இந்த கேள்வியை கேட்க 40 நாட்களா…? கட்சி நலனுக்காக, நாட்டு நலனை பலி கொடுக்கிறதா பாஜக …???


சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்து 40 நாட்களுக்குப் பிறகு,
கெடு முடிவடைவதற்கு முந்தைய நாள் தான் மத்திய அரசுக்கு
இந்த திடீர் சந்தேகம் முளைத்திருக்கிறது…

சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் சொல்லி இருக்கும் “ஸ்கீம்”
என்றால் என்ன…? என்கிற சந்தேகம்…

இந்த “சந்தேக நிவர்த்தி”-க்காக மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை
நாளைய தினம் அணுகப்போகிறதாம்…
– மீண்டும் தள்ளிப்போடல்…
– தாமதப்படுத்தும் முயற்சி…

எப்படியாவது கர்நாடகா தேர்தல் நடந்து முடியும் வரை தீர்ப்பை
நிறைவேற்றுவதை தவிர்க்க வேண்டும் என்பது பாஜக அரசின்
திட்டம்…

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டால், தேர்தல் நடத்தை
விதிகளை காரணம் காட்டி தள்ளிப்போடலாமென்று
நினைத்திருந்தது… அதற்காகவே இத்தனை நாட்கள் காத்திருந்தது.

ஆனால், முந்தாநாள், தேர்தல் ஆணையம் -கோர்ட் ஆர்டரை
நிறைவேற்ற எந்த தடையும் இல்லை என்று விளக்கம் சொன்ன
பிறகு மாற்று வழியை யோசித்திருக்கிறது..

எனவே இன்று முளைத்திருக்கிறது இந்த சந்தேகம்.

சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் மிகத்தெளிவாக கூறி இருக்கிறது…
தமிழ்நாட்டின் பங்கிலிருந்து 14.25 டிஎம்சி நீரை குறைத்து, அதை
கர்நாடகாவிற்கு கொடுக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு
மாற்றத்தை தவிர, மற்ற அனைத்து விஷயங்களிலும் –

காவேரி ட்ரைபியூனல் ஏற்கெனவே அளித்திருக்கும் உத்திரவுகள்
அப்படியே செல்லும் என்றும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை
என்றும்.

காவேரி ட்ரைபியூனல் ஏற்கெனவே, தனது இறுதித் தீர்ப்பில் வெகு
தெளிவாகச் சொல்லி இருக்கிறது…

தனது உத்திரவுகளை நடைமுறைப்படுத்த என்ன செய்ய வேண்டும்
என்பதையும் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறது…

1) Cauvery Management Board மற்றும்
2) Cauvery Water Regulatory Committee –
– ஆகியவை அமைக்கப்பட வேண்டும் என்றும்

அந்த அமைப்புகளில், யார் யார் இடம்பெற வேண்டும்
என்பதும், அந்த அமைப்பிற்கான அதிகாரங்கள் எத்தகையதாக
இருக்க வேண்டும் என்றும்…
அந்த தீர்ப்பில், எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி விவரமாகவும்,
தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இப்போது பாஜக அரசுக்கு ஏற்பட்டிருப்பது செயற்கையான சந்தேகம்.
கர்நாடகா தேர்தலை முன்னிட்டு செயற்கையாக கிளப்பப்பட்டுள்ள
சந்தேகம்.

பாஜக ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்…
தமிழகம் – மத்திய அரசிடம் எதையும் பிச்சை கேட்கவில்லை.
அரசியல் சாசனப்படி தனக்குள்ள உரிமைகளைத் தான் கேட்கிறது.

மத்திய அரசு, அரசியல் சாசனப்படியான தனது கடமையை
ஒழுங்காக செய்ய வேண்டும் – – சுப்ரீம் கோர்ட்டின் உத்திரவை
அப்படியே நிறைவேற்ற வேண்டியது அரசியல் சாசன விதிகளின்படி
மத்திய அரசின் கடமை… இதைத்தான் வலியுறுத்துகிறது தமிழகம்.

மத்திய அரசில்,
தற்போதைக்கு அமர்ந்திருக்கும்
பாஜக என்கிற கட்சி –
தனது கட்சியின் நலனுக்காக,
அரசியல் சாசனத்தை வளைக்குமேயானால்,
அதனால் உண்டாகக் கூடிய விளைவுகளையும் சந்திக்க நேரிடும்…

சமூக ஆர்வலர்களை அடக்க, ஸ்கூட்டரில் போகும்போது –
லாரியை ஏற்றிக் கொலை செய்வது
பாஜகவின் மத்திய பிரதேசத்தில் வேண்டுமானால் நடக்கலாம்…

ஆனால், இது தமிழ்நாடு…
தங்கள் உரிமையை எப்படி நிலை நாட்டுவது
என்று தமிழக மக்களுக்கு தெரியும்.

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to இந்த கேள்வியை கேட்க 40 நாட்களா…? கட்சி நலனுக்காக, நாட்டு நலனை பலி கொடுக்கிறதா பாஜக …???

 1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  இது தமிழ்நாடு…
  தங்கள் உரிமையை நிலை நாட்டுவது என்றால் தமிழக தலைவர்களுக்கு தெரியாது .

 2. Pingback: இந்த கேள்வியை கேட்க 40 நாட்களா…? கட்சி நலனுக்காக, நாட்டு நலனை பலி கொடுக்கிறதா பாஜக …??? – TamilBlogs

 3. அறிவழகு சொல்கிறார்:

  /// சமூக ஆர்வலர்களை அடக்க, ஸ்கூட்டரில் போகும்போது –
  லாரியை ஏற்றிக் கொலை செய்வது
  பாஜகவின் மத்திய பிரதேசத்தில் வேண்டுமானால் நடக்கலாம்…///

  ——–

  பாவிகள். மாபாவிகள்.

  யார் அவர் தம் சொல்லாலும் செயலாலும் மற்றவர்களுக்கு நன்மையை நாடுகிறாரோ அவருக்கு கடவுள் நன்மையின் பால் செல்ல பொறுப்பேற்றுக்கொள்கிறார்.

  அதே போல் அதற்கு எதிராக நடப்பவர்களை…கொலை பாவிகளை …..

  ”கடவுள் பார்த்துக்கொள்வார்”. அது யாராக இருந்தாலும்.

  இன்னும்,

  அநியாயம் செய்யபட்டவர்களின் பிரார்த்தனைக்கு பயந்துகொள்ளுங்கள் என்பதும் வேதவாக்கு.

  அற்ப பதவி சுகத்திற்காக ஒரு மாநில மக்களையே வஞ்சிக்க முனைவது இன்றில்லாவிடில் நாளை அதற்குண்டான வெகுமதியை அவர்கள் கொடுத்தே தீர வேண்டும்.

  இது தன் கட்சி, தனக்கு வேண்டியவர் என்று கண்மூடி ஆதரிப்பவர்களுக்கும் பொருந்தும்.

 4. மதுரைத்தமிழன் சொல்கிறார்:

  இந்தியாவிற்காக மோடிக்கு முட்டு கொடுக்கும் பக்தால்ஸ் பலர் இப்போது அவர் தமிழகத்திற்கு நல்லது செய்யவில்லை என்ற மனநிலைக்கு வந்திருப்பதை இப்போது சமுக வலைதளங்களில் பல இடங்களில் காணமுடிகிறது…இப்படி மோடி செய்தால் பாஜகவிற்கு கிடைக்கும் ஆதரவும் போய்விடும் என்ற அவர்களின் ஆதங்க பதிவை பல இடங்களில் பல பக்தால்ஸ் எழுதி இருப்பதை படித்தேன்

 5. LVISS சொல்கிறார்:

  Instead of depending on the govt at the centre .NDA or UPA or any other govt why not T Nadu try this technique —Time has come for the state to look for alternatives –

  https://timesofindia.indiatimes.com/india/Innovative-water-management-technique-from-Gujarat-gains-global-acceptance/articleshow/52503170.cms

  • Rajan சொல்கிறார்:

   Here is another best example of Modi Bakth.

   Mr.Bakth, have you really gone through what is stated in the above news item.
   Do you think it will really solve our problems even to ONE percent ?
   Why you people are so BLIND and not understanding the reality of situation ?

   Bjp leadership gets encouraged only because of those who blindly support them
   whatever they do even it affects their own people. It is a SHAME when even
   well educated people behave like “illiterate slaves”

 6. Rajan சொல்கிறார்:

  Mr. Bakth,

  Your so called good efforts in Gujarat is appreciated only M.Bakths.

  Don’t just go by news items of 3 years old.
  First Try to Answer this current crisis faced by Gujarat people.
  They don’t have even Drinking Water now.

  //After inaugurating it in September 2017, the government highlighted the potential of the the Sardar Sarovar dam to irrigate almost 1.8 million hectares of agricultural land in Gujarat.

  Why then have the farmers in Prime Minister Narendra Modi’s home state been banned from drawing water from the Narmada river (starting 15 March), just six months after their hopes were raised by the PM? Did it happen because the “BJP used the water stocked in dams from last year’s monsoon to fill up Sabarmati, so that PM Narendra Modi can land his seaplane” and “light a diya in Rajkot’s Aji dam” prior to the 2017 Gujarat elections? Or was it because of deficient rainfall in neighbouring Madhya Pradesh, which reduced the share of water Gujarat would get?//

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.