மாஃபியா கும்பல் – மருந்து தயாரிப்பிலும், தனியார் மருத்துவமனைகளிலும் …கட்டுப்படுத்துவது எப்படி…?


மூன்று வாரங்களுக்கு முன்னால்,

(பகுதி-2) – 1737 % கொள்ளை – செயல்பட்டதால் தூக்கியெறியப்பட்ட அதிகாரி …

” 1737 % லாபம் … கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவ மனைகளும், மருந்து தயாரிப்பு கம்பெனிகளும் “

-என்கிற தலைப்பில் இதே தளத்தில் 2 பகுதிகளாக, ஒரு இடுகை பதிவாகி இருந்தது.

சில தனியார் மருத்துவ மனைகளும், மருந்து தயாரிப்பு கம்பெனிகளும் சேர்ந்து நோயாளிகளை எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்று அதில் சில குறிப்பிட்ட சம்பவங்களையும், அனுபவங்களையும் விவரித்து எழுதி இருந்தேன்.

அவற்றிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைந்த – அந்த கொள்ளையை தடுக்க முயன்ற, ஒரு சீனியர் மத்திய அரசு அதிகாரி, அந்த பொறுப்பிலிருந்து எப்படி தூக்கியடிக்கப்பட்டார் என்பதையும் விவரித்திருந்தேன்.

..

..
இதன் பிறகு வெளியான ஒரு ஜூனியர் விகடன் இதழ், இந்த தலைப்பில் இன்னும் விவரமாக, இன்னும் பல பின்னணிகளை விவரித்து, ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது…. நமது கட்டுரையையும் தாண்டி இன்னும் பல விஷயங்களை அது வெளிப்படுத்தி இருக்கிறது. அவையும் நண்பர்களின் பார்வைக்கு வரவேண்டும் என்பதற்காக, அந்த கட்டுரையின் குறிப்பிட்ட பகுதிகளை கீழே பதித்திருக்கிறேன்.( ஜூனியர் விகடனுக்கு நன்றியுடன்…)

மத்திய அரசுக்கு இதெல்லாம் எத்தகைய உறுத்தல்களையும் ஏற்படுத்தவில்லை… முக்கிய எதிர்க்கட்சிகளும் இந்த நிகழ்வுகளை கண்டு கொள்ளவில்லை. … இதிலிருந்து இந்த மாஃபியா கும்பலின் செல்வாக்கை தெரிந்து கொள்ளலாம்….

கட்டுப்படுத்த வேண்டிய அரசே இவர்களுக்கு அடி பணிந்தால் -இவர்களை எல்லாம் யார் கட்டுப்படுத்தப்போகிறார்கள்…?

எத்தனை விஷயங்களுக்குத்தான் மக்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல முடியும்..?
அதுவும் லேசில் நடக்கக்கூடியதா…?


..

——————————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to மாஃபியா கும்பல் – மருந்து தயாரிப்பிலும், தனியார் மருத்துவமனைகளிலும் …கட்டுப்படுத்துவது எப்படி…?

 1. R.Gopalakrishnan சொல்கிறார்:

  This is a super article exposing the medical mafia. Why no comments so far?

 2. புதியவன் சொல்கிறார்:

  மிக முக்கியத் தகவல்கள் எல்லோருக்கும் போய்ச் சேரவேண்டும் என்ற எண்ணத்துடன் நீங்கள் பல இடுகைகள் வெளியிடுகிறீர்கள். உங்கள் உழைப்புக்கு பாராட்டுகள் கா.மை. சார்.

  மெடிகல் மாஃபியா – இது பெரிய சப்ஜெக்ட். இந்தத் துறையில் இருப்பவர்கள் எழுதியுமிருக்கிறார்கள். படிக்கப் படிக்க, பகீர் என்று தோன்றுகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   உங்களை காணோமே; எங்காவது டூர் போயிருக்கிறீர்களோ என்று யோசித்துக் கொண்டிருந்தேன்… நீங்களே வந்து விட்டீர்கள்.
   உங்கள் recognition-க்கு நன்றி.

   நம்மால் எதையும் மாற்ற முடியாது என்பது புரிகிறது. இருந்தாலும், எனக்கு தெரிய வருவதை, எனக்கு தோன்றுவதை – மற்றவர்களுடன், பகிர்ந்து கொள்ள வேண்டும்… அவர்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என்று தோன்றுவதால் தான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

   ஆனால், எனக்கு ஆண்டவன் மீது நம்பிக்கை இருக்கிறது. அவன் வகுத்திருக்கும் system மீதும் நம்பிக்கை இருக்கிறது. தவறு செய்பவர்கள் இன்றில்லா விட்டாலும் – என்றாவது நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

   என்ன … தண்டனை சீக்கிரமாக கிடைத்தால், மற்றவர்களுக்கு பயம் உண்டாகும். தவறுகள் அதிகம் தொடராது. ஆனால், இங்கே மனிதர்களின் கோர்ட்டிலும் சரி – அங்கே ஆண்டவனின் கோர்ட்டிலும் சரி – எக்கச்சக்கமாக தாமதம் ஆவதால் –
   குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லையோ என்கிற சந்தேகம் நமக்கு இருந்துகொண்டே இருக்கிறது.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.