திரு.ரங்கராஜ் பாண்டே – புத்திசாலித்தனமான பேட்டி … உளமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்….!!!அரசியலில் ஆர்வம் உடைய அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி –

“தந்தி டிவி”யில் “கேள்விக்கென்ன பதில்” நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை திரு.ரங்கராஜ் பாண்டே பேட்டி கண்ட நிகழ்ச்சி; 17/3/2018 – சனிக்கிழமையன்று ஒளிபரப்பப்பட்டது.. மறுநாள் ஞாயிறன்று மறு ஒளிபரப்பும் செய்யப்பட்டது…. பலர் கவனித்திருப்பார்கள்… இருந்தும், பார்க்கத் தவறியவர்களுக்காக அந்த பேட்டியை கீழே பதிப்பித்திருக்கிறேன்.

அச்சில் இருந்தால், கீழே பதிப்பித்து உடன் விவாதித்தும் இருக்கலாம்.
வீடியோவில் இருப்பதால், முதலில் நண்பர்கள் பார்க்க வேண்டும். அதன் பின்னர் பின்னூட்டங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

பேட்டியில் 3 முக்கியமான விஷயங்கள் என்று சொன்னார் பாண்டே.
ஆனால் இன்னும் பல விஷயங்கள் கேட்கப்பட்டன…
கேட்கப்பட்ட அனைத்துமே முக்கியமான விஷயங்கள் தான்
என்றே நான் நினைக்கிறேன்.

1) அதிமுக அரசை ஆட்டிப்படைக்கிறதா பாஜக …?

2) காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமா மத்திய அரசு…?

3) மத்திய அரசின் ஆட்சிக்கு ஆபத்து இருக்கிறதா…?

( மூன்றாவது கேள்விக்கான பதில் ஏற்கெனவே நம் எல்லாருக்குமே தெரியும்… மே, 2019 தேர்தல் வரை மத்திய அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை…!!!)

முக்கியமான கேள்விகளை கேட்பதிலும், அதற்கான உண்மையான
பதில்களை வெளிக்கொண்டு வருவதிலும் தான் பேட்டி காண்பவரின்
சாமர்த்தியம் இருக்கிறது.

பேட்டி கொடுக்கும் VIP -க்கு விருப்பமில்லையென்றால் –
கேள்விகளை தவிர்க்க முயற்சிப்பது சகஜமே…
பல சமயங்களில் பேட்டி கொடுக்கும் VIP யிடமிருந்து
கோபமான re-action ஐயும், சில சமயங்களில் நழுவல்களையும,
சில சமயங்களில் பயமுறுத்தல்களையும் ( 🙂 🙂 ) கூட காணலாம்….

ஆனால், சாமர்த்தியமான back up துணைக்கேள்விகளின் மூலம், அந்த நழுவல்களையும், கோபத்தையும், மறுப்பையும் வைத்து கூட – பேட்டியை காணும் ஆர்வலர்களுக்கு உண்மையை புரிய வைத்து விடுவதில் தான் பேட்டி காண்பவரின் சாமர்த்தியம் இருக்கிறது.

இந்த பேட்டியில், நழுவல்களையும், பயமுறுத்தல்களையும், கோபங்களையும், பதில் கேள்விகளையும் மீறி – நம்மால் பல விஷயங்களை புரிந்துகொள்ள முடிகிறது என்றால் – அதற்கு பாண்டே அவர்களின் சாதுரியமே காரணம்….

வாழ்த்துகள் ரங்கராஜ் பாண்டே….!

———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to திரு.ரங்கராஜ் பாண்டே – புத்திசாலித்தனமான பேட்டி … உளமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்….!!!

 1. BVS சொல்கிறார்:

  ஆமாம் கே.எம்.சார்.

  எவ்வளவு மறைக்க முயன்றாலும், அந்த ரஃபெல் விமான ‘ டீல்’
  விவகாரத்தை மறைமுகமாவது வெளிப்படுத்தி விட்டாரே ரங்கராஜ் பாண்டே.
  சாமர்த்தியசாலி தான்.

 2. Mani சொல்கிறார்:

  கே.எம்.சார்

  //முக்கியமான கேள்விகளை கேட்பதிலும், அதற்கான உண்மையான
  பதில்களை வெளிக்கொண்டு வருவதிலும் தான் பேட்டி காண்பவரின்
  சாமர்த்தியம் இருக்கிறது.//

  ரங்கராஜ் பாண்டேவுக்கு இதில் நல்ல தேர்ச்சி இருக்கிறது.
  பேட்டி கொடுப்பவர் கேள்விகளை திசை திருப்பும்போதும், பதிலுக்கு எதிர்கேள்வி
  எழுப்பும்போதும்,எந்த இடத்தில் உண்மை மறைக்கப்படுகிறது என்பதை பேட்டியை
  பார்ப்பவர்களுக்கு தெளிவாக உணர்த்தி விடுகிறார். முக்கியமாக ரஃபெல்
  விவகாரத்தில் நிச்சயமாக உண்மை மூடி மறைக்கப்படுவது தெரிகிறது. இப்படி
  மறைக்கப்படுவதாலேயே, அதைப்பற்றி வெளியாகும் செய்திகளில் உண்மை இருக்கிறது என்பதும் தெரிய வருகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சில பேட்டிகள் lie detecter test மாதிரி.
   முகத்தில் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ளத் தெரியாதவர்கள், இத்தகைய பேட்டிகளை avoid பண்ணுவது தான் அவர்களுக்கு நல்லது.
   இல்லையெனில், பேட்டிகளின்போது, same side goal போட்டுக் கொள்வார்கள். மறைக்க முயல்வது, தவிர்க்க முயல்வது எல்லாம் பார்ப்பவர்களுக்கு தெரிந்து விடும்.

 3. Pingback: திரு.ரங்கராஜ் பாண்டே – புத்திசாலித்தனமான பேட்டி … உளமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்….!!! – TamilBl

 4. R.Gopalakrishnan சொல்கிறார்:

  The Minister’s speech and answers are like an ordinary BJP election speaker.No answer is
  convincing. Instead reveals a mild threat to the interviewer. The Minister should get
  trained more on how to answer difficult and embarrassing questions in a fully matured way
  instead of raising the voice in an aggressive manner.

 5. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I have already sent my comments. Excepting BVS and Mani’s comments, nobody’s comments figures here. Anyhow, my view is that the Minister’s reply is amateurish. It is like an ordinary party
  functionary’s reply. Much aggressive one. The Minister needs to get trained on how to reply in a
  cool and sensible manner. The home work is totally missing on the part of the Minister.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கோபாலகிருஷ்ணன்,

   இன்று இந்த இடுகையை மிக அதிகமான நண்பர்கள் பார்த்திருக்கிறார்கள்…
   ஆனாலும், பின்னூட்டங்கள் குறைவு….
   காரணம்………..உங்களுக்கு புரியவில்லையா… 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. Ganapathy Kannan சொல்கிறார்:

  மளிகைக்கடை அண்ணாச்சியிடம், அரிசி வாங்கப் போன நாம், அரிசி இருக்கிறதா என்று கேட்டு, அவர் நம்மிடம் நேரடியாகப் பதில் சொல்லாமல், பருப்பு இருக்கிறது என்றால், நாம் அரிசி இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். அதுபோலத்தான் இந்த அம்மாவும் பேட்டிக்கு பதில் சொல்கிறார்கள். ஒரு கேள்வி கேட்டால், உடனே எதிர்கேள்வி. ஆனால் அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் வராது.

  மேலும் அந்த எதிர்க்கேள்வியின் த்வனியைப் பார்க்க வேண்டுமே. கேள்வி கேட்பவன் சாதாரண ஆளாக இருந்ததென்றால், அரண்டுதான் போய்விடுவான். அரசாங்கங்களின் அடிமடியிலேயே கைவைத்து, அரசு ரகசியங்களை உருவும், எட்வர்ட் ஸ்னோடன் போன்றவர்கள் இருக்கும் காலத்தில், விமானத்தின் விலையைச் சொன்னால், எத்தனை நட் மற்றும் எத்தனை போல்ட் என்று நமது எதிரிகள் தெரிந்து கொண்டுவிடுவார்கள் என்று சொல்வது கேப்பையில் நெய் வடிகிறது என்பதுபோல் உள்ளது. பொதுவாக எதிரிநாடுகள் ஊகிப்பது, அத்தகைய விமானத்தில் என்னவெல்லாம் ஏற்றமுடியுமோ, அவ்வளவும் அமைத்து இருந்தாலும், அந்த விமானத்தை நாம் எவ்வாறு வீழ்த்தலாம் என்றுதான். விமான விலையை வைத்து, எதிரியை மதிப்பிடுவது என்பது புதிய தியரி.

  அரசு நிறுவனத்தில் அல்லது எந்தவொரு நிறுவனத்தின் ஊழியர்களும், தம் வேலைப் பாதுகாப்பை எண்ணிக் கலங்கும்போது, சம்பந்தப்பட்ட பொறுப்புள்ள அதிகாரிகள் அல்லது உரிமையாளர்கள் அவ்வாறு இல்லை என்று சொன்னால் அவர்கள் பயம் இல்லாது போய்விடும். பாண்டே கேட்ட கேள்வியும், எதிர்பார்த்த பதிலும் அத்தகையதுதான். ஆனால் அந்தம்மா அதற்கு சொல்ல வேண்டிய ஒரேயொரு பதிலை மட்டும் விட்டுவிட்டு, துணைக் கேள்விகளாகக் கேட்டார்கள் பாருங்கள், ஐயோ சாமி, தாங்க முடியவில்லை. பொறுப்புள்ள ஒரு அமைச்சரின் பதிலா என்று திகிலாகி விட்டது.

  பொதுமக்கள் அந்த பேட்டியிலிருந்து என்ன தெரிந்துகொள்ள வேண்டுமோ, அதை வாய்விட்டு சொல்லாமல், மாற்றுக் கேள்விகள் கேட்டதன் வழியாக மிக நன்கு விளக்கிவிட்டார் அம்மையார் அவர்கள்.

  கணபதி கண்ணன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.