நான் நிரந்தரமானவன், அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை -T.M.S – 96 ….!!!நான் 10 வயது சிறுவனாக முதன் முதலில் கேட்ட டி.எம்.எஸ். பாடல் –

அன்னமிட்ட வீட்டிலே, கன்னக்கோல் போடவே
எண்ணம் கொண்ட பாவிகாள் – மண்ணாய் போக நேருமே…!
மந்திரிகுமாரி (1950 ) படத்தில் ஜி.ராமநாதன் அவர்களின்
இசையமைப்பில், மருதகாசி அவர்கள் இயற்றிய பாடல்….

எத்தனையோ ஆயிரம் பாடல்கள் கேட்டாகி விட்டது….
இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் டி.எம்.எஸ்.ஸை மறக்க
முடியுமா…?

எனக்கு பிடித்த, அவரது ஆரம்பகால பாடல்கள் சில –

உள்ளம் உருகுதய்யா முருகா …

கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் –

அழகென்ற சொல்லுக்கு முருகா –

எத்தனையோ பாடல்களை உதாரணத்திற்கு சொல்லலாம்.
அவரது லைவ் நிகழ்ச்சிகள் யூட்யூபில் நிறைய இருக்கின்றன.

மாதிரிக்கு ஒன்றிரண்டு மட்டும் இங்கே –

கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்….

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…

“நான் நிரந்தரமானவன், அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” – என்று
கவிஞர் கண்ணதாசன் சொன்னது அவருக்கு மட்டுமல்ல…
டி.எம்.சௌந்திரராஜன் அவர்களையும் சேர்த்து தான்…!!!

அவர்களின் படைப்புகள் உயிர்ப்புடன் இருக்கும்போது –
கலைஞர்களுக்கு மரணம் ஏது…?

———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to நான் நிரந்தரமானவன், அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை -T.M.S – 96 ….!!!

 1. Mani சொல்கிறார்:

  //அவர்களின் படைப்புகள் உயிர்ப்புடன் இருக்கும்போது –
  கலைஞர்களுக்கு மரணம் ஏது…?//

  முற்றிலும் உண்மை. படைப்பாளிகளுக்கு இறப்பே கிடையாது
  என்பது மிகவும் சரியான வார்த்தை.

  நல்ல பாடல்கள் தந்தமைக்கு நன்றி கே.எம்.சார்.

 2. D. Chandramouli சொல்கிறார்:

  TMS was a phenomenon. When listening to the current songs, I really miss the voice of TMS. Every one of the songs listed by you is a rare gem.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.