” இதை ” யாருக்கு சமர்ப்பணம் செய்யலாம்….???மாறன் சகோதரர்கள் விடுவிப்பு – தொடரும் சிபிஐ கோணல்கள் என்று, “தி வயர்” ஆங்கில செய்தித்தளம் எழுதி, மின்னம்பலம் வலைத்தளம் அதனை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் ஒரு கட்டுரை கீழே –

—————————–

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு, மத்திய புலனாய்வு அமைப்பினால் (சிபிஐ) தண்டனைப் பெற்றுத்தர இயலவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலத்தில், வாதம் முடிந்த பிறகும் தோல்வியடையும் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டோருக்குத் தண்டனை வாங்கித் தருவதில், சிபிஐயின் வெற்றி விகிதம் 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது. 2ஜி வழக்குத் தீர்ப்பின்போது, தெளிவாக வழக்கின் விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார் சிறப்பு நீதிபதி.

பிஎஸ்என்எல் வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டது,
இந்த விஷயங்கள் எந்த அளவுக்குக் கோணலாகியுள்ளது என்பதை பரிசோதித்துப் பார்க்கப் பயன்படும்.

தயாநிதியின் வீடுகளில் சட்டவிரோதமாக நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக, உடனடியாக விசாரணை செய்து தீர்ப்பளித்திருக்க வேண்டும். காரணம், சிபிஐயின் விரிவான விசாரணைக்குப் பிறகே இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தயாநிதியின் வீட்டில் சட்ட விரோதமாகச் செயல்பட்ட டெலிபோன் எக்சேஞ்ச், ஐஎஸ்டிஎன் இணைப்புகளோடு கூடிய பிஎஸ்என்எல் நெட்வொர்க்கோடு இணைக்கப்பட்டிருந்தது; இது, சன் தொலைக்காட்சி அலுவலகத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. இதனால், சன் குழும தலைவரும் நிர்வாக இயக்குநருமான தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறன் மீதும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அதிக தரமுடைய தகவல்தொடர்புக்கு மட்டுமே இந்த ஐஎஸ்டிஎன் இணைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை சாதாரணமான மனிதர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

வணிக நிறுவனங்கள் வீடியோ கான்பரன்சிங் மேற்கொள்ளவும், ஊடக நிறுவனங்கள் வீடியோ மற்றும் எழுத்துபூர்வமான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், இது முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.

2007ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன்
இருந்தபோது, இந்தக் குற்றம் நிகழ்ந்ததாக வழக்கு தொடரப்பட்டது. அந்த
நேரத்தில், 4ஜி நெட்வொர்க் பயன்பாட்டில் இல்லை;

விலை உயர்ந்ததாக இன்டர்நெட் பயன்பாடு கருதப்பட்டதோடு, அதிக
தரமில்லாமலும் இருந்து வந்தது. அன்றைய காலகட்டத்தில், பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் 95 சதவிகிதத்துக்கும் அதிகமான பிராட்பேண்ட் சந்தையைத் தங்கள் வசம் வைத்திருந்தன.

தகவல்களை அனுப்புவதற்குப் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்ற
நிலைமை அப்போதிருந்தது. அதாவது, ஐஎஸ்டிஎன் இணைப்புகள்
விலையுயர்ந்ததாக இருந்தன.

அப்படிப்பட்ட சூழலில், 2007ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை சென்னை போட் கிளப்பில் உள்ள தயாநிதியின் வீட்டில் 323 ஐஎஸ்டிஎன்
இணைப்புகள் பொருத்தப்பட்டன. அதன்பிறகு, அவரது கோபாலபுரம்
வீட்டில் மேலும் 400 இணைப்புகள் கொடுக்கப்பட்டன.

இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த இணைப்புகள்
தரப்பட்டதற்கு பிஎஸ்என்எல்லில் எந்த ஆவணங்களும் இல்லை.

‘தயாநிதியின் பிரத்தியேக தேவைகளுக்காக இப்படியொரு எக்சேஞ்ச்
அமைக்கப்பட்டது குறித்து, இது சம்பந்தப்பட்ட பிஎஸ்என்எல்
ஊழியர்களுக்கு மட்டுமே தெரியும் வகையில், அந்த 323 இணைப்புகளும்
வடிவமைக்கப்பட்டிருந்தது’ என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஏற்பாடானது, முன்னாள் அமைச்சரின் வீட்டில் அத்தனை
இணைப்புகளும் பயன்படுத்தப்படுவது போலத் தோற்றத்தைக் கொடுத்தது.

ஆனால், அவரது வீட்டில் இருந்த பிஎஸ்என்எல் சேவை, தரையில்
பதிக்கப்பட்ட கேபிளின் வழியாக சன் தொலைக்காட்சி குழுமத்தினால்
பயன்படுத்தப்பட்டது.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இவை எப்படிப் பயன்படுத்தப்பட்டன என்பதை அறிவது மிகவும் கடினம். எது எப்படியானாலும், வணிக நோக்கங்களுக்காகவே இந்த ஐஎஸ்டிஎன் இணைப்புகள் பயன்படுத்தப்பட்டன.

அப்படி இல்லையென்றால், எதற்காக தயாநிதி தனது வீடுகளில் 323
இணைப்புகளைப் பெற வேண்டும்? 2007ஆம் ஆண்டு இதுகுறித்து
தொலைதொடர்புத்துறை செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பித்தது சிபிஐ.
இந்த ஆவணங்கள் எல்லாமே, அலுவல்ரீதியாகக் கிடைப்பவை.

இம்மாதிரியான சூழலில், இந்த வழக்கில் தனது தரப்பை நிறுவுவதில்
சிபிஐ தோற்றது ஏன் என்பது குறித்த தெளிவு கிடைப்பதில்லை. தயாநிதி
உட்பட அனைவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி, சன் தொலைக்காட்சிக்கு உதவும் எண்ணத்தோடு தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாகக்
குற்றம்சாட்டுவதற்கான போதுமான ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த மோசடி நடந்ததற்கான தொலைபேசி அழைப்புகள் அடங்கிய சிடியை நீதிமன்றத்தில் அளிக்காதது ஏன் என்றும் சிபிஐயிடம் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

பிஎஸ்என்எல் அமைப்பில் இந்த தொலைபேசி இணைப்புகள் பதிவு
செய்யப்படாவிட்டால், அது தொடர்பான அழைப்புகள் குறித்த ஆவணங்களை சிபிஐ எப்படி சேகரித்திருக்க முடியும் என்பதில் எந்தத் தெளிவும் இல்லை.

தயாநிதியின் வீடுகளில் நெட்வொர்க் அமைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள்
இருந்தால், அதுவே இதனை நிரூபிக்கப் போதுமானது.

அலைவரிசை மற்றும் நிலக்கரி ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களோடு தொடர்பு இருந்ததாக, சிபிஐயின்
முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது கேள்வி எழுப்பியிருந்தது
உச்ச நீதிமன்றம். அப்போதே, சிபிஐ மீதான நம்பிக்கை பறிபோனது.

மோடியின் ஆட்சிக்காலத்தில் இந்த ஊழல்கள் குறித்த விசாரணை
தொடங்கியபோதும், இப்போது அது எந்த நிலைமையில் உள்ளதென்று
தெரியவில்லை.

அதேநேரத்தில், வரலாற்றில் முதன்முறையாகத் தனது விசாரணையையும் குற்றப் பத்திரிகையையும் தானே சிபிஐ மறுத்ததையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

போலி என்கவுன்ட்டர் வழக்கில் சொராபுதீன், கவுசர் பீ மற்றும்
துளசிராம் பிரஜாபதி ஆகியோர் கொல்லப்பட்டது குறித்து,
உச்ச நீதிமன்றத்தில் தனது முந்தைய வாதங்களை மறுத்தது சிபிஐ.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்ட பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி
ஆட்சிக்கு வந்தபின்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பின்னர், இந்த வழக்கில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகளும்
விடுவிக்கப்பட்டனர். 55 சாட்சிகளில் 28 பேர் தங்களது சாட்சியத்துக்கு
எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர். சிபிஐயின் பாதுகாப்பு
குறைந்ததாகச் சாட்சிகள் கருதியபோது, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம்
மேற்பார்வை செய்து கொண்டிருந்தது என்பது தனிக்கதை.

ஒட்டுமொத்தமாக, தற்போது சிபிஐ மீதான மரியாதை கந்தலாகிப்
போயுள்ளது; குற்றங்களுக்கான தண்டனை பெற்றுத் தரும் அதன் திறன்
படுபாதாளத்தில் விழுந்துள்ளது.

நன்றி :
1) https://thewire.in/government/cbi-maran-brothers
2) https://www.minnambalam.com/k/2018/03/19/30

——————————-

இப்போது, இந்த வழக்கை முன்னெடுத்துச் சென்ற சிலரில்
யாருக்காவது இதை ” சமர்ப்பணம் ” செய்ய வேண்டுமென்றால் –
அதை யாருக்கு செய்ய பரிந்துரை செய்வீர்கள்….?

– காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியின்போது – துவக்க காலத்தில்,
அரும்பாடுபட்டு, அரிய தகவல்களை சேகரித்து, இந்த வழக்கை
சிபிஐ – பதிவுசெய்ய மூல காரணமாக இருந்த திரு.குருமூர்த்தி
அவர்களுக்கா…? ( பாஜக, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வழக்கு
dilute செய்யப்பட்டதையும், “மெது”வாக்கப்பட்டதையும் –
இது “நம்ம ஆட்சி ஆயிற்றே” என்று கண்டும், காணாமலும் “கப்சிப்”
என்று போய் விட்டது எப்படி ….? எதிர்க்கட்சியாக இருந்தபோது தீவிரம்
காட்டப்பட்டதும், ஆளும் கட்சியான பிறகு, அதே விஷயம்
கண்டுகொள்ளாமல் விடப்பட்டதும் நம்புபவர்களை நட்டாற்றில்
கைவிடும் சோகம் அல்லவா ….? )

அல்லது –

– 400 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நிகழக்காரணமாக இருந்த
ஒரு கிரிமினல் குற்றம் என்பதை, வெறும் ஒண்ணேமுக்கால் கோடி
ரூபாய் அளவிற்கு bsnl -க்கு நஷ்டம் ஏற்படச்செய்ததாக மட்டும் வழக்கு
மாறும் அளவிற்கு “அதி தீவிர” அக்கறை கொண்டு வழக்கை
நடத்திச்சென்ற தொலைதொடர்புத்துறை திரு.ர.ச.பிரசாத் அவர்களுக்கா…?

அல்லது –

அரசாங்கத்திடமிருந்து சம்பளம் வாங்கிக்கொண்டு, அக்கறையின்மையின்
மூலம் எதிர்தரப்பினர் மனம் மகிழுமாறு அற்புதமாக செயல்பட்டு, வழக்கு தோல்வியடைய காரணமாக இருந்த அதிகாரிகள் மற்றும் வழக்குரைஞர்களுக்கா…?

அல்லது –

“காசே தான் கடவுளடா… அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா…”
என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியுள்ள அந்த
“காசு படைத்தவர்”களுக்கா…?

அல்லது –

இந்த நாட்டின் இளிச்சவாய் மக்களுக்கா…???

———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ” இதை ” யாருக்கு சமர்ப்பணம் செய்யலாம்….???

 1. Mani சொல்கிறார்:

  I will vote for OPTION NUMBER – 5 above.

 2. Pingback: ” இதை ” யாருக்கு சமர்ப்பணம் செய்யலாம்….??? – TamilBlogs

 3. Raghavendra சொல்கிறார்:

  400 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் என்றிருந்ததை
  1.75 கோடி “பில்” போடாமல் பயன்படுத்தப்பட்டது என்று திரு.ர.ச.பிரசாத்
  தானே சார்ஜை simply செய்ய அனுமதித்தார் ?
  இதை அவர் செய்ததன் பின்னணி என்ன என்று ஆராய வேண்டும்.

 4. புதியவன் சொல்கிறார்:

  கா.மை சார்….. என்னுடைய அசெஸ்மென்ட், சிபிஐ வழக்கறிஞர்கள், அதிகாரிகள் யாரும் கேபபிள் ஆட்கள் கிடையாது. காங்கிரஸோ பாஜகவோ, ஊழல் என்ற சப்ஜெக்டில், இரண்டுபேருக்கும் வித்தியாசம் கிடையாது. ஊழலை ஒழிப்போம் என்று பாஜக சொல்வதற்கு கொஞ்சம்கூட காரணம் கிடையாது. பாஜக ஆட்சியில் அனேகமாக எல்லோரையும் தப்பவைத்துவிட்டது. பாஜக ஆதரவாளர்கள், மோடி அவர்களுக்கு இதில் சம்பந்தம் கிடையாது, அவர் அமைச்சர்கள் இந்த மாதிரி உள்ளடி வேலை செய்தால் அவர் என்ன செய்வார், காங்கிரஸ் ஆட்சிகாலத்து அதிகாரிகள் இப்படிச் செய்தால் மோடி என்ன செய்யமுடியும் என்றெல்லாம் சொல்லமுடியாது. யார் தலைவரோ, அவர்தான் பொறுப்பு. இல்லாவிட்டால், ‘நான் ….. மற்றவரையும் சாப்பிடவிட மாட்டேன்’ என்று எதற்கு கூவ வேண்டும்? ‘நான் சாப்பிட மாட்டேன், மற்றவர்களை பற்றி எனக்குத் தெரியாது, அவர்களை என்னால் கட்டுப்படுத்த முடியாது’ என்றுதானே அவர் சொல்லவேண்டும்?

  நீங்கள் குறிப்பிட்ட யாரையும்விட, இந்திய நாட்டின் அரசியல் அதிகாரத்துக்குத்தான் இந்தத் தோல்வியை சமர்ப்பணம் செய்யவேண்டும்.

 5. அறிவழகு சொல்கிறார்:

  இளிச்ச வாயர்களை தவிர.

  மற்றவர்கள்……!?

  நல்லாருங்க மக்கா…..!

  கடவுள் நின்று கொல்லும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.