த தளத்து வாசக நண்பர்களுக்கு உண்டு என்பதால் …
சுற்றி வளைத்து எப்படியோ போகிறது இந்த இடுகை….!!!


ஜட்ஜ் லோயா அவர்களின் மர்ம மரணம் பற்றிய வழக்கு சுப்ரீம்
கோர்ட்டில் நடைபெற்று வருவது நண்பர்களுக்கு நினைவிருக்கும்.
அதன் ஒரு பகுதியாக, அண்மையில் சுப்ரீம் கோர்ட்டில் நடந்த சில
விவாதங்களும், அதில் வெளியான சில விவரங்களும் கீழே –
(வார்த்தைகள் தொடர்பில்லாமல் இருக்கலாம்…! )

பாஜக அகில இந்தியத் தலைவர் திரு.அமீத் ஷா சம்பந்தப்பட்ட ஒரு
வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தபோது தான் ஜட்ஜ் லோயா
திடீரென்று மரணமடைந்தார் என்றும் அவரது மரணத்திற்கு “மாரடைப்பு”
காரணமென்று சொல்லப்பட்டதும் தெரிந்ததே.

அவர் மரணத்தைப் பற்றி பல சந்தேகங்களையும், கேள்விகளையும்
ஒரு செய்தித்தளம் கிளப்பியதையொட்டி, மஹாராஷ்டிர அரசு
மாநில commissioner of state intelligence, (CSI)-ஐ வைத்து
ஒரு விசாரணை நடத்தி, அவர் ஐந்தே நாட்களில்
விசாரணையை முடித்து விட்டதாகவும்,

ஜட்ஜ் லோயா மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை
என்று அவர் ரிப்போர்ட் கொடுக்க, மஹாராஷ்டிரா அரசு, பிரச்சினை
தீர்ந்து விட்டதாக அறிவித்தது.

அதை எதிர்த்து, ஜட்ஜ் லோயா அவர்களின் மரணத்தைப்பற்றி விசாரிக்க,
சுயேச்சையான ஒரு அமைப்பை ( special investigation team) அமைத்து,
உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று
-Bombay Lawyer’s Association சார்பில் மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த்
தவே அவர்கள், ஒரு பொதுநல அமைப்பின் சார்பில் பிரசாந்த் பூஷன்
அவர்கள், அட்மிரல் ராம்தாஸ் சார்பில் வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங்
ஆகியோர் – ஒரு தரப்பிலும் –

ஜட்ஜ் லோயா அவர்களின் மரணம் குறித்து ஏற்கெனவே, மஹாராஷ்டிரா
அரசின் commissioner of state intelligence, (CSI)- உரிய விசாரணைகளை
நடத்தி, எந்தவித சந்தேகமும் இல்லை என்று அறிக்கை கொடுத்து,
மஹாராஷ்டிரா அரசும் அதனை ஏற்றுக் கொண்டு விட்டபடியால் –
சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்தவித நடவடிக்கையும்
எடுக்கக்கூடாது; வழக்கு எந்தவித மேல் விசாரணையுமின்றி,
துவக்கத்திலேயே டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றும் கூறி –
மூத்த வழக்குரைஞர்கள் ஹரிஷ் சால்வே, முகுல் ரோதகி, சிசோதியா –
– ஆகியோர் மற்றொரு தரப்பிலும் வாதாடி வருகின்றனர்.

விசாரணையின் ஊடே வெளிவந்த ஒரு தகவல் –

ஹரிஷ் சால்வே, முகுல் ரோதகி, சிசோதியா ஆகிய 3 பேருமே,
திரு.அமீத் ஷா சம்பந்தப்பட்ட வழக்குகளில், அவரது சார்பில் ஏற்கெனவே
கீழ் கோர்ட்டில் வாதாடியவர்கள்…

ஒருவர் கடந்த 15 வருடங்களாக திரு.அமீத் ஷாவின் வழக்குரைஞராக
தொடர்ந்து பணியாற்றி வருகிறார்….
இவர்கள் தான் இப்போது மேற்கொண்டு விசாரணை எதுவும் கூடாது
என்று மஹாராஷ்டிரா அரசின் சார்பாக வாதாடுகிறார்கள்….!!!

இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று கடுமையாக ஆட்சேபித்து –
இந்த மூன்று லாயர்களும், மஹாராஷ்டிர அரசும் ஏன் துள்ளிக்குதித்து
முன்வருகிறார்கள்…?

உண்மையாகவே ஜட்ஜ் லோயாவின் மரணத்தில் பிரச்சினை எதுவும்
இல்லையென்றால், அது விசாரணையின்போது தன்னால் வெளிப்படப்
போகிறது… சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்பட்டால், அது இவர்களது
களங்கமும் துடைக்கப்பட்டது போல் தானே…? பின் ஏன் அதற்கு
எதிராக வாதாடுகிறார்கள்…?

இந்த விசாரணையால, இவர்களுக்கு என்ன பாதிப்பு வருமென்று
அஞ்சுகிறார்கள்…?

முதலிலேயே உச்சநீதிமன்றம் மிகத்தெளிவான உத்திரவை பிறப்பித்து
இருந்தது… இந்த வழக்கு முழுவதும், ஒரே நீதிபதியால் தொடர்ந்து
விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமென்று…

ஆனாலும், இதற்கு மாறாக, திரு.அமீத் ஷாவின் வழக்கை மும்பை
கோர்ட்டில் விசாரிக்க முதலில் நியமிக்கப்பட்ட ஜட்ஜ், 15 நாட்களில்
இடமாற்றம் செய்யப்பட்டார். அதற்கு எந்தவித காரணமும்
கூறப்படவில்லை….

அதற்குப் பிறகு வந்த ஜட்ஜ் லோயா அகால மரணம் அடைந்தார்.

அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட ஜட்ஜ், படுவேகமாக – பதினைந்தே
நாட்களில் விசாரணையை முடித்து, திரு.அமீத் ஷா உட்பட குற்றம்
சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து, வழக்கை
முடித்து வைத்து விட்டார்….!!!

அதை எதிர்த்து இப்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் ஷோரபுதினின்
சகோதரர் தாக்கல் செய்த அப்பீலை விசாரித்து வந்த ஜட்ஜும்
பாதியில் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டார். இப்போது வேறு
ஒருவருக்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது….
அவர் என்ன செய்யப்போகிறார், என்னவாகப் போகிறார் என்பது
பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டிய விஷயம்.

வழக்குரைஞர் துஷ்யந்த் தவே, இந்த விவரங்களை எல்லாம்
உச்சநீதிமன்ற விவாதத்தின்போது எடுத்துச் சொல்லி –

ஒரு தனி மனிதர் ( ….??? ) நீதித்துறையையே
ஆட்டி வைப்பது எப்படி என்று ஆவேசமாக கேட்டார்…!!!

————
Senior advocate Dushyant Dave, arguing for the Bombay Lawyers Association
seeking an independent probe into the death of Judge B.H. Loya, said “I have
not seen a situation where the entire judicial service is backing one man.

“It is a very broad statement. Please don’t repeat it,” Justice A.M. Khanwilkar,
part of the Bench led by Chief Justice Dipak Misra, told Mr. Dave sternly.

—————

ஜட்ஜ் லோயா மரணம் பற்றி கேரவன் செய்தித்தளம் சந்தேகம்
எழுப்பியதும், அவசர அவசரமாக – வேறு யாரும் நீதிமன்றத்திற்கு
போவதை தவிர்க்கும் வண்ணம் மஹாராஷ்டிர அரசு மாநில
commissioner of state intelligence, (CSI)-ஐ வைத்து விசாரணைக்கு
உத்திரவு இட்டது ஏன்…?

அந்த CSI – ஐந்தே நாட்களில் விசாரணையை மரணத்தில் எந்தவித
சந்தேகமும் இல்லை என்று கூறி முடித்து வைத்தது எப்படி…?

CSI விசாரணை அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில், அவர் முன்
நேரிடையில் ஆஜராகி, affidavit கொடுக்காமல், மும்பை
ஹைகோர்ட்டின் 4 ஜட்ஜுகள் பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்து,

ஜட்ஜ் லோயா மாரடைப்பால் தான் மரணமடைந்தார் என்று செய்தியாக
சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன…? ( அவர்கள் affidavit
கொடுத்தால், அவர்களை குறுக்கு விசாரணை செய்ய எதிர்தரப்பினருக்கு
வாய்ப்பு கிடைத்து விடும்…!!! )

ஜட்ஜ் லோயா தங்கியதாக சொல்லப்பட்ட, அரசு விருந்தினர் மாளிகை
ரெஜிஸ்டரில், அவர் தங்கியதற்கான பதிவு எதுவும்
செய்யப்படவில்லையே… அவர் அங்கு தங்கியதற்கான அத்தாட்சி ஏதும்
இல்லாத நிலையில், அது குறித்து உரிய விசாரணை ஏன்
நடத்தப்படவில்லை….?

விருந்தினர் மாளிகையில், ஏகப்பட்ட அறைகள் காலியாக இருந்த
நிலையில், ஜட்ஜ் லோயாவும், மற்ற இரு ஜட்ஜுகளும் –
ஆக மூன்று ஹைகோர்ட் நீதிபதிகள் ஒரே அறையில்
தங்கியதாக கூறுகிறார்களே… தனியறை பெற அவர்களுக்கு தகுதி
உண்டு… அறைகளும் அந்த சமயத்தில் காலியாக இருந்தன…?
இருந்தும் –

அவருக்கு தனியறை கொடுக்கப்படாதது ஏன்…?

அருகிலேயே சகல வசதிகளும் கொண்ட நல்ல மருத்துவமனை
இருக்கையில், ஜட்ஜ் லோயா தொலைவில் இருக்கும் Meditrina Hospital
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதேன்…?

மருத்துவ மனைக்கு கொண்டு வரப்படும்போதே, ஜட்ஜ் லோயா
இறந்த நிலையில் தான் இருந்தார் என்று ஒரு பக்கம் சொல்லி விட்டு,
மறுபுறம், அவருக்காக எழுப்பப்பட்ட மருத்துவமனை பில்’லில் –
பல சிகிச்சைகள் செய்ததாக பணம் வாங்கப்பட்டது எப்படி…?

——————
“For a patient who was allegedly brought dead, the final bill is, inter-alia, for “Non Invasive Lab”, “Neurosurgery”, “diet consultation”, “non-medical expenses”
amongst others and raised a bill of Rs.5540 and after giving discount of
Rs.1250, a net bill of Rs.4290. This is absolutely shocking and belies the claim of Meditrina Hospital fully.”
—————-

மேலும், மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததாக
சொல்லப்படுபவருக்கு, மூளை நரம்பு ( Neurosurgery ) நிபுணர் ஒருவர்
ஆபரேஷன் செய்ய நேர்ந்தது எப்படி…?

வழக்குரைஞர் துஷ்யந்த் தவே, விவாதத்தினூடே ஒரு கட்டத்தில்
கேட்கிறார் –

“When Dave insisted that the judges should ask their conscience
whether it was correct to permit Harish Salve, Mukul Rohatgi and
Shishodia – all of whom had defended Amit Shah earlier –

Justice Chandrachud asked him not to advise them about their conscience.
Dave asserted that allowing them to argue the case was tantamount to
obstructing justice.”

வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் வாதிடுகையில்,
மரணத்தில் சிறிதளவு சந்தேகம் எழுந்தால் கூட, அதை உரிய முறையில்
விசாரித்து, உண்மையை கண்டுபிடிக்க வேண்டியது நீதிமன்றத்தின்
கடமை.. ஜட்ஜ் லோயா அவர்களின் மரணத்தில் பல சந்தேகங்கள்
எழுப்பப்பட்டுள்ள நிலையில் விசாரனை அவசியம் தேவை என்றார்.

வழக்கு-விவாதங்கள் – வேறோரு தேதியில் மீண்டும் தொடரும்…

———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to அளவற்ற அதிகாரமும், சாமர்த்தியமும் இருந்தால் இங்கே வாங்க முடியாத விஷயமும் உண்டோ…?

  1. Pingback: அளவற்ற அதிகாரமும், சாமர்த்தியமும் இருந்தால் இங்கே வாங்க முடியாத விஷயமும் உண்டோ…? – TamilBlogs

  2. Mani சொல்கிறார்:

    ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு நீதித்துறையையும்
    ஆட்டிப்படைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது பல விஷயங்களில் தெரிகிறது.
    இது நாட்டிற்கு நல்லதல்ல. சிறந்த பாரம்பரியம் உள்ள உச்சநீதிமன்றம் இதற்கெல்லாம் இடம் கொடுக்காது என்கிற நம்பிக்கை இருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.