நாங்களும் சாப்பிடுவோம் – அடானியும் நன்றாகவே சாப்பிடுவார்…!!!


எல்லாம் நம்ம பணம் தான்… இப்போதைக்கு திரும்ப கொடுக்க வேண்டியில்லாத வங்கிக்கடன்…!!!

…!

மேடைக்கு மேடை ஒலிக்கும் குரல்.
அசத்தும் உடல்மொழியுடன், சப்தமாக விடுக்கப்படும் சவால்;

“நானும் சாப்பிட மாட்டேன்; மற்றவர்களையும் சாப்பிட விட மாட்டேன்..”
“இந்த ஆட்சி மீது எவராவது ஊழல் குற்றம் சுமத்த முடிந்ததா…?”

கீழே ஒரு கதை; அடானி குழுமத்தின் கதை;
இது சாப்பிட்ட வகையா அல்லது சாப்பிடாத வகையா என்பதை
படிப்பவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

———————-

குஜராத்தின் பொற்கால ஆட்சியில், தொழிலதிபர்களும்,
அவர்கள் மூலம் தொழில்களும் செழித்து வளர்ந்த காலத்தில்
துவங்கிய கதை இது.

முந்த்ரா என்னுமிடத்தில், தனியார் துறைமுகம் அமைப்பதற்காக,
சதுப்புநில காடுகளை சட்டத் விதிகளுக்கு மாறாக அழித்து, சுற்றுப்புற
சூழலை சேதப்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட 200 கோடி ரூபாய்
அபராதம் என்று பிரச்சினையோடு துவங்கிய கதை …

தொடர்ந்து, வளர்ந்து, பிற்காலத்தில் சம்பந்தப்பட்டவர்களே மத்தியில்
பொறுப்பேற்றுக்கொண்டபோது, அபராதம் ரத்து ஆனதுடன் நில்லாமல்,
மேற்கொண்டு புதிய விரிவாக்கங்களுக்கும் அனுமதி கிடைத்த
கதையைச் சொல்லும் அற்புதமானதொரு வரலாறு இது.

அதானி குழுமத்தின் முந்த்ரா நீர்வழி மேம்பாட்டுத் திட்டம் என்பது,
உலர்ந்த மற்றும் திரவ சரக்குகளுக்கான மேடைகளுடன் கூடிய நான்கு
துறைமுகங்களை அமைப்பது என்று துவங்கப்பட்டது…. சுமார் 700
ஹெக்டேர் பரப்பளவில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் பெரிய தொழில் துறை வளாகத்தையும் அமைக்க இந்நிறுவனம்
திட்டமிட்டிருந்தது. முந்த்ரா திட்டத்திற்கான பணியை ஒவ்வொரு
பகுதியாக மேற்கொள்ளவும் இந்நிறுவனம் முடிவு செய்திருந்தது.
( இந்த திட்டத்திற்காக, குஜராத் அரசு பல்லாயிரக்கணக்கான ஏக்கர்
நிலங்களை, throw away price என்று சொல்லப்படக்கூடிய விலைக்கு
கொடுத்ததுடன், ஏகப்பட்ட பிற சலுகைகளையும் செய்து கொடுத்தது…
முதலீடு – உங்களுடையது, நம்முடையது தான் … 🙂 🙂

ஆமாம், பாரத ஸ்டேட் வங்கி சுமார் 60,000 கோடி( அறுபதாயிரம் கோடி)
வரை கடன் கொடுத்து உதவியது… ( இதில் பெரும்பாலான பணம்
இன்னமும் திரும்பச் செலுத்தப்படாமலே இருக்கிறது என்பது
தனியே சொல்லப்பட வேண்டிய ஒரு கிளைக்கதை…! )

2012ஆம் ஆண்டில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல்
விதிமீறல்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளையடுத்து –
மத்திய அரசு இந்த நிறுவனத்தின் விதிமீறல்கள் குறித்து அறிய
ஆணையம் ஒன்றை அமைத்தது.

இந்த ஆணையம் அதானி குழுமத்தின் மேற்கண்ட திட்டத்தால்
சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதா என்றும், விதிகள் மீறப்பட்டுள்ளதா
என்று ஆய்வு மேற்கொண்டது. முடிவில், இந்த ஆணையம் அதானி
நிறுவனம் பல்வேறு விதிமுறைகளில் ஈடுபட்டிருப்பதையும், சுற்றுச்சூழல்
கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்தது.

மேலும், இந்த ஆணையம் முந்த்ராவில் அமைக்கப்பட்ட 4
துறைமுகங்களையும் தடை செய்ய வலியுறுத்தியது. கூடவே,
1 சதவிகிதம் அல்லது ரூ.200 கோடி அபராதம் விதிக்கவும்
வலியுறுத்தியது. இந்த அபராதத் தொகையைக் கொண்டு சுற்றுச்சூழல்
பாதிப்பை சரிசெய்யவும் பரிந்துரைத்தது.

மத்திய அரசு இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதுடன்
அந்நிறுவனத்திற்கு நோட்டீசும் அனுப்பியது. அதற்கு பதிலாக,
அந்த நிறுவனம் “தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் பல்வேறு
உள்கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால்,
குறைந்த அளவிலான அபராதம் விதிக்கவும் கூறியது.

இவ்வாறாக அனைத்து மதிப்பிடல்களும் முடிந்த பின்னரும் 2014ஆம்
ஆண்டில் சுற்றுச்சூழல் துறையின் மூத்த அதிகாரிகள் இந்த நிறுவனத்திற்கு
விதித்த அபராதமும், மற்ற கட்டுப்பாடுகளும் அவசியம் என்று
உறுதிப்படுத்தினர்.

ஆனால், நீதிமன்ற நடவடிக்கைகளை தொடராமல், இந்த அபராதத்தை
நேரடியாக விதித்தது கேள்விகளுக்குள்ளாக்கியது.
விஷயம், நிலுவையில் இருந்தபோது, மே, 2014-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு,
மத்தியில் புதிய பாஜக ஆட்சி ஏற்பட்டது.

புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் 2015ஆம் ஆண்டில், முந்தைய அரசு
விதித்த ரூ.200 கோடி அபராதம் சட்டப்படி விதிக்கப்படவில்லை என்று
கூறியது. மீண்டும் ஆய்வுகள் நடத்தி சுற்றுச்சூழல் பாதிப்புகள்
நடந்திருந்தால் அதற்கேற்றவாறு அபராதம் விதிக்கப்படும் என்று
அறிவித்தது.

ஆனால், பாஜகவின் இந்த தலைகீழ் நடவடிக்கை குறித்த அறிவிப்பு
எதுவும் அப்போது பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. அதாவது,
இந்த மாற்றங்கள் குறித்து, மீடியாவுக்கோ, பொதுமக்களுக்கோ
எதுவும் தெரியாது…!!!

2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிசினஸ் ஸ்டேண்டர்டு ஊடகம்
அதானி குழுமத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.200 கோடி அபராதத்திற்கு
எதிரான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது என்று செய்தி
வெளியிட்டது.

இதை மறுத்த மத்திய அரசு, அதானி நிறுவனத்திற்கு எதிரான
நடவடிக்கைக்குத் தடை விதிக்கவில்லை என்றும், சட்டப்படி சரியான
கட்டமைப்பு மற்றும் செலவு வரம்பு கணக்கிடப்பட்டு அபராதம்
விதிக்கப்படும் என்றும் – அப்போதைக்கு ஊடகங்களிடம் தெரிவித்தது.

பாஜக ஆட்சிக்கு வரும் முன்னர் நடந்தவை –

மே, 2014-க்கு முன்…!!!


பாஜக ஆட்சிக்கு வந்த பின் நடந்தவை –

பாஜக ஆட்சிக்கு வந்த பின்….!!!


ஆனால் உண்மையில், 2015ஆம் ஆண்டிலேயே சுற்றுச்சூழல் துறை
அமைச்சகம் அதானி நிறுவனம் எந்தவிதமான சுற்றுச்சூழல்
முறைகேட்டிலும், விதி மீறலிலும் ஈடுபடவில்லை என்று கூறிவிட்டது.

விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் கட்டுமானப் பணிகள்
நடைபெற்றுள்ளன என்று அந்த அறிக்கையில் மத்திய அரசு கூறியது.
அதானி நிறுவனம் அளித்த விளக்கங்களை மட்டுமே கொண்டு இந்த
முடிவை எடுத்துள்ளது என்பதும், எந்தவிதமான தன்னிச்சையான
நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்பதும் அரசு
ஆவணங்களின் மூலம் தெரிய வருகிறது.

அதே சமயத்தில் மேற்கொண்டு சில விரிவாக்கப்பணிகளை –
அதாவது, கப்பல் நிறுத்துமிடத்திற்கான விரிவாக்கப் பணிகளை
மேற்கொள்ள அதானி நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. ரூ.146.8 கோடி செலவில் இந்தப் பணிகளை மேற்கொள்ள
அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

2013ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் ஆய்வில் இந்த
நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளில் சதுப்பு நிலக்காடுகள் அளவிற்கான
ஆதாரம் இருக்கிறது என்று கூறியது.

2015ஆம் ஆண்டில் பாஜக அமைச்சரவை இந்த விதிமீறல்கள்
சட்டத்திற்குட்பட்டு நீதிமன்றங்களில் தனித்தனியாக தீர்க்கப்படும்
என்றும் கூறியது.

ஆனால் 2017ஆம் ஆண்டு ஜனவரியில் மத்திய அரசின் பதிவுகளில்
“இந்தக் கட்டுமானப் பணிகளில் சதுப்புநிலக் காடுகள்
அழிக்கப்படவில்லை. இதனால் எந்தவிதமான சுற்றுச்சூழல் பாதிப்பும்
இல்லை” என்று மாற்றப்பட்டுவிட்டது.


2017ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் இந்த நிறுவனத்தின் எல்லாப் பணிகளும்
சட்டப்பூர்வமாகத்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது; இதனால் எந்த
நடவடிக்கையும் தேவையில்லை என்று பிரச்சினைக்கே முற்றுப்புள்ளி
வைத்துவிட்டது.

மீண்டும் மே மாதத்தில் இந்நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கான
ஒப்புதல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அநேகமாக வருகிற
ஜூலையில் இந்தத் திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிகுறி அரசு ஆவணங்கள் மூலம்
தெரியவருகிறது.

( ஆதாரம் : தி ஸ்குரோல்…. வலைத்தள செய்திக் கட்டுரை )

200 கோடி ரூபாய் அபராதத் தொகையை ரத்து செய்யப்பட்டதை,
அதானிஜி எப்படி கொண்டாடி இருப்பார்…?
தான் மட்டுமா சாப்பிட்டிருப்பார்….?
தனக்கு சாப்பாடு கிடைக்க உதவி செய்த மற்றவர்களையும்
சாப்பாட்டில் பங்குகொள்ள அழைத்திருக்க மாட்டாரா…?

பிறகு எப்படி, ” சாப்பிட மாட்டேன்…….. ??? ”

———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to நாங்களும் சாப்பிடுவோம் – அடானியும் நன்றாகவே சாப்பிடுவார்…!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  1. காங்கிரஸ் ஆட்சியில் அதானி புறக்கணிக்கப்பட்டார் அல்லது தொல்லைகள் கொடுக்கப்பட்டார். (காங்கிற்கு அம்பானி). அதனால் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அதானி மிகவும் வேண்டப்பட்டவராகிவிட்டார்.

  2. அரசு கடன் கொடுக்கவில்லை என்றால் புதிய தொழில்கள் தொடங்கப்படாது, வேலை வாய்ப்போ, பொருளாதார மாற்றமோ ஏற்படாது. இது பொதுக் கருத்து. ஆனால், அவர்கள் கடனை திரும்பச் செலுத்தவிடாமல், தள்ளுபடி செய்து, தள்ளுபடி செய்த பணத்தில், தங்களுக்கு ஒரு தள்ளுபடி செய்துகொள்வது, அதிகார (வங்கி அதிகாரிகள்), அரசியல்வாதிகளது வழக்கம். எந்த வழக்கு வந்தாலும், யாரும் மாட்டமாட்டார்கள் (கேடி பிரதர்ஸ், கேபிள் பதிக்கவில்லை என்று மனசாட்சி இல்லாமல் நீதி வழங்கப்பட்டது சமீபத்தில்).

  3. ‘நானும் சாப்பிடமாட்டேன் மற்றவர்களையும் சாப்பிடவிடமாட்டேன்’ என்பது ஒரு ஸ்லோகன். அதற்கு அர்த்தம் தேடினால், நமக்குத்தான் வேலை இல்லை என்று ஆகிவிடும். பாஜக சொல்லும் எந்த ஸ்லோகனுக்கும் அர்த்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காங்கிரஸ்/திமுக போல் நேரடியாக கொள்ளையடிக்கவில்லையே தவிர, தெரியாமல் ஊழல் இருக்கும் என்றுதான் எனக்குப் படுகிறது.

  4. இப்போ, ‘மோடி’ பாஜகவை ஆதரிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் கண்களில் வேறு மாற்று தென்படவில்லை. அதுதான் முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன். காங்கிரஸ் பலகீனம். மற்ற கட்சிகள் ‘சுருட்டல் எக்ஸ்பர்ட்’-எல்லாம் திமுக டிரெயினிங். ஒருவேளை, அமெரிக்க அரசு (அல்லது முன்னேறிய நாடுகள்) நமது தேர்தலில் நிற்கமுடியுமானால் (பன்னாட்டு வர்த்தகம் மாதிரி), நிச்சயம் நமக்கு ஒரு நல்ல ஆல்டர்னேட் அரசு கிடைக்கும். அந்த மாதிரி சமயத்தில், ‘ஆட்சியாளர்களின்’ சம்பளம் இப்போது இருப்பதுபோல் பன்மடங்கு உயர்த்திவிடலாம் (அதாவது, ‘பிரதம மந்திரி’ பதவி-ஆட்கள் தேவை, இவ்வளவு சம்பளம், அமைச்சர்களுக்கு ஆட்கள் தேவை, இவ்வளவு சம்பளம் என்று திறமையானவர்களை வேலைக்கு அமர்த்தலாம்) – நான் நினைப்பது எக்ஸ்டிரீம் endஓ?

 2. Mani சொல்கிறார்:

  இந்த மாதிரி உருவாக்கப்படும் தொழிலதிபர்கள் தான் தேர்தல் சமயத்தில்
  பணமாகவும், பொருளாகவும் உதவுகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலின்பொது
  நாடு முழுவதுமாகச் சென்று 400 கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினாரே;
  அதற்கு bjp -kku source ஏது? இவர் மாதிரி, உருவாக்கப்பட்ட தொழிலதிபர்கள் தான்.
  அடுத்த தேர்தலிலும் இவர்கள் தான் பின்புலத்தில் நிற்கப்போகிறார்கள்.

 3. Pingback: நாங்களும் சாப்பிடுவோம் – அடானியும் நன்றாகவே சாப்பிடுவார்…!!! – TamilBlogs

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   the information in the above link is outdated;

   the latest position is –

   August, 25 – 2017 –
   Based on Inputs from Company, the Ministry
   internally concluded that the Company has
   done NO WRONG and caused NO DAMAGE.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.