காவேரி ஆணையம் …ஏமாற்ற முயன்றால் என்ன செய்யலாம்…?

..
..

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது –

Inter State River Water Disputes Act, 1956 -ன், பிரிவு 6A-ன் கீழ்
ஒரு “ஸ்கீம்” (Scheme) உருவாக்கப்பட வேண்டும் என்பதைத் தான்…

அதற்கு முன்பாக –
முதலில் பிரிவு 6(1)-ல் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும்
என்பதை கட்டாயப்படுத்தி இருக்கிறது (இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும்
சொல் “SHALL” ( may அல்ல…).. எனவே மத்திய அரசுக்கு இந்த தீர்ப்பை
அரசிதழில் வெளியிட வேண்டியது…. கட்டாயம்.

அடுத்து, பிரிவு 6(2)-ல், தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு,
அந்த உத்திரவு, சுப்ரீம் கோர்ட்டின் உத்திரவுக்கு சமம் ஆகிறது –
என்பதையும் உறுதிப்படுத்துகிறது.( இதன் மூலம், சுப்ரீம் கோர்ட்
ஆர்டரை யாரும் மீற முடியாது என்பதும் தெரிவிக்கப்படுகிறது….)

….

இதன் பின்னர் தான் பிரிவு 6(A) வருகிறது….
அதில் கூறப்பட்டிருப்பவை தான் மத்திய அரசின் விருப்பத்திற்கு
விடப்பட்டிருக்கின்றன… அதாவது தீர்ப்பாயத்தின் / சுப்ரீம் கோர்ட்டின்
தீர்ப்பை நிறைவேற்ற உருவாக்கப்படும் “ஸ்கீம்”-க்கு –

கோர்ட் உத்திரவை நடைமுறைப்படுத்த, ஒரு அமைப்பை (structure)
ஏற்படுத்தியாக வேண்டும்… அதற்கு –
-என்ன பேரும் வைக்கலாம்… எப்படியும் அழைக்கலாம்.. !!!

அது Board ஆகவும் இருக்கலாம்… அல்லது கர்நாடகாவை ஏமாற்ற
(திருப்திப்படுத்த) அதற்கு Authority என்றோ Committee என்றோ
அல்லது வேறு எதாவது பெயரோ வைக்கலாம்.

ஆனால், அந்த ஸ்கீமின் வேலை –
தீர்ப்பை அமல்படுத்துவது தான்… அதற்கான திட்டங்களையும்,
வரைமுறைகளையும் உருவாக்கி செயல்படுத்துவது தான்.

மத்திய அரசு வெளியிட இருக்கும் உத்திரவு, அந்த ஸ்கீமுக்கு
(எத்தகையை பெயரை கொடுத்தாலும்) காவிரி சம்பந்தப்பட்ட அனைத்து
அணைகளிலிருந்தும், நீர் திறந்து விடக்கூடிய அளவிற்கு சட்டப்படியான –
உரிய அதிகாரங்களை தருவதாக இருக்க வேண்டும்.

எனவே, சட்டவிதிகளை வைத்துக் கொண்டு பார்த்தால்… கர்நாடகா
அரசும், மத்திய அரசும் எப்படி முயன்றாலும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை
அமல்படுத்துவதை தவிர்க்க முடியாது…

———————–

ஒருவேளை –
வருவது வரட்டும்… தமிழகம் சுப்ரீம் கோர்ட்டுக்கு மீண்டும் போனாலும்
போகட்டும்… அதற்குள் கர்நாடகா சட்டமன்ற தேர்தல்களின் சமயத்தில்,
தான் அதற்கு சாதகமாக நடந்துகொள்வது போன்ற தோற்றத்தை
உருவாக்குவோம் –

என்கிற குள்ளநரித்தனமான முடிவை மத்திய அரசு எடுத்து,
அதிகாரம் இல்லாத, அரைகுறையான, பல்லில்லாத ஒரு அமைப்பை,
பெயருக்கு ஏற்படுத்தினாலும் –

தமிழகம் அதற்காக கலங்க வேண்டிய அவசியமே இல்லை.
உடனடியாக, தமிழகம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு “நீதிமன்ற அவமதிப்பு
வழக்கை” தொடுக்கலாம். அதை அவசர வழக்காக எடுத்துக்
கொள்ளும்படியும் கோரிக்கை வைக்கலாம்.

மத்திய அரசின் குள்ளநரித்தனத்தை சுப்ரீம் கோர்ட்டில்
உரிய முறையில் முன்வைத்தால்,

சுப்ரீம் கோர்ட்டே, உரிய அதிகாரங்களுடன் கூடிய, ஒரு மேலாண்மை
வாரியத்தை அமைத்துக் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை
அந்த ஒரு நிலை உருவானால், அது பருத்தி புடவையாகவே காய்த்தது
போன்ற நிலை தான்.

எனவே, தமிழக மக்கள் இதற்காக கலங்க வேண்டிய அவசியம் இல்லை.
என்ன – இன்னும் கொஞ்சம் தாமதமாகலாம்…அவ்வளவே.
நிச்சயம் நாம் உரிய நியாயத்தை பெற்றே தீருவோம்.

——————–

ஆனால், மத்தியில் ஆளும் கட்சி, நம்மை அப்படி ஏமாற்ற முயன்றால்…
அந்த ஏமாற்றும் பாஜக அரசை, வெறும் நீதிமன்ற அணுகுதல் மூலம்
மட்டும் சந்தித்தால் போதாது.

உடனடியாக, சுப்ரீம் கோர்ட்டில், “நீதிமன்ற அவமதிப்பு வழக்கு”
தொடுப்பதோடு நில்லாமல் –

பாஜக கனவிலும் எதிர்பார்க்காத விதத்தில், அதற்கு கலக்கத்தை
ஏற்படுத்தும் விதங்களில், நமது எதிர்ப்பு இருக்க வேண்டும்.

தமிழக மக்களை இளிச்சவாயர்கள், அவர்களை எளிதில் ஏமாற்றி விடலாம் என்று பாஜக கருதி செயல்படுமேயானால் –
அவர்கள் எப்படிப்பட்ட தவற்றை செய்கிறார்கள் என்பதை அவர்களுக்கு
புரியும் விதத்தில் சொல்லித்தர வேண்டும்…
தமிழகம் அதற்கு தன்னை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதில், தமிழகம் ஒன்றுபட வேண்டும்…
அனைத்து கட்சிகளும், அனைத்து பிரிவினரும் –
முழு தமிழகமும் இணைந்து – ஒன்று சேர்ந்து –
இதில் ஒரே நோக்கில் செயல்பட வேண்டும்.

—————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to காவேரி ஆணையம் …ஏமாற்ற முயன்றால் என்ன செய்யலாம்…?

 1. பாபுஜி சொல்கிறார்:

  நமது அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு தமிழ்நாட்டின் முக்கிய வாழ்வாதரமான காவிரி நீரைப் பெற பணியாற்ற வேண்டியத் தருணமிது.

 2. Pingback: காவேரி ஆணையம் …ஏமாற்ற முயன்றால் என்ன செய்யலாம்…? – TamilBlogs

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஒரு புதிய செய்தி அல்லது வதந்தி கிளம்பி இருக்கிறது.
  மத்திய அரசே உச்சநீதிமன்றத்திடம் தீர்ப்பு பற்றி விளக்கம் கேட்கப்போகிறதாம்.

  கர்நாடகா தேர்தல் முடியும் வரை விஷயத்தை இழுத்தடிக்க இன்னொரு வழி ?

 4. LVISS சொல்கிறார்:

  It is very disappointing to see the central govt trying to delay the formation of CMB-They had six weeks to get clarification on the order – If this is done with an eye on Karnataka election the people of should give a severe drubbing to BJP –In any case neither congress nor BJP is going to get majority to form a government —
  It is not known whether the Tamil Nadu BJP leaders knew that the govt is going to ask for some clarification now –
  Neither the Congress when they were in power in centre nor the BJP now has been of any help in solving the cauvery issue which touches the livelihood of our farmers —

 5. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  காங்கிரஸ் , பா ஜ க இவர்கள் மத்தியில் அரசு செய்தவர்கள் .
  அவர்களுக்கு தமிழ்நாட்டைப் பற்றி கவலை ஒன்றும் கிடையாது .

  யாரும் பொறுப்பாக பேசப் போவதில்லை
  பிரச்சினையை திசை திருப்பும் வேலை நடக்கும் .

  காவேரியில் தண்ணீர் வராது .

 6. அறிவழகு சொல்கிறார்:

  /// தமிழக மக்கள் இதற்காக கலங்க வேண்டிய அவசியம் இல்லை.
  என்ன – இன்னும் கொஞ்சம் தாமதமாகலாம்…அவ்வளவே.
  நிச்சயம் நாம் உரிய நியாயத்தை பெற்றே தீருவோம். ///

  இந்த வார்த்தைகள் மனதுக்கு மிக்க ஆறுதலாக இருக்கு ஐயா.

  யார் அவர் தம் சொல்லாலும் செயலாலும் மற்றவர்களுக்கு நன்மையை நாடுகிறாரோ அவருக்கு கடவுள் நன்மையின் பால் செல்ல பொறுப்பேற்றுக்கொள்கிறார்.

  அதே போல் அதற்கு எதிராக நடப்பவர்களை… கடவுள் பார்த்துக்கொள்வார். அது யாராக இருந்தாலும்.

  இன்னும்,

  அநியாயம் செய்யபட்டவர்களின் பிரார்த்தனைக்கு பயந்துகொள்ளுங்கள் என்பதும் வேதவாக்கு.

  நீங்கள் சொன்னது போல் தான் செய்தியும் வந்துள்ளது.

  http://tamil.thehindu.com/tamilnadu/article23373501.ece?homepage=true

  அற்ப பதவி சுகத்திற்காக ஒரு மாநில மக்களையே வஞ்சிக்க முனைவது இன்றில்லாவிடில் நாளை அதற்குண்டான வெகுமதியை அவர்கள் கொடுத்தே தீர வேண்டும்.

  இது தன் கட்சி, தனக்கு வேண்டியவர் என்று கண்மூடி ஆதரிப்பவர்களுக்கும் பொருந்தும்.

 7. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  உச்ச நீதி மன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது –
  காவேரி ஒரு மாநிலத்திற்கு மட்டும் சொந்தமில்லை .
  காவேரி நீர் பகிர்ந்து அளிக்க ‘அமைப்பு ‘ மத்திய அரசு அமைக்க வேண்டும் .

  நீர்வளத்துறையில் உள்ள அதிகாரிகளுக்கு இது புரியாதா ?
  அமைப்பு என்றால் என்ன ? இவர்களுக்கு உண்மையில் படிக்கத் தெரியாதா ?

  காவேரி நீர் வராது – இதை மறுபடியும் சொல்கிறேன் .
  காரணம் கர்நாடகா தேர்தல் இல்லை .காவேரி படுகையில் எண்ணெய் ,மீத்தேன் எடுக்க காண்ட்ராக்ட் கொடுத்தாகி விட்டது .இனிமேல் அங்கு விவசாயம் கிடையாது .
  இல கணேசன் இதைத்தான் ‘ ஒரு தேசம் வாழ தியாகம் செய்ய வேண்டும் ”
  என்று ஏற்கனவே சொல்லிவிட்டார் . இப்ப பூனைக்குட்டி வெளியே வந்ததா ?

  நீதி மன்ற அவமதிப்பு வழக்கை நடத்த தமிழக அரசுக்கு திராணி கிடையாது .
  செய்தால் அதோடு அரசு காலி !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.