பாழாய்ப்போன அரசியல்வாதிகள் …
அத்தனை பேரும் வடிகட்டிய சுயநலவாதிகள்….
அத்தனை அரசியல் கட்சிகளும் அப்படியே…

2ந்தேதி – மாவட்டம்தோறும் மாபெரும் உண்ணாவிரதம்…
(அமலாக்கப்பிரிவின் தயவில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் )
ஆளும் கட்சி அறிவிப்பு …

11-ந்தேதி பிரதமர் வரும்போது கருப்புக்கொடி காட்டுவோம்
என்று ஏற்கெனவே அறிவித்து விட்டு,
அதன் பிறகு அனைத்து கட்சிகளையும்
கலந்தாலோசிக்க அழைக்கும் முக்கிய எதிர்க்கட்சி…

11-ந்தேதி தமிழக பந்த் – தனி ஆவர்த்தனம் செய்யும் பாமக….

5-ந்தேதி, 50 இடங்களில் ரயில் மறியல் செய்வோம் –
விவசாயிகள் சங்கம்…

இன்னும் மற்ற உதிரிக்கட்சிகள் எல்லாம் என்னென்ன அறிவிப்புகள்
செய்யப்போகின்றனவோ…!

இவர்கள் எல்லாரும் யாருக்காக போராடுகிறார்கள்…?
தமிழகத்திற்காகவா…? காவிரி நீரை பெறுவதற்காகவா…?

அத்தனை பேரும் வடிகட்டிய சுயநலவாதிகள்…
தங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளவும்,
வளர்த்துக் கொள்ளவும் அரங்கேற்றும் நாடகங்கள் இவை…
இவை எதுவுமே நமக்கு உதவப்போவதில்லை…

தயங்கி தயங்கி, பயந்து பயந்து –
மத்திய அரசின் செயலாற்றாமைக்கு எதிராகத்தான்
இந்த வழக்கு என்று பளிச்சென்று சொல்ல முடியாவிட்டாலும் கூட –

தமிழகத்திற்கு நியாயம் என்று ஒன்று கிடைக்கக்கூடும் என்றால் –
அது, தமிழகம் சுப்ரீம் கோர்ட்டில் சனியன்று தாக்கல் செய்யப்போகும்
மனுவால் மட்டும் தான் கிடைக்க வழி இருக்கிறது…!

தெரிந்தே தவறு செய்யும் டெல்லி அரசை தட்டிக்கேட்கும்
துணிச்சல் இங்கே ஆளும் கட்சிக்கு இல்லை என்பது
எல்லாருக்கும் தெரிந்த உண்மை தான்…

இருந்தாலும், எவ்வளவு soft-ஆக, மென்மையாக
வாசகங்கள் அமைந்தாலும் கூட, இவர்கள் தாக்கல் செய்யப்போகும்
மனுவின் மீது சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கப்போகும் உத்திரவினால்
மட்டுமே தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க வழி இருக்கிறது…

“கோர்ட் தீர்ப்பை அமல்படுத்தக்கூடிய அளவிற்கு தேவையான
அதிகாரங்களை கொண்ட ஒரு அமைப்பை ஏற்படுத்துக” –

– என்பது தான் உச்சநீதி மன்ற தீர்ப்பின் அடிப்படை.

இப்போது மத்திய அரசு விளக்கம் கேட்டு மறுபடியும்
அதே கோர்ட்டுக்கு போனால் –
மீண்டும் ஒரு முறை மண்டையில் அடித்தாற்போல்
கோர்ட்டிலிருந்து பதில் வரலாம்….

அந்த நாளுக்காக, வேண்டி…… காத்திருப்போம்….
இந்த சுயநல அரசியல்வாதிகள் அத்தனை பேரையும்
ஒதுக்கிப் புறந்தள்ளி விட்டு…!

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to பாழாய்ப்போன அரசியல்வாதிகள் …

 1. Mani சொல்கிறார்:

  முற்றிலும் உண்மை.
  ஆளாளுக்கு கதை வசனம் எழுதி நாடகமாடுகிறார்கள்.
  மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள்.

 2. LVISS சொல்கிறார்:

  Every party wants to show they are fighting for the farmers and also keep their identity seperate – –Look at Karnataka -In spite of other differences among the parties on this issue they stand together –If this water sharing dispute does not bind the parties in T Nadu together what else will ?
  The Kerala govt is also filing a review petition -As far as Kerala and Puduchery are concerned their share remains the same – It is only Tamil Nadu which is losing some water —
  It all started in 1892 and is still to be settled –

 3. seshan சொல்கிறார்:

  nothing will happen. all the political parties scandal details with central govt. so they are using these guys as puppets only. we should not think some good thing will happen . it only in our dreams.

 4. Pingback: பாழாய்ப்போன அரசியல்வாதிகள் … – TamilBlogs

 5. D. Chandramouli சொல்கிறார்:

  Agreed that all this ‘tamasha’ by political parties are just meant to project themselves as being relevant. There is hope if Supreme Court takes over the forming of the Board but there is no guarantee that either the Center or the States would cooperate on implementing it. Has Supreme Court lost its teeth? Its orders are flouted.

 6. Raghuraman N சொல்கிறார்:

  Dear KM Sir.,

  I agree with Mr D Chandramouli’s comment

  //Has Supreme Court lost its teeth? Its orders are flouted.//

  What will happen to the so called petition / case from TN?
  At best SC can only direct Central Government to abide by its rule. If Central Government is not following, nothing can be done.
  We saw what could Supreme court do when Karnataka Government flouted its rule?

  I read somewhere that the water sharing between MP and Guj is also an issue – despite the fact that both are ruled by BJP.

  The trait called ‘guilt’ gets away from people once they become politician (or is it the fact that a person becomes politician only if he/she relinquishes guilt, memory and concern for people)

  At times – I ponder whether federalism is not suitable for India. There is no ‘One India’ concept in reality.

  Regards

 7. LVISS சொல்கிறார்:

  While we are talking about Cauvery issue let us have a look at other tribunals –
  Godavari Water Disputes Tribunal 1969 Maharashtra /Karnataka/Ap/MP/Odisha
  Krishna water disputes tribunal I 1969 Maharashtra /Ap/ Karnataka
  Narmada water disputes tribunal 1969 Rajasthan/MP/Gujarat/Maharashtra
  Ravi and Beas tribunal 1986 Punjab/Haryana Rajastan
  Krishna water tribunal II 2004 Karnataka/ Telengana /AP/ Maharashtra
  Vamsadhara tribunal 2010 -AP/Odisha
  Mahadayi tribunal 2010 Goa/Karnataka/Maharashtra
  If they had nationalised the rivers soon after independence may be we would have been spared of these disputes -The first dispute listed is in the year 1969 ie 23 years after independence –

 8. thiruvengadam thirumalachari சொல்கிறார்:

  I wish KM comments on the way the Supreme Court is destabilized by increasing the frictions among the judges out of theirBloated EGO and wrecking it from within the kumaramangalam plan of the past.This has made the states to ignore judicial pronouncements with impunity and the Central govt. creating large numbers of vacancies and making the judiciary appear impotent and inefficient.Decline of democracy has started in India.Thiruvengadam

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.