அற்புதமான உலகம்…. பிலடெல்பியா – வண்ண வண்ண பூக்களின் காட்சி…!!!


24 x 7 மணி நேரமும் நமது தொலைக்காட்சி சேனல்கள் ஓடிக்கொண்டே
இருக்கின்றன… திரும்ப திரும்ப அதே கூச்சல், குழப்பம், சண்டை,
போராட்டம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு – நீண்ட நெடிய சீரியல்கள்…
அலுப்பதே இல்லை அவர்களுக்கு…

அற்புதமான உலகம் இது… ஒவ்வொரு நிமிடமும், உலகின் ஒவ்வொரு
மூலையிலும் எவ்வளவோ அழகான சூழல்கள், காட்சிகள், நிகழ்வுகள்
அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன….

எல்லாவற்றையும் நேரில் பார்க்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, இன்றைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவற்றை எல்லாம் காட்ட ஒரு நாளில் ஒரு அரை மணி நேரம் கூடவா ஒதுக்க முடியவில்லை அவர்களால்…?

இதைச் செய்வோம் என்று அவர்களுக்கு ஏன் தோன்ற
மாட்டேனென்கிறது….?

சரி போகட்டும்…

என் தாகம் எனக்கு… எனக்கு வேண்டிய பல விஷயங்களை நான் தேடித்தேடி அலைந்து கொண்டே இருக்கிறேன்….
வழியில் நான் பார்க்கும், படிக்கும் பல விஷயங்களில், உங்களுக்கும்
ரசிக்கக்கூடிய, சுவாரஸ்யமான /பயனுள்ள விஷயங்களை இனி இங்கே
அடிக்கடி பதிவு செய்யலாமென்று நினைக்கிறேன்.

இன்று – 2018 Philadelphia Flower Show!
( full screen mode -ல் வைத்துப் பாருங்கள்… ரொம்ப ரசிக்கும்…!!! )

———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to அற்புதமான உலகம்…. பிலடெல்பியா – வண்ண வண்ண பூக்களின் காட்சி…!!!

 1. Pingback: அற்புதமான உலகம்…. பிலடெல்பியா – வண்ண வண்ண பூக்களின் காட்சி…!!! – TamilBlogs

 2. Mani சொல்கிறார்:

  நல்ல யோசனை; வரவேற்கிறோம்.
  தொடருங்கள்.

 3. tamilpaniV. RAMANAN சொல்கிறார்:

  அழகான படம். பகிர்வுக்கு மிக்க நன்றி

 4. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

  very nice

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.