மீடியாக்கள் சொல்வதெல்லாம் உண்மையா…..!!! (பகுதி-1)தொலைக்காட்சி செய்தித் தளங்கள், சில – பரபரப்புகளுக்காகவும்,
தங்கள் டிஆர்பி ரேட்டை உயர்த்திக் கொள்ளவும் ஆதாரமில்லாத
செய்திகளையும், திரித்துக் கூறப்பட்ட கதைகளையும் தொடர்ந்து
ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் முக்கிய நோக்கம்
தங்கள் முக்கியத்தை வளர்த்துக் கொள்வது…..!

மற்றும் சிலவோ, மத்தியில் / மாநிலத்தில் ஆளும் கட்சிகளின்
செல்வாக்கு அல்லது பயமுறுத்தல் அல்லது அழுத்தங்கள்
அல்லது பண ஆசை காரணமாக –
தவறான, எதிர்மறையான அல்லது மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை
பரப்பிக் கொண்டிருக்கின்றன.

இவற்றிற்கிடையே, நேர்மையாக, உண்மையான செய்திகளை
பாரபட்சமின்றி தரும் மீடியா தளங்களை மக்கள் தேடித்தான்
கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. இந்த மீடியாக்களைப்பற்றியோ,
அவற்றின் நோக்கங்கள், பின்னணிகள் பற்றியோ –
அவசர கதியில் இயங்கிக்கொண்டிருக்கும் சாதாரண பொதுமக்களுக்கு
தெரிந்து கொள்ள நேரமோ, ஆர்வமோ இருப்பதில்லை…
விளைவு – பெரும்பாலான மக்கள் தவறான செய்திகளையே
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

செய்திகளை உருவாக்கும் / உண்டு பண்ணும், இத்தகைய தளங்கள்
இயங்கும் விதம், அவை ஏன் அப்படி இயங்குகின்றன,
அந்தந்த தளங்களின் பின்னணியில் இயங்குபவர்கள் யார் போன்ற
விவரங்களை தெரிந்துகொண்டால் –
ஓரளவு இவற்றைப்பற்றிய சரியான புரிதல் நமக்கு ஏற்படும்.

ஒரு ஜனநாயகத்தில் – குறைந்த பட்சம், எது உண்மையான செய்தி,
எது புனையப்பட்ட அல்லது மிகைப்படுத்தப்பட்ட செய்தி –
என்று உணர்ந்து கொள்ளவாவது இவற்றின் பின்னணியை
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

நமக்குத் தெரிந்த சில மீடியாக்களின் பின்னணிகளை, வாசக
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்த இடுகைத்தொடரின் நோக்கம்.
இதை 3 பகுதிகளாக வெளியிட உத்தேசித்திருக்கிறேன்.

முதல் பகுதி பொதுவானது… அடுத்த பகுதியில் ஆங்கிலமும்,
பின்னர் தமிழும்….

இதில் எனக்குத் தெரிந்ததை, தெரிய வருவதை, பல்வேறு
அனுபவங்கள்/தொடர்புகள் மூலம் நான் அறிந்து கொண்டவற்றை-
இங்கே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த விமரிசனம் வலைத்தள வாசக நண்பர்களில் பலர்,
நல்ல திறனாய்வும், அனுபவமும் கொண்டவர்கள். அவர்களில்
சிலருக்கு, இந்த மீடியாக்களைப்பற்றி எனக்குத் தெரியாத, பல
பின்னணிகள், உண்மைகள் தெரிந்திருக்கும் என்பதை நான்
அறிவேன்….!!!

எனவே, அந்த நண்பர்களையும் நான் துணைக்கு அழைக்கிறேன்.
நமக்கு தெரிந்த மீடியாக்களின் உண்மையான
பின்னணியை இயன்ற வரையில் இங்கு தொகுத்து பதிவு செய்ய,
அத்தகைய நண்பர்களை – அவர்களுக்கு தெரிந்த
செய்தி/பின்னணிகளையும் இங்கே பின்னூட்டங்களின் மூலம் பகிர்ந்து
கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதில் எந்தவித கட்சிக்கண்ணோட்டமும் இன்றி,
யார் – எப்படி என்று பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
என்பது மட்டுமே நோக்கமாக
முன்னிறுத்தப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

———————–

அண்மையில், கோப்ரா போஸ்ட் (Cobra post) என்கிற
ஆங்கில வலைத்தளம் சில பரபரப்பான செய்திகளை வெளியிட்டிருந்தது.

” பணத்துக்காக இந்துத்துவா ஆதரவு செய்திகளை, பொய்யான,
மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை” வெளியிட ஒப்புக்கொண்ட சில
ஊடகங்கள் பற்றிய தகவல்களை வீடியோ ஆதாரங்களுடன் அது
வெளியிட்டது…. சில ஆங்கில செய்தி தளங்களிலும் இந்த விவரங்கள்
வெளிவந்தன…

இதைப்பற்றிய விவரங்களை தமிழில் பிபிசி செய்தித்தளம்
கோர்வையாக வெளியிட்டிருந்தது.

முதலில் அந்த தகவல்களை கீழே பதிப்பிக்கிறேன்.
நன்றி : பிபிசி செய்தி வலைத்தளம்…. http://www.bbc.com/tamil/india-43557116

————————————————————–

பணத்துக்காக இந்துத்துவா செய்திகளை வெளியிட ஊடகங்கள்
ஒப்புக்கொண்டன : கோப்ராபோஸ்ட் புலனாய்வு
27 மார்ச் 2018

——–

செய்தி இணையதளமான ‘கோப்ராபோஸ்ட்’ (Cobrapost) நடத்திய ரகசியப்
புலனாய்வு ஒன்றில், பணத்திற்காக ‘இந்துத்துவா கொள்கைக்கு
ஆதரவான மெல்லிய செய்திகளை ‘ வெளியிட 17 இந்திய ஊடக
நிறுவனங்கள் ஒப்புக்கொண்டது பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளது.

‘ஆப்பரேஷன் 136’ (operation 136) என்று பெயரிடப்பட்டிருந்த அந்தப்
புலனாய்வில் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட காணொளிகளின் சில
காட்சிகளை அந்த செய்தி இணையதளத்தின் ஆசிரியர் அனிருத்தா
பஹால் திங்களன்று டெல்லி பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த
செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
..


..

கடந்த 2017ஆம் உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில் (World Press Freedom
Index 2017), இந்தியா 136-ஆவது இடம் பிடித்ததை தொடர்ந்து இந்த
புலனாய்வுக்கு ‘ஆப்பரேஷன் 136’ என்று பெயரிடப்பட்டது.

இந்தப் புலனாய்வின்போது, கோப்ராபோஸ்ட் இணையதளத்தின்
செய்தியாளர் ஒருவர், ‘ஸ்ரீமத் பகவத் கீதா பிரசார் சமிதி’ எனும் இந்து
அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு, 17 நிறுவனங்களின்
ஆசிரியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

இந்துத்துவ அரசியலுக்கு ஆதரவாக பிரிவினையை ஏற்படுத்தும்
செய்திகளை வெளியிட்டால், பெரும் தொகை வழங்கப்படும் என்றும்
மூன்று மாத காலம் தொடர்ச்சியாக விளம்பரங்கள் கொடுக்கப்படும்
என்றும் அந்த நிருபர் ஊடக நிறுவனத்தினரிடம் கூறியுள்ளார்.

ஏழு செய்தித் தொலைக்காட்சிகள், ஆறு செய்தித்தாள்கள்,
மூன்று செய்தி இணையதளங்கள் மற்றும் ஒரு செய்தி முகமை
உள்ளிட்ட அந்த 17 ஊடகங்களிலும் மூத்த பொறுப்புகளில் உள்ளவர்கள்
பணத்துக்காக இந்துத்துவத்துக்கு ஆதரவான செய்திகளை வெளியிட
ஒப்புக்கொள்வது கோப்ராபோஸ்ட் வெளியிட்டுள்ள காணொளியில்
பதிவாகியுள்ளது.

வரும் 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள
நிலையில் எதிர்க் கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி, மாயாவதி,
முலாயம் சிங் யாதவ் ஆகியோருக்கு எதிராக மட்டுமல்லாது,

ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்குள் சர்ச்சைக்கு ஆளாகும்
தலைவர்களான அருண் ஜேட்லி, மனோஜ் சின்ஹா, ஜெயந்த் சின்ஹா,
வருண் காந்தி மற்றும் மேனகா காந்தி ஆகியோருக்கு எதிராகவும்
செய்திகளை வெளியிட அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தொலைக்காட்சிகளில் ஒன்றான
இந்தியா டி.வியின் விற்பனைப் பிரிவுத் தலைவர் சுதிப்தோ சௌத்ரி,
“ஆச்சார்ய சத்திரபால் அடல் எனும் அந்த நபர் செய்திகளுக்கு
பணமளிப்பதாக கூறியதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தகைய
செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

எங்கள் விற்பனைப் பிரதிநிதி ஒருவர் ஒரு விளம்பரத்தை வெளியிட
ஒப்புக்கொள்வது குறித்து பரிசீலனை செய்வதாக கூறுவதே அந்தக்
காணொளியில் இடம்பெற்றுள்ளது. இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவே
கோப்ராபோஸ்ட் தேர்ந்து எடுக்கப்பட்ட காணொளிகளை மட்டும்
வெளியிட்டுள்ளது. இந்தியா டிவி சார்பில் சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும்,” என்று பிபிசி அனுப்பிய கேள்விக்கான பதிலில்
தெரிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தலையொட்டி அந்த செய்திகளை
வெளியிடுமாறு ஊடகங்களிடம் கேட்கப்பட்டது
அந்தக் காணொளிகளின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள
இந்தி நாளிதழான தைனிக் ஜக்ரானின் முதன்மை ஆசிரியர் சஞ்சய்
குப்தா, “ஜார்கண்ட், பிகார் மற்றும் ஒடிஷா மாநில விற்பனை மேலாளர்
சஞ்சய் பிரதாப் சிங் செய்தி வெளியிடுவது குறித்து உத்தரவாதம் அளிக்க
அவருக்கு அதிகாரம் இல்லை. அந்தக் காணொளி உண்மை என்று
கண்டறியப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தி
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிடம் கூறியுள்ளார்.

அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாகவும், சமூகத்தில்
பிரிவினையைத் தூண்டும் செய்திகளை வெளியிடுவதாகவும் சமீப
காலங்களில் இந்திய ஊடகங்கள் விமர்சனங்களுக்கு ஆளாகி
வருகின்றன.

———————————————————————————

எனது பின் குறிப்பு – இது குறித்த வீடியோ ஆதாரங்களை கோப்ரா போஸ்ட்
வலைத்தளமான https://www.cobrapost.com/ -ல் காணலாம்.

( இடுகை தொடரும் – பகுதி-2-ல் )

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to மீடியாக்கள் சொல்வதெல்லாம் உண்மையா…..!!! (பகுதி-1)

 1. Pingback: மீடியாக்கள் சொல்வதெல்லாம் உண்மையா…..!!! (பகுதி-1) – TamilBlogs

 2. Raghavendra சொல்கிறார்:

  Migavum avasiyamaana oru topic.

  There are many unknown facts / mysteries behind these Media Mafia.
  You have rightly called for information from other Friends also.
  Waiting eagerly for other areas.

 3. LVISS சொல்கிறார்:

  If I am not mistaken the subject being discussed is about fake news
  Today there was a news item that the I and B ministry passed executive order to deal with fake news – Some regulations and guidelines were also there –But the PM intervened and got the order withdrawn and said it should be left to the Press Council Of India to decide about fake news —
  As this news was being played out there was a ticker tape news which said that the Malaysian govt had approved a law to punish fake news writers with six years imprisonment –

  http://www.opindia.com/2018/04/stinger-becomes-stingee-zee-news-stings-the-cobrapost-journalist-who-was-out-to-sting-them/

  Take the dalit protests going on in the country –It is not against any govt but against an order by the Supreme court -But the opposition parties made it to appear that the SC/ST Act was diluted and blamed the central govt for it -This while the govt was preparing to chllenge the order of the court —

  Most people dont have time to watch TV news or dont bother to watch it -Only those who sit at home like me spend time watching the TV news –I watch four news channels -One of them is fully behind the govt .one fully against the govt-Both these channels try to wean away the debate to their line of arguement -The other two try to be as balanced as possible -Of the two news websites I read regularly one is fully supportive of the govt (Bhaktas if you like) while the other publishes both for and against the govt –One cannot find fault with them for leaning towards one side –Every view has to be read as the real thing may lie between-

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.