(தொடர்ச்சி) ஒரு தோல்வி இத்தனை சந்தோஷம்…….? (மறக்க முடியாத சில நினைவுகள் – பகுதி-4 )அடுத்து, அவன், யூனியன் சார்பாக வாதிடும் வழக்குரைஞரை சந்திக்க
விரும்பினான்… அவருக்கும் உயர்நீதிமன்ற வளாகத்திலேயே,
அலுவலகம் ( at law chambers..) இருந்தது…


இந்த இடுகையின் முதல் பகுதியை படிக்க –
……………

அவரை அதற்கு முன்னதாக அவன் சந்தித்ததில்லை. ஆனால்
கேள்விப்பட்டிருக்கிறான். இடதுசாரி சார்புடையவர்… அநேகமாக
தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளையே எடுத்துக் கொள்வார்.
சம்பளத்தைப்பற்றி கவலையும் படமாட்டார்… கேட்கவும் மாட்டார்.
என்ன கொடுத்தாலும் பெற்றுக் கொள்வார்…
இடதுசாரி தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் அவரையே நாடும்.

மதிய உணவு இடைவேளையில் சந்திக்கலாம் என்று அவர்
சேம்பரில் காத்திருந்தான்… அவர் வந்தவுடன் தன்னை அறிமுகப்படுத்திக்
கொண்டான். அவன் எதிர்பாராதவிதமாக, அவர் சொன்னார் –
“உங்களைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.. நாராயணன்
சொல்லி இருக்கிறார்…உங்களைப் போன்றவர்கள், நிர்வாகத்தில்
இருப்பது மிகுந்த திருப்தி அளிக்கிறது…”

அவன் தொடர்ந்து, அவரிடம் வழக்கைப்பற்றிய சில விவரங்களை
சொன்னான். counter affidavit -ல் சேர்க்கப்பட்டிருக்கும் சில விஷயங்கள்
அவருக்கு எப்படி உதவியாக இருக்கும் என்பதையும் சொன்னான்.
அவர் சொன்னார்.. ” இதுவரை, இந்த விவரங்கள் எனக்கு தெரியாது.
இவை எனக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன..
இந்த அளவு நீங்கள் உதவியிருப்பதற்கு மிக்க நன்றி…
இதற்கு மேல் நான் பார்த்துக் கொள்கிறேன்…”

திருச்சிக்கு திரும்பி வந்தவன், அலுவலகம் சென்றவுடன் முதலில்
ஜி.எம். அவர்களை சென்று பார்த்தான்…அரசு வக்கீலை பார்த்து, பேசிய
விவரங்களை சொன்னவன், மறக்காமல்/மறைக்காமல், யூனியன்
தரப்பு வக்கீலையும் பார்த்து பேசியது குறித்தும் சொன்னான்.
ஜி.எம். சிரித்துக்கொண்டே ” I wish you success in your efforts” – என்றார்…

இரண்டு, மூன்று மாதங்கள் சென்றன.. இடையில் உயர்நீதிமன்றத்தில்
3-4 hearings நடந்ததாக அறிந்தான்…அந்த வழக்கில் அதிக நாட்கள்
பிடிக்க காரணமில்லை…. சாட்சி, சம்மன் என்றெல்லாம் எதுவும்
கிடையாது. ஆவணங்களை வைத்துக்கொண்டு இரண்டு தரப்பும்
விவாதிப்பதோடு வழக்கு முடிந்து விடும்.

தொழிற்சாலை – அலுவலகத்தில் ஒரு நாள் மாலை 5 மணியை
தாண்டி இருக்கும்… திடீரென்று, உள்ளே ஒர்க் ஷாப்பிலிருந்து பலத்த
ஆரவாரங்களும், சந்தோஷக் கூச்சல்களும், ஆபிஸ் அறை வரை
கேட்டது. ஐந்தரை மணிக்கு தொழிற்சாலை வேலை முடிந்து
அனைவரும் கிளம்பி விடுவார்கள். தன் Staff member ஒருவரை
உள்ளே ஒர்க் ஷாப் சென்று என்ன விஷயம் என்று பார்த்து வரச்
சொன்னான்…

அவர் திரும்ப வருவதற்குள், ஐந்தரை மணி சங்கு ஊதி விட்டது…
தொழிற்சாலை main gate அருகே, வெளியே தொடர்ந்து பட்டாசு
வெடிக்கும் சப்தம் கேட்டது… அதற்குள் உள்ளே போன Staff member
திரும்ப வந்தார்….அவருக்கு ஒரே மகிழ்ச்சி… சந்தோஷமாகச் சொன்னார்

– ” சார், ஹைகோர்ட்டில் HRA கொடுத்து தான் ஆக வேண்டும் என்று
ஜட்ஜ்மெண்ட் கொடுத்து விட்டார்களாம்…”

(யூனியன் வக்கீல், சென்னையிலிருந்து, யூனியன் செயலாளருக்கு
தொலைபேசி மூலம் கேஸ் ஜெயித்து விட்ட விவரத்தை தெரிவித்திருக்கிறார்… அதன் விளைவே உள்ளே உற்சாக கொண்டாட்டம்….!!!)

( அவன் அலுவலகத்தில் இருந்தவர்களுக்கு கூட, அதில் அவன் பங்கு
என்னவென்பது தெரியாது…!!! )..

உடனடியாக ஜி.எம். ரூமுக்குச் சென்றான்.
அவருக்கு அதற்குள்ளாகவே, செக்யூரிடி மூலம் தகவல் வந்து விட்டது…!

அவனைப் பார்த்ததும், சிரித்துக் கொண்டே –
” So – finally we have lost the case…!!!
Are you Happy Now…? ” என்றார்.

அவனும் சிரித்துக் கொண்டே –
“the credit goes to you Sir” என்றான்…

” NO – NO…It is all entirely your efforts.. You deserve it” -என்றார்.
உண்மையிலேயே உயர்ந்த மனிதர்.

தன்னிடம் பணி புரிபவர்களை மிகச்சரியாக புரிந்துகொண்டு,
அவர்களை தகுந்த முறையில் நடத்தும் –
இந்த மாதிரி boss களுடன் வேலை செய்வதற்கு கொடுத்து
வைத்திருக்க வேண்டும்… அவன் வாழ்நாளில் சந்தித்த,
மிகச்சிறந்த அதிகாரிகளில் இவரும் ஒருவர்.

(ஆனால், ஜெனரல் மேனேஜர் லெவலில் இருப்பவர்கள் 3 வருடத்திற்கு ஒரு முறைபணி மாற்றம் செய்யப்படும் முறை வழக்கத்தில் இருந்ததால்
இத்தகைய ஒரு combination அமைவது அபூர்வமே…!!! )

சந்தோஷமாக இருந்தது….வெளியே கூட்டம் கலைந்து போகட்டும்
பிறகு வெளியே போகலாமென்று நினைத்து,
மெதுவாக நடந்து, gate அருகே வந்தான்…
Main Gate அருகே, gate meeting நடந்து, கொண்டாட்டங்கள் முடிந்து,
ஊழியர்கள் சந்தோஷமாக கலைந்து சென்று விட்டார்கள்.

gate -ன் வெளிப்பக்கம், யூனியன் செயலாளரும்,
இன்னும் இரண்டு மூன்று முக்கியமானவர்களும் – இவன் வெளியே
வருவதற்காக காத்திருந்தார்கள்…

இவனைக் கண்டதும், நாராயணன் முன்வந்து, மகிழ்ச்சியுடன்
ஆரத்தழுவிக்கொண்டார்….”எல்லாம் உங்களால் தான் சார்” என்றார்.

இவன் சொன்னான்…

“நாராயணன்.. நான் இதில் வெறும் டூல் மட்டும் தான்…
இதற்காக நீங்கள் யாருக்காவது
நன்றி சொல்ல வேண்டுமானால், முதலில்
கடவுளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்… ஆனால்,
அதைச் சொன்னால், உடனே அவர் அட்ரஸை கேட்பீர்கள்…
( கம்யூனிஸ்ட் தோழர் …!!! )

அடுத்து – ஜி.எம்.க்கு நன்றி சொல்ல வேண்டும்… அவர் சீட்’டில்
வேறு யார் இருந்தாலும், எனக்கு இந்த சுதந்திரமும் கிடைத்திருக்காது;
என்னால் இந்த மாதிரி செயல்பட்டிருக்கவும் முடியாது…” என்றான்.

————————

இறுதியில் அந்த தீர்ப்பு எப்படி வந்தது என்றறிய
எல்லாருக்குமே ஆவலாக இருக்கும்….
“அது” – கிட்டத்தட்ட இந்த மாதிரி அமைந்தது……..

” தொழிற்சாலை, நகரத்தின் எல்லையிலிருந்து குறிப்பிட்ட
தூரத்திற்குள் அமையவில்லை என்பதால், அங்கு பணி புரியும்
ஊழியர்களுக்கு HRA பெறும் தகுதி இல்லை – என்று நிதியமைச்சகம்
கூறி இருக்கிறது….

இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மற்ற விவரங்களையும்,
தொழிற்சாலையின் வரைபடத்தையும் வைத்துப் பார்க்கும்போது, –

தொழிற்சாலையும், அதன் 4 பக்க சுவர்களும்
(the main factory and its four walls…) நகரத்தில் எல்லையிலிருந்து
குறிப்பிட்ட தூரத்திற்குள் வரவில்லை என்பது உண்மை தான்
என்றாலும் கூட –

தொழிற்சாலையிலிருந்து வெளியிடப்படும் பயன்படுத்தப்பட்ட
கழிவு நீர், சில கிலோமீட்டர் தூரம் வரை பெரிய குழாய்கள் மூலம்
எடுத்துச் செல்லப்பட்டு,

பின்னர் ஒரு filter point -ல் சுத்தம் செய்யப்பட்டு, மறுசுழற்சிக்கு
விடப்படுகிறது… அந்த filter point தொழிற்சாலையால் தான்
நிர்வகிக்கப்படுகிறது. அங்கிருக்கும் உபகரணங்களும், கட்டிடமும் –
தொழிற்சாலையால் தான் நிர்வகிக்கப்படுகிறது….
அதன் அருகே செயல்படும், போஸ்ட் ஆபிசில் பணிபுரியும்,
தபால்-தந்தி இலாகாவைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு
HRA அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

தொழிற்சாலையின் ஒரு சிறு பகுதி நகராட்சியின் எல்லைக்குள்
வந்தாலும் கூட, அந்த தொழிற்சாலையே அந்த எல்லைக்குள்
இருப்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். தொழிற்சாலையையும்,
அதன் filter point-ஐயும் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாது.

தொழிற்சாலையின் ஒரு பகுதி, HRA வழங்க தகுதியுள்ள இடத்தில்
அமைந்திருப்பதால், அந்த தொழிற்சாலையில் பணிபுரியும்
அத்தனை தொழிலாளர்களும் HRA பெற தகுதி உள்ளவர்களாகிறார்கள்…”

————————————————–

இதற்கு அடுத்த மறக்க முடியாத சில நினைவுகள் காண –

அந்த மறக்க முடியாத மார்ச் 30-ந்தேதி ….!!!

.
—————————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to (தொடர்ச்சி) ஒரு தோல்வி இத்தனை சந்தோஷம்…….? (மறக்க முடியாத சில நினைவுகள் – பகுதி-4 )

 1. anbudan Ponnivalavan சொல்கிறார்:

  wish to see you sir…
  if you happen to come to chennai please inform me sir…

  நல்லவர்களுக்கு நல்ல எண்ணம் கொண்டவர்களுக்கு
  உதவி தக்க சமயத்தில் வேண்டிய நேரத்தில் உதவி
  எங்கிருந்து வேண்டுமானாலும் வரும்
  யாரிடம் இருந்து வேண்டுமானாலும் வரும்…
  கண்டிப்பாக வரும்…
  ஏன்…
  சில சமயம் கெட்டவர்கள் உலகம் கருத்துபவர்களிடம் இருந்து கூட வரும்…

  • anbudan Ponnivalavan சொல்கிறார்:

   *சில சமயம் கெட்டவர்கள் என்று உலகம் கருதுபவர்களிடம் இருந்து கூட வரும்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    அன்புடன் பொன்னிவளவன்,

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
    கடந்த சில வருடங்களாகவே நான் சென்னையில் தான் இருக்கிறேன்.
    அவ்வப்போது, திருச்சி சென்று வருவேன்.

    நான் என்னை விளம்பரப்படுத்திக் கொள்வதையோ,
    வலைத்தள சம்பந்தமாக யாரையும் நேரில் சந்திப்பதையோ தவிர்த்து வருகிறேன்…
    மன்னிக்கவும்.
    நீங்கள் எப்போது வேண்டுமானாலும், என்னை மெயில் மூலம்
    தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • anbudan Ponnivalavan சொல்கிறார்:

     ஐயா
     வணக்கம்.

     நல்லவர்களைச் சந்திப்பதும் பார்த்து பேசுவதும்
     எனது மனதுக்குப் பிடித்தமான ஒன்று….
     வேறொன்றும் இல்லை – வேறெதுக்காகவும் இல்லை..

     சொந்த ஊர் திருச்சி மாவட்டம் துறையூர்;
     9வது முதல் கல்லூரி (B.Com.) வரை – திருச்சி St. Joseph’s School மற்றும் கல்லூரி
     CA Articleship 3 years – திருச்சி தான் – மொத்தம் 10 வருடங்கள்

     தற்போது சென்னை வாசம். 32 வருடங்கள்.
     இடையில் இரண்டு வருடம் மஸ்கட் .

     hope your stand on seeing younger generations (like me…!!!)
     “இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?”

     அன்புடன்,
     பொன்னிவளவன்.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      பொன்னிவளவன்,

      உங்களைப்பற்றிய விவரங்களை அறிய மகிழ்ச்சி.
      ஒரே மண்ணில் இருந்திருக்கிறோம்….!!!

      இங்கே பின்னூட்டங்கள் மூலம் எப்போது வேண்டுமானாலும்
      கருத்து பறிமாற்றம் செய்து கொள்ளலாம்.

      நம்பிக்கையோடு செயல்படுவோம்…!!!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

 2. Sridhar சொல்கிறார்:

  WOW!!!

  Great to see the extended factory logic, thereby not negating the intention of the Government and at the same time addressing the “Genuine” sufferings.

  Congrats now sir, for a event happened many years ago.:-)

 3. paiya சொல்கிறார்:

  Super . Today the employees in the factory may not aware as how they are getting HRA in their pay pocket but behind this the great battle and won by ‘Avan’ will be remembered for ever.

 4. Pingback: (தொடர்ச்சி) ஒரு தோல்வி இத்தனை சந்தோஷம்…….? (மறக்க முடியாத சில நினைவுகள் – பகுதி-4 ) – TamilBlogs

 5. அறிவழகு சொல்கிறார்:

  I pray to God for ‘Avan’ to continue the same like this rest of his life and for life long good health sir.

  • அறிவழகு சொல்கிறார்:

   ‘the same like this rest of his life’

   I definitely believe that this site and many of it’s articles are do the same effort of things.

   May God be behind you to help.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    அறிவழகு,

    உங்கள் நல்லெண்ணங்களுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 6. mekaviraj சொல்கிறார்:

  இது மாதிரியான சுவையான அனுபவங்களை தொடர்ந்து எண்ணி பார்க்க(எழுத) வேண்டுகிறேன் . மிக நிறைவான வாழ்வைய்யா உங்கள் வாழ்வு..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   mekaviraj,

   அரசுப் பணி ஆயிற்றே…. boss-கள் மாறிக் கொண்டே இருப்பார்கள்…. எப்போதும், எல்லா boss-களும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்களே…! எனது இதே குணங்களால், நிம்மதியை இழந்து தவித்த காலமும் உண்டு.

   வாழ்க்கை என்பது இரண்டும் கலந்தது தானே…! ஆனால் – “உண்மை வழியில் செல் – அறம் உனைக் காக்கும்” என்பதை அனுபவம் உணர்த்தியது… சமயம் வாய்க்கும்போது அதையும் சொல்ல முயற்சிக்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.