பாஜகவை தேர்ந்தெடுக்காதது தான் – இந்த நிலைக்கு காரணமா….?– “பிஜேபி யை தமிழகம் என்றும் தேர்ந்தெடுத்ததில்லை.அதனால் அவர்களுக்கு நம்மீது எந்த அக்கறையும் இருக்க முடியாது…”

என்று ஒரு நண்பர் பின்னூட்டத்தில் எழுதி இருந்தார். அந்த பின்னூட்டத்திற்கு நான் எழுதிய விளக்கம், அங்கே இருந்தால், அனைவரின் கவனத்திற்கும் செல்லாது என்று நினைத்தேன்.

எனவே, நண்பர்கள் அனைவரின் கவனத்திற்கும் செல்லவேண்டும் என்பதற்காக, அந்த விளக்கத்தை கீழே தருகிறேன்…..

———————————————–

//மேலும் பிஜேபி யை தமிழகம் என்றும் தேர்ந்தெடுத்ததில்லை.அதனால்
அவர்களுக்கு நம்மீது எந்த அக்கறையும் இருக்க முடியாது//

….

இதில் அவர்களின் அக்கறையை வேண்டி நாம் பிச்சை கேட்டு நிற்கவில்லை.

இது நமது உரிமை. அரசியல் சாசனம் சொல்வதை, சுப்ரீம் கோர்ட் சொல்வதை செய்ய வேண்டியது – அவர்கள் கடமை. சுப்ரீம் கோர்ட்டையும் ஒருவேளை பாக்கெட்டில் வைத்திருக்க முடியுமென்று அவர்கள் நம்பலாம்.

ஆனால் அது இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. மாநில அரசு அரசியல் சாசனப்படி செயல்படவில்லை என்றால், மத்திய அரசு தலையிடலாம்.. மத்திய அரசே அந்த தவறைச் செய்தால்..?

பாஜக மத்திய அரசு, மிக மோசமான முன்னுதாரணமாகக்கூடிய ஒரு செயலில் ஈடுபட்டிருக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் பாஜக என்கிற கட்சியை மட்டுமல்ல; இந்த நாட்டையே பாதிக்கக்கூடியதாக இருக்கும்.

மத்திய அரசின் இந்த போக்கை லேசாக எடுத்துக் கொள்வது நல்லதல்ல.

——————

இன்று தமிழகம் சந்திக்கும் போராட்ட நிலைகளுக்கு முழுக்க முழுக்க மத்திய அரசே காரணம்…

எந்தவித குற்ற உணர்வுமின்றி, வெளிப்படையாகவே ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது. சுப்ரீம் கோர்ட் உத்திரவை நிறைவேற்றினால் கர்நாடகாவில் கலவரம் நிகழுமென்று மிகைப்படுத்தி கூறுகிறது. நிறைவேற்றவில்லை என்றால், தமிழகத்தில் தென்றல் தவழுமா…?

திமுக செயல்தலைவர், இந்த சூழ்நிலையில் மிகவும் தவறாகச் செயல்படுகிறார். மத்திய அரசின் மீது காட்டப்பட வேண்டிய கோபத்தை, மாநில அரசின் மீது திசை திருப்பி, தனக்கு சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்.

அரசியல் கட்சிகள் தாக்குதல் தொடுப்பது போல், ஒரு மாநில அரசு – மத்திய அரசோடு சண்டை போட முடியாது… அரசியல் சட்டத்தின் கீழ் என்ன செய்ய முடியுமோ, அதைத்தான் மாநில அரசு செய்ய முடியும்.

காவிரி விவகாரத்தில் மாநில அரசு, மத்திய அரசோடு – நீதிமன்றம் மூலமாகவே மோத முடியும்.

அந்த கடமையை மாநில அரசு ஒழுங்காகத்தான் செய்து கொண்டிருக்கிறது.
6 வாரங்கள் பொறுத்த பின்னரும், மத்திய அரசு செயல்படவில்லை என்றால் தான் கோர்ட்டுக்கு போக முடியும். 6 வாரம் முடிந்த மறுநாள் மாநில அரசு, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் மீது “நீதிமன்ற அவமதிப்பு வழக்கு” போட்டாகி விட்டது.

இந்த சமயத்தில், தமிழக மக்கள், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும்
ஒன்று சேர்ந்து போராடினால் தான், நமது உரிமைக்கு நியாயம் கிடைக்கும். அதை விடுத்து – ஆளாளுக்கு தனிக்கச்சேரி நடத்தினால் –

மற்றவர் நம்மைப் பார்த்து எள்ளி நகையாடும் நிலை தான் உருவாகும்.

சரியான தலைமை இல்லையெனில் தமிழகம் கட்டுப்பாடற்ற நிலைக்கு
தான் செல்லும்… அது தமிழகத்திற்கோ, தமிழர் நலனுக்கோ – நல்லதல்ல.

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to பாஜகவை தேர்ந்தெடுக்காதது தான் – இந்த நிலைக்கு காரணமா….?

 1. BVS சொல்கிறார்:

  அவசியம் தேவையான ஒரு கட்டுரை.

 2. LVISS சொல்கிறார்:

  To an extent this may be correct –But can we say for certain say that the central govt is doing this only because the state did not vote for them –When Congress govt both at the the centre and state could not solve the issue how can any other govt do –The people of the state have not voted for congress for so many years –So can we say that just because the state did not vote for them they also do not take steps to solve the issue –DMK was in alliance with the congress in UPA–They could have applied “the azhutham” we are hearing about at that time to resolve the issue — Even if there is BJP govt in centre and state after the karnataka elections this issue will remain unresolved at least at the state level–
  -Elsewhere I have given a list of river disputes -Barring one or two including cauvery issue others have been awarded and there seems to be no problem in implementation –How come, unless there was some sort of give and take and understanding between those –This is totally missing here —

  • mekaviraj சொல்கிறார்:

   the central govt is doing this only because the state did not vote for them ??

   கடவுளே இவர்களை சற்று கவனியுங்கள்..

  • mekaviraj சொல்கிறார்:

   LVISS அவர்களே – ஒரு முறைக்கு மூன்று முறை நீங்கள் எழுதியுள்ளதை படியுங்கள் – சரியானதைத்தான் சொல்கிறோமா என்று நினைத்து பாருங்கள்

 3. Mani சொல்கிறார்:

  இது திரும்ப திரும்ப பாஜகவுக்கு வக்காலத்து வாங்கும் ஜால்ராக்களின் வாதம்.
  இவ்வளவு நாட்களாக இருந்த நிலைக்கும் இப்போதைய நிலைக்கும் வித்தியாசம்
  இருக்கிறதுய். இப்போது சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட் வந்தாகி விட்டது.
  கர்நாடகாவுக்கு அதிக நீரும் கொடுத்தாகி விட்டது. இப்போது கர்நாடகா சீரியசாக எதிர்க்கவில்லை. பெயரளவிற்கே எதிர்ப்பு காட்டுகிறார்கள். ஆனால் தேர்தலில் எப்படியும் ஜெயிக்க வேண்டுமென்று வெரி பிடித்து அலையும் பாஜக தான்
  வேண்டுமென்றே ஜட்ஜ்மெண்டை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கிறது. இனியும்
  இங்கே பாஜகவுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் தமிழகத்தைப்பற்றிய அக்கரையை விட கட்சியின் மீது அதிக அக்கறை காட்டுபவர்களே.

 4. rajeswari சொல்கிறார்:

  // நாங்க சொன்னது காவிரி மேலாண்மை வாரியம் இல்லை.. தமிழகத்தின் தலையில் இடியை இறக்கிய சுப்ரீம் கோர்ட்! //

  Read more at: https://tamil.oneindia.com/news/india/supreme-court-explanation-shocks-tamilnadu-farmers-316001.html
  தலைமை நீதிபதியின் விளக்கம் — அபாரம் … ! ” ஓட்டரசியல் என்றென்றும் நிலைக்க ” இது போன்ற காரண – காரியங்கள் அவசியம் தேவை …. !! வாழ்க நீதி — வளர்க இந்திய ஒற்றுமை .. இந்தியா நன்றாக ஒளிர்கிறது … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மத்திய அரசை (இப்போதைய) சுப்ரீம் கோர்ட் விட்டுக்கொடுக்குமா…?

   எப்படி தீர்ப்பு சொன்னாலும்,
   ஒரு வேளை தமிழகத்திற்கு பாதுகாப்பு கிடைப்பதாக இருந்தாலும் கூட,
   அது மே,12-ந்தேதிக்கு பிறகு தான்…!!!
   பாஜக தான் நினைத்ததை,தான் விரும்பியதை – நடத்திக் கொள்கிறது.

   அதற்கு, கனவிலும் நினைக்காத அளவிற்கு
   கர்நாடகா தேர்தலில் ஒரு பலத்த அடி விழுந்தால் கூட,
   எரிகின்ற நம் வயிறு குளிராது.

   இருக்கட்டும்… எல்லாருக்கும் மேலாக,
   மேலே ஒரு நீதிபதி இருக்கிறார்…அவர் பார்த்துக்கொள்வார்.

   • அறிவழகு சொல்கிறார்:

    பலப் பல சரித்திரங்கள் சொல்லும் அநியாயகாரர்கள் நிலைத்ததில்லை, வென்றதில்லை என்று. இறைவன் அந்த அநியாயகாரர்களை மேலும் சோதிக்கவே அவர்களுக்கு குருகிய கால வெற்றியை கொடுப்பார். அது சோதனை என்று அறியாத அறிவுகெட்ட ஜென்மங்கள் அந்த வெற்றிகளை க‌ண்டு இருமாந்து போய் நாசமாய் போவது தான் சரித்திர உதாரணங்களும் நிகழ் காலத்திலும் கூட நடக்கிறது.

    என்னுடைய பிரார்த்தனை எல்லாம் வெகு விரைவில் அவர்களும் அவர்களுக்கு துணை நிற்பவர்களும் இறைவனின் தண்டனையை அடையனும் என்று தான்.

    இறைவன் நின்று கொல்வான், நிச்சயம்.

 5. Mani சொல்கிறார்:

  மேலே இடுகையில்,

  // சுப்ரீம் கோர்ட்டையும் ஒருவேளை பாக்கெட்டில் வைத்திருக்க
  முடியுமென்று அவர்கள் நம்பலாம்.//

  இந்த வார்த்தைகளை பார்த்த பிறகு, இது “ஷாக்” அடிக்கக்கூடாதே.

 6. tamilmani சொல்கிறார்:

  Congress is the ruling party in Karnataka which is an ally of DMK .Why cant Mr Stalin ask his alliance partner leader Mrs Sonia Gandhi to ask Mr Siddaramaiah to release cauvery water as per the order of Supreme court instead of finding fault with the state govt of Tamilnadu.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழ்மணி,

   நீங்கள் கேட்பது முற்றிலும் நியாயமானதே.

   ஆனால், நமது ஊடகங்கள், வசதியாக, இந்த கேள்வி எழும்போதெல்லாம்,
   அவற்றை பின்னுக்கு தள்ளி விடுகின்றன.

   பாஜக எந்த அளவுக்கு நமக்கு துரோகம் இழைக்கிறதோ, அதே அளவிற்கு
   காங்கிரஸ் கட்சியும் செய்திருக்கிறது என்பதே உண்மை. இரண்டு தேசிய கட்சிகளும்
   இந்த விஷயத்தில் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. Tamilian சொல்கிறார்:

  1967க்கு பின்னர் நாம காங கடசியை த நாட்டில் விலக்கிவிட்டோம. 2014 க்கு பின்னர்தான் மோடி அரசு. இதன் நடுவில் திமுக காங கட்சியுடன் கூட்டணியிலதான இருந்தது. UPA உடன் 10 ஆண்டுகள் மிக அதிகமான அதிகாரத்துடன் பதவிகள். இவரகள அப்போது என்ன செய்ய முயற்சித்தார்கள். ? தஞ்சை விவசாயிகள் காவிரி நீர் ஒப்பந்தம் செய்யாமல் அணைகள் கட்ட முடியாது என்று 70களில வாங்கியிருந்த தடையை இந்திரா மு கவின் ஊழலை பகடையாக்கி காவிரி ஒப்பந்தம் முடிக்கலாம் நீர் தடையை திரும்ப பெறாவிட்டால் ஊழல வழக்கு மட்டுமல்ல , ஆட்சியையும் கலைப்போம என்று மிரட்டி தடையை முக மூலம் திரும்ப பெற வைத்தார் . பின்னர் இவ்வளவு ஆண்டுகள் என்ன செய்ய முடிந்தது.? இப்போது உள்ள நிலைக்கு காரணமே மு க வும இந்நதிராவும காங்கிரசு மட்டுமே. பாஜக இந்த காவிரி ஆணையத்தை அமைக்க முற்பட்டால் நீர் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா அளித்துவிடுமா? முதல் கோணல் முற்றும் கோணல். இதில் lower repairian water rights of TN காற்றில் போயிற்று. அவர்கள் அணை கட்டினாலும நமக்கு மினிம்ம நீர் அளித்துத்தான ஆகவேண்டும். இதை உச்சநீதி மன்றமும் இப்போதுதான் உறுதி செய்துள்ளது. இப்போது 6 வாரங்கள் தள்ளிபோவது 44 வருடங்களாக தள்ளிபொனதை விட மிக பெரிய குற்றமா? இதன் முழு குற்றமும் காங்கிரசையும ,திமுகவையுமே சார்ந்தது. இதை யாரும் கூறாமல் மறைக்கிறார்கள். திமுகவும் காங்கிரசும் இதை பற்றி பேசுகிறாரகளா? உங்கள் கட்டுரையில் at least எதிரபாரதேன. கர்நாடகாவில் பதவியை பிடிக்கும் நிலையில் உள்ள யாரும அந்த தேர்தல் முடியும் வரை சற்று யோசிப்பாரகள, இல்லையெனில் காங்கிரஸ் இதை உபயோகிக்கும் . அவர்கள் திரும்ப வந்தால் பழைய குருடு கதவைதிறடிதான.

 8. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  கருணாநிதி ,எம் ஜி ஆர் இருவரும் இருந்த வரை தண்ணீர் ஜூன் 12 ந் தேதி வந்து கொண்டிருந்தது .
  என்ன செய்து நீர் வந்தது – யாருக்கும் தெரியாது .

  இப்போது வரலாறு திரிக்கப்படுகிறது .
  காவேரி பிரச்சினைக்கு பாஜக காரணமில்லை .
  ஊழல் கருணாநிதியும் அன்னை இந்திராவும்தான் காரணம் .
  அப்ப எல்லாம் என்ன செய்தீர்கள் ? இப்ப எங்களை எப்படி கேட்க முடியும் ?

  இதுதான் பா ஜ க டிவி விவாதங்களில் செய்வது !
  திசை திருப்புவது , பொய்யை திரும்ப திரும்ப சொல்வது ,
  யாரையும் பேச விடுவதில்லை அல்லது குறுக்கே பேசுவது.

  ஒரே வித்தியாசம் – மற்ற கட்சிகள் இப்போது எதிர்த்துப் பேசுகின்றன .

  கர்நாடக தேர்தல் ஒரு காரணமில்லை .
  காவேரி படுகை இன்று எண்ணெய் எடுக்கும் இடம் .
  இங்கு விவசாயம் நடக்கவே கூடாது .
  பா ஜ க ஆட்களுக்கு காண்ட்ராக்ட் கொடுத்தாகி விட்டது .

  இப்ப என்ன நடக்கும் ?
  இடப்பாடி அரசு கோவிந்தா .
  அநேகமாய் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது என்ற காரணம் சொல்லப்படும் .
  போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்படும் .
  சஸ்பெண்ட் லா அண்ட் மெயின்டென் ஆர்டர் !

  பத்திரிக்கைகள் மிக சிறப்பான ஆட்சி என்று எழுதும் .
  மிக சிறந்த நிர்வாகி என்று புகழ்ந்து எழுதியே பழக்கம் . அது மாறாது .

 9. Tamilian சொல்கிறார்:

  காவேரி பிரச்சினைக்கு பா ஜ க எப்படி காரணம் ? இப்போது திமுகவும் காங்கிரசும் அதை அரசியலாக்கி தனது கையாலாகாத தனமோ அல்லது உள்நோக்கத்தோடு கூடியதோ அல்லது ஊழலால 1974 க்கு முன் அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க முடியாமல் போனதால் வந்த பழியை வேறு ஒருவர் மீது மாற்றுவது இதுதான் நடக்கிறது. ஊடகங்களும் அவர்கள் கையில்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.