ஹெச்.ஏ.எல். லை விட்டு விட்டு…. அம்பானி ஏன்…?

கீழே இருக்கும் சில புகைப்படங்களை முதலில் பார்த்து விடுங்கள்….

 


..

..

..

..

..
..
..

..


..

..

..

….

இரண்டு நாட்களுக்கு முன்னர், HAL நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றை பார்த்தேன்…. மனக்குமுறலை அடக்க முடியவில்லை…!

இந்தியாவில் போர் விமானங்கள் உற்பத்தி,
ஹெலிகாப்டர்கள் உற்பத்தி, விமானங்களுக்கு தேவைப்படும்,
உபகரணங்கள், உதவி இயந்திரங்கள், விமானங்களை சர்வீஸ் செய்ய
மற்றும் பழுதுபார்க்க தேவையான வசதிகள்…
ராக்கெட் தயாரிப்பில் பயன்படும் உபகரணங்களின் உற்பத்தி –
இவற்றில், நாடு சுதந்திரம் பெறும் முன்னரே துவங்கப்பட்டு,
படிப்படியாக வளர்ச்சியடைந்து, விஸ்தரிக்கப்பட்டு, அதிநவீன
தொழில் நுட்பங்களை பெற்று,

உலகின் பல்வேறு இடங்களிலுள்ள விமான தயாரிப்பு
தொழிற்சாலைகளுக்கும், பாகங்கள் தயாரித்து அனுப்பும் நிலையில்
உள்ள ஹிந்துஸ்தான் விமானதயாரிப்பு தொழிற்சாலை, ( HAL )
தாங்கள் எந்தெந்த வகையான தொழில் நுட்பங்களை பெற்றிருக்கிறோம் என்று விளம்பரப்படுத்தி இருப்பவை தான் மேலேயுள்ள புகைப்படங்கள்…

இத்தனை வசதிகளை, அனுபவத்தை,
தொழில் நுட்பத்தை – தன்னிடத்தே கொண்டிருக்கும் HAL
என்கிற இந்திய அரசுக்கு சொந்தமான  ஒரு நிறுவனத்தை –

இதற்கு அனுபவம் பத்தாது, தேவையான தொழில்நுட்பங்கள் அதன்
வசம் இல்லை, புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ளும் திறனும்
அதற்கு இல்லை, தேவைப்படும் கால அவகாசத்தில் செய்து
முடிக்கக்கூடிய தொழிலாளர்கள் அதனிடம் இல்லை……
போன்ற காரணங்களை கூறி,

புதிய போர் விமானங்களை தயாரிப்பதில் இந்த இந்திய, பொதுத்துறை
நிறுவனத்தை நிராகரித்து விட்டு,

கமர்ஷியல் விமானங்களில் ஆயிரம் முறை பறந்திருந்தாலும்,

போர் விமானங்களை நேரில் பார்த்திருக்ககூடிய அனுபவம் கூட
இல்லாத –

திருவாளர் அனில் அம்பானி இந்த துறையில்,
எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் புதிதாக துவங்கி இருக்கும்
அம்பானி-டெஃபென்ஸ் தொழிற்சாலையுடன்
கூட்டு வைத்துக் கொள்ள முனைந்திருக்கும் –
ஃப்ரென்சு ரஃஃபேல் போர் விமான ஒப்பந்தம் – நியாயமானது தானா…?

இது யாருடைய நலன் கருதி எடுக்கப்பட்டிருக்கும் முடிவு…?

 

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to ஹெச்.ஏ.எல். லை விட்டு விட்டு…. அம்பானி ஏன்…?

 1. Pingback: ஹெச்.ஏ.எல். லை விட்டு விட்டு…. அம்பானி ஏன்…? – TamilBlogs

 2. Mani சொல்கிறார்:

  மக்களின் மனம் கவர்ந்த தலைவரின் நலன் கருதி இருக்கும் 🙂

 3. Mani சொல்கிறார்:

  விமான அனுபவத்தை விடுங்கள்.
  அதுவா முக்கியம் ?

  தலைவருக்கு அம்பானி செய்வதை
  ஹெச் ஏ எல் -ஆல் செய்ய முடியுமா ?

 4. seshan சொல்கிறார்:

  இது யாருடைய நலன் கருதி எடுக்கப்பட்டிருக்கும் முடிவு…?

  அம்பானி அம்பானி அம்பானி அம்பானிஅம்பானி அம்பானி அம்பானி அம்பானிஅம்பானிஅம்பானிஅம்பானிஅம்பானிஅம்பானிஅம்பானி
  அம்பானிஅம்பானிஅம்பானிஅம்பானிஅம்பானிஅம்பானிஅம்பானி
  அம்பானி அம்பானிஅம்பானிஅம்பானிஅம்பானிஅம்பானிஅம்பானி

 5. LVISS சொல்கிறார்:

  Going through some websites for the answer I gathered the following few reasons
  The deal does not require the French supplier to partner with Ambani –So the govt has no role in the French company choosing its partner in India–It is left to them —
  The French company is not ready to transfer manufacturing tech to HAL -They were reportedly willing to share it with DRDO —
  There is an article on this deal in the website ” Indian Defence Research Wing ” which should clear doubts about the deal

  Kosuru–126 Rafael jets will be manufactured in India under future deals

 6. BVS சொல்கிறார்:

  //So the govt has no role in the French company choosing its partner in India–It is left to them //

  You want us to believe this ?

  //The French company is not ready to transfer manufacturing tech to HAL //

  Why shd. we accept this condition which goes against Indian Public Sector Company ?

  //Kosuru–126 Rafael jets will be manufactured in India under future deals//

  So there is a second round “kosuru” also 🙂 🙂

  • LVISS சொல்கிறார்:

   Mr BVS To believe or not is your problem
   There may be other reasons why Dessault did not partner with HAL -You have to find it for yourself from the net —
   If you cross check the facts by going through various websites there will be more clarity on this deal -It is a long story —

   • BVS சொல்கிறார்:

    வெப்சைட்டில் பாஜக சார்பாக வெளியிடப்படும் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் போலியான செய்திகள், கட்டுரைகளை எல்லாம் தேடி அலைந்து, கண்டுபிடித்து அதை அப்படியே தேவவாக்காக எடுத்துக்கொண்டு, அவற்றை நம்பி இங்கே “counter” போடுவது எல்லாம் “பாஜக அனுதாபிகளுக்கு” மட்டுமே
    உரித்தான பொழுதுபோக்கு. சொந்த புத்தியை நம்புபவர்கள் எது நிஜம்,
    எது இட்டுக்கட்டப்பட்ட விஷயம் என்பதை வெகு சுலபமாக அறிவார்கள்.
    அதற்கு மோடி அபிமானிகளின் துணைதேவையில்லை.

   • BVS சொல்கிறார்:

    //Mr BVS To believe or not is your problem//

    I have no problem at all. IT IS ONLY YOU who is struggling hard to find cooked
    information to counter the points raised herein.

    //If you cross check the facts by going through various websites //
    கைப்புண்ணுக்கு கண்ணாடியா தேவை ? அம்பானிஜிக்கும் மோடிஜிக்கும் இடையில் ஒன்றுமே இல்லைஎன்று மடையன் கூட நம்ப மாட்டானே. நீங்கள் நிஜமாகவே நம்புகிறீர்களா ?

 7. புதியவன் சொல்கிறார்:

  இந்த மாதிரிச் செய்திகளைப் படிக்கும்போது உங்களுக்கு ப்ரஷர் அதிகமாவதில்லையா? இந்த மாதிரிச் செய்திகள் எனக்கு மிகவும் ப்ரஷரைத் தருகிறது. ‘எதை யார் செய்யவேண்டும்’ என்பதுகூட பாஜகவுக்குத் தெரியவில்லையே. ஒருவேளை ஹெச்.ஏ.எல், தரமாகச் செய்துதரவில்லை என்றால், அதனை வெளிப்படையாக விவாதத்துக்கு உரியதாக ஆக்கலாமே.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   “ப்ரஷர் அதிகமாவதில்லையா? -வா…?”
   எக்கச்சக்கமாக எகிறுகிறது…
   அதனால் தான் எழுதுகிறேன்…
   யாம் பெற்ற ப்ரஷர் பெறுக எல்லாரும் … 🙂 🙂

   -அந்த ப்ரஷரை குறைக்கத்தான், முடிந்த வரையில் நகைச்சுவையாக
   எழுத முயற்சிக்கிறேன்…!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 8. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

  H.A.L.was under shambles over a long period. like other PSU s in Bangaluru.It is a empty perungaaya dubba-no use.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.